Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டில் சிக்கிய புூரணம்

Featured Replies

" பொட்டில் சிக்கிய புூரணம் "

புதிய மெகாத் தொடர்........

யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும்

'பொட்டில் சிக்கிய புூரணம்."...............

நகைக்சுவைப் பிரியர்களே!

நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்.......

பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து

யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம்.

மிகுதி அறிய ஆவலா????????

வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்....

ஆதிவாசி

  • Replies 73
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
pottu2qk6.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டில் சிக்கிய புராணம்.

இதுக்கு ஒரு நல்ல விளம்பர படம் எடுக்கலாம் என்டு ௬கிள்ள போய் தேடினான். பொட்டு என்ட சொல்லை குடுத்து தேடினன். உடனே கண்ணுக்கு எங்கட பொட்டம்மான் தெரிஞ்சார். எவனோ ஒரு கபோதி பொட்டம்மானை சுருக்கி பொட்டு என்டு படத்துக்கு பெயர் குடுத்து வச்சிருக்கிறான் போல.

சரி விசயத்துக்கு வருவம். இந்த சீரியலுவளால மனிசன் வெந்து அவிஞ்சு போய் கிடக்கிறம். நாங்க ஆம்பிளங்க என்ன பாவம் செஞ்சம்? ஏன் எங்கட பெயரில ஒரு சீரியல் எடுத்தா என்ன குறஞ்சா போய்டுவாங்க? அப்பா என்டு ஒரு சீரியல் வந்திச்சு. அதை விட ரீவீல வாற விளம்பரங்களை எங்கட பொம்பிளயள் விரும்பி பாக்குதுவள். அதோட சரி இனி ஆம்பிள பெயரே வைக்கிறேலை என்டு முடிவு பண்ணீட்டாங்கள்.

தெரியாம நாங்கள் (ஆம்பிளையள்) சீரியல் போற நேரம் வீட்டுக்க வந்திட்டம் என்டா அவ்வளா தான் கதை. செத்த மீனை பூனை பாக்கிற மாதிரி ஒரு கேவலமான பார்வை. "வந்திட்டுது சனியன்" என்டு மனசுக்க முனுமுனுக்கிறது மாதிரி இருக்கும்.

ஏதாவது ஒன்டில என்டாலும் ஆம்பிளையளை ஹிரோவா போடுறாங்களா? எங்களுக்கு எப்ப பாத்தாலும் வில்லன் வேசம் தான். இதுவள பாத்திட்டு எங்கடயளும் சந்திரிமுகியாளாகி கொண்டிருக்குதுவள்.

ஓருக்கா நான் ஒரு வீட்ட போனன். அங்க 5 பொம்பிளயள் இருந்து நாடகம் பாக்கினம். நான் போக வாங்க தம்பி இருங்கோ என்டதோட சரி. வேற வழி இல்லாமல் நானும் பாத்துக்கொண்டு இருந்தன். பொடுறதே ஒரு 20 நிமிசம் அதுக்குள்iயும் ஒருத்தி அழுறாள். பின்னால செத்த வீடு பின்னணி இசை. வழக்கம் போல பொம்பிள தான் கதாநாயகி. பொம்பிள ஆம்பிளய பழி வாங்கிறாவாம். ஒரு மாதிரி நாடகம் முடிஞ்சு செய்தி தொடங்கிச்சுது. சரி பாப்பம் என்டா அதில ஒருத்தி சொல்லுறா " உவன் சரியான கிரிமி. நாங்க நினைக்கிற மாதிரி இல்லை". நானும் ஏதோ பிரச்சைனையாக்கும் என்டு நினச்சா நாடகத்தில போன ஒருத்தனுக்கு பேச்சு விழுது. அங்கால செய்தி வாசிக்கிறவர பாக்க பாவமா இருந்திச்சு. "நீ வாசிக்கிறத நிப்பாட்டிட்டு பேசாம எழும்பி போ ராசா" என்டு மனசுக்க நினச்சன். அந்த பொம்பிளயளின்ர புருசன் மாரை நினசை;ச பாவமா கிடந்த. எப்பவுமே இரவு சமையல் அளையளா தான் இருக்கனும்.

படங்கள்ள வாற மாதிரி பஞ் டைலாக் வேற இப்ப சீரியல்லயும் கொண்டு வந்திடானுவள். அதுவளை சொல்லி புரிசன் மாரை தானே மருட்டுதுவள். இல்லை என்டா பொம்பிளயள் சண்டை பிடிக்கேக்க இடைக்கிட மாறி மாறி சொல்லிக்கொள்ளுவினம்.

ஐயா அதை எடுக்கிற டைரக்டருக்கே தெரியா அடுத்த எப்பிசோட எப்டி எடுக்க போறான் என்டு. எங்கடயள் என்ன பண்ணுதுவள்? உடனே தங்களுக்குள்ளயோ கதச்சுக்கொள்ளுவினம் "நானா இருந்தா நேராவே அவனிட்ட சொல்லிடுவன். இஞ்ச வா இது இது தான் பிரச்சனை" இதுவளை என்னை செய்யிற? ஒரு அன்னை பூபதி இல்லை ஆயிரம் அன்னை பூபதி வந்தாலும் உங்களை திருத்திறது கஸ்ரம் போல இருக்கு.

நாடகத்தில நடிக்க வாறதுவளை வடிவா உத்துப்பாருங்க. பிச்சகை;காரி கேரக்டர் குடுத்தாலும் புது சாறிஇ கையில கழுத்தில நகை இல்லாமல் வர மாட்டாளுவள் போல. எங்கட பாளாப்போனதுவள் என்ன பண்ணுங்கள் என்டா அடுத்ததா எங்க தமிழ் கடையில மலிவு விற்பனை வருதோ அங்க போய் நாடகத்தில அவளுவள் போட்ட சாறி மாதிரி வாங்கிற. அதுக்கு வீட்டில புரிசன் என்ட பேரில ஒரு அப்பாவி பிராணி வழக்கினம் தானே அது தெரியாமல் என்னத்துக்கு இவளா உடுப்பு என்டு கேட்டால் "ஏன் நீயா போடப்போறாய? நீயா காசு தாறாய்" என்டு வசனங்கள் வேற. உடனே அந்த அப்பாவி பிராணியும் மூலையில போய் இருக்க சரி. ஒரு விசயத்தை கவனிச்சன். இதெல்லாம் இந்தி சீரியலுவள் வாறதுக்கு முதல் நடந்ததை நான் காணேலை.

6மணிக்கு மனைவி வருவா. 6.30க்கு அத்தை வருவா.7மணிக்கு சித்தி வருவா. 7.30க்கு பைரவி அக்கா வருவா. 8மணிக்கு (செய்தி நேரம்) லைற்றh ஒரு ப்றேக். 20.30க்கு மங்கை வருவா. 21மணிக்கு கவேரி அக்கா வருவா. 21.30க்கு நிலவரம் நிகழ்ச்சி தொடங்க ரீவி நிண்டிடும். நாடு எப்படி போன யாருக்கென்னங்க? அடுத்த நாடகம் எப்படி போகப்போகுது என்டது தானே முக்கியம்.

சரி மீண்டும் அடுத்த எப்பிசோடில் உங்களை சந்திக்கின்றேன்! அதுவரை மங்கையர் Nஐhய்ஸ் (ஆண்கள் மன்னிக்கனும் உங்களுக்காக இன்னும் மங்கயைன் Nஐhய்ஸ் என்டு ஒன்டும் வரேலைஇ எனவே மங்கயைருக்குள் நீங்களும் அடங்குவீர்). சரி உறவுகளே இனி உங்கள் கருத்துக்களை எடுத்து வாருங்கள்.

  • தொடங்கியவர்

அடப்பாவி..... பொட்டில் சிக்கிய புூரணத்தை....... பொட்டில் சிக்கிய புராணம் ஆக்கிட்டியேப்பா.......

நான் சொன்னது வேலியில் வைக்கும் பொட்டு.......

ஐயா புலிகேசி ரொம்பப் பாதிப்போ?.............

அதான் பொட்டு வைக்கிறவையால்........ ரொம்ப நொந்த மாதிரித் தெரியுது. அநுபவம் பேசுது எடுத்து விடுறது.....

ஆதிவாசியின் அடுத்த டைட்டில "ஆண்களைக் கொஞ்சம் வாழ விடுங்கள்" என்று கொடுப்பதற்குப் பிரயோசனமா இருக்கும்.

கதை பிடுங்கும் ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி..... பொட்டில் சிக்கிய புூரணத்தை....... பொட்டில் சிக்கிய புராணம் ஆக்கிட்டியேப்பா.......

நான் சொன்னது வேலியில் வைக்கும் பொட்டு.......

ஐயா புலிகேசி ரொம்பப் பாதிப்போ?.............

அதான் பொட்டு வைக்கிறவையால்........ ரொம்ப நொந்த மாதிரித் தெரியுது. அநுபவம் பேசுது எடுத்து விடுறது.....

ஆதிவாசியின் அடுத்த டைட்டில "ஆண்களைக் கொஞ்சம் வாழ விடுங்கள்" என்று கொடுப்பதற்குப் பிரயோசனமா இருக்கும்.

கதை பிடுங்கும் ஆதிவாசி

:lol::D:lol:

  • தொடங்கியவர்

அதென்ன புலிகேசி செத்த மீனைப் புூனை பாக்கிற மாதிரி.....

அந்த உணர்வை கொஞ்சம் வர்ணிச்சா.... ஆதி அதுக்கேற்ற மாதிரி

நடிகையை யாழ்க்களத்திற்குள் செலக்ட் பண்ணலாம்......

அந்தப் புூனையின் பார்வை எந்தக் கோணத்தில் எப்படியிருக்கும் சொன்னால் நல்லது புலிகேசி

:lol::D:lol::lol::lol::lol:

புூனைப் பார்வையை ஆராயும் ஆதிவாசி

இங்க என்ன நடக்குது என்டு விளங்கல்ல எனக்கு.

6மணிக்கு மனைவி வருவா. 6.30க்கு அத்தை வருவா.7மணிக்கு சித்தி வருவா. 7.30க்கு பைரவி அக்கா வருவா. 8மணிக்கு (செய்தி நேரம்) லைற்றh ஒரு ப்றேக். 20.30க்கு மங்கை வருவா. 21மணிக்கு கவேரி அக்கா வருவா. 21.30க்கு நிலவரம் நிகழ்ச்சி தொடங்க ரீவி நிண்டிடும். நாடு எப்படி போன யாருக்கென்னங்க? அடுத்த நாடகம் எப்படி போகப்போகுது என்டது தானே முக்கியம்.

:lol::):D:):):D:D

  • தொடங்கியவர்

ஓருக்கா நான் ஒரு வீட்ட போனன். அங்க 5 பொம்பிளயள் இருந்து நாடகம் பாக்கினம். நான் போக வாங்க தம்பி இருங்கோ என்டதோட சரி. வேற வழி இல்லாமல் நானும் பாத்துக்கொண்டு இருந்தன். பொடுறதே ஒரு 20 நிமிசம் அதுக்குள்iயும் ஒருத்தி அழுறாள். பின்னால செத்த வீடு பின்னணி இசை. வழக்கம் போல பொம்பிள தான் கதாநாயகி. பொம்பிள ஆம்பிளய பழி வாங்கிறாவாம். ஒரு மாதிரி நாடகம் முடிஞ்சு செய்தி தொடங்கிச்சுது. சரி பாப்பம் என்டா அதில ஒருத்தி சொல்லுறா " உவன் சரியான கிரிமி. நாங்க நினைக்கிற மாதிரி இல்லை". நானும் ஏதோ பிரச்சைனையாக்கும் என்டு நினச்சா நாடகத்தில போன ஒருத்தனுக்கு பேச்சு விழுது. அங்கால செய்தி வாசிக்கிறவர பாக்க பாவமா இருந்திச்சு. "நீ வாசிக்கிறத நிப்பாட்டிட்டு பேசாம எழும்பி போ ராசா" என்டு மனசுக்க நினச்சன்.

புலிகேசி ஒரு வீட்டுக்குப் போன மரியாதையா இருந்து கதைச்சிட்டு வரவேண்டியதுதானே உம்மையாரு அவங்களோட பேச்சை ஒட்டுக்கேட்கச் சொன்னது?

கதைக்காக அலையும் ஆதிவாசி

ஆக மொத்தம் பெண்களை விட நாடகங்கள் போகும் நேரம் உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கின்றதே...!!

ஆதி, தலைப்பை பார்க்கும் போது என் மனதில் தொன்ட்றியதை சொல்லலாமா?

  • தொடங்கியவர்

ஆக மொத்தம் பெண்களை விட நாடகங்கள் போகும் நேரம் உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கின்றதே...!!

ஆதி, தலைப்பை பார்க்கும் போது என் மனதில் தொன்ட்றியதை சொல்லலாமா?

உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று நீங்கள் சொன்னால்த்தான் ஆதிக்குப் புரியும். எண்ணத்தில் உதிப்பதை சொல்வதற்கு என்ன தயக்கம்?... அனுமதி?

ப்ரும். ப்ரும் ப்ரும்... ப்ருர்... .ர்ர்ர்... ர்... பீப் பீப் பீ....ப்ருர்... .ர்ர்ர்... ர்...

  • தொடங்கியவர்

பொட்டில் சிக்கிய புூரணம் வெளியால வரேல்லை

காரை ஸ்ராட் பண்ணினா பெற்றோல்தான் வீணாப் போகும். சுட்டி இன்னும் ஜாம்பவான்களைக் காணேல்லை வாறவரைக்கும் கொஞ்சம் பொறு குழந்தாய்!

ஆட்கள் வரமால் தொடங்க மாட்டீர்களா?

ஆரம்பியுங்கள்..பின்னர் பாருங்கள்..இங்கு ஒரு "Traffic Signal" மாட்ட வேண்டிவரும் ;)

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி பனைமட்டை பொட்டைத்தானெ சொல்லுறீங்கள்.ஜயொ புள்ளரிக்குது .நேரத்தை வினடிக்கமால் விசயத்துக்கு வாரும்.

  • தொடங்கியவர்

ஆட்கள் வரமால் தொடங்க மாட்டீர்களா?

ஆரம்பியுங்கள்..பின்னர் பாருங்கள்..இங்கு ஒரு "Traffic Signal" மாட்ட வேண்டிவரும் ;)

அட இது கூட நல்ல தலைப்பு!!!!

'நில்! கவனி! செல்!"

இங்க நெருக்கடி அட சுத்தமா புரியாத புள்ளையா இருக்கேம்மா...

சின்னத்திரையைவிட்டு நம்மாட்கள் வந்தால்த்தானே......

  • தொடங்கியவர்

ஆதி பனைமட்டை பொட்டைத்தானெ சொல்லுறீங்கள்.ஜயொ புள்ளரிக்குது .நேரத்தை வினடிக்கமால் விசயத்துக்கு வாரும்.

அரிக்கும் அரிக்கும்......!!!!!!!!

(ஆதியின் அடர்அவையைப் பாத்தா புரியும்)

அலம்பல் பொட்டுக்குள் புகுந்த அனுபவம் இருக்கோ?....

அல்லது கந்தப்பர் வேலி பின்னின மாதிரியா?

அலம்பல் என்று ஓடாமல் வந்து பதிலை வரையும் புத்தா!!!

  • தொடங்கியவர்

எங்கேப்பா புலிகேசி?

இப்படிப் பொட்டில் சிக்கிய புராணத்தை அலைப்பாரிக்க விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டீர்?

அல்லது பொட்டணிந்த மாதரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறீரோ?

பெண்கள் உம்மைத் துவைச்சால் நான் காப்பாத்த வரமாட்டன்.

ஏனென்றால் சின்னத்திரையைப்பாத்து எப்ப எந்தப் பக்கத்தால் பழி போடுவார்கள் என்றெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா.

அந்தக் கிருமிகள்????????

நான் சொல்லமாட்டன் ஊகிச்சுப் பிடியப்பு....

கைகால்கள் ஒழுங்கா இருந்தா இங்கால வந்து பதில் எழுதுறது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பு ஆதிவாசி? என்ன பிரச்சனை? நான் என்னமோ எழுத இங்க வாறதுவள் என்னமோ எழுத நீர் என்னமோ எழுத எல்லாம் எங்க போய் முடியுது என்டு பாப்பம்.

ஆதிக்கும் கூட்டாளிகளுக்கும் வணக்கம்,

உந்தத் தொல்லைக் காட்சித் தொடர்களைப்பற்றி எங்கை தொடங்கி எங்கை முடிக்கிறதெண்டு விளங்கேல்லை. (அட தொடரை இயக்குறவையளுக்கு இருக்கிற வருத்தம் எனக்கும் வந்திட்டுது போலை கிடக்குது)

உந்த நாடகஙகளின்ரை பேருகளைப் பாத்தா மட்டும் குடும்பம், குங்குமம், கோபுரம், மெட்டி ஒலி எண்டு மங்களகரமாக் கிடக்குது. ஆனாஅதுகளிலை காட்டுறதெல்லாம் ஒரே குப்பை.

எங்கையாவது ஒரு நாடகத்திலை எண்டாலும் ஒரு புருசன் ஒரு பெண்சாதிக் கதை இருக்குதே.

மனிசியின்ரை தங்கச்சியோடை ஒரே வீட்டிலை குடும்பம் நடத்திறதும், அக்காளின்ரை புருசனை இருட்டுக்குள்ளை ஏமாத்தி (அக்காளை மாதிரி நடிச்சு) தன்ரை புருசனாக்குறதும், பழைய புருசன்ரை வீட்டிலை வேலைக் காறியா வேலை செய்யுறதும் ஒரே நேரத்திலை நண்பிகள் ரெண்டுபேரைக் கலியாணம் முடிச்சு (அவையளுக்குக் கடைசி வரையிலை இது தெரிய வாறதில்லை) .............

ஐஐயோ தலை வெடிக்குது. இன்னும் கன கதை இருக்குது அதை எழுதினா களத்திலை என்ரை இமேஜ் பழுதாப் போயிடும் :lol::lol::lol:

(அப்பிடி யொண்டு உனக்கு இருந்ததோ எண்டு ஆதி சிரிக்கிறது தெரிது)

அதிலை சொல்லி வைச்ச மாதிரி ஒரு அம்மா வருவா. அவக்கு காலம் புூரா அழுகிற வேலை தான். செய்யுற அட்டகாசமெல்லாம் பண்ணிப் போட்டு விட்டிட்டுப் போன புருசனோடை மகளைச் செத்து வைக்கிறதுக்க அவ படாத பாடு படுவா.

மாப்பிளையெண்டால் அப்பிடி இப்பிடித் தான் இருப்பான் . பொண்ணு தான் அனுசரிச்சுப் போகவெணும் எண்ட டயலக் வேறை.

இந்தப் பெண்ணியம் பேசிற ஆக்களின்ரை கண்ணுக்கு உதொண்டும் தெரியிறஇல்லையோ தெரியிற இல்லையோ தெரியா.

இப்பிடித்தான் ஒரு நாடகம் இழுத்த இழுத்து இழுத்துக் கொண்டிருந்து கடைசியா வில்லியைச் சாக்காட்டி கதாநாயகிக்கம் சுபமான வாழ்க்கை அமைஞ்சு ... அப்பாடா முடியுது எண்டு பெருமூச்சு விட்டா புது ஆக்களோடை தொடருத. என்னண்டு கேட்டா இனி அவையளின்ரை பிள்ளை குட்டியைப் பற்றின கதை தொடரப் போகுதாம். என்ரை சிவபெருமானே!

அட உதகளையெல்லாம் நீயேன் இரந்து பாத்தனீ எண்டு கேக்கிறியளே. அந்தக் கொடுமையை ஏன் கேக்கிறியள்.

நான் ஒரு வீட்டிலை வாடைக்கு இருக்கிறன். அந்த அன்ரிக்கு நாடகம் பாக்கேக்கள்ளை அவவின்ரை கொமன்ருகளைக் கெட்டுத் தலையாட்டுறதக்கு ஒராள் வேணுமாம்.அதாலை ருமிலை இருக்கிற ஆக்கள் மாறி மாறி சுழற்சிமுறையிலை நாடகத்தைப் பாத்து அவவின்ரை கொமன்ருகளுக்கு தலையாட்வேணும்.

அட கருமமே. முற்பிறப்பிலை செஞ்ச பாவம் இப்படி வந்து வாட்டுது.

ஐயோ உதைப் பற்றி இன்னும் கனக்க எழுதலாம்.

அதுக்கள்ளை செல்வி தொடங்கற நெரம் வந்திட்டுது. இண்டைக்கு நான் தலையாட்டிற TURN. வரட்டே.

:(:(:(:(:(

  • தொடங்கியவர்

என்னப்பு ஆதிவாசி? என்ன பிரச்சனை? நான் என்னமோ எழுத இங்க வாறதுவள் என்னமோ எழுத நீர் என்னமோ எழுத எல்லாம் எங்க போய் முடியுது என்டு பாப்பம்.

அட எந்த ராமா உமக்கும் சீரியல் பிரச்சினை தொத்தியாச்சா?

சரி சரி இனிமேல் எல்லாரும் புரிஞ்சு எழுதுவாங்க......

சீரியலால் பாதிக்கப்படும் சீமான்களே! உங்கள் வேதனைகளை இங்கே போட்டு உடையுங்கள். மன்னிக்கவேண்டும் சீமாட்டிகளே! உங்களுக்குந்தான்....... இல்லாவிட்டால் இங்கு புலிகேசி பொட்டுப் புராணத்தில் பெண்களையும் மெகாத் தொடர்களையும் பந்தாட ஆரம்பித்து விடுவார். நீங்கள் மெகாத் தொடர்களுக்குள் மயங்கிக் கிடக்கிறீர்கள் என்றால் புலிகேசியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஒண்டு மட்டும் எனக்கு நல்லா விளங்குது இங்க இருக்கிற ஆண்கள் கூட்டத்துக்கு

வேலை வெட்டி இல்லை எண்டதும் பெண்கள் தான் சீரியல் பாக்கினம் எண்டு

சொல்லிச்சொல்லியே எல்லா ஆண்களும் நல்லா சீரியல் பார்க்கினம் எண்டதும்.

நாசாமாப் போங்கோ. எப்படித்தான் உந்த நாடகங்களை இவ்வளவு பொறுமையோடை

பார்க்கிறியளோ. :| :| :shock: :shock: :oops: :oops: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன.... மணிவாசகன், வடிவேல் 007, ஆதிவாசி

உங்கள் எவரையும் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா?

பெண்களைப்பற்றி அதிகமாப் பேசினால் நாங்களும் நாடகங்களுக்குள் தொலைந்த நீங்களும் என்று மோதிக் கொள்ள வேண்டிவரும் ஆதிவாசி உங்கள் வாலையும், மணிவாசகன் உங்கள் வாசகங்களையும், வடிவேல் 007 உங்கள் வெடிவானத்தையும் தூக்கிக் கொண்டு அல்லது அடக்கி வைக்கவும் பின்னாடி வருத்தப்படுவதைத் தவிர்க்கலாம்.

பொட்டுக்கால பூந்த பூரணம் அக்கா சிக்கிடா போல.. :lol::lol: :P :? :lol: :twisted:

ஒண்டு மட்டும் எனக்கு நல்லா விளங்குது இங்க இருக்கிற ஆண்கள் கூட்டத்துக்கு

வேலை வெட்டி இல்லை எண்டதும் பெண்கள் தான் சீரியல் பாக்கினம் எண்டு

சொல்லிச்சொல்லியே எல்லா ஆண்களும் நல்லா சீரியல் பார்க்கினம் எண்டதும்.

நாசாமாப் போங்கோ. எப்படித்தான் உந்த நாடகங்களை இவ்வளவு பொறுமையோடை

பார்க்கிறியளோ. :| :| :shock: :shock: :oops: :oops: :evil: :evil:

அட கடவுளே கதை இப்ப அப்பிடிப் போகுதா?

பிள்ளை நீ வக்கீலுக்கப் படிச்சிருக்க வேண்டிய ஆள்.

இப்ப எண்டாலும் ஏலுமெண்டாக் கோசை மாத்து. பின்னாளிலை நல்ல செல்வாக்கா இருப்பாய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.