Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியவர்கள்: நேபாளத்தின் பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியவர்கள்: நேபாளத்தின் பிரதமர்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் விடுதலைப் போராட்டங்களுக்கு முதன்மையாக திகழ்ந்தனர். அடக்குமுறைக்குட்பட்ட மக்களுக்கு கதாநாயகர்களாக திகழந்தார்கள். இவையெல்லாம், வெளிவந்த தகவல்கள். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.

300x195xthagaal-300x195.jpg.pagespeed.icஇச்செய்தியை the himalayan times தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

295x200xtamil-national-leader-295x200.jpமுதல் தடவையாக தமது கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அதன் அடிப்படையில் தொடர்புகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், மவோயிஸ்ட்களின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் தைரியமான இயக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிராக புலிகள் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எவ்வாறான உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை. நேபாளத்தின் முன்னாள் பிரதமராக தஹால் பிரதமரான பின்னர் தனது முதல் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார். நேபாள சம்பிரதாயத்தின்படி, நேபாளத்தின் பிரதமர்கள் தமது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதே வழமை.

  •  
  •  
  •  
  •  
 

 

http://www.tamizl.com/?p=35826

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கன்ட மாவோயிஸ்ட்கள் சொல்லியினம் புலிகள் பாசிஸ்ட்டாம்,பயங்கரவாதியாம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சொல்லி என்ன பிரயோசம்  :(

  • கருத்துக்கள உறவுகள்
nepal-mavoist-leader-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அதன் அடிப்படையில் தொடர்புகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  

சில சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், மவோயிஸ்ட்களின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் தைரியமானதும் சுதந்திரமானதும் இயக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிராக புலிகள் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எவ்வாறான உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91748&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சீனாவின் செல்லப்பிள்ளைகள் என்பதும் இந்தியாவின் நீண்டநாள் எரிச்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது.. :D

KATHMANDU: UCPN-Maoist Chairman Pushpa Kamal Dahal has revealed that his party had ties with Sri Lanka's Liberation Tigers of Tamil Ealam (LTTE), also known as Tamil Tigers, during the decade-long armed conflict in Nepal.

In the startling revelation made on Friday, the Maoist leader, who later became the country's prime minister in 2008, admitted that the Nepali Maoists had sought the Sri Lankan rebel groups.

Dahal, also called Prachanda in the party, was speaking at a training programme for the officer bearers of Maoist party's ethnic and regional organisations, in Jorpati of Kathmandu yesterday, the Annapurna Post reported on Saturday.

On the occasion, Maoist leaders Dr. Baburam Bhattarai and Narayan Kaji Shrestha were also present. They imparted training on the party cadres including CC members.

According to him, it was the first time that he was making public the ties between the LTTE and his party.

Saying that the LTTE was also fighting for ethnic liberation, Dahal tried to justify the relationship with the Tamil Tigers. The insurgency in Nepal was a "movement for national liberation", he added.

He further revealed that LTTE had also sought help from the Maoist side. 

He was all-praise of the separatist movement in Sri Lanka, and called the LTTE, now defunct, an "organisation of the brave." According to him, the LTTE was revolting against the atrocity.

Though he did not elaborate what sort of help the then CPN-Maoist received from the Tamil Tigers and how the relation was established, Dahal hinted that the LTTE's support helped a lot to fight against the then regime.

He, however, lamented the Chinese assistance in the suppression of LTTE in Sri Lanka.

 

 

 

http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Dahal+spills+beans%3A+Nepali+Maoists+had+ties+with+LTTE+&NewsID=389283

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் வியாபாரக் கொள்கைகள் இவ்விடயத்தில் மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்..!

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி யாராவது சொன்னால் போதும் தமிழிழம் எடுத்த மகிழ்ச்சி அடைவோம்
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி யாராவது சொன்னால் போதும் தமிழிழம் எடுத்த மகிழ்ச்சி அடைவோம்

உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி.. :unsure::D

 

 

தனது இனத்தை விரும்பும்  ஒருவனுக்கு

சிறு    துரும்பும் பல் குத்த உதவும் என்பது போன்றது இது

அதன்படி  மகிழ்சியே :icon_idea:

 

மற்றும்படி

இது ஈழத்தைத்தரும் என்று பேராசைப்படுபவர்களுக்கு வெறும்  சிரிப்புக்கு இடமானது தானே... :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.