Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் அன்புக்குரிய தமிழ் உறவுகளே - வரதராஜன்

Featured Replies

 
24 செப்டம்பர் 2013
lg-share-en.gif
 

"இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அரசியல்ரீதியில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகப் போராட வேண்டியநிலையில் உள்ளனர்"

Varathan_CI.jpg

 

2010ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நான் நேரடி அரசியலில் முதன் முதலே பங்குபற்றினேன். பின்னர் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டேன. எனினும் அப் பதவிக்குரிய கடமைகளை சுயமாக என்னால் மேற்கொள்ளமுடியாமல் இருந்ததை காலப்போக்கில் உணர்ந்து கொண்டேன். எனக்குப் பல வரையறைகள் காணப்பட்டன. இந்நிலையில் தலைவர் பதவியில் தொடர்ந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இங்கு துவிச்சக்கரவண்டியை நிறுத்தவேண்டாம் என்று ஒரு அறிவித்தல் பலகை நாட்டப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு அருகிலேயே சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும். சில சந்தாப்பங்களில் இவ் அறிவித்தல் பலகைமீதே துவிச்சக்கரவண்டி சாத்தப்பட்டிருக்கும். இது ஒரு முரண்பாடான நிலை. இந்நிலையில் ஒன்றில் அறிவித்தல் பலகையை எடுக்கவேண்டும். அல்லது துவிச்சக்கரவண்டியை அவ்விடத்திலிருந்து எடுக்கவேண்டும்.

இத்தகைய ஒரு முடிவைத்தான் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்தேன். அதாவது தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன் கட்சி நடவடிக்கைகளிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். எனினும் இவ்விடயம் பெரிதும் பகிரங்கப்படுத்தப்படமல் இருந்தது. இதனால் பலரின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் நான் அடிக்கடி உட்படவேண்டியிருந்தது. அவர்களின் செயற்பாடுகளுக்கும் அவர்களால் விடப்படும் அறிக்கைகளுக்கும் பலருக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய இக்கட்டானநிலை எனக்கு ஏற்பட்டது.

இம்மாகாண சபைத் தேர்தலின்போது இம்முரண்பாடுகள் மேலும் முற்றியது. எனக்கு என்று ஒரு தனிப்பட்ட அரசியற் கருத்து உண்டு. மாகாணசபை முறை வலுவற்றது - அதிகாரமற்றது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமாட்டாது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனால்தான் இம் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இம்முறைமையை முற்றாக நிராகரித்திருந்தன. அன்று தமிழ் மக்களிடம் வேறு ஒரு தீர்வும் இருந்தது. அதற்காக போராடுகின்ற அமைப்பும் இருந்தது. எனவே அன்றைய சூழ்நிலையில் இம் மாகாணசபை முறையை நிராகரித்ததில் ஒரு நியாயம் இருந்தது. 

ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அரசியல்ரீதியில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகப் போராட வேண்டியநிலையில் உள்ளனர். இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் ஒருநிலைப்பாடு எடுக்கவேண்டியநிலை எனக்கு ஏற்பட்டது. கட்சி தலைமையிடம் எனது நிலைப்பாட்டை கூறினேன். மாகாணசபை முறையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதோடு, இன்றைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரிக்கவேண்டும் என்றவகையில் ஓர் அறிக்கையை விடுமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் எனது நிலைப்பாட்டை தனியாக அறிவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனது இச் செயற்பாடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சங்கடங்களை உருவாக்கியிருக்கலாம். நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து முற்றாக விலகிவிட்டேன் என்பதைப் பகிரங்கப்படுத்தாதவரை இந்நிலைமை காணப்படும். எனவே நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து முற்றாக விலகிவிட்டேன் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.

http://globaltamilnews.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேர்தல் முடிவுகள் வர முன்பு வந்திருந்தால், இன்னும் நன்றாயிருந்த்திருக்கும்,.என்றாலும்  உன்கள் கருத்துகளுக்கு என்றும் அதற்குரிய மரியாதை உண்டு. நன்றி. வெளியில் இருப்பவர்களும் சேர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது மதிப்பிற்குரிய ஆசிரியரந் திரு வரதராஜன் அவர்கட்கு வணக்கம்,

 

தமிழீழ விடுதலைபோராட்டத்தில் தாங்கள் கடந்தகாலங்களில் செய்த சேவைகளை நான் அறிவேன், தவிர அச்சேவைகள் யாழ்ப்பாணச்சமூகமட்டத்தில் என்ன காரணத்தாலோ பெரிதாகக் கண்டுகொள்ளமுடியாமல் போய்விட்டது.

 

தங்களது அறிக்கை இன்னமும் சில மாதங்கள் கழித்து வந்திருந்தால் நான் இதுபற்ரி பதில் எழுதுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. தமிழர் கூத்தமைப்பது தேர்தல் விஞ்ஞாபனத்தையும், தற்போது அவ்ர்கள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகளுக்குக் கொடுக்கும் செவ்விகளிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக மாவீரர் துயில் இல்லங்களை நாம் மீண்டும் திறப்போம், இராணுவத்தை முற்றாக வடபகுதியிலிருந்து நீக்குவோம் இது செய்ய முடியாததல்ல என திரு விக்னேஸ்வரனது தேர்தலுக்கு முன்னதான செவ்விகளும் மேடைப்பேச்சுக்களும் இருந்தன. அப்போதே நான் நினைத்தேன் இவர் வடபகுதி மக்களை உணர்வுக்குள் வைத்திருந்து வாக்குகளைக் கவர நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை வீசுகிறார் தகுந்த அரசியல்வாதியாக இந்தச் சட்டவாளர் வந்திட்டார் என.

 

தேர்தல் முடிந்து வெற்றிச்செய்தி வந்ததும், இராணுவத்தை அகற்றுவதுகுறித்து அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்படும் என மிகவும் அடக்கமாகக் குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் ஒன்றுமேயல்லாத பதின்மூணாவது அரசமைப்புத் திருத்தசட்டங்களை வைத்துக்கொண்டு தமிழ்மக்களுக்கு எதைப்பெற்றுத்தரப்போகிறார் என்பதை அவர்களது அடிப்பொடிகளுக்குப் புரியவில்லை.

 

இந்திய ஊடகங்களால் இப்போது ஊதிப்பெருப்பிக்கப்படும் மாகாணசபையின் அதிகாரங்கள், கதிர்காமர் சொன்னதுபோல் நுளம்புக்கு மலத்தியன் தெளிக்கவே அருகதை இல்லாதவை. அனால் மாகாணசபையால் பாலாறும் தேனாறும் தமிழர்வாழ்வில் பாய்ந்து ஓடப்போகின்றது என, இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. வரிஏய்ப்புச் செய்த பணத்தில் செய்தி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர்கள் எசமான் சொன்னால் ஆடத்தான் வேண்டும் என்ன செய்வது! ஆனால் உண்மையான தமிழர் விடுதலை வேண்டுவோர்க்கு தவறான செய்திகள் போய்ச்சேர்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவற்றை முறியடிக்க உங்களது ஒத்துளைப்புத்தேவை. முள்ளிவாய்காலுடன் நாம் கந்தக நெடியில் கரைந்தது முடிவிற்குவந்ததென்னமோ உண்மையே, அனால் எமக்காக, எம்தேசத்தின் மீட்புக்காக எமது தமிழகச் சொந்தங்களும் புலம்பெயர் தேசத்து உறவுகளும் கருகிச்செத்துக்கிடக்கின்றது தொடர்கிறதே இதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது. பேனைப்பெருஞ்சாளியாக்கி , தமிழர் விரோத தேசம் இந்தியாவும் சர்வதேசமும், சிங்களமும் காட்டுகின்றன.

 

 

கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கான மாகானசபை ஏற்கனவே உருவாகியிருக்கின்றது அங்கெல்லாம் தீர்வு எட்டப்பட்டுவிட்டதா? இந்திய உதவிகள் கிழக்கு மகாண நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கமையவா ஒழுங்கமைக்கப்படுகின்றன? அங்கு வாழ்பவர்களில் அதிக எண்ணிக்கையிலுள்ளோர் தமிழர்கள் இல்லையா? அப்போ எங்கேயோ இடிப்பதாக உணர்கிறீர்களா? தமிழர்களது அரசியல் பலத்தின் மையப்புள்ளி வடக்கு என்பது அவர்களது முடிவு அங்குள்ளோரைத் திருப்திப்படுத்தினால் அங்குள்ளோரை முதன்மைப்படுத்தி செய்திகள் வெளியிட்டால் விடுதலை வேட்கையையும் கூடவே அதற்கிருக்கும் தமிழகத்து ஆதரவையும் அடக்கிவிடலாம் என்பதற்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு உங்களது இச்சிறுமடல் ஆதரவளிக்கின்றது.

 

வடக்குத்தேர்தலில் மக்கள் வாக்களித்தது, அபிவிருத்திக்கோ, சிறு உதவிகளுக்கோ அல்ல நாம் பிரிந்துவாழவே விரும்புகிறோம் என்பதற்கான செய்தியைச் சொல்வதற்காக அன்றேல் அனந்தி எழிலன் அவர்களை இரண்டாவது விருப்புவாக்குகளுடன் வடக்குத் தெரிவுசெய்திருக்காது. இச்செய்தியை கூத்தமைப்பு உணரவேண்டும். 

 

இன்னமும் சிலகாலம் பொறுத்திருந்து பாருங்கள்.

 

 

 

 

சைக்கிள் சவாரி கசந்துவிட்டதோ?

  • தொடங்கியவர்

சைக்கிள் துருப்பிடித்து விட்டது .ஓட்டுவதற்கு ஆட்கள் கிடைக்குதில்லை ,விற்பம் என்றால் வாங்கவும் வாறங்களில்லை . :D

புலம் பெயர்த்தவர் சொல்லும் கதைகேட்டு காணமல் போனவர்கள் இவர்கள் நேற்று ஒரு அண்ணனின் நிலை தகவல் .

 

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 112,077 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தை பத்மினி சிதம்பரநாதனும் (68,240) கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (60,770) பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ஆசியோடு இந்த மூவரும் 2010இல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாகப் போட்...டியிட்டனர். 2004இல் ஏறக்குறைய 240,000 விருப்பு வாக்குளை பெற்றிருந்த இந்த மூவரும் சேர்ந்து உருவாக்கிய கட்சி அந்தத் தேர்தலில் வெறும் 7,544 வாக்குகளையே பெற்றது.

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமது ஆதரவு இல்லை என்பதை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் முகத்தில் அறைந்தது போல் தெரிவித்திருந்தனர்.

எனோ! தெரியவில்லை! இதையெல்லாம் மீண்டும் சிலருக்கு நினைவுபடுத்த வேண்டும் போல் தோன்றியது. அதுதான் சொல்லியிருக்கிறேன்.

உங்காளுக்கு deer,peacock dance தான் சரி போய் உட்கார்ந்து பாருங்கோ நல்லா வருவீங்க  :lol:

 

உண்மையில் இலங்கை அரசிற்கு வேணும் என்றால் யாரும் இலங்கையில் இருந்து தனி நாட்டு கோரிக்கைய விட்டு விட்டேன் என்று  அறிக்கை விடலாம். ஆனால் அனைத்து உலகத்திற்கு அப்பிடி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று புலம் பெயர்ந்து இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் ஈழக் கோரிக்கைய விட தேவை இல்லை  :icon_idea:

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.