Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடமிருந்து மக்களை படையினர் மீட்டிருந்தால் ஏன் அவர்கள் அரசிற்கு வாக்களிக்கவில்லை? டுவிட்டரில் ஜனாதிபதியிடம் கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mahinda_Rajapaksa.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அங்கிருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் ஜனாதிபதி பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மாவுடனான சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை.

  

எனினும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த உரையாடலுக்கு கேள்விகளை முன்கூட்டியே அனுப்பும்படியும் கேட்கப்பட்டது. தாமதமாக தொடங்கிய போதிலும், பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க நீண்ட தாமதம் ஏற்பட்டது. பின்னர், திடீரென, ஜனாதிபதி இன்னொரு கூட்டத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டு கேள்வி பதில் நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதனால், கேள்விகளை அனுப்பிய பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இதன் போது வன்னியில் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து 3 இலட்சம் மக்களை படையினர் மீட்டதாக கூறுகின்றீர்களே அப்படியாயின் அந்த மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என ஒருவர் கேட்டுள்ளார். ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.

JDS @JDSLanka: @PresRajapaksa #AskMR Any thing to say about the 39 media workers killed/disappeared since May 2004?

Thrishantha @thrishantha: #AskMR who is a truly friendly country? one who buts our value added finished products, or one who stays silent about our HR violations?

Ijaz Hameed @jzhameed: How much did you spend on the underground shooting pad at your son's residence close to Mt Lavinia ?? #AskMR @PresRajapaksa @RajapaksaNamal

Mario Arul @MarioArul: Erm... @PresRajapaksa: .@UKinSriLanka We have a policy of zero tolerance on sexual violence in conflict. #AskMR @nofirezonemovie

Thurai Loganathan @kopay: If you beleive you rescued the people those were held by LTTE, there were over 300,000 but the votes you got??????#askmr

Elmo Leon @elmoQ: @PresRajapaksa You look very fit and handsome for your age. How do you do it? #AskMR

slmachan @slmacha: #AskMR is ranil a good leader for you?

Zahran Careem @zahranc: RT "@RamanayakeR: In parliament they don't answer our questions and now in twitter also" #AskMR

Juzer Kaed @Juzer03: May be this was the first and the last #AskMR Q&A session

Vimal Thiru @kavioviyan: #askmr go to hell you dirty pig.

Mohammed Fashlin @MohammedFashlin: #AskMR can you please concentrate hajj fair and cost of Sri Lankan muslims? because normal cost 150k but during hajj period it is >600k ?

Isuru Hettiarachchi @isuru71: Guys!! Don't take it as a joke. You all will get white ven-ed #AskMR

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93796&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஐயாவைத்தேடித்திரிகின்றான்

ஐயா

தானாக பொல்லைக்கொடுத்து

வாங்கிக்கட்டுகிறார்

பாவம்

அவருக்கு 

ஐனநாயகத்தையும் தெரியல

பயங்கரவாதத்தையும் தெரியல

ஊடகத்துறையையும் தெரியல

 

எல்லாவற்றையும் போட்டுக்குழப்பி நிற்கிறார்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வார்களோ பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறது என்று ..... 

  • கருத்துக்கள உறவுகள்

இனி டுவிற்ரரும் தன்னை குறி வைப்பதாக ஒரு அறிக்கை விடப்போகிறார்.

விலாசமான மனிசன். இலங்கையில் இணையச் செய்திகளை தடை செய்துவிட்டு விட்டு அமெரிக்காவில் போய் நின்று ஆலாக்காட்டுகிறார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.