Jump to content

பாலினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலினம்

கோபி சங்கர்

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%

“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை.

ஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை. இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை.

இப்படி, ஒட்டுமொத்த “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய சமூக விழிப்புணர்வுக்கான களத்தை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும். “பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது. “தான் எப்படி வாழ வேண்டும்?, யாராக வாழ வேண்டும்?” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு.

அத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை.

உடலின் நோய்களை பற்றி படிக்க மருத்துவ துறை இருக்கிறது, கணினி முதல் சகல விஞ்ஞான அறிவியலை படிக்க பொறியியல் துறை இருக்கிறது, சட்டம் பற்றி படிக்க சட்டத்துறை, இலக்கியம் படிக்க இலக்கிய துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் வழிகள் அவற்றை அறிந்துகொள்ள நம் நாட்டில் இருக்கும்போது, ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான இத்தகைய “பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (sexual attraction) தொடர்பான விஷயங்களை படிக்க, அவற்றை தெரிந்துகொள்ள ஒரு வழியும் இங்கில்லை.

நம் நாட்டில் மற்ற உலக நாடுகளுக்கு இணையாக தரமான பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன, அவற்றில் எந்த இடத்திலும் இதைப்பற்றிய ஒரு ஆய்வு கூட செய்யப்படவில்லை. மற்ற நாடுகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தும், அங்கீகரித்தும் வரும் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இன்னும்

நம் நாட்டில் “அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை. பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய “பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

பாலினத்தை எப்படி வரையறை செய்வது? எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு? என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை. “ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்.

இதன்மூலம் “பால் புதுமையினர்” (Genderqueer)பற்றிய ஒரு விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது நமக்கு தெரிகிறது. நம்மை பொருத்தவரை “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது “திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை. பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை.

இதைதாண்டிய எண்ணற்ற பாலினம் மற்றும் பாலின ஈர்ப்புகளை இணைத்து “பால் புதுமையினர்” பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்.“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் பாலியல் வல்லுறவுகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.

எதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம். அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” (Genderqueer)கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.

கிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது.

“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்” இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.

பாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது  வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.

என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

 

பொதுப் பாலினம்

ஆண்- Male

பெண்- Female

 

திருநர் – Transgender

திருநங்கை – Transwomen

திருநம்பி- Transmen

 

பால் புதுமையர்- Gender queer

பால் நடுநர் – Androgyny

முழுனர் – pangender

இருனர்- Bigender

திரினர்- Trigender

பாலிலி –  Agender

திருனடுனர் – Neutrois

மறுமாறிகள் – Retransitioners

தோற்ற பாலினத்தவர் – Appearance gendered

முரண் திருநர் – Transbinary

பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers

இருமை நகர்வு – Binary’s butch

எதிர் பாலிலி – Fancy

இருமைக்குரியோர் – Epicene

இடைபாலினம் –  Intergender

மாறுபக்க ஆணியல் – Transmasculine

மாறுபக்க பெண்ணியல் – Transfeminine

அரைபெண்டிர் – Demi girl

அரையாடவர் – Demi guy

நம்பி ஈர்ப்பனள் – Girl fags

நங்கை ஈர்பனன் – Guy dykes

பால் நகர்வோர் – Genderfluid

ஆணியல் பெண் – Tomboy

பெண்ணன் – Sissy

இருமையின்மை ஆணியல் – Non binary Butch

இருமையின்மை பெண்ணியல் – Non binary femme

பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser

 

இந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.

எதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.

இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள். “சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் பாலியல் வல்லுறவுகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.

எதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?. இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம்.அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.

கிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது.

“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்”இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.

 

http://vallinam.com.my/version2/blog/2013/07/10/பாலினம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பால் புதுமையர்- Gender queer பால் நடுநர் – Androgyny முழுனர் – pangender இருனர்- Bigender திரினர்- Trigender பாலிலி – Agender திருனடுனர் – Neutrois மறுமாறிகள் – Retransitioners தோற்ற பாலினத்தவர் – Appearance gendered முரண் திருநர் – Transbinary பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers இருமை நகர்வு – Binary’s butch எதிர் பாலிலி – Fancy இருமைக்குரியோர் – Epicene இடைபாலினம் – Intergender மாறுபக்க ஆணியல் – Transmasculine மாறுபக்க பெண்ணியல் – Transfeminine அரைபெண்டிர் – Demi girl அரையாடவர் – Demi guy நம்பி ஈர்ப்பனள் – Girl fags நங்கை ஈர்பனன் – Guy dykes பால் நகர்வோர் – Genderfluid ஆணியல் பெண் – Tomboy பெண்ணன் – Sissy இருமையின்மை ஆணியல் – Non binary Butch இருமையின்மை பெண்ணியல் – Non binary femme பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser
தலை சுற்றுகிறது
Link to comment
Share on other sites

பழைய நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை அணிந்து மகிழ்பவராம்.. :D அலுவலகத்துக்கு வரும்போது ஒற்றைப்பின்னல் போட்டுக்கொண்டு வருவார்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

பழைய நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை அணிந்து மகிழ்பவராம்.. :D அலுவலகத்துக்கு வரும்போது ஒற்றைப்பின்னல் போட்டுக்கொண்டு வருவார்.. :icon_idea:

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் யாராவது குனிந்து ஏதாவது எடுத்தால் ரொம்ப வெட்கப்பட்டு சிரிப்பார் ................ :D  :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.