Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் - ஐ.தே.க - சீன அழுத்தங்கள் காரணமாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லையா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு துறைமுக ஆரம்ப நிகழ்வுகளின் போது என்ன காரணத்திற்காக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியது கட்டாயம் என்ற போதிலும்இ இந்த நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீன அழுத்தங்கள் காரணமாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த நிகழ்வின் போது இலங்கை தேசியக் கொடிகளை விடவும் அதிகளவில் சீனத்தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
சில நிகழ்வுகளில் ஒரு தடவை தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும்இ ஹம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப நிகழ்வின் போது இரண்டு தடவைகள் இசைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம்? அரச குடும்பம் இவ்வாறு அரையில் சீலையும் இல்லாமல் மண்டி இடுவதுதான் சிங்கள ராஜாரதந்திரம்.

 

N. M. Perera  என்ற இடதுசாரி ஆரம்பித்துவைத்த சிங்கள அரச கலாச்சாரம் தான் அரசு பிச்சை எடுப்பது. இதில் N.M.Perera படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில் என்று சோசலிசம் பேசிக்கொண்டு, தான் எடுத்த பிச்சைகளை மேற்கு நாடுகளிடம் தான் எடுத்தார். அப்போதும் இதே மாதிரி அவமானகரமான பிச்சை எடுப்புத்தான். 

 

இன்று, அரச குடும்பத்திற்கு மேற்கு நாடுகளிடம், பிச்சை எடுக்கச் சங்கடமாக இருக்கிறது. எனவே உடுத்த வேட்டியை கழற்றி அடகுக்கு கொடுத்துத்தான் சீனாவிடம் கடன் வாங்குகிறார்கள். 85% உரிமையை அந்நிய கம்பனி அரச துறைமுகத்தில் வைத்திருந்தால் அங்கு நடை பெறும் விழாவில் 85% வீத கொடிகளும் சீனாக் கொடிகளாக இருக்க வேண்டும் என்று அந்த கம்பனி முடிவெடுக்க முடியும்தானே.

 

2006 ம் ஆணடு, எந்த கொழும்பு கோமாளிப் பத்திரிகைகள் தன்னும் 85% உரிமையுடன் சீனா துறைமுக அபிவிருத்தியை ஆரபிக்கிறது என்ற உண்மையை எழுதியிருந்தார்களா? புலிகளை அடிக்க சீனா ஆயுதம் கொடுக்கும் என்று இழிச்சவாய் கொழும்பு ஊடகங்கள் மார் தட்டினார்கள். மொட்டை பிக்குகளுடன் சேர்ந்து  இந்தியாவை இழக்காரமாக வர்ணித்தார்கள். இன்று இலங்கையின் பிரதான துறைமுகத்தின் தென் முனைதான் விலை போனதா அல்லது முழுவதும் போய்விட்டதா என்றதை இந்த ஊடகங்கள் ஒழித்து விளையாடுகின்றன. இந்த ஊதுகுழல் கொழும்பு ஊடகங்களிடமிருந்து அந்த உண்மை வெளியே வர இன்னொரு எட்டு வருடங்கள் பிடிக்கலாம்.

 

சீனா, தோட்டக்காரனின் தென்னையில் இருந்து இளநீரை இறக்கி தான் குடித்துவிட்டு கோம்பயை சிங்கள தோட்டக்காரனை நக்கவிட்டிருக்கிறது. காய்ந்து போன அமபாந்தோட்டையில், துறைமுகம், விமானநிலையம், விளையாட்டு மைதானம்.... என்றெல்லாம் கட்டி அரச குடும்ப பெயரை வைத்து சிங்களவரிடம் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு வர்த்தக சவால் விடும் அருமையான கொழும்பு துறைமுகத்தை கட்டி 85% உரிமையை தான் கையடக்கிக்கொண்டது. இதற்குத்தான் பெயர் மோடைய ராஜதந்திரம்.

 

 

Edited by மல்லையூரான்

கொலைகாரர்களின் தேசிய கீதத்தை  கேட்க சீனா விரும்பியிருக்காது? :D

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியா சீனாவுக்கு வரி செலுத்துமா? :unsure:

 தேசிய கொலை கீதத்தை  கேட்க சீனா விரும்பியிருக்காது??

இலங்கை மாதிரி சோசலிச குடியரசு ஒன்றின் துறைமுகத்தில் எப்படி இன்னொரு சோசலிச நாடு 85% பங்குகளை வைத்திருக்கிறது? இரண்டு பக்கமும் கோமாளித்தனம்தான்.  இதில் இலங்கை பல்லாயிரக்கணக்கான வேலைகளை நிரந்தரமாக சீனருக்கு தாரை வார்க்கிறது. இது இலங்கையின் பக்கமாகும். ஆனல் இந்தியாவின் பக்கம் சிக்கலாகியிருப்பது வர்த்தகம் மட்டுமல்ல. பாதுகாப்பும் சேர்ந்துதான். 

 

இந்தியாவின் தென் பகுதி துறைமுகங்களில் இத்தகைய பாரிய கப்பல்கள் தரிக்க முடியாதென்பத்தால் இறக்குமதி, ஏற்றுமதியை இந்திய வர்த்தகர்கள் கொழும்பு ஊடாக செய்வதை இந்தியா தடுக்க முடியாது என்று நினக்கிறேன். இந்தியா ஒரு அடி அடித்தால் இலங்கை இதுவரையில் திருப்பி எப்போதும் இரண்டு அடி அடிக்கிறது என்பது மட்டுமல்லாமல், இது WTO இன் விதிகளுக்கு எதிராக இருக்கும் என்பதால் அதுவே தலையிடும். எனவே இந்தியா, சீனாவுக்கு வரி செலுத்த வேண்டிய தேவையை தவிர்க்க முடியாது.

 

இந்தியாவும் சீனாவும் இப்போது தம்மிடை பல நேரடி வர்த்தகங்களை ஆரம்பித்துவிட்டதால் அதைப் பெரித்து படுத்த முடியாது. ஆனால் இலங்கை தன்னிடம் பெரிய விமானத்தளம் ஒன்றும் இல்லாத போதே இந்தியாவுக்கு எதிராக சரவதேச விமானநிலையத்தை பாவிக்க அனுமத்தித்தது. எனவே இப்படி ஒரு சீனாவால் உடமையாக்கப்பட்ட துறை முகத்தை சீனாவும், பாகிஸ்தானும் தமது தேவைகளுக்கு, தாம் விரும்பும் போது பாவிப்பதை, இந்தியா தடுக்கலாமா என்பதை நடப்பதை வைத்து, அது நடந்த பின்னர்தான்  சொல்ல முடியும். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை, கச்ச தீவு ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறைவேற்ற முடியாமல் இருக்கு. இதில் சீனாவால் உடமையாக்கப்பட்ட கம்பனியில் இந்தியாவால் என்ன செய்ய முடியும்? 

 

2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னெடுப்பில் 85% வீத பங்கு  சீனாவுக்குஎன்பதை எப்போது எழுதினார்கள் என்பது மறை பொருளாக இருக்கிறது. இதனால்த்தான் அமெரிக்கா "சீனாவின் முத்துமாலை திட்டம்" என்பதை கூறியதா, சர்வதேச வர்த்தக நிலையங்களில் செய்யப்பட்ட சில பதிவுகளை வைத்து இதுதான் நடக்கப் போகிறதென்பதை அமெரிக்கா முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததா என்பதை எல்லாம் ஆய்வு செய்தால் பல சுவாரசியமான செய்திகள் வெளிவரலாம். 

 

இலங்கை சீனாவின் சட்டலைட்சை வைத்து இந்திய மீனவரை கண்காணிப்பதாக கூறிகொண்டு, சீனாதான் இந்திய கடல் படையை கண்காணிக்கிறது. கடந்த காலங்களில் இலங்கையை சுற்றிய கடல்பரப்பில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து, இந்திய பாதுகாப்புக்கு எதிராக  பல அத்து மீறல்களில் இறங்கியிருக்கு. ஆனால் இந்திய மீனவர் மீது இலங்கை பிடியை தளர்த்தவே இல்லை. மிக மிக கவனமாக அவர்களை தூரவேதான் வைத்திருக்கிறது. அந்த பக்கம் தான் கவனத்திற்குரியது.

 

இலங்கை இந்திய மீனவர்களை கூடத் தூர தள்ளி வைத்துக்கொண்டிருக்கும் அதே நேரம் இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கன கொள்கலங்கள் இந்தியா போகப்போகிறது. இதில் தூதுக்குடியிலோ, கொச்சியிலோ சின்னப் பணம் கொடுத்தால் எந்த கொள்கலத்தையும் பாதுகாப்பாக இந்தியா எங்கனமும் அனுப்பி வைக்க முடியும். எனவே முதன் முதலாக பன்நாட்டு வர்த்தக கொள்கல்ங்களுடன் சேர்த்து பாகிஸ்தானும், சீனாவும் தேவையானவை எல்லாவற்றையும் சின்ன சோதனையும் இல்லாமல் இலங்கையூடாக அனுப்பி வைக்கும் வலிமை பெற்றிவிட்டார்கள். இதுதான் இந்தியாவுக்கு வரத்தக்க சிறிய வர்த்தக நட்டத்திலும் பார்க்க ஆபத்தாக மாறக்கூடிய சிறப்பம்சம்.

 

இந்தியாவால் இப்போது இதில் பெரிய கவனம் செலுத்த முடியாது. சீனாவும். பாகிஸ்தானும், வடக்கில் இந்தியாவின் கவனத்தை வேண்டுமென்றே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவை ஒரு முடிவுக்கு வந்த பின்னர்தான் புதிய துறைமுக முனையம் திறப்பு பற்றி இந்தியாவிடமிருந்து கருத்துக்களை எதிர் பார்க்க முடியும். ஆனால் அந்த நேரமும் இந்தியா இதையும் பூசி மெழுகலாம். 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.