Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2(2381).jpg
எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

'மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'யாழ்.நகரில் ஆளும்தரப்பும் அதனது பங்காளிகளும் இணைந்து கண்டன ஊர்வலமெனும் நாடகமொன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். ஜெனீவாவில் இலங்கை விவகாரம் கையிலெடுக்கப்படுகின்ற வேளையிலெல்லாம் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அதன் பின்னணிகள் பற்றி எமது மக்கள்; நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். 

அதிலும் மக்கள் எனும் பேரினில் இவ் ஊர்வலங்களின் பின்னாலிருக்கும் தரப்புக்களையும் எமது மக்கள் நன்கே அறிந்திருக்கிறார்கள்.

இலங்கையின் ஜனநாயக அரசியலில் மக்கள் உணர்வுகளை காலில் மிதித்து அவர்களது கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடைப்போட்டு சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தமக்குதாமே எந்தவித அனுமதியும் பெறாது சுலபமாக கண்டன ஊர்வலங்களை நடத்த முடிகின்றது. 

அதுவே தமிழ் தரப்புக்களாயின் எத்தனை தடைவை நீதிமன்ற படியேற வேண்டியிருக்குமென்பதும் மக்கள் அறிந்ததே. 

புதன்கிழமையும் யாழ்.நகரினில் நடந்த ஊர்வலம் அத்தகையது என்பதை எமது மக்களிற்கு சொல்லி தெரியப்படுத்த வேண்டிய தேவையில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் அதிலும் குறிப்பாக என்மீதும் சேறுபூசும் வகையிலும் அழைத்துவரப்பட்டவர்கள் கைகளினில் திணிக்கப்பட்ட சுலோக அட்டைகளும் நோக்கத்தை தெளிவாக்கி நிற்கின்றது.  

அதிலும் தமிழை அப்பட்டமாக கொலைசெய்து கொச்சையாக எழுதப்பட்ட சுலோக அட்டைகள் எவரால் அவை எழுதப்பட்டவை என்பதை சொல்லி நிற்கின்றன. இவற்றிற்கு அப்பால் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கென கிழக்கிலிருந்து பலாத்காரமாக அழைத்துவரப்பட்ட போராளிகள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணியவைக்க முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை மீண்டுமொருமுறை சொல்லிக் கொள்ளவிரும்பும் அதேவேளை எனது மக்களிற்காக நான் குரல் எழுப்புவதினில் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

முள்ளிவாய்க்காலில் இருந்து கணவனையும் பிரிந்து அநாதரவாக எனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்த என்னை என் தேசமும் உறவுகளுமே அடைக்கலம் தந்து மீட்டெடுத்தனர். 

அவ்வகையில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும் மரணிக்கும்வரை விசுவாசமாக இருக்கவேண்டியவளாக இருக்கின்றேன்.

காணாமல் போயுள்ள எனது கணவர் முதல் அனைத்து காணாமல் போனவர்களிற்காகவும் நான்குரல்; எழுப்பியே வருகின்றேன். 

சிறைகளினில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல் எழுப்புவேன்.

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களது மேம்பாட்டிற்கும் முன்னாள் போராளிகளது நிம்மதியான வாழ்விற்காகவும் நான்போராடுவேன். எந்தவொரு மிரட்டலுமோ அச்சுறுத்தும் ஊர்வலமோ என்னை தடுக்கப்போவதில்லை. 

இவற்றையெல்லாம் நான் தேர்தலில் குதிப்பதற்கு முன்னதாக சந்தித்திருக்கிறேன். அச்சுறுத்தலற்ற வாழ்க்கையை நான் எப்போதோ தொலைத்துவிட்டேன். 

எமது மக்களை போல என்னிடமும் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதை சொல்லிக்கொள்வதுடன் மக்களிற்காக சமரசமின்றி குரல் எழுப்புவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனந்தி சில விடயங்களை அமைதியாக எதிர்கொள்ளுங்கள்!

தற்போது அவசியமான அறுவுரை. அரசு இப்படியான எதிர்ப்புகளுக்காத்தான் அதை செய்ததும் கூட.

 

தம்பிராசவை கொலை செய்ய செய்யமுயன்ற்வர்களின் வீடியோவைக்காட்டியும் அரச பயங்கரவாத காக்கிசட்டைகள் கைது செய்ய மறுத்துவிட்டார்கள். நெடும் தீவில் நடந்தது, தம்பிராசாவுக்கு நடந்தது, ஆனந்திக்கு நடந்தது போன்ற விடையங்களில் விக்கினேஸ்வரன் முன்னால் வந்து கூட்டமைப்பை இணைத்து அறிக்கைகள் வெளிவிட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இவ என்ன எழிலன் உள்ளுக்குள்ள இருந்தாலும் ஒரு பயமும் இல்லாமல் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மாதிரி கதைக்கிறா :)

இவ என்ன எழிலன் உள்ளுக்குள்ள இருந்தாலும் ஒரு பயமும் இல்லாமல் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மாதிரி கதைக்கிறா :)

அரசு சொல்லும் code wordsஐப் படிக்க தெரிய வேண்டும். அனந்தியுடன் போட்டியில் அரசால் ஒப்பிடப்படுபவர்  சரளா. இதை விளங்கப்படுத்த முடியாது. ஆனால் தான் தான் விளங்கிகொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசு சொல்லும் code wordsஐப் படிக்க தெரிய வேண்டும். அனந்தியுடன் போட்டியில் அரசால் ஒப்பிடப்படுபவர்  சரளா. இதை விளங்கப்படுத்த முடியாது. ஆனால் தான் தான் விளங்கிகொள்ள வேண்டும். 

 

ஓ அப்படியா எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு.விளங்கப்படுத்தியமைக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
எமது மக்களை போல என்னிடமும் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதை சொல்லிக்கொள்வதுடன் மக்களிற்காக சமரசமின்றி குரல் எழுப்புவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இவர் புலி உறுப்பினரின் மனைவி என்பதற்காக அல்ல சம்பந்தரின் மிகச்சரியான தெரிவு இவர். இப்படி பலர் இருந்தும் சிலரை உள்வாங்கியதை ஏற்க முடியவில்லை. மக்கள் முடிவெடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்று வந்து விட்டால் அரசியல் வாதி மாதிரி பேசாமா பின்ன வைய ஆவேண்டா வைச்சிருக்க முடியும்

ஓ அப்படியா எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு.விளங்கப்படுத்தியமைக்கு நன்றி 

எனக்கு மட்டும் சொல்லி என்ன இனி இனி கன பேருக்கு சொல்ல வேண்டிய காலம் கிட்டக்கிட்ட வருகிறது,

 

எழுத இல்லாவிட்டல் நக்கல்களில் தங்க வேண்டியதுதான்.  அரசு வெளிப்படையாக ஆனந்திக்கு சொல்லும் செய்தி அது. தலைவர் இல்லை, பொட்டம்மன் இல்லை என்று புறூப் வைக்கிறார்கள், பாதர் பிரசிஸ் யோசெப்பும், கைது செய்யபட்ட கவிக்சரும், பாலகுமாரும் பலரும் இல்லை. எழிலன் இருக்கிறார். வாயை அடக்கு இல்லாவிட்டல் அவர் சித்திரவதை செய்யப்படுவார் என்று ஆனந்திய மிரட்டி பகிடியா விடுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.