Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - கெலம் மக்ரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
channel4-seithy-150.jpg

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்-4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும். இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஒரு உணவு தட்டுக்கு 60 ஸரெலிங் பவுண்ட்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல்-4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே மற்றும் பி.பி.சீ ஊடகவியலாளர் பிரன்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் இலங்கை மாநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் அலிஸ்டர் பட்டிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர் என சிங்களப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88274&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பியது நடக்கும் வரை தமிழ் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்பதை நிறுத்திவிடாதீர்கள்..! தங்கள் சேவை நிச்சயம் தமிழ் மக்களின் விடிவுக்கு இன்றியமையாதது மட்டுமன்றி தமிழ் மக்களின் வரலாற்றில் உங்களுக்கு தனியிடத்தை அது பெற்றுத்தரும்..! நாளை அதற்காக உங்களுக்கு நோபல் பரிசும் கிடைக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனுக்கு இல்லாத உணர்வு உங்களிடம் கண்டு ஆனந்தமடைகிறேன்....நன்றிகள் பல அய்யா...

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் சொன்னதாக சிங்கள ஊடகத்தில்தானே வந்திருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் வந்திருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புலி வாந்தி எடுப்பதற்கான ஒரு கற்பனை செய்தி யாக இருக்ககூடும்...அப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.