Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அரசியல் அறிவோம்.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே,

இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.......

அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்..........

இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் அசாத்தின் ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதும் அதற்க்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடிக்கொண்டு இருப்பது கள உறவுக்க அறிந்த விடையம்

கிளர்ச்சியாளர்களுக்கு ஒருபக்கம் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் முண்டு கொடுக்க

அசாத்திற்கு ரஷ்ய மற்றும் ஈரானிய அரசுகள் முண்டு கொடுத்து வருவதும் கள உறவுகள் அறிந்த விடையம்.......

இதில் குறிப்பாக ஈரானை தனிமை படுத்த வேண்டும் என்பதற்காக சவுதி அரேபியா ஈரானின் உற்ற தோழன் ஆசாத்தை எப்பிடியாவது பதவியில் இருந்து அகற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது......

சவுதி அரேபியாவின் வளம் கொழிக்கும் எண்ணெய் வளத்தால் அதனிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சிய பணத்தை வைத்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத பண உதவிகள் செய்து கொண்டு இருக்கும் போது....

அதற்க்கு பெரும் தலை இடியாக இருப்பது ரஷ்யாவின் அசாத்தின் மீதான ஆதரவு கொள்கை.........

இதை எப்பிடி முறியடிக்கலாம் என்று யோசித்த சவூதி அரசு இப்பொழுது பணத்தால் ரஷ்யாவின் ஆதரவை அசாத்தின் சிரிய அரசு மீது இல்லாமல் பண்ணுவதற்கு அதன் உளவுத்துறை தலைவர் இப்பொழுது ரஷ்யாவில் பேச்சுவார்த்தைகளிலும் பேரம் பேசல்களிலும் ஈடுபட்டுக்கொண்டு இருகின்றார்.........

அதுவும் கொஞ்ச நஞ்சம் அல்ல ப சும்மார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களும் மற்றும் இன்னும் பிற உதவிகளும் செய்வதாக பேரம் பேசி இருக்கின்றார்........

நலிந்த பொருளாதரத்தில் இருக்கும் ரஷ்யா இந்த வாய்ப்பை ஏற்றுகொள்ளுமா இல்லை தன்னுடைய உற்ற நண்பன் அசாத்தின் நடப்பு தான் முக்கியம் என்று சவூதி அரேபியாவின் உதவியை தூக்கி எறியுமா ?

ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக சிரியாவை கைவிடத்தொடங்கி விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றார்கள்........

யாழ் களத்திற்காக சுண்டல்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடமும் பல வளங்களும் இயற்கை துறைமுகங்களும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இருகின்றன நாங்களும் வெறுமனே இந்தியாவை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காமல் சீன, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் எமது உறவுகளை விருத்தி செய்ய வேண்டும் நாங்களும் பேரம் பேசல்களில் இறங்க வேண்டும்.....

இதற்க்கு தற்பொழுது தமிழர் தரப்பின் தலைமை பொறுப்பை எடுத்துள்ள கூட்டமைப்பு முயற்ச்சிக்க வேண்டும்......

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் நிலத்தில் கால் வைக்கப் பயப்படுகிறார். ஏனென்றால் நிலத்தில் இருக்கும் எறும்பை மிதித்து இறந்து விடுமாம். :D  இவர் எங்கே பேரம் பேசுவது??

 

-----------------------------------------------------------------

 

அசாத் மீது கண்ணி வெடி தாக்குதல் நடாத்தப்பட்டு மயிரிழையில் தப்பியதாக செய்தி வந்தது. இதனை அவர் மறுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

பெங்காசியில் இருந்துகொண்டு சிஐஏ உளவாளிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சிரியாவுக்குள் கடத்த முயல்வதாக சிஎன்என் சொல்கிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே அதிக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீர்வேக ஏவுகணைகளையும் (ballistic and cruise missiles) உற்பத்தி செய்யும் நாடாக சீனா தற்போது இருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடிய JL-2 எனப்படும் ஏவுகணைகள் 14,000 கிமீ (8,699மைல்கள்) பாய்ந்து தாக்கக் கூடியவை. அணுக்குண்டுகளை தாக்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகள் தென் சீனக் கடலில் இருந்தோ அல்லது போஹாய் கடலில் இருந்து வீசினாலே அமெரிக்காவைத் தாக்கக் கூடியவை.

சீனாவின் Type-094 (Jin-Class) அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் JL-2 எனப்படும் ballistic missile பொருத்தப்படவுள்ளன. இவை 1,050 முதல் 2,800 வரையிலான கிலோகிராம் எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லவும் கூடியவை. ஒரு ஏவுகணை இரண்டு முதல் எட்டு வரையிலான குண்டுகளைத் தாங்கிச் செல்லம் திறனுடையவை. இந்த ஏவுகணைகள் அடுத்த ஆண்டில் இருந்து பாவனையில் ஈடுபடுத்தப்படும்.

சீனாவிடம் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக்கூடிய Type-094 (Jin-Class) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் (nuclear-powered ballistic missile submarines (SSBN))மூன்று இருக்கின்றன. இந்தவகையான மேலும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை சினா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சீனா மட்டுமல்ல ஈரானும் வட கொரியாவும் தமது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளின் பாய்ச்சல் திறன்களை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இரு நாடுகளும் அமெரிக்காவைத் தாக்கக் கூடிய வல்லமை பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உலகிலேயே வலிமை மிக்கதாகக் கருதப்படும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பற் படையைச் சமாளிக்க சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை எண்ணிக்கை ரீதியிலும் தர ரீதியிலும் அதிகரித்து வருகிறது. சீனா 13,000கிலோமீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கினால் அவற்றின் மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைத் தாக்க சீனாவால் முடியும். ஆனால் 8000கிலோ மீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளையே பல தொழில்நுட்பப் பிரச்சனைகள் தோல்வியில் முடிந்த சோதனைகள் ஆகியவற்றின் மத்தியிலேயே உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம்.

அமெரிக்கா தனது நாடு மற்ற நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்க ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் முதற்கட்ட பொறிமுறை இஸ்ரேலில் காசாவில் இருந்து ஹமாஸ் போராளி அமைப்பு ஏவிய ஈரானிய ஏவுகணைகளுக்கு எதிராக 2012இல் சோதித்துப் பார்க்கப்பட்டது. இவை முற்றாக வெற்றியளிக்கவில்லை. இத் திட்டம் மேலும் மேபடுத்தப் பட வேண்டும் என சில அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது செலவு மிகுந்தது எனவும் முழுமையான பாதுகாப்பைத் தரவல்லன அல்ல எனவும் சிலர் வாதாடுகிறார்கள். எதிரி நாட்டில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட முயலும் பட்சத்தில் அவற்றை எதிரி நாட்டிலேயே வைத்து வெடிக்கச் செய்யும் பொறிமுறையையும் உருவாக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருக்கிறது. அதிபர் பராக் ஒபாமா ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறார்.

அமெரிக்காவிற்கே இந்தளவு ஆபத்தென்றால் அயல்நாடான இந்தியாவின் நிலை?

நன்றி : வேல் தர்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாமை ஆட்சியில் இருந்து அகற்றி ஜனநாயகத்தையும்..... சுதந்திரத்தையும் Iraq இல் நிலைநாட்டி விட்டதாக கூறும் பலர் இன்றைய ஈராக் சதாம் காலத்தில் இருந்ததைவிட பல கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு வருகின்றது......

மசூதிகள், சந்தைகள், ஐஸ் கிரீம் பாலர்கள்....தேநீர் கடைகள் என்று வெடிக்கும் குண்டுகளால் மக்கள் அதிர்ந்து போய் இருக்கின்றார்கள்......

ஜூலை மாதத்தில் மட்டும் 1057 ஈராக் மக்கள் கொல்லப்பட்டு இருகின்றார்கள்......

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன அரச நிறுவனமான China Metallurgical Group Corp ஆப்கானிஸ்த்தான் அரசுடன் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆப்கானிஸ்த்தானில் செப்பு உலோகத்தை அகழ்வு செய்யும் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. காபுலுக்கு தென் கிழக்கே உள்ள லோகர் மாகாண தரிசு நிலத்தில் இந்த அகழ்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த லோகர் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தினரின் பலமாக உள்ளனர். இருந்தும் சீனா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

லோகர் மாகாணத்தில் இருந்து பாக்கிஸ்த்தானிற்கு ஒரு தொடரூந்துப் பாதையையும் சீனா அமைக்கவிருக்கிறது. ஆப்கான் வரலாற்றிலேயே அதிக பெறுமதியான வெளிநாட்டு முதலீடு இதுவாகும். ஆப்கானிஸ்த்தானில் நூறு பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான கனிம வளங்களும் எரிபொருள் வளங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். சீனா அமைதியாக இருந்து தலிபானினிடம் நற்பெயர் வாங்கியுள்ளது. அமெரிக்கா அமெரிக்கா தனது 672பில்லியன் டாலர்களைச் செலவளித்தும் 2,200 அமெரிக்க உயிர்களைப் பலிகொடுத்தும் செய்ய முடியாத பொருளாதாரச் சுரண்டலை சீனா இழப்பீடு எதுவுமின்றி செய்கின்றது. உண்மையில் ஆப்கானிஸ்த்தானில் சீனச் சுரண்டலை அமெரிக்கா விரும்புகிறதா அல்லது அமெரிக்கா ஆப்கான் பொறிக்குள் சீனாவை விழுத்துகிறதா என்பது இப்போது உள்ள பெரும் கேள்வி. அமெரிக்காவும் மற்ற நேட்டோப் படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு பெரும் பொருளாதார நெருக்கடியும் மோசமான உள்நாட்டுக் கலவரமும் வெடிக்கலாம். சீனாவைப் பொருளாதார இலாபங்களைக் காட்டி ஆப்கானிற்குள் இழுக்க அமெரிக்கா முயல்கிறது.

எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது. ஆப்கான் சந்தைகளிலும் தெருவோரக் கடைகளிலும் சீனத் தயாரிப்புகள் ஏற்கனவே குவிந்து விட்டன. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஆப்கானிய காவற்துறையினருக்கு தனது நாட்டில் பயிற்ச்சியளிக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை 2001இல் ஆக்கிரமித்த போது அங்கு காணி விலைகளும் கட்டிட விலைகளும் அதிகரித்தன. அதிக வேலை வாய்ப்புக்கள் உருவானது. இப்போது கட்டிட விலைகள் சரியத் தொடங்கி விட்டன. வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது ஆப்கான் பொருளாதரத்திற்கு உகந்தது அல்ல. இதை சீன முதலீட்டால் சரிக்கட்டலாம் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நம்புகின்றன.

சீனா தான் முதலீடு செய்யும் நாடுகளில் தனது தொழிலாளர்களைக் கொண்டு போய் குவிப்பது வழக்கம். ஆப்கானிலும் சீனா அதையே செய்கிறது. சில இடங்களில் சீனத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. தனது தொழிலாளர்களைப் பாதுகாக்க சீனா தனது படைகளை ஆப்கானுக்கு அனுப்ப வேண்டி இருக்கும். சீனாவின் முதலீடுகள் திடமற்ற நிலையில் இருக்கும் ஆப்கானில் அதிகரித்தால் அவற்றைப் பாதுகாக்க சீனா படையினரை அங்கு அனுப்ப வேண்டும். தலிபானுடன் நல்ல உறவை சீனா வளர்க்க வேண்டும் அல்லது தலிபான்களுடன் மோத வேண்டும். தலிபானும் அல் கெய்தாவும் சீனாவில் வாழும் இசுலாமியர்களிடையே ஏற்கனவே தீவிரவாதத்தைப் பரப்பி வருகின்றன.

சீனாவால் பாக்கிஸ்த்தானை கட்டுப்படுத்த முடியும்.

சீனாவால் பாக்கிஸ்த்தானின் இசுலாமியப் போராளிக் குழுக்களுக்கான உதவிகளை நிறுத்த முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாக்கிஸ்த்தான் தனது மோசமடையும் பொருளாதாரத்தை சீர் செய்ய சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது. தலிபான் போராளிகளோ அல் கெய்தாப் போராளிகளோ சீனாவிற்கு எதிராக கிளம்பும் பட்சத்தில் சீனாவால் பாக்கிஸ்த்தானில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவோ அடக்கி கைது செய்யப்பண்ணவோ முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன ஆப்கானில் தனது காய்களை மிகவும் திட்டமிட்டும் நிதானமாகவும் நகர்த்துகிறது.

அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தது தலிபானகளையும் அல் கெய்தாவையும் கொல்வதற்கு. சீனா ஆப்கானில் தலையிடுவது ஆப்கானைப் பொருளாதார ரீதியில் சுரண்டுவதற்கு. தனது நாட்டிலும் இசுலாமியர்கள் இருப்பதால் சீனா இசுலாமிய தீவிரவாதம் உலகில் ஓங்கினால் அது தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணரும்.

நன்றி: வேல்தர்மா

  • கருத்துக்கள உறவுகள்

சீனர்களுக்கு வியாபாரம் பற்றி சொல்லித்தர வேண்டியதில்லை.. பணமே குறியாக இருப்பார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின்  ஒரு மாநிலமாக  உள்ள  Bretagne  பற்றி  தமிழர்கள்  அறிந்து வைத்திருப்பது  நல்லது என்பதற்காக  இதை  இங்கு இணைக்கின்றேன்.  பிரெஞ்சிலுள்ளதை   ஆங்கில  வுடிவத்திலோ  தமிழிலோ  எவராவது தந்தால்   நன்றாக  இருக்கும்.

 

தனக்கென ஒரு மக்கள்  கூட்டத்தையும் தனி  ஆட்சியையும் கலை கலாசாரத்தையும் கொண்டிருந்த மக்கள்  எவ்வாறு பிரான்சினால்  சுயம் இழந்து ஆக்கிரமிக்கப்பட்டு இன்றும் அதே கனவுகளோடு ஆனால் எல்லாம  இழந்தநிலையில்   வாழ்கிறார்கள்  என்பதை  தமிழர்  நாம்  அறிந்து வைத்திருத்தல் நல்லது.

 

சிங்களம்   எம்மை  ஆக்கிரமித்து செய்த அழிவுகளுக்கு  ஒப்பீடான வகையிலும் செய்துவரும்  இனச்சுத்திகரிப்புக்கு ஒத்ததாகவும்  பிரான்சினதும் ஆக்கிரமிப்பும் இன அழிப்பும்  இருந்துள்ளமை  தெரிகிறது.

 

ஊர்ப்பெயர்  மாற்றம்

பிறந்த பிள்ளைகளின் பெயர்  மாற்றம்

வலுக்கட்டாய குடும்ப  வாழ்வு

இனக்கலப்பு

நில அபகரிப்பு

தொழில்துறை  மற்றும்  படிப்புக்களில்  பாரபட்சம்

இராணுவ  மற்றும்  காவல்துறையினரின் ஒடுக்குமுறை

காணாமல் போகுதல்

......................  என  எல்லாமே எமக்கு  நடந்தவை  போலவே......

 

எனக்கு சில  நண்பர்கள்  இவ்வட்டத்தில்  உண்டு.  அவர்களின் கூற்றுப்படி

எமது முன்னோர்கள் இவர்களுடன்  கப்பல் வாணிபம் செய்ததற்கான பல சான்றுகள் உள்ளன. தமது பண்டைய தொழில்  கப்பல்துறை  சார்ந்த வியாபாரம்  என்றும்  அதுவும் தமது பண்டைய  கப்பல்களைப்பார்க்கும்போது அதில்  தமிழர்களின் கைவண்ணத்தை  காணக்கூடியதாக இருப்பதாகவும்  சொல்வார்கள்.

 

ஆனாலும் இன்றும்  எங்களை  தனியே விட்டால் போதும் என்றநிலையிலேயே  அந்த மக்கள்   உள்ளனர்.........

 

 

http://fr.wikipedia.org/wiki/Histoire_de_la_Bretagne

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லர் மட்டும் தூக்கில் இடப்பட்டால் ஏற்ல்கனவே இந்தியா மேல் வெறுப்பில் இருக்கும் பஞ்சாபிகளின் வெறுப்பை இந்தியா இன்னும் இன்னும் சந்திக்க வேண்டி வரும் அதுவும் குறிப்பா வெளிநாடு வாழ் பஞ்சாபிகளின்

News:

புதுடில்லி :காலிஸ்தான் பயங்கரவாதி, புல்லாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி, அவரது மனைவி, சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டில்லியில், 1993ல், நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், காலிஸ்தான் பயங்கரவாதி, புல்லார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து புல்லாருக்கு கருணை காட்ட வேண்டும் என ‌கோரிக்கை எழுந்தது. பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேயே கட்ஜூ ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அதில், புல்லார், நோயால் அவதிப்படுவதால் அவருக்கு கருணை காட்ட வேண்டும் என கூறினார். இதேபோல் சிரான்மணி அகாலிதளம் மற்றும் சிரோன்மணி குருத்வாரா பர்பந்தக் கமீட்டியும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், புல்லாருக்கு கருணை காட்ட வேண்டுகோள் விடுத்தன.

இதனைதொடர்ந்து, புல்லார் சார்பில், கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், 2003ல், கருணை மனு அளித்தேன். ஆனால், இந்த மனுவை பரிசீலிக்க, எட்டு ஆண்டுகள் தாமதமாகி விட்டது. கடந்த, 2011ல், தான், கருணை மனு, நிராகரிக்கப்பட்டது. எனவே, கருணை மனுவை தாமதமாக பரிசீலித்த காரணத்துக்காக, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், புல்லார் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், "பயங்கவாத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்தவர்களுக்கு, கருணை மனு தாமதமாக பரிசீலிக்கப்பட்டது என்ற காரணத்துக்காக, தூக்கு தண்டனையை குறைக்க முடியாது' என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, புல்லாருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புல்லார் மனைவி, சுப்ரீம் கோர்ட்டில், , மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதனால் அவரின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

Dinamalar

sundal:

இதே வேளை இந்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் மிகவும் கவலை அளிக்க கூடிய செய்தி.........

புல்லரை தூக்கில் இட்டால் இவர்களை தூக்கில் இடுவது காங்கிரஸ்க்கு ஒன்றும் கடினமான வேலையாக இருக்க போவதில்லை

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் சிலவற்றை எழுதுகின்றேன். எனது கருத்துடன் அனைவரும் ஒத்துப்போகவேண்டியதில்லை.  :wub:

 

எங்களிடமும் பல வளங்களும் இயற்கை துறைமுகங்களும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இருகின்றன நாங்களும் வெறுமனே இந்தியாவை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காமல் சீன, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் எமது உறவுகளை விருத்தி செய்ய வேண்டும் நாங்களும் பேரம் பேசல்களில் இறங்க வேண்டும்..... 

 

இந்த மனநிலை தான் எனக்கும் பல வருடங்களிற்கு முன்னர் இருந்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்று காலம் காட்டிநிற்கின்றது. 

 

போராடி பெறும் விடுதலை என்பது எமது தலைவர் சொன்னது போல் நெருப்பாற்றை கடப்பது போன்றது. கடந்துவிட்டால் விடுதலை என்றென்றும் எமதே. 

 

எமது இயற்கை வளங்களையும்; கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் தாரை வார்த்தால் நாம் எந்த நெருப்பாற்றையும் கடக்கத்தேவையில்லை. ஆனால் எமது இனம் வாழும்வரை அடுத்தவனிற்கு அடிமையாக வாழ்வதற்கான ஒரு அடித்தளமே இது. விடுதலையை பெயர் அளவில் நாம் பெற்றுக்கொள்ளலாம். 

 

இந்த நாடுகள் எமக்கு ஒரு நன்மை செய்வதற்கு நாம் அவர்களிற்கு 10 விடயங்களை செய்யவேண்டும். அந்த 10 விடயங்களும் நாம் அவர்களை சார்ந்து இருப்பதற்காகவே இருக்கும். அதன் பின்னர் நாம் அவர்களின் "வாழ்நாள் பொருளாதார" அடிமை. 

 

 

லிபியா பற்றி இங்கு விவாதித்ததால் அவர்களின் இந்த நிலைக்கு முக்கியமான வெறொரு காரணத்தை எழுதுகின்றேன்.

 

உலகில் எந்த நாட்டிடமும் கடன்படாத ஒரு நாடு என்றால் அது லிபியா தான். மிகவும் வசதியான மக்கள் ஆப்பரிக்கா கண்டத்தில் உள்ளனர் என்றால் அது லிபியாவில் தான். மின்சாரம்; கல்வி; மருத்தவம் விவசாயநிலம் என்று அனைத்துமே இலவசம். 

கடாபியின் அழிவிற்கு இது ஒரு முக்கிய காரணம் (வேறு சில காரணங்களும் இருக்கலாம்). 

இப்படியான ஒரு நாடு வளர்வதை இந்த பேரரசுகள் எப்படி பொறுத்துக்கொள்ளும்? இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் கட்டுக்கடங்காத காளையாக லிபியா சுற்றுவதை வளர்ந்து வரும் நாடுகள் வேடிக்கை பார்க்குமா என்ன. லிபியாவின் "Tamoil" எண்ணை நிறுவனம் பல நாடுகளின் கண்ணை குத்தின. கடாபி கேட்டால் கொடுக்கவா போகிறார்? எனவே அடித்துப்பறிக்கப்பட்டது. 

 

 

உலகில் தமிழீழம் அமைந்திருந்தால் நிச்சயமாக அது ஒரு செழிப்பான நாடாக வளர்ந்திருக்கும். புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் இது நிச்சயம் நடைபெற்றிருக்கும். இன்னொரு லிபியாவாக நாம் வந்துவிடுவோமா என்று வல்லரசுகள் எம்மை பார்த்ததால் எமது போராட்டம் இந்நிலைக்கு தள்ளப்பட்டதா என்று பல தடவை சிந்தித்துள்ளேன். 

 

 

 

 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2011இற்கு முன்னர் ஆட்சியை மக்களாட்சி மயப்படுத்தும் படி அமெரிக்கா எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கை வேண்டியது. அவர் மறுத்தார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரை எகிப்தின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படும்படி அமெரிக்கா வேண்டியது அவர் மறுத்தார். மொஹமட் மேர்சியை பதவியில் இருந்து எகிப்தியப் படைத்துறையினர் அகற்றி ஆட்சிப் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டனர். மோர்சியின் ஆதரவாளர்கள் படைத்துறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எகிப்தியப் படையினர் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இப்போது அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என வேண்டுகிறது. படைத்துறை செவிசாய்க்கவில்லை.

2011இல் எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் அப்போதைய ஆட்சியாளர் புரட்சி செய்தபோது அமெரிக்கா தனக்கு வேண்டப்பட்டவரான ஹஸ்னி முபாரக்கை பதவியில் தொடர விரும்பாமல் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியது. அமெரிக்கா தனது கைப்பொம்மையான எகிப்தியப் படைத்துறை புரட்சியாளர்களுடன் ஒத்துப் போவதை விரும்பியது. இதனால் புரட்சி இரத்தக் களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கை ஆட்சியில் இருந்து விலக்கியது. ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வெற்றி பெற்று மொஹமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஒரு இசுலாமிய மதவாத ஆட்சி எகிப்த்தில் உருவானது. இது அமெரிக்கா விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் புவிசார் கேந்திரோபாய நலன்களுக்குப் பாதகமில்லாமல் மொஹமட் மேர்சி தன்னை மாற்றிக் கொண்டார். கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் மோர்சி ஈரான் நீட்டிய நட்புக்கரத்தை ஏற்க மறுத்தார். இஸ்ரேலுடனான எகிப்திய வர்த்தகத்தை அதிகரித்தார். மோர்சி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஆதரவுடன் எகிப்து இஸ்ரேலுடன் செய்யப்பட்ட காம்ப் டேவி ஒப்பந்தம் இரத்துச் செய்யபடுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மோர்சி அப்படிச் செய்யவில்லை. சிரியக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கு ஏற்றபடி நடந்து கொண்டார். இப்படி மோர்சி அமெரிக்கவின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டபடியால் அவர் உள்நாட்டில் செய்யப்படவேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் இசுலாமியச் சட்டங்களை அமூல் படுத்தத் தொடங்கினார். அத்துடன் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எகிப்தில் புரட்சி செய்தவர்கள் ஹஸ்னி முபாரக் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலையில்லாப் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, உல்லாசப்பயணத் துறை அபிவிருத்தி போன்றவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மோர்சி தன்னைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அவசர அவசரமாக ஒரு அசமைப்பு யாப்பை உருவாக்கினார். படைத்துறைக்கும் அதில் அதிக அதிகாரங்களை வழங்கினார். தன்னை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக்கினார். அவரது அரசமைப்பிற்கு தாராண்மைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அரசமைப்பு யாப்பிற்கான வாக்கெடுப்பில் 32விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே பங்கு பற்றினர். அதில் 67 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்திருந்தது. மோர்சி இசுலாமிய அடிப்படைவாதிகளுடன் தனது உறவைப் பலப்படுத்தினார். அரச உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தினார். பெணகளுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இவற்றை எல்லாம அமெரிக்கா கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது. மோர்சியை எப்படித் தன்வழிக்குக் கொண்டுவருவது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. மோர்சி பதவியேற்றதில் இருந்து பெண் உரிமைவாதிகள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். வேறும் பல அதிருப்தியாளர்கள் மோர்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடந்த படியே இருந்தன. மோர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவில் மோர்சியின் ஆட்சி தமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிலுமே கவனம் செலுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பல இலட்சக கணக்கான மக்கள் 2011இல் செய்தது போல் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எகிப்திய மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சனை நாட்டில் மோசமடைந்துள்ள பொருளாதாரமாகும். எகிப்தில் முதல் முதலாக மக்களாட்சி முறைப்படி நடந்த தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மொஹமட் மேர்சி அவரது பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி மக்கள் பல இலட்சக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து எகிப்தியப் படைத்துறை அவரைப் ஜூலை 3-ம் திகதி பதவியில் இருந்து விலக்கி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் இரத்துச் செயத்துடன். புதிய அதிபராக உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூரையும் புதிய தலைமை அமைச்சராக நோபல் பரிசு வென்ற அல் பராடியையும் படைத்துறையுனர் நியமித்தனர்.

14/05/2013 புதன்கிழமையில் இருந்து எகிப்தியப் படையினர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து தமக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராக கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். ஸ்கை நியூஸின் படப்பிடிப்பாளர் மைக் டீனும் அமீரகத்தின் பத்திரிகையாளர் ஹபீபா அல் அசீஸும் கொல்லப்பட்டனர். பல ஊடகவியலாளர்கள் கைது செய்யபப்ட்டனர். பத்திர்கையாளர்களின் மடிக்கணனிகள் பறிக்கப்பட்டு அதன் கடவுட்சொற்களை அடித்து மிரட்டி வாங்கினர் எகிப்தியக் காவற்துறையினர். எகிப்தின் வரலாற்றில் என்றும் இப்படி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை.

இதுவரை(15/08/2013- GMT - 12.00) 525 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,700இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எகிப்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படைத்தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிக்காரர்கள் பல கிருத்தவ தேவாலயங்களைத் தாக்கியதாகச் சொல்லப்ப்டுகிறது.

எல் பராடி பதவி விலகினார்

படைத்துறையினரால் பதவிக்கு அமர்த்தப்பட்ட எகிப்திய துணை அதிபர் எல் பராடி படைத்துறையினரின் அடக்கு முறைக்கு ஆட்சேபம் தெரிவித்துப் பதவி விலகினார். இறைவனின் முன்னிலையில் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்தார்.

மோர்சிக்கு எதிரானவர்கள் படைத்துறைக்கு ஆதரவு

மோர்சிக்கு எதிரான கட்சிகளின் கூட்டமைப்பான National Salvation Front என்னும் தேசிய விடுதலை முன்னணி படைத்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரைச் சொல்லி எகிப்திய அரசியலை திசை திருப்புவதற்காக வீதிகளில் அமர்ந்து கிளர்ச்சி செய்பவர்களை அடக்கியமைக்காக இன்று எகிப்து தலை நிமிர்ந்து நிற்கிறது என அவர்களது அறிக்கை தெரிவிக்கிறது.

சூயஸ் கால்வாயால் எகிப்து புவிசார் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாகும். அது தமது எதிரிகளின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது. அமெரிக்கா எகிப்து கொந்தளிக்கத் தொடங்கியவுடன் தனது படைகளை இத்தாலியில் குவித்தது. பின்னர் அமெரிக்கா தனது கடற்படையின் ஈரூடகப் பிரிவினரில் பலரை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எகிப்தில் பெரும் கிளர்ச்சியும் அதற்கு எதிரான மோசமான அடக்கு முறையும் நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை கோல்ஃப் திடல் ஒன்றில் கழித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா காத்திரமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவிலேயே அமெரிகாவின் செல்வாக்கு அதிகம் உள்ள நாடாக எகிப்து கருதப்பட்டது. அமெரிக்கா எகிபதியப் படைத்துறைக்கு ஆண்டொன்றிற்கு 1.6 முதல் 2 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்குகிறது. இந்தத் தொகை 1986இல் இருந்து வழங்கப்படுகிறது. 1986இல் இரண்டு பில்லியன் டாலர்கள் பெரும் தொகைதான் ஆனால் இப்போது அதன் பெறுமதி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அதிலும் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்து படைக்கலன்களை இறக்குமதி செய்யச் செலவளிக்கப்பட வேண்டும். 250மில்லியன் டாலர்கள் மட்டுமே படைத்துறையினருக்குச் செல்கிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பிடிக்காத நாடுகளான சவுதி அரேபியாவும் குவைத்தும் மொஹமட் மேர்சி பதவ்வியில் இருந்து விலக்கபட்டவுடன் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எகிப்திற்கு உதவியாக வழங்கின. இதனால் எகிப்த்தியப் படைத்துறைக்கு அமெரிக்காவின் உதவி தேவையற்ற ஒன்றாக மாறி விட்டது எனச் சொல்லப்படுகிறது. சிலர் அமெரிக்காவின் செல்வாக்கு எகிப்தில் சரிந்து விட்டது எனச் சொல்கின்றனர். ஆனால் உண்மை நிலை வேறு.

அமெரிக்காவை படைத்துறையினரும் அவருக்கு ஆதரவாக நிற்கும் தேசிய விடுதலை முன்னணியினரும் தமக்கு எதிராக அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுப்பதாக நம்புகின்றனர். மொஹமட் மேர்சியும் அவரது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அவருக்கு ஆதரவு வழங்கு மத தீவிரவாதிகளும் அமெரிக்கா படைத் துறையினருக்கு ஆதரவாக நடப்பதாக நினைக்கின்றனர். இதை அமெரிகாவும் அறியும். எகிப்தில் தான் தலையிட்டால் அது அல் கெய்தா போன்ற தீவிரவாதிகளுக்கு பெரும் பிரச்சார வாய்ப்பாக அமையும் என்பதை அமெரிக்கா அறியும். இதனால் தான் தலையிடாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டும் எகிப்தில் நடக்கும் வன்முறைகளைத் தான் கண்டிப்பது போல காட்டிக் கொண்டும் இருக்கிறது. உண்மையில் அமெரிக்காவின் ஆதரவுடனும் வேண்டுதலின் பேரிலும் சவுதி அரேபியாவும் குவைத்தும் எகிப்தியப் படைத்துறையினருக்கு உதவி செய்கின்றன.

Vel tharma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kathir Vel

ஈரானின் அடாவடி

******************

அடாவடி செய்து பழக்கப்பட்டவர்கள் அமைதியாக இருப்பவர்களை பார்த்தால் இளப்பமாக நினைப்பார்கள். அவர்களின் அகராதியில் பொறுமைக்கு பொருள் பயம்.

எப்போதும் பாகிஸ்தான், அவ்வப்போது சீனா, அடிக்கடி இலங்கை, எப்போதாவது பங்களாதேஷ் என அண்டை நாடுகள் நம்மை ஏதாவது ஒரு வகையில் சீண்டுவதன் பின்னணி இதுதான். அவர்கள்தான் அப்படி என்று நினைத்தால் தொலைதூர ஈரானும் மூக்கினுள் மீசையை விட்டுப் பார்க்கும் புலிகேசி வேலையில் இறங்கியிருக்கிறது.

இராக்கில் இருந்து 1.4 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த நமது கப்பலை நடுக்கடலில் வழிமறித்து துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்றுள்ளது. தேஷ் சாந்தி என்ற அந்த கப்பல் அரசு நிறுவனமான இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமானது. சர்வதேச கடல் பிராந்தியத்தில் இந்த கப்பலை தடுத்த ஈரான் கடற்படை, அங்கிருந்து தனது கடல் பகுதிக்குள் கொண்டு சென்று, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது.

ராணுவம் அல்லாத யாரேனும் இவ்வாறு செய்தால் அது கடல் கொள்ளை. ஈரான் அரசு இதில் ஈடுபட்டுள்ளதால் கைது என அர்த்தமாகும். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஆகாது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், உலக தீவிரவாதிகளுக்கு உதவுவதாகவும் அமெரிக்காவுக்கு சந்தேகம். சதாம் உசேனின் இராக் மீது பொருளாதார தடை விதிக்கவும் போர் தொடுக்கவும் ஜார்ஜ் புஷ் சொன்ன அதே காரணங்களை ஈரானுக்கு எதிராக ஒபாமா இன்று எதிரொலிக்கிறார்.

ஈரான் நமக்கு எதிரி நாடல்ல. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டாலும் ஈரான் உறவை இந்தியா கைடவில்லை. தொடர்ந்து அதன் ஆயிலை வாங்கி வருகிறோம். சர்வதேச பணப் பரிமாற்றத்தில் அமெரிக்கா கெடுபிடி செய்ததால், ஈரானுக்கு நாம் பணம் கொடுப்பதில் சிக்கல் உண்டானது. எனவே, ஈரான் ஆயிலை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, அதை ஈடுகட்ட இராக்கிடம் கூடுதலாக வாங்க ஆரம்பித்தது இந்தியா.

இதனால் ஈரானுக்கு கடுப்பு. இராக் அதன் எதிரி அல்லவா. அதற்காக கப்பலை பிடித்துக் கொண்டால் எப்படி? கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து அதனால் ஈரான் கடல் பகுதி மாசுபடுகிறது என்று கரடி விடுகிறது ஈரான் அரசு. எண்ணெய் கசிந்தால் அதே இடத்தில் நிறுத்தி நங்கூரம் போட வைப்பதுதானே முறை. சர்வதேச கடலில் இருந்து ஈரான் கடலுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்து துறைமுகம் வரைக்கும் கசியவிட்டு மொத்த பிராந்தியத்தையும் மாசு படுத்தும் வேலையை அறிவுள்ளவர்கள் செய்வார்களா? ஈரான் சொல்லும் காரணம் அண்டப்புழுகு, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்கிறார்கள் நமது அதிகாரிகள்.

இந்திய பெருங்கடலையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் ஹோமுஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் மிக அதிகமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. சவுதி, குவைத், பகரைன், கத்தார் நாடுகள் ஏற்றுமதி செய்யும் எண்ணெய் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்காவை பின்பற்றி மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்தால் இந்த நீரிணையத்தை மூடி, எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்தை தடுத்து விடுவேன் என ஈரான் சமீபகாலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இது சட்ட விரோதமானது. முகாந்திரம் இல்லாமல் ஒரு நாட்டின் கப்பலை கைப்பற்றுவதும் சர்வதேச விதிகளின்படி குற்றம். ஈரானுக்கு சீக்கிரம் புத்தி தெளியாவிட்டால், இந்தியா இதனை போர்க் குற்றமாக பிரகடனம் செய்து மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின் பொறுமைக்கு எல்லை உண்டு என்பதை உலகம் உணரும் வேளை நெருங்கி விட்டதாக தோன்றுகிறது.

(தினகரன் தலையங்கம் 17.08.2013)

சீனாவும், ரஷ்யாவும் சிங்கள அரசுக்கு இனப்பிரச்சினை தொடர்பாக சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்னணியில் சிங்கள அரசால் மிதிக்கப்பட்டுவரும் ரஷ்யாவின் ஏஜென்ட் சோனியா இருக்கலாம் என நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ருவாண்டா - இனவழிப்பின் முன்னோடி !

 

2009 இல் வன்னியில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு முடித்துவைக்கப்பட்ட தமிழினக் கொலையில் பல்வேறு நாடுகளும் ஆற்றிய பங்கை நாம் அரசல் புரசலாக அறிந்திருக்கிறோம். சில நாடுகள் நேரடியாக இனவழிப்பிற்குத் துணைபோக மேலும் சில நாடுகள் இனவழிப்பை சகல அதிகாரமிருந்தும் தடுக்காமலிருக்க மீதி நாடுகள் இவ்விரு வகை நாடுகளையும் தொடர்ந்து செல்ல நாம் ஈவு இரக்கமின்றி வன்னிக்காடுகளில் அழிக்கப்பட்டோம். 

 

அவர்கள் வந்திருக்கலாம், இவர்கள் வந்திருக்கலாம், எம்மைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நாம் உலகின் ஒவ்வொரு திக்கு நோக்கியும் அவலக் குர எழுப்பிப் பார்த்தும் எவருமே கண்டுகொள்ளவில்லை. சிங்களம் தனது அகோரத் தாண்டவத்தை எந்த தடையுமின்றி முடித்து வைத்தது. ஐ. நா ஆகட்டும், அமெரிக்கா ஆகட்டும், பக்கத்திலிருந்த இந்தியாவாகட்டும், எல்லாம் தெரிந்திருந்தே எம்மை அழிய விட்டார்கள். முழு அதிகாரமும் தம்மிடமே வைத்திருந்தும் மெளனமாக இருந்தார்கள். இன்றுவரை நடந்து முடிந்தது இனக்கொலைதான் என்பதை இவர்கள் எவருமே ஏற்றுக்கொண்டதில்லை. அது இனக்கொலையல்ல என்று தம்மால் முடிந்தளவும் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். யார் யாரெல்லாம் எம்மைக் காப்பாற்றவருவார்கள் என்று நாம் பார்த்திருந்தோமோ அவர்களெல்லாம் நாம் எப்போது அழிந்துமுடிவோம், இலங்கையில் யுத்தம் எப்போது முடிவிற்கு வரும் என்று பார்த்திருந்தார்கள். ஈற்றில் சர்வதேசம் வரும், நாம் மீட்கப்படுவோம் என்று பார்த்திருக்க நாம் முழுவதுமாக ஏமாற்றப்பட்டோம். எமது இழப்புக்களைக் கூட ஏற்றுக்கொள்ளவோ அல்லது நடந்ததற்கான சரியான சொல்லைத் தெரிவுசெய்யவோ அவர்களுக்கு எந்த தேவையுமில்லை.

 

ஆனால் நண்பர்களே, வரலாற்றில் ஏமாற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளில் எமது கதை ஒன்றுமட்டும்தான் இருக்கிறதோ என்கிற கவலை வேண்டாம் உங்களுக்கு. எம்மைக் காட்டிலும் பல மடங்கு இனக்கொலையால் அழிக்கப்பட்டு, காக்கவருவார்கள் என்று நம்பவைத்து இறுதியில் முற்றான இனக்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட இன்னுமொரு சமூகமும் இருக்கிறது. 

 

இற்றைக்கு ஏறக்குறைய 18 - 19 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் சிறுபான்மை டுட்ஸி இனத்தவர்கள் மேல் பேரினமான ஹூட்டு இனவெறியர்கள் ஆடிய இனவழிப்பின் கோரத்தாணடவம் இன்றுவரை அண்மைய சரித்திரத்தில் ஹிட்லரின் யூத அழிப்பிற்குப் பின்னர்  நடந்த மிகப்பெரும் அருவருக்கத்தக்க இனக்கொலை என்று பதியப்பட்டிருக்கிறது. நம்பி ஏமாற்றப்பட்ட விடுதலை வேண்டும் இனக் குழுக்களில் ஒன்றான நாம் எமக்கு முன்னர் நடந்த எமையொத்த நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் சர்வதேசம் என்பது எதுவென்பதை அறிந்துகொள்வது அவசியம். இது இனிமேல் நாம் செயற்படும் விதத்தை சரியாக கணிக்க உதவுவதோடு, இவைபோன்ற இன்னொரு இனவழிப்பு நடைபெறுவதையும் தடுக்க உதவும் என்பதே எனது எண்ணம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

1994 ஆம் ஆண்டின் இனக்கொலைக்கு முன்னரான ருவாண்டாவின் சரித்திரம் 

 

1. 1918 ஆம் ஆண்டில் ருவாண்டா பெல்ஜியத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

2. 1933 ஆம் ஆண்டில் பெல்ஜிய அதிகாரத்தினால் ருவாண்டாவில் சர்வஜனக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்று இனக்குழுமங்களான ஹூட்டு, டுட்ஸி, டுவா இனமக்களுக்கென்று தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

3. 1948 இல் இனக்கொலை என்பதற்கான தெளிவான வரைவிலக்கணம் ஐ. நா மன்றத்தினால் வரையப்பட்டு சர்வதேச சட்டங்களுக்கு அமைய இது ஒரு குற்றம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

4. 1959 இல் ஆளும் பெல்ஜிய அதிகாரத்துக்கெதிராகவும், டுட்ஸி சிறுபான்மையினருக்கெதிராகவும் பெரும்பான்மைச் சமூகமான ஹுட்டூ இனவாதிகள் புரட்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

5. 1961 இல் டுட்ஸி இனத்தின் அதிகார மைய்யம் அழிக்கப்படுகிறது.

6. 1962 இல் ருவாண்டா சுதந்திரமடைகிறது.

7. 1973 இல் ரத்தம் சிந்தா சதிப்புரட்சியொன்றின்மூலம் ஜுவைனால் ஹபிஅரிமானா ஆட்சியைக் கைப்பற்றுகிறார்.

8. 1988 இல் ஆர்.பி. எஃப் எனும் ருவாண்டா தேசப்பற்று முண்ணனி எனும் டுட்ஸி இனமக்களுக்கான விடுதலையமைப்பு உகண்டாவில் ஸ்த்தாபிக்கப்படுகிறது.

9. ருவாண்டாவில் ஒடுக்கப்படும் தனது இனமான டுட்ஸி மக்களைக் காக்க ருவாண்டாவின் வடக்குப் புறமிருந்து ஆர். பி. எஃப் ஆளும் ஹூட்டு இனவாதிகளுக்கெதிராக தனது தாக்குதல்களை தொடங்க அங்கே சிவில் யுத்தமொன்று ஆரம்பமாகிறது.

10. 1991 இல் பல்லின மக்களும் பங்குகொள்ளும் அரசியல் அமைப்பொன்று தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.

11. யூலை 8, 1993 இல் டுட்ஸி மக்களுக்கெதிராக வன்முறைகளை ஆரம்பிக்குமாறு தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் ஊடாக ஹூட்டு இனமக்களுக்கு அரச ஆதரவு அமைப்பொன்று அறைகூவல் விடுகிறது.

12. ஆகஸ்ட் 3, 1993 இல் ஹூட்டு இனவாதிகளுக்கும் ஆர்.பி.எஃப் இற்குமிடையே யுத்த நிறுத்தம் ஒன்று கைச்சாத்தாகி இரு படைகளுக்குமான எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

13. ஏப்ரல் 6, 1994 இல் ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் ஏவுகனைத்தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்க, அவர் கொல்லப்படுகிறார்.

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இனி அங்கே நடந்தேறிய இனக்கொலை பற்றிப் பார்க்கலாம்.....

 

இரத்தக்களரியின் 100 நாட்கள் 

 

இனக்கொலை ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் ஆரம்பிக்கிறது. டுட்சிகளை அழிக்கவென்று ஹூட்டு இனவாதிகளால் உருவாக்கப்பட்ட இளைஞர் அமைப்பான         " இன்டெரஹம்வே"  நகரெங்கும் வீதித்தடைகளை ஏற்படுத்துகிறது. இனங்களை வேறுபிரித்தறியவென பாவிக்கப்பட்ட அடையாள அட்டைகளைப் பாவித்து டுட்ஸி இனமக்களை காணும் இடமெல்லாம் மிருகத்தனமாக வெட்டிக் கொள்கிறது இன்டெரஹம்வே" அமைப்பு. பெரும்பாலான கொலைகள் வாள்கள், கோடரிகள், கத்திகள் கொண்டே நடத்தப்படுகின்றன. பின்னர் வந்த நாட்களிலும், வாரங்களிலும் ருவாண்டா நாடெங்கும் வீதித்தடைகள் போடப்படுகின்றன.

 

ஏப்ரல் 7 ஆம் திகதி, டுட்ஸி இனத்தவர்களான அரச அதிகாரிகள் மற்றும் மிதவாத ஹூட்டூ இனமக்களைக் குறிவைத்து இனவாதிகள் தாக்குதல் நடத்திக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள். மிதவாதியான ஹுட்டு இனப் பிரதமரும் கொல்லப்பட்டவர்களில் அடக்கம். பிரதமரின் பாதுகாப்பிற்கென்று ஐ. நா சமாதானப்படையினரிலிருந்து வழங்கப்பட்ட 10 பெல்ஜிய அமைதிகாப்புப் படையினரும் ஹூட்டு இன்வாதிகளாலும், அரச இராணுவத்தாலும் கொல்லப்பட, பெல்ஜிய அரசு தனது சமாதானப் படையினரைத் திருப்பி அழைத்துக்கொள்கிறது.

 

பின்வந்த நாட்களில் இனக்கொலை நாடெங்கும் பரவுகிறது. நாட்டில் வாழும் அனைத்து டுட்ஸி இனமக்களினது முகவரிகளும் (ஒவ்வொரு இனமக்களுக்குமான தனித்தனி அடையாள அட்டைகளைப் பாவித்து) அரசாங்கத்திடமிருந்து ராணுவத்தினர்க்கும், இன்டெர்ஹம்வெ அமைப்பிற்கும் வழங்கப்பட்ட டுட்ஸி இனமக்களை அவர்கள் வீடு வீடாகத் தெடிக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள். 

 

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வேறுபாடின்றி டுட்ஸி இனமக்கள் விலங்குகள் வேட்டையாடப்படுகிறார்கள். துபாக்கி ரவைகள் விலை அதிகம் என்பதால் அனைவரும் கோடரிகள், வாள்கள், கத்திகள் கொண்டே வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். பலர் கடுமையான சித்திரவ்தைக்குப் பின் கொல்லப்பட்டார்கள். பல டுட்ஸி இனமக்கள் கொல்லப்படுவதற்கு விருப்பமான முறையைத் தெரிவுசெய்யும்படி கொல்பவர்களால் வற்புறுத்தப்பட்டு பணமுள்ளவர்கள் உடனடி மரணத்தைத்தரும் துப்பாக்கிக் கொலைக்கு விரும்பிப் பணம் கொடுத்து மரண்மானார்கள். 

 

மேலும் இந்த வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான டுட்ஸி இனப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்கள். பலர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட இன்னும்பலர் பாலியல் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டார்கள். பல டுட்ஸி இனப்பெண்கள் கொல்லப்பட்ட விதம் மிகக் கொடூரமானது. அவர்கள் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டு பெண்ணுறுப்பினுள் கூரிய ஆயுதங்கள் செலுத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள். 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

தேவாலயங்களிலும், வைத்தியசாலைகளிலும், பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்பட்ட இனக்கொலை 

 

இனக்கொலையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பல்லாயிரக்கணக்கான டுட்ஸி மக்கள் தேவாலயங்களயும், வைத்தியசாலைகளையும், பள்ளிக்கூடங்களயும், அரச அலுவலகங்களையும் நோக்கி ஓடினார்கள். சரித்திரத்தில் இவ்வாறான இடங்கள் பாதுகாப்பானவை என்று நம்பி இவர்கள் ஆங்கே தஞ்சம் புக, அவை ஒட்டுமொத்த இனவழிப்பிற்கான கொலைக்களங்களாக மாறின. 

 

ருவாண்டா இனவழிப்பின் மிகக் கொடூரமான படுகொலைக் களங்களில் ஒன்றான நியாறுபுயே கத்தோலிக்கத் தேவாலயப் படுகொலை ஏப்ரல் 14 ஆம் 15 ஆம் தேதிகளில் நடந்தேறியது. தலைநகர் கிகாலியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகும்படி நகர டுட்ஸி மக்கள் நகர மேயரால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கு போனால் தன்னால் நிச்சயம் பாதுகாப்புத் தரமுடியும் என்று அவர் உத்தரவாதம் வழங்க டுட்ஸிகள் ஆயிரக்கணக்கில் அங்கே தஞ்சம் புகுகிறார்கள். பின்னர் அவர்களை ஹூட்டு இனவெறியர்களிடம் நகர மேயர் காட்டிக் கொடுக்க ஆரம்பத்தில் கிர்னேட்டுக்கள், இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் படுகொலை தொடங்குகிறது. ரவைகளும் குண்டுகளும் தீர்ந்துபோகவே கோடரிகள் வாள்கள், கத்திகள் கொண்டு அங்கிருந்தவர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள். அங்கே டுட்ஸிகள் பால்லாயிரக்கணக்கில் தஞ்சமடைந்து இருந்ததினால் முதல் வந்த இனவெறியர்கள் களைத்துப்போக புதிய குழுக்களையும், ஓய்வின் பின்னர் பழைய குழுக்களையும் கொண்டு அங்கிருந்த அனைத்து டுட்ஸி இனமக்களையும் வேட்டையாடுகிறது அந்த இன்டெர்ஹம்வே அமைப்பும், ஹுட்டு ராணுவமும். அத்தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த டுட்ஸி இனமக்களை கொன்று முடிக்க இரண்டு நாட்கள் தேவைப்பட்டது இனவெறியர்களுக்கு. தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 20,000 பேர். 

 

இதுபோன்ற பல படுகொலைகள் அன்றைய நாட்களில் நடந்தேறின. கிகாலியின் அதிமேற்றாசனம் அமைந்திருந்த கெபேயி ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தில் பல்லயிரக்கணக்கானோர் தஞ்சம் புகுந்திருந்தனர். பெற்றோர்களையிழந்த பலநூற்றுக்கணக்கான குழந்தைகள் தமது மதிய உணவுக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது ஹுட்டு ராணூவமும் இன்டெர்ஹம்வெ அமைப்பும் பெயர்ப் பட்டியலோடு தேவாலயத்தில் நுளைந்தனர். பேர்சொல்லிக் குழந்தைகள் வெளியே அழைக்கப்பட்டு வால்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். டுட்ஸி இனக் குருமார் வேறுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க ஹூட்டு இன ஆயர் தனியாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். குருக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டு முடிய மீதமுள்ளவர்களைக் கொல்லும் படலம் ஆரம்பமாகியது. தமது கைய்யிலிருந்த அனைத்து ஆயுதங்களையும் பாவித்து படுகொலைய அரங்கேற்றினர் ஹூட்டு இனவாதிகள். அன்றைய நாளில் மட்டுமே கொல்லப்பட்ட டுட்ஸி இனமக்களின் எண்ணிக்கை 30,000.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

உடலங்கள் 

 

அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த டுட்ஸி மக்களை மேலும் கேவலப்படுத்தவென, அவர்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்கள் போடப்பட்டனர். அவர்களை அடக்கம் செய்யவோ எரிக்கவோ எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. வீதியோரங்களிலும், கட்டிட வாசல்களிலும், வயல் வெளிகளிலும் குவிக்கப்பட்டிருந்த உடலங்கலை எலிகளும், நாய்களும் திண்டுகொண்டிருக்க ஹுட்டு இனவாதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

 

டுட்ஸி மக்கள் எதியோப்பியாவிலிருந்து வந்த வந்தேறுகுடிகள் என்ற கட்டுக்கதைக்கு அமைவாக கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான டுட்ஸி மக்களது உடலங்கள் ஆறுகளில் "எதியோப்பியா நோக்கிப் போக " வீசப்பட்டன. 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

Media Played a Huge Role in the Genocide

For years, the Kangura newspaper, controlled by Hutu extremists, had been spouting hate. As early as December 1990, the paper published "The Ten Commandments for the Hutu." The commandments declared that any Hutu who married a Tutsi was a traitor. Also, any Hutu who did business with a Tutsi was a traitor. The commandments also insisted that all strategic positions and the entire military must be Hutu. In order to isolate the Tutsis even further, the commandments also told the Hutu to stand by other Hutu and to stop pitying the Tutsi.*

When RTLM (Radio Télévison des Milles Collines) began broadcasting on July 8, 1993, it also spread hate. However, this time it was packaged to appeal to the masses by offering popular music and broadcasts conducted in a very informal, conversational tones.

Once the killings started, RTLM went beyond just espousing hate; they took an active role in the slaughter. The RTLM called for the Tutsi to "cut down the tall trees," a code phrase which meant for the Hutu to start killing the Tutsi. During broadcasts, RTLM often used the terminyenzi ("cockroach") when referring to Tutsis and then told Hutu to "crush the cockroaches."

Many RTLM broadcasts announced names of specific individuals who should be killed; RTLM even included information about where to find them, such as home and work addresses or known hangouts. Once these individuals had been killed, RTLM then announced their murders over the radio.

The RTLM was used to incite the average Hutu to kill. However, if a Hutu refused to participate in the slaughter, then members of the Interahamwe would give them a choice -- either kill or be killed.

 

The World Stood By and Just Watched

Following World War II and the Holocaust, the United Nations adopted a resolution on December 9, 1948, which stated that "The Contracting Parties confirm that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish."

Clearly, the massacres in Rwanda constituted genocide, so why didn't the world step in to stop it?

There has been a lot of research on this exact question. Some people have said that since Hutu moderates were killed in the early stages then some countries believed the conflict to be more of a civil war rather than a genocide. Other research has shown that the world powers realized it was a genocide but that they didn't want to pay for the needed supplies and personnel to stop it.

No matter what the reason, the world should have stepped in. They should have stopped the slaughter.

 

The Rwanda Genocide Ends

The Rwanda Genocide ended only when the RPF took over the country. The RPF (Rwandan Patriotic Front) were a trained military group consisting of Tutsis who had been exiled in earlier years, many of whom lived in Uganda.

The RPF were able to enter Rwanda and slowly take over the country. In mid July 1994, when the RPF had full control, did the genocide stop.

 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து: சகோதரத்துவத்தை தொலைத்த மேர்சியின் சகோதரத்துவ அமைப்பு

2011இல் மதசார்பற்ற இளைஞர்கள் அப்போதைய எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்த போது மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பி ஓடினார். இப்போது அதிபர் பதவியில் இருந்து படையினரால் தூக்கி எறியப்பட்ட மேர்சியின் ஆதரவாளர்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் போது ஹஸ்னி முபராக் சிறையில் இருந்து வெளியில் வரப்போகிறார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பல முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமது பிராந்திய நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க அடக்கப்பட வேண்டியது எனவும், தமது பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பில்லாமல் அடக்கப்படக் கூடியது என்றும் நம்புகின்றன. இந்த நாடுகளுக்கு சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்ற பெயரைப் பாவிப்பதைக் குறைத்து இசுலாமியவாதிகள் என்ற பதத்தை அதிகம் பாவிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாம் எகிப்தியப் படைத்துறையின் நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் போல் வெற்றீகரமாகப் பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.

2011இல் நடந்த இளைஞர் புரட்சியைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் புரட்சி செய்த இளைஞர்களால் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்றாலே எல்லோரும் சொல்வது அது ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு என்றே. புரட்சி செய்த இளைஞர்கள் அல் பாரடியை தமது வேட்பாளராக நிறுத்த விரும்பினர். பல தாராண்மைவாதிகளும் அதையே விரும்பினர். ஆனால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்து அமைப்பு நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட எல் பராடி போட்டியிட மறுத்தார். இதனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு நிறுத்திய வேட்பாளர் மொஹமட் மேர்சி எளிதாக வெற்றி பெற்றார். ஆனால் அவர் கொண்டு வந்த அரசமைப்பு யாப்பும் அதை ஒட்டி நடந்த ஊழல் நிறைந்த வாக்கெடுப்பும் பலரை மேர்சிக்கு எதிராகத் திருப்பின. அது மட்டுமல்ல மேர்சி எகிப்தியப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் ஆட்சியில் தனது பிடியை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை எகிப்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அமெரிக்காவை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதற்காக ஈரான் நீட்டிய நட்புக்கரத்தைப் பற்ற மறுத்தார். அமெரிக்காவைத் திருப்திப் படுத்துவதற்காக இஸ்ரேலுடன் 1979இல் செய்யப் பட்ட காம்ப் டேவிட் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாமல் விட்டார். இவருடன் வியாபாரம் செய்யலாம் என நம்பி இருந்த அமெரிக்காவிற்கு மொஹமட் மேர்சி பல உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தியது பலத்தை ஐயத்தை அவர் மீது ஏற்படுத்தியது. இறுதிக் வைக்கோலாக அவர் 1997இல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 62பேரைக் கொன்ற ஒரு இசுலாமியத் தீவிரவாதியை லக்சர் மாகாண ஆளுநராக்கியது அமைந்தது.

2012இல் மொஹமட் மேர்சி பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தன்னை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்களை அடக்கினார். மேர்சிக்கு எதிராக அவரது பணிமனைமுன் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் படி மேர்சிக்கு எகிப்தின் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவர் அதற்குச் செவி சாய்க்க வில்லை. 2011 புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் தாராண்மைவாத அரசியல்வாதிகளையும் அவர் தனது எதிரிகளாகவே கருதினார். இதனால் அவர்கள் மேர்சிக்கு எதிராகத் திரும்பினர். மேர்சிக்கு எதிரானவர்கள் தமரவுட் என்னும் குடை அமைப்பின்கீழ் ஒன்றாகினார்கள். மேர்சி பதவி விலக வேண்டும் என 22 மில்லியன் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மேர்சி பதைவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி இருபது இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 1-ம் திகதி எகிப்தியப் படைத்துறையினர் மொஹமட் மேர்சிக்கு நாட்டில் அமைதியை நிலை நாட்டுமாறு 48 மணித்தியால அவகாசம் கொடுத்தனர். தான் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர் என்று சொல்லி படைத்துறையினரின் எச்சரிக்கையை மேர்சி உதாசீனம் செய்தார். மேரிசியும் தனது ஆதரவாளர்களைத் தெருவில் இறக்கினார். ஜூலை 3-ம் திகதி படைத்துறையினர் மேர்சியைப் பதவியில் இருந்து விலக்கினர். இ.ச.அமைப்பு ஒரு நாட்டை ஆள தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பைப் போட்டடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சில தீவிரவாத இசுலாமிய அமைப்புக்கள் கூட இ.ச.அ இற்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. ஈரான் உட்பட எந்த ஒரு நாடும் பகிரங்க ஆதரவை இ.ச.அ இற்கு வழங்கவில்லை.

மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்ததும் ஹஸ்னி முபாரக்கின் கைப்பாவைகளான எகிப்தியக் காவற்துறையினர் வீதிகளில் ரோந்துகள் செய்வதில் இருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டனர். இதனால் மேர்சியின் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போய்விட்டது என மக்கள் கருதினார்கள்.

1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன.

2012 ஜூனில் ஆட்சிக்கு வந்த மொஹமட் மேர்சி எகிப்த்தின் எல்லாத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தாமல் விட்டதால் அவருக்கு எதிரான மதசார்பற்றவர்களைத் தனது பக்கம் இழுத்து பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர்கள் மீண்டும் எகிப்தின் அதிகாரத்தைத் தமது வசமாக்கி விட்டனர். இப்போது அவர்கள் இ.ச.அமைப்பைத் தடைசெய்ய ஆலோசித்து வருகின்றனர்.

எல்லோரும் எகிப்தைக் கெடுத்த குற்றவாளிகள்.

2011 பெப்ரவரி மாதம் நடந்த புரட்சியில் தனிமனித சுதந்திரம் வெற்றியடைந்தது போல் இருந்தது. 2013 ஜூனில் நடந்த புரட்ச்சியில் எல்லாமே தோற்று விட்டது. இப்போது எல்லாத் தரப்பினரும் எகிப்தின் அமைதியைக் கெடுத்த குற்றவாளிகலாக நிற்கின்றனர். 2012 ஜூனில் நடந்த தேர்தல் வெற்றியின் பின்னர் இ.ச.அ தன்னை ஒரு குடியரசுவாதியாகக் காட்டிக் கொண்டு தாராண்மைவாதத்தை எதிர்த்தது. தாராண்மைவாதம் பேசிவந்தவர்கள் 2013 ஜூன் 30இன் பின்னர் குடியரசை எதிர்த்து படைத்துறையினரை ஆதரித்து நிற்கின்றனர். இதனால் சிந்திக்கத் தெரிந்தவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது எந்தத் திசையில் பயணிப்பது என்று தெரியாமல் எல்லோரும் தவிக்கின்றனர். உல்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கி இருக்கும் ஒரு நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது. வீதியேங்கும் இரத்தக்களரி, ஊரடங்கு உத்தரவு, காவற்துறையினர் காவல் நிலையத்தில் உயிரோடு கொழுத்தப்படுகின்றனர், கிருத்தவ தேவாலையங்கள் எரிக்கப்படுகின்றன. இ.ச.அ ஐச் சேர்ந்தவர்களே தமக்கு ஆதரவானவர்களைச் சுட்டுக் கொல்லும் காணொளிகளை படைத்துறையினர் ஒளிபர்ப்புகின்றனர். தமது தரப்பில் இழப்பு அதிகம் என்பதைக் காட்ட அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன. படைக்கலன்களில் நம்பிக்கை இல்லாத இ.ச.அமைப்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் துப்பாக்கி ஏந்தியவர்கள் எப்படி இணைந்து கொண்டார்கள் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஜூன் 30 புரட்சிக்குப் பின்னர் எல்லா ஊடகங்களும் தவறான் செய்திகளையே தருகின்றன. ஜுன் 30 எழுச்சியில் எத்தனை பேர் பங்கு பற்றினர் என்பது பற்றியே சரியான தகவல் இல்லை. ஜூலை -3-ம் திகதியின் பின்னர் பல இடங்களில் இ.ச.அமைப்பினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் செய்திகள் வந்தன. ஜூலை 9-ம் திகதி தம்து படப்பிடிப்பாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய ஒன்று கூடிய இ.ச.அமைப்பினரை பொதுமக்கள் ஒன்று கூடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். தமது நாளாந்த நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இ.ச.அமைப்பினர் கட்டுப்படுத்துவதையோ ஆலோசனை கூறுவதையோ பல எகிப்தியர்கள் விரும்பவில்லை. இ.ச.அமைப்பினர் எகிப்தை விரும்பவில்லை அவர்கள் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதற்கு எகிப்திய அதிகாரத்தின் மீதான பிடியைத்தான் விரும்புகிறார்கள் என பல எகிப்தியர்கள் கருதுகிறார்கள். பலர் இ.ச.அமைப்பின் கொள்கைகள் காலாவதியாகிவிட்டது என்றும் கருதுகிறார்கள். இதனால் நாட்டையே செயற்படாமல் செய்யக் கூடிய அல்லது படைத்துறையினரைப் பணிய வைக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய மக்கள் எழுச்சியை படைத்துறையினருக்கு எதிராக இ.ச.அமைப்பால் செய்ய முடியவில்லை. இதனால் இ.ச.அமைப்பு அடக்கப்படக் கூடியது என்றும் அடக்கப்பட வேண்டியது என்றும் படைத்துறையினர் நம்புகின்றனர்.

தாராண்மைவாதிகளும் வேறு பல அமைப்பினரும் இ.ச.அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கலைக்கபட வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துக்களுக்கும் மாற்றானின் கருத்துக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்காத இ.ச.அமைப்பினரின் கட்சியால் நாட்டில் எந்த ஒரு நல்லிணக்கமோ அல்லது பொருளாதார மேம்பாடோ கொண்டுவர முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். மிதவாத மத அமைப்பான இ.ச. அமைப்பை அடக்கி ஒடுக்கினால் அது அரபு நாடுகளில் தீவிரவாத மத அமைப்புக்கள் வளர வழிவகுக்கும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்|றனர்.

தற்போது படைத்துறைத் அதிபராக இருப்பவர் மொஹமட் மேர்சியால் நியமிக்கப்பட்ட அப்துல் ஃப்ட்டா அல் சிசி. இவர் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். இசுலாமிய கலாச்சாரத்தை மதிப்பவர். இவரது மனைவி இசுலாமிய மதக் கோட்பாட்டின் படியே ஆடைகளை அணிவார். எகிப்தில் 2013 ஜூலை 3-ம் திகதிக்குப் பின்னர் நடந்த அனைத்து வன்முறைகளையும் இவரது தலையில் போட்டு இவரை இனிப் பதவியில் இருந்து விலக்க எகிப்தியப் படைத்துறை முயலாலாம். அமெரிக்க ரைம் சஞ்சிகை மேர்சியை சிறையிலடைத்ததும் முபராக்கை வெளியில் விடுவதும் இவர் செய்த இரு பெரும் தவறு என்கிறது.

அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி எகிப்தியப் படைத்துறையினர் எகிப்தில் மக்களாட்சியை நிலைநிறுத்துகின்றனர் எனக் கூறியது பலரையும் ஆத்திரத்திற்கும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது அமெரிக்கா இசுலாமியவாதிகளின் கைகளில் எந்த ஒரு நாடும் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேர்சிக்குப் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற படையினர் பல பதவிகளில் முன்னால் படைதுறையில் பணிபுரிந்தவர்களையே அமர்த்துகின்றன. சில அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இ.ச. அமைப்பும் அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் போன்றதே அவர்கள் தீவிரவாதத்தால் செய்ய நினைப்பதை இ.ச. அமைப்பு வேறுவிதமாகச் செய்கிறது என்கின்றனர். பல அமெரிக்க சார்பு ஊடகங்கள் எகிப்திற்கு இப்போது அவசியம் தேவைப்படுவது தேர்தல் அல்ல திடமான ஆட்சியே என்ற கருத்தை பரவலாக முன் வைப்பது இனி எகிப்தில் படைத் துறையினரின் ஆட்சியே நடக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

Vel tharma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியாமீது இன்னும் ஓரிரு நாட்களில் நேட்டோப் படைகள் தாக்குத்ல் நடாத்தப் போகின்றன. அமெரிக்கப் படைத்துறை அதிபர் ஒபாமாவின் எந்த ஒரு தெரிவிற்கும் தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

சிரியாமீது தொடுக்கப்படும் தாக்குதல் பெரும்பாலும் ஏவுகணைகளாலே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தக் காரணம் கொண்டும் எந்த ஒரு நேட்டோப்படை வீரனும் சிரியாவில் கால் பதிக்கமாட்டான். விமானங்கள் சிரிய வான் எல்லைக்குள் செல்லாமல் வெளியில் இருந்து கொண்டே ஏவுகணைகளை சிரியா மீது வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் எந்த ஒரு நேட்டோப் படைவீரனும் கொல்லப்படக் கூடாது என்பதில் நேட்டோ நாடுகளின் அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். தமது தாக்குதல்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்காது என நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் சிரியப் படைகள் கடுமையான பதில் நடவடிக்கை எடுத்தால் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் மீதும் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியை தப்பி ஓடாமல் தடுத்துக் குண்டு வீசியது போல் தாக்குதல் நடாத்துவார்கள்.

இரசியாவின் கடும் தாக்குதல்

இரசியாவின் உதவித் தலைமை அமைச்சர் டிமிட்ரி ரொகொஜின் மேற்கு(ஐக்கிய அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும்) இஸ்லாமிய நாடுகளில் கையில் குண்டுவைத்திருக்கும் ஒரு குரங்கு போலச் செயற்படுகிறது என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

அதிக ஏவுகணைகள் பாவிக்கப்படலாம்

உலகப் போர் வரலாற்றில் ஒரு நாளில் அதிக அளவு ஏவுகணைகள் பாவிக்கப்பட்ட போர் முனையாக சிரியா இடம்பெறலாம். நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் ஜோர்தானில் இருந்தும், துருக்கியில் இருந்தும் தொடர்ச்சியாக ஏவுகணைகள் சிரியப் படைத்துறை நிலைகள் மீது தாக்குதல்கள் நடக்கலாம்.

சிரியாவிற்கு அண்மையில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளங்கள்

அமெரிக்காவிற்கு ஜோர்தானில் ஒரு படைத்தளமும், துருக்கியில் இரு விமானப்படைத்தளங்களும், குவைத்தில் ஒரு விமானப்படைத் தளமும் இருக்கின்றன. இவற்றுடன் மத்தியதரைக்கடலில் இருக்கும் ஆறாவது கடற்படைப் பிரிவும் செங்கடலில் இருக்கும் மிக வலிமை மிக்க USS Harry S Truman என்னும் விமானம் தாங்கிக் கப்பலும் சிரியாவிற்கு திராக செயற்படலாம். இவற்றுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அமெரிக்கப் படைத் தளங்களில் இருந்து பல விமானங்களை இத்தாலிக்கும் பல்கேரியாவிற்கும் நகர்த்தி சிரியாவிற்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா தொடுக்கலாம். பிரித்தானியா சைப்பிரஸில் இருக்கும் தனது படைத்தளத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பலான சார்ல்ஸ் டி காலுடன் ஐக்கிய அமீரகத்தில் உள்ள பிரெஞ்சு விமானப்படைத் தளத்தில் இருக்கும் அதனது Rafale, Mirage விமானங்கள் சிரியாவில் தாக்குதல் நடத்தலாம். இதன் வலிமையால் கவரப்பட்ட பிரித்தானியா அமெரிக்காவிடமிருந்து 65 ஏவுகணைகளை வாங்கியது. தாழப்பறக்கும் இந்த ஏவுகணைகளை ராடார்களால் இனம் காணுவது கடினம். இதன் முக்கிய அம்சங்கள்:

Primary Function: long-range subsonic cruise missile for striking high value or heavily defended land targets.

Power Plant: Williams International F107-WR-402 cruise turbo-fan engine; CSD/ARC solid-fuel booster

Length: 18 feet 3 inches (5.56 meters); with booster: 20 feet 6 inches (6.25 meters)

Weight: 2,900 pounds (1,315.44 kg); 3,500 pounds (1,587.6 kg) with booster

Diameter: 20.4 inches (51.81 cm)

Wing Span: 8 feet 9 inches (2.67 meters)

Range: 870 nautical miles (1000 statute miles, 1609 km)

Speed: Subsonic - about 550 mph (880 km/h)

Guidance System: TERCOM, DSMAC, and GPS (Block III only)

Warheads: 1,000 pounds or conventional submunitions dispenser with combined effect bomblets.

ஆறாவது கடற்படைப்பிரிவு

சிரியாவிற்கு எதிரான தாக்குலில் அமெரிக்கக் கடற்படையின் மத்தியதரைக்கடலுக்குப் பொறுப்பான ஆறாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. இதன் கட்டளைப் பணியகம் இத்தாலியின் கேட்டா(Gaeta) நகரில் இருக்கிறது. ஆறவது கடற்படைப் பிரிவில் Destroyer Squadron 60, Task Force 60, Task Force 61, Amphibious Assault Force, Task Force 62, Landing Force (Marine Expeditionary Unit), Task Force 63 Logistics Force, Task Force 64 Special Operations, Task Force 65, Task Force 66, Task Force 67 Land-Based Maritime Patrol Aircraft, Task Force 68, Maritime Force Protection Force, Task Force 69 Submarine Warfare ஆகிய படைக் குழுக்கள் இருக்கின்றன.

Tomahawk சீர்வேக ஏவுகணை

Tomahawk ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும்

சிரியாவிற்கு எதிரான தாக்குதலில் Tomahawk சீர்வேக ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும் என உறுதியாகச் சொல்லலாம். 1991இல் சதாம் ஹுசேய்னுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய Tomahawk சீர்வேக ஏவுகணைகள் தற்போடு மேலும் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமா?

1999-ம் ஆண்டு சிலோபொடன் மிலொசெவிச் கொசோவாவில் செய்த கொலைகளில் இருந்து கொசோவே மக்களைப் பாதுகாப்பதற்காக எனச் சொல்லி அப்போதைய அமெரிக்க அதிபர் ஒரு மட்டுப்படுத்தப் பட்ட விமானத் தாக்குதலை மேற்கொண்டார். இரண்டு அல்லது மூன்று தினங்களில் மிலொசெவிச் பணிந்து விடுவார் என நேட்டோப்படைகள் எதிர்பார்தன ஆனால் அவர்களின் தாக்குதல்கள் 78 நாட்கள் தொடர்ந்தன.

Vel tharma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ராஜதந்திர திறமைக்கு மற்றும் ஓர் உதாரணம்........

ஆஸ்திரேலியாவின் தேசிய பத்திரிகையாக இருக்க கூடிய The Australian பத்திரிகையின் வெளிநாட்டு செய்திகளுக்கு பொறுப்பான ஆசிரியர் அவற்களை முழுக்க முழுக்க இலங்கை அரசு அதன் செலவில் விருந்தினராக அழைத்து அவருக்கு ஓத வேண்டியதுகளை ஓதி அனுப்பி இருக்கின்றார்கள் மனுஷனும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டு இருகின்றார்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.