Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முஸ்லிம்கள் குறித்து த.தே.கூ.வுடன் கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.d45465464065465.jpg

எமது தேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இனநல்லுறவு, சகவாழ்வு இணக்கப்பாட்டு அரசியல் என்பன குறித்து ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை மனிதம் குறித்து சிந்திக்கின்ற எல்லோராலும் வலியுறுத்தப்படுகின்றது. 

 

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தேசத்தில் அரசியல் என்பது தனிநபர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார அரசியலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அதற்கு மாற்றீடாக சமூக இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விழுமிய அரசியல் ஒழுங்கொன்றின் தேவை தற்போது மிகவும் பலமாக உணரப்படுகிறது.

 

எனவே இவ்விரண்டு முக்கிய அடிப்படைகளையும் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு கடந்த ஜூலை 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன், முதலைமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பில் அப்துர் ரஹ்மான் (பொறியியலாளர்), நஜா முஹம்மத், அப்துல் வாஜித், அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், முஹம்மட் பிர்தௌஸ், முஹம்மட் லாபிர் மற்றும் முஸ்தபா மௌலவி ஆகியோர் பங்கேற்றனர்.

 

இச்சந்திப்பின் போது வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர்களது ஏனைய நலன்கள் குறித்தும் பேசப்பட்டது.

 

அத்துடன் அமையப்போகும் வட மாகாண சபையில் அவர்களது பிரதிநிதித்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

மேலும் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியலுக்கான அடிப்படைகள் குறித்தும், விழுமிய அரசியலுக்கான மாதிரிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், வட மாகாண சபை நிர்வாகத்தில் முஸ்லிம்களின் பங்கேற்பு குறித்தும் பேசப்பட்டது.

 

இரு சாராருக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இதன்போது, விரிவாகப் பேசப்பட்டதுடன் அதற்கான நகல்களும் இச்சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

 

இதன்போது காணப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் வெகுவிரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதோடு, தேர்தல் பிரச்சாரங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு நேரடியாக பங்கேற்கும் என அதன் ஊடகப் பேச்சாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 40 ஆயிரம் மாவீரர்கள்...3 1/2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள்...இறந்தது...இவைக்கு இணக்க அரசியல் நடத்தவோ....இந்த சோனிகள்..எல்லம் எமது இனம் அழியும்போது சிங்களவனுடன் சேர்ந்து பார்ட்டி வைத்தவை....இப்ப இணக்க அரசியல் கேட்கினமோ....இடற்கு கூத்தமைப்பும்...சிங்கள முதலமைச்சரும்...சேர்ந்து  இணக்க அரசியல் செய்ப்போகினமோ...தூ  மானம் கெட்டவர்கள்...தமிழனாய் னிமிர்ந்து வாழ்ந்த எம்மைகாட்டிக்கொடுத்து அழித்துவிட்டு......சோனிகள் இப்ப இனக்க அரசியல் கேட்க இவை அவையுடன் ஒப்பந்தம் செய்து ..போகும்னிலை ...நாளை உங்களஊகு அவர்கள்...ஒப்பந்தம் போடக் கேட்பார்கள்....

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நம்பிக்கை கட்டி எழுப்பப்பட முன்பு சம்பந்தன் ஒப்பந்தங்களில் கையெழுத்து வைப்பதில் முன்னணியில் உள்ளார். தேர்த்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற அவசர அவசரமாக ஒப்பந்தங்களில் கையெழுத்து போடப்போகிறாரா? 

கிழக்கு மாகாணத்தில் இவர்கள் மு.கா நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தேர்தலில் நிற்க வேண்டும். பகிர்வு வடக்கு கிழக்கில் என்று இருக்க வேண்டும். வடக்குக்கு மட்டும் என்றிருக்கக்க கூடாது. ஆசன பகிர்வு மக்கள் தொகையை பொறுத்தது என்று இருக்க வேண்டும். கிழக்கில் முஸ்லீம்கள 30 % தமிழர் 35 % என்றால் அந்த விகிதத்தில் ஆசன பகிர்வு. 

 

கிழக்கு முதல் அமைச்சர் அவர்களுக்கு வடக்கு முதல் அமைச்சர் தமிழர்களுக்கு. 

 

வடக்கு கிழக்கு இணையும் போது தரத்தின் பேரில் முதல் அமைச்சர்.

Edited by மல்லையூரான்

உவர்களை நம்புபவர்கள் ஏமாந்து போவதுமட்டும் உறுதி!
இது வரலாறு சொல்லும் பாடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.