Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனால் மட்டுமே தீர்வு: தயா மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் இன்று தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மூத்த தமிழ் அரசியல்வாதியும், அரசியல் அநுபவமிக்கவரும், பல்வேறுபட்ட அரசியல் ஒப்பந்தங்களின் போது, உடனிருந்தவர் என்ற வகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்லில் வெற்றி பெற்றால், இணங்கிய அரசியலில் ஈடுபட போவதாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன், போராளிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளதாகவும்' அவர் கூறினார்.

அத்துடன், 'எமது சக்திக்கு அப்பால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் உரிமைகள் உட்பட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேவேளை, 13ஆவது திருத்தத்தில் மாற்றம் வரப்போவதில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'விடுதலைப் புலிகளின் தனிநாடு கோரிக்கை எப்போதும் சாத்தியப் படப்போவதில்லை. அது அழிந்து விட்டதென்றும், இணக்க அரசியல் நடத்தப் போவதில்லை, இணங்கிய அரசியல் நடத்தப் போவதாக' அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/74359-2013-07-09-14-35-48.html

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும்  சம்பந்தர்

இணங்கிய  அரசியல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தயா மாஸ்ரர்

இரண்டுக்கும் இடையில் பாவம் டக்ளஸ் :D

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைதான் சாத்தியமில்லை என்கிறார் தயாநிதி வாத்தி.. :D கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமா எண்டு யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா.. :wub:

Edited by இசைக்கலைஞன்

தமிழ் ஊடகங்கள் வெட்டி வெட்டி எழுதுவது குழப்பம்தான். இதனால் அவர் பேச்சு முன்னுக்கு பின் முரனுகிறது.

1. சம்பந்தரால்தான் தீர்வு வரவேண்டுமென்றால் சட்டம்பியார் அதற்குள் ஏன் உள்ளட்டு நிற்கிறார்?

2. சம்பந்தரின் அனுபவத்தை அன்றே அமெரிக்காவுக்கு லன்ஸ்ரெட் எழுதியிருந்தார். இன்றுதான் தயா சட்டம்பியார் கண்டு பிடித்தால், அதிகாரி லன்ஸ்ரெட்க்கும், அரசியல் வாதி தாமாஸ்டருக்கும் இடைவெளிதான் என்ன?

3. சுதந்திர கட்சி வெல்லத்தான் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் தேர்தல் முடிய அவர்களின் நிலை என்ன?(முதலில் தன்னைதான் விடுவித்துகொள்ள வேண்டும்- அவர் அதை செய்யட்டும், அப்போதான் நாம் அரசியல் கைதிகளை கவனிக்கலாம்).

4. எமது சக்திக்கு அப்பால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார். ஏன் ஐ.வின் தலையீட்டை எதிர்க்கிறார்?

5. 13ஆவது திருத்தத்தில் மாற்றம் வரப்போவதில்லை என்கிறார். கண்ணன் துரியோதனனிடம் போன தூதாக, நாம் துரியோதனனிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டு சிவசங்கர் மேனன் போனதை இவருக்கு இனிதான் யாராவது சொல்ல வேண்டும். அதாவது அரசு உள்ளே என்ன முடிவுடன் இருந்தது என்றதை அறியாமல் பேசியிருக்கிறார் என்பதல்ல; இந்த அரசு எப்படியான முடிவுகள் எடுக்கும் அரசு என்பதை அறியாமல் தான் அரசபக்கம் தேர்தலில் நிற்கிறார்.  அப்போ நமது வாக்குக்கள் இவருக்குத்தானா?

Edited by மல்லையூரான்

இணக்க அரசியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும்  சம்பந்தர்

இணங்கிய  அரசியல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தயா மாஸ்ரர்

இரண்டுக்கும் இடையில் பாவம் டக்ளஸ் :D

 

டக்லஸ் மத்தியில் கூட்டுக் கொள்ளை, மாநிலத்தில் சுயமாய் கொள்ளையடித்தல் என்று படுபிசியாக இருக்கிறார்! :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.