Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்ள நேரிடும் என SLMC எச்சரிக்கை

Featured Replies

slmc_CI.jpg

 

கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப் படாவிட்டால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜமால் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய கிழக்கு மாகாணசபை அரசாங்கம் எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளையும் கடந்த ஓரு ஆண்டு காலமாக எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு மாகாண முதலமைச்சர் தீர்வுகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப அமோக வெற்றியீட்டியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97195/language/ta-IN/article.aspx

புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

அட அதைவிடுத்து யாழ்ப்பாண முஸ்லீம்களின் பிரச்சனைகளைப்பற்றி பேசுங்கடாப்பா. 

 

நீங்கள் அரச குடும்பத்திடம் எச்சில்லுக்கு அலைய, கிழக்கு மாகாணத்தால் முஸ்லீம்களும்தான் துரத்தப்படுவார்கள் என்றது மறுக்கமுடியாத உண்மை. 

 

இன்னொரு தேர்தல் வந்தால் கிழக்கில் மு.க வரவே மாட்டாது. கூட்டமைப்பும் அரசும்தான் கிழக்கில் வரும். எனவே "ஆதரவை விலக்குவோம்" என்றுவாய் தடிக்கக்  கூறி தேர்தலை வலிய வரவழைக்காத்தீர்கள். மேலும் அரசுக்கும் இந்த தேர்தல் நிலரம் தெரியும் என்பதால் அரசு உங்களின் வெள்வெருட்டுக்கு மசியவும் மாட்டது 

    EPC wants 13 A fully

TUESDAY, 01 OCTOBER 2013 16:37
emailButton.pngprintButton.png
13-.jpgA resolution in the Eastern Provincial Council calling for the full implementation of the 13th amendment was passed a short while ago.

SLMC Group Leader Mohamed Jameel proposed the resolution asking for the meaningful implementation of the 13th Amendment which provided for the establishment of provincial councils in Sri Lanka.

The Tamil National Alliance (TNA) which is the main opposition in the EPC supported this resolution with the SLMC and the United National Party (UNP). Government member Wimalaweera Dissanayake raised his hand in support of the resolution.

There were 16 votes in favour of the resolution with one vote against. The six members of the two ruling party allies -- All Ceylon People’s Congress and National Congress- were not present at the time of voting.  However, Chief Minister Najeeb Abdul Majeed opposed the resolution.(KB)

 

சிறியகட்சி பிரேரணை கொண்டுவர பெரிய கட்சி நடத்தி முடித்துவிட்டது. அரசாங்கம் பலமில்லாத இடத்தில் ஆட்சி அமைக்கப்போய் தன்னைத்தான் முட்டாள் ஆக்கிவிட்டது. இது நம்பிக்கை இல்லாப்பைரேரணையாக இருந்திருந்தால் நஜீப் மச்சான் இன்று வீட்டுக்கு போயிருப்பார்.

 

எங்கும் முதுகில் குத்துவதை இராஜதந்திரமாக பீற்றிவந்த அரசு, முதல் அமைசருக்கு எதிராக மு.க.வால் முதுகில் குத்த நடந்தப்பட்ட இந்த நாடகத்தினால் பதவி விலக வேண்டும். இல்லையேல் மு.க. எப்படி அரசை பதவியில் வைத்துக்கொண்டு கூட்டமைப்பின் ஆதரவுடன் மாகாணசபையை தான் நடத்தலாம் என்ற இரகசியத்தை கண்டு பிடித்திருக்கும் போது நடக்கும் தவறுகளுக்கு எல்லாம் நயீப் மயீத் பொறுப்பாக வேண்டிவரும்.

 

http://www.dailymirror.lk/news/36352-epc-wants-13-a-fully.html

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக 13க்கு ஆதரவாயும், காணி போலிஸ் அதிகாரம் வேண்டும் என்றும் பேசிவருபவர். பிள்ளையான். இந்த வாக்கெடுப்பிலும் அரச தரப்பில் இருந்தும் எதிர்த்து வாககளியாது விலகி போயுள்ளார். இவருடன் குறைந்தபட்சம் ஒரு working agreement போடுவது பற்றியாவது கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும்.

அடுத்தது முஸ்லீம்கள், இவர்களின் ஒத்தாசை இல்லாமல் எமது எந்த பிரச்சினையையும் தீராது. எனவே அவர்களுடனும் ஒரு புரிந்த்ஹுணர்வை 13 சம்பந்தமாகவேனும் ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெஸ்.. ஜெஸ்.. இதுதான் சரியான சந்தர்ப்பம். முஸ்லீம் காங்கிரசையும் அழைத்து.. பிள்ளையான் அம்மானையும் அழைத்து.. கூட்டமைப்பு உடனடியாக ஒரு அரசியல் உடன்படிக்கையை செய்து கொண்டு.. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்களின்..  முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். ஹக்கீமை அரசை விட்டு வெளிய கொண்டு வர முடியும்.

 

அதைவிட்டிட்டு.. பிரபா - ஹக்கீம்  உடன்படிக்கை போல.. முட்டாள் தனமாகச் செய்யக் கூடாது. அதனால் தான் ஹக்கீம்... பதவி கேட்டு.. சிங்கள அரசில் ஒட்டி இருக்க வேண்டிய நிலையே பிறந்தது..! பிள்ளையான் சிங்கள அரசாங்கத்தில் இடம்பிடிக்க வேண்டி வந்தது...! புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு.. (யாழ் களத்தில் இப்படியான பதங்கள்.. தணிக்கை இன்றி பாவிக்கப்பட நிர்வாகமும் புதிய களவிதியில் சிலருக்கு சலுகை  அளிச்சிருக்குது.) எங்கட சாணக்கியம் புரியாது. ஒதுங்கி இருந்து விடுப்பு மட்டும் பார்க்கட்டும்..! :lol::D

Edited by nedukkalapoovan

தொடர்ச்சியாக 13க்கு ஆதரவாயும், காணி போலிஸ் அதிகாரம் வேண்டும் என்றும் பேசிவருபவர். பிள்ளையான். இந்த வாக்கெடுப்பிலும் அரச தரப்பில் இருந்தும் எதிர்த்து வாககளியாது விலகி போயுள்ளார். இவருடன் குறைந்தபட்சம் ஒரு working agreement போடுவது பற்றியாவது கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும்.

அடுத்தது முஸ்லீம்கள், இவர்களின் ஒத்தாசை இல்லாமல் எமது எந்த பிரச்சினையையும் தீராது. எனவே அவர்களுடனும் ஒரு புரிந்த்ஹுணர்வை 13 சம்பந்தமாகவேனும் ஏற்படுத்த வேண்டும்.

முதலில் வட -கிழக்கு இணைப்பை ஆதரித்து கருத்து சொல்லட்டும் .பிள்ளையான் ,கருணா எல்லாம் அடுத்த தேர்தலுடன் காணாமல்போய்விடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

 
 

நஜீப் அப்துல் மஜீத், சிவனேசதுரை சந்திரகாந்தன், றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆதரவு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவதற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளினால்; நிறைவேற்றப்பட்டது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டே இந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்த தனி நபர் பிரேரணையை கடந்த் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரினார்.

அதன்பிரகாரம்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரியந்த பத்திரண எதிராக வாக்களித்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

எனினும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் தலைமையிலான கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

 கடந்த ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரனையை உடனடி விவாதத்திற்கு எடுக்காமல் காலம் தாழ்த்த கிழக்கின் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ழுத்தங்களை பிரயோகித்ததாகவும் ஜனாதிபதி சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. எனினும் இப்போதுள்ள களச் சூழலை நன்கு உணர்ந்து கொண்ட சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மிகவும் பொறுப்புணர்வோடு இந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கோரியுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.