Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன?

Featured Replies

இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது.

120924161108_eastern_province_flag304.gi

கிழக்கு மாகாண சபையின் சின்னம்

மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும், ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள்.

முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது..

பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி தமிழோசை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டது.

பொதுவாக விமர்சனங்கள் உள்ளதை ஆளும் தரப்பை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஒப்புக்கொண்டார்.

மாகாணசபை அரசின் மூலமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளோ புதிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று அவர் கூறுகிறார்.

கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு முஸ்லிம்களும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றார்கள். தமிழர்கள் எவரும் அமைச்சராக இல்லை.

சிற்றூழியர் நியமனம் தொடக்கம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வரை தமிழர்களுக்கு அமைச்சர்களினால் பாராபட்சம் காட்டப்படுவதாக பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார்.

பொம்மை ஆட்சி

கிழக்கு மாகாண சபையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு பெருன்பான்மை தேவைப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது. அக்கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் தற்போது பதவி விக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரான ரம்ழான் அன்வர் தற்போதைய ஆட்சி தன்னைப் பொறுத்தவரை பொம்மை ஆட்சி என்கிறார்.

முஸ்லிம் ஒருவர் தற்போது முதலமைச்சர் பதவியிருந்தும் காணி பிரச்சினை உட்பட சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறமுடியாத நிலையில் அந்த பதவியிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அமைச்சர் மறுப்பு

மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தாலும் கிழககு வாழ் மூவினங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமது செயல்பாடுகள் இருப்பதாக அமைச்சர்கள் வாரியத்தின் பேச்சாளரும் மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான எம். எஸ். உதுமாலெப்பை கூறினார்.

தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளில் இனரீதியான பாகுபாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130929_eastprovinceadmin.shtml

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபையும்.. வடக்கு மாகாண சபையும் தமக்குள் இணையும் ஒப்பந்தங்களை செய்ய முடியாதா..??! அப்படிச் செய்வதன் மூலம்.. நிர்வாகச் செலவீனங்களை குறைத்து.. மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்தலாம். இரண்டு மாகாணங்களும் பல பொதுமைப்பாடான சமூகக் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ள நிலையில்.. இந்தப் பிரிவினை அவசியமற்ற ஒன்று..! 

 

அனுபவசாலிகள் என்போர்.. இவை குறித்து ஏன் சிந்திக்க முடியாது. உலகின் முன்னணி நிறுவனங்களே சேர்ந்து இயங்க முடிவு செய்கின்ற போது சிங்களம் மட்டும் தமது ஆதாயத்திற்காக..தமிழர்களிடையேயே பிரிவினைகள் மூலம் செலவை அதிகரிக்கிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கிழக்கு மாகாண சபையும்.. வடக்கு மாகாண சபையும் தமக்குள் இணையும் ஒப்பந்தங்களை செய்ய முடியாதா..??!  :rolleyes:  :rolleyes:  :rolleyes: 

 

:lol: 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபையும்.. வடக்கு மாகாண சபையும் தமக்குள் இணையும் ஒப்பந்தங்களை செய்ய முடியாதா..??! அப்படிச் செய்வதன் மூலம்.. நிர்வாகச் செலவீனங்களை குறைத்து.. மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்தலாம். இரண்டு மாகாணங்களும் பல பொதுமைப்பாடான சமூகக் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ள நிலையில்.. இந்தப் பிரிவினை அவசியமற்ற ஒன்று..! 

 

அனுபவசாலிகள் என்போர்.. இவை குறித்து ஏன் சிந்திக்க முடியாது. உலகின் முன்னணி நிறுவனங்களே சேர்ந்து இயங்க முடிவு செய்கின்ற போது சிங்களம் மட்டும் தமது ஆதாயத்திற்காக..தமிழர்களிடையேயே பிரிவினைகள் மூலம் செலவை அதிகரிக்கிறது..! :icon_idea:

 

சரி அப்படி இணைந்தால் யாரு வடகிழக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரனா அல்லது பிள்ளையானா :unsure:  :lol:  :D

கிழக்கு மாகாணத்தை இயங்கவிடாமல் மகிந்த அரசு போட்ட திட்டங்களுக்கு கக்கீம் தன்னை தனது அடாவடிகளில் இருந்து காப்பாற்றுவதற்க்காக ஒப்புதல் கொடுத்தார். கிழக்கு மாகாணம் ஏற்கனவே திவி நிகும்ப சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது. சேருவில தொகுதி அமைக்கப்பட போகிறது.

 

இந்த மு.க. திருடர் அடுத்த தேர்தலில் தமது பதவியை காக்க இப்படி பொருள் இல்லாத பிரேணைகள் கொண்டுவருகிறார்கள். மாகாணசபைமுறை இல்லாது ஒழிக்க ஒப்புதல் கேட்டால் இந்த பொய்ப் பிரேரணை கொண்டுவரும் அத்தனை மு.க. உறுப்பினர்களும் அரசுக்கு கைய்ழுத்து போட்டுக்கொடுப்பார்கள். இந்த மு.க உறுப்பினர்கள் தாங்கள் நடத்தியிருக்க வேண்டிய மாகாண சபை இது. கூட்டமைப்பை கெடுக்க என்ற் ஒரே நோக்கத்துக்காக தமது கைப்பிடியை அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு இப்போது நடிக்கிறார்கள்.

 

மக்கள் ஆணைக்கு எதிராக நடந்த இந்த இரண்டு கட்சிகளும் வீட்டுக்கு போக வேண்டும். உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து இயங்க முடியாமல் இருக்கும் மாகாணத்தை கலைத்து திருமப தேர்தல் கொண்டுவர வேண்டும். இவர்களுடன் இனி இணைய முடியாது. மாகாணம் சட்டப்படி இணைக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு இது தான் மொத்தம் உள்ள 9 மாகாண சபைகளில் வடக்கு கிழக்கிற்கு கூடுதல் அதிகாரம் அளித்து கிழக்கிற்கு முதல் அமைச்சரா ஒரு முஸ்லிம் வடக்கிற்கு முதல் அமைச்சரா ஒரு தமிழர் எப்பவுமே இருந்தா சரி......matter over

மிச்சம் ஏழு மாகாண சபையையும் சிங்களவர் ஆளட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு இது தான் மொத்தம் உள்ள 9 மாகாண சபைகளில் வடக்கு கிழக்கிற்கு கூடுதல் அதிகாரம் அளித்து கிழக்கிற்கு முதல் அமைச்சரா ஒரு முஸ்லிம் வடக்கிற்கு முதல் அமைச்சரா ஒரு தமிழர் எப்பவுமே இருந்தா சரி......matter over

மிச்சம் ஏழு மாகாண சபையையும் சிங்களவர் ஆளட்டும்

அப்படியே போகிற போக்கில் கிழக்கு தமிழரை கைகழுவி விட்டாயிற்று. அப்படித்தானே? பேரினவாதிகளே வடக்கையும் கிழக்கையும் இணைத்தாலும் நீங்க விட மாட்டிங்க போல.

முஸ்லிம்கள், சிறுபான்மை சிங்களவர்களின் உரிமை உறுதிசெய்யபட்ட இணைந்த வட-கிழக்கு தமிழ்பேசும், ஒன்றிணைந்த இலங்கைகுள்ளான சம்ஸ்டி அலகு, இதுதான் எல்லார்க்கும் ஏற்புடைய தீர்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.