Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0023.jpg

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். 

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸ் என்பவர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறாததையடுத்தே இந்த மறியல் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இளைஞர் ஒருவர் 'சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்' என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்னெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞனிடம் இருந்து மண்ணெண்ணை கானை பறித்தெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனே இந்த மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளதுடன் போக்குவரத்துக்கு இடையூறு எற்படாமல்  முன்னெடுக்குமாறு பொலிஸார் தெரிவித்த போதும் குறித்த இளைஞன் பொருட்படுத்தாமல் பொலிஸாருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன்சிகேரா குறித்த இளைஞனைக் கைது செய்து சக பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்களின் எதிர்பை அடுத்து  பொலிஸார் அவ்விளைஞனை விடுவித்துள்ளனர்.

DSC_0051.jpg

DSC_0148(1).JPG

DSC_0149(4).JPG

DSC_0152.jpg

DSC_0153.jpg

 

மண்ணெண்ணையை உற்றி ஆரம்பிப்பது நல்ல ஐடியா இல்லை.  பெட்றோல் தன் சரியான தெரிவு.

 

சுதந்திரக்கட்சியின் marketing gimmicks. 

 

DSC_0152.jpg

 

இது படம் # 152

 

DSC_0153.jpg

 

இது படம் # 153

Edited by மல்லையூரான்

பிக்குவை கொளுத்தின மாதிரி எத்தனை பேரை கொளுத்த போறங்களோ  :o 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரவுடிக்கூட்டம்தான்....இப்ப யாழ் நகரை ஆளுது...எல்லாம் எமது தலை எழுத்து..

இவனை யாரும் கொளுத்தவில்லையே ஏன்? :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

இவனை யாரும் கொளுத்தவில்லையே ஏன்? :icon_idea: 

 

அதுக்குத்தான் முன்  கூட்டியே  டக்லசு  மாமாவின் பல்லைப்பிடிங்கினார்கள்

 

இவரை  இழக்க முடியுமா???

வெகுநாளாக  தமிழர்  எதிர்பார்த்திருந்த

எம்மை  ஆளப்பொகும் தலைவர் இவர்தான்.... :(  

பன்றிக் கறி திண்டு கொழுத்தவன் போல உள்ளான்!

ஆர்ப்பாட்டத்திற்காக ஏமாற்றி அழைத்துவரப்பட்ட பொம்மைவெளிமக்கள்
திங்கட்கிழமை, யூலை 29, 2013
abuse%20and%20abduction003.jpg
நாவாந்துறைப் பகுதியில் பொம்மைவெளி எனும் பிரதேசத்தில் வதியும் வறிய மக்களை இலவசமாகப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன, மீள்குடியேற்றம் செய்வது தொடர்பான அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது, அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனப் பசப்பு வார்த்தைகள் கூறி அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. மஹிந்தவின் கட்சியின் விரக்திக்குழு.
.
இதனால் தாம்  மன உளைச்சலுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளானோம் எனக் கூறுகின்றனர் பொம்மைவெளிமக்கள்.  நேற்று யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் ஒரு பகுதியினர்.   வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடவென குடாநாடு முழுவதும் ஒருவாரத்துக்கு முன்னரே "போஸ்டர்' ஒட்டி ஆரவாரப்பட்ட சீராஸின் ஆதரவாளர் குழு ஒன்றே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
.
தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது பெயர் பரிந்துரைக்கப்படாதமை குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தக் கட்சியின் சின்னத்தை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    இவர்களுக்குத் துணையாக பசப்புப் வார்த்தைகள் கூறி பஸ்களில் ஏற்றிவரப்பட்ட மக்களும் ஈடுபடுத்தப்பட்டனர். குறித்த நபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
.
அழைத்துவரப்பட்ட பெரும்பாலானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தம்மை ஏமாற்றியே அழைத்து வந்தனர்.   இலவசப் பொருள்கள் வழங்கப்படும் எனக்கூறியும் மீள்குடியமர்வது தொடர்பான கலந்துரையாடல் எனக்கூறியும், கூட்டம் மல்லாகத்தில் இடம்பெறும் என்று கூறியும் எங்களை பஸ்ஸில் ஏற்றினர்.    பொம்மைவெளிப் பகுதியில் இருந்தே பெருமளவானோர் நேற்று அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மயங்கி விழுந்ததையும் அவதானிக்க முடிந்தது. -
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் நின்றவர்களின் கையில் நெருப்பு பெட்டியோ லைட்டரோ இல்லைப்போல இல்லாட்டி இவரின் காரியம் முடிந்திருக்கும்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.