Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படம் காட்டும் படையினர்

Featured Replies

kytes_attack.jpg

கொல்லப்பட்ட புலிகளின் உடல்களும்..கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும். படம் லங்காறுத் எனும் இராணுவ இணையத்தளம்.

யாழில் நடந்த சண்டைகளில் இதுவரை தாங்கள் 700 புலிகளைக் கொன்று..சகல தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு..புலிகளின் 80 உடல்களையும் பெருந்தொகுதி ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தங்கள் இணையத்தளங்களூடும் ஊடகங்களூடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்..! இவை குறித்த உண்மை நிலைப்பாடுகளை மக்கள் அறியக்கூடியதாக இல்லை..! :roll: :?: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80பேரில மிச்சம் 75 பேர் எங்கயாம்?

பெருந்தொகுதி ஆயுதங்கள???? :lol:

80பேரில மிச்சம் 75 பேர் எங்கயாம்?

பெருந்தொகுதி ஆயுதங்கள???? :lol:

வரணிப்பகுதியில் நேற்று எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு சுடப்படார் அவரோடு இன்னும் நான்கு பேர் இறந்ததாக. கொழும்பில் இருக்கும் ஒரு உறவினர் சொன்னார்......

இப்படி கொல்லப்பட்டவர்களாக கூட இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூகிள் ஏத்திலை கோடு கீறி படங்காட்டலாம் அவங்கள் காட்டின நம்பேலாமல் இருக்குதோ?

300 இராணுவம் 600 இராணுவம் இறந்தது எண்டு எழுதுறியள் ஆனால் புலிகள் நேற்று ஆக 3 இராணுவத்தின் உடன்களைத்தான் ICRC இடம் கையளித்திருக்கினம். இதில இருந்து விளங்க வேணும் யார் எழுதுறதை இந்தக்காலத்தில நம்ப வேணும் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்லவாறியள் குறுக்ஸ்! நேரே புதினத்தோடையோ, பதிவோடையே பிரச்சனையைக் கதைப்பதாக இருந்தால் துணிந்து கதைக்கலாமே! இங்க என்னத்துக்கு வீரம் காட்டுறியள்?

குறுக்காலபோவான் பற்றி தெரியாதா.. அவர் இப்படித்தான்

அடிக்கடி குறுக்காலபோவார். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குறுக்கால போனதுவளோட பெரிய தொல்லயைப்பா! கொஞ்ச நாள்ள தெரியும் தானே எந்தப்பக்கம் அடி வாங்கினது என்டு. wait and see..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படத்தில் இறந்து கிடப்பவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

அப்படத்தில் இறந்து கிடப்பவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

அட போங்ப்பா புலிகள் சண்டை பிடிச்சு வீரசாவைடயும் போது புலிகலின் இராணுவ உடைகளை கழட்டி இரானுதிடம்ம் கொடுத்து விட்டு தான் விரச்சாவு அடைந்தார்கள்? :roll: :?: :!:

அட போங்ப்பா புலிகள் சண்டை பிடிச்சு வீரசாவைடயும் போது புலிகலின் இராணுவ உடைகளை கழட்டி இரானுதிடம்ம் கொடுத்து விட்டு தான் விரச்சாவு அடைந்தார்கள்? :roll: :?: :!:

:lol::lol::lol::lol:

ஒரு மாற்றுக்கருத்து தமிழரால் நடாத்தப்படும் இணையம் நேற்றுடன் புலிகளின் யாழ்ப்பாணத்தில் நடந்த சிலநாள் யுத்தத்தில் 1400 புலிகள் இறந்து விட்டாதாக கதை விட்டாலும், 2000 புலிகள் காயம் எண்றும் சொல்லுகிறது...!

இதே இணையம்தான் யாழ்ப்பாணத்தை சுற்றி 400-500 புலிகள்தான் இருக்கிறார்கள் எண்று சொல்லியது..

மேலதிக தகவல் வேண்டுவோர் கூகிளை நாடுங்கள்... :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாற்றுக்கருத்து தமிழரால் நடாத்தப்படும் இணையம் நேற்றுடன் புலிகளின் யாழ்ப்பாணத்தில் நடந்த சிலநாள் யுத்தத்தில் 1400 புலிகள் இறந்து விட்டாதாக கதை விட்டாலும், 2000 புலிகள் காயம் எண்றும் சொல்லுகிறது...!

இதே இணையம்தான் யாழ்ப்பாணத்தை சுற்றி 400-500 புலிகள்தான் இருக்கிறார்கள் எண்று சொல்லியது..

மேலதிக தகவல் வேண்டுவோர் கூகிளை நாடுங்கள்... :wink:

:lol::lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் என்ன சொன்னாலும், களத்தில் நடக்கின்றது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும் தானே!

பெடிக்குஞ்சுகளை வைத்துப் போராடுகினம் என்று எழுதுபவைக்கு, வீரமிகு(?) சிங்கள இராணுவத்திற்கு அதைத் தாக்குப்பிடிக்க ஏன் முடியவில்லை என்று சொல்லத் தெரியவில்லை!

  • தொடங்கியவர்

நேற்று காலை கிளாலியில் நடந்த சண்டையில் நூறுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதுடன் 98 புலிகளின் உடலங்கள் மீட்கப்பட்டு..ஐ சி ஆர் சி யிடம் கையளிக்க ஒழுங்குகள் நடப்பதாக அரசின் செய்திக் குறிப்பு நேற்று அறிவித்திருந்தது.

இன்று கிளாலிப் பகுதிக்கு பொலிஸார் சகிதம் விஜயம் செய்த சாவகச்சேரி..நீதியாளர் மிகவும் பழுதடைந்த நிலையில் 21 (16 ஆண்கள் 5 பெண்கள்) கண்டு அவற்றினை உடனடியாக எரியூட்ட பொலிஸாரைப் பணித்துள்ளார். நேற்று சண்டை நடந்து 24 மணி நேரத்துக்குள் எப்படி உடலங்கள் மிகக் கெட்டுப் போகின என்பது மர்மமாகவே இருக்கிறது.

இதற்கிடையே ஐ சி ஆர் சி..அரசு தங்களுடன் உடலங்கள் கையளிப்புத் தொடர்பில் எந்தத் தகவலும் பரிமாறவில்லை என்று கூறி இருக்கிறது..!

இதற்கிடையில் சிறீலங்காவுக்கான வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர்..தற்போதைய யுத்தம் முதலாம் உலக யுத்தம் போன்று மிகக் கடுமையானதாக தனக்குத் தென்படுவதாகக் கூறிய கருத்தை ரெயிட்டர் வெளியிட்டு இருக்கிறது..!

யுத்தத்தின் போது உயிரழிவுகள் இரண்டு பகுதிக்கும் என்றாலும்..மனிதாபிமான அடிப்படைகள் கூட இல்லாமல்..சிறீலங்கா அரசு..எதிரியின் இழப்புக்கள் குறித்து மிகவும் மிகைப்படுத்திய தகவல்களை வெளியிட்டு..கீழ்த்தரமான யுத்த வெறிப் பிரச்சாரம் செய்து வெற்றி கொண்டாடி மகிழ்கிறது என்பதையே அதன் செய்திகள் சொல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ..யுத்தத்தின் போது களமாடி வீழ்ந்த அனைத்து வீரர்களுக்கும் வீர அஞ்சலிகள்..! :idea:

In Jaffna, it's becoming almost a First World War type of battle," said a Western diplomat. "They are sitting in the ground shooting at each other without much real movement." - reuters

-----------

Kodikamam Police Friday recovered bodies of 16 men and 5 women in Kilali area where heavy fighting was reported recently. Assistant Superintendent of Police (ASP) was making arrangements to bury the bodies as the bodies were in highly decomposed state. Chavakacheri Magistrate A. Premsankar was visiting the area Friday with the Police officials.

Sri Lanka millitary, on Thursday, claimed that it had killed hundreds of LTTE fighters in the area stating that the military was preparing to handover the bodies to Tigers through the ICRC

However, ICRC sources in Colombo, when contacted by media on Friday, said they did not receive any information from Sri Lanka military or authorities regarding the handover of bodies. - tamilnet

"They are sitting in the ground shooting at each other without much real movement." முன்னரங்க நிலைகள் நகரவில்லை அப்படியே இருக்குது எண்டு ஏமாற்றத்தோடை சொல்லுறார் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாதான் படம் காட்டுறாங்களைய்யா போட்டொவில பெடியள் செத்து ரத்த கறையோட கிடக்குறாங்கள் ஆனா அவங்கள் போட்டு இருந்த புலி சீருடை மட்டும் எப்படி அய்யா கிழியாம ரத்த கறை இல்லாம அப்படியே அயன் பண்ணின மாதிரி இருக்கு. சிங்களவனுக்கு மூழள இல்லதான் என்டாலும் செற்றப் பண்ணி ஒரு பொய் பிரச்சாரம் செய்யேக்க கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமோ சிங்களவா??? அதோட ஆயுதத்திலும் பிழை. கிளைமேர் போன்றவை ஆட்கள் முன்னேறும் போது பொறி வைத்து வெடிக்க வைப்பது. ஆனா புலிதான் முன்னேறுது இடங்களை புடிக்குது ஆகா சிங்களவன் என்னடா என்டா கிளைமோர் கைப்பற்றினது என்டு காட்டுறான். இறக்கம் காட்டினாலும் பரவாய் இல்ல. தங்கட முன்னரங்கங்களுக்கு பக்கத்தில புலிகள் முன்னேறி வந்தா அடிக்குறத்துக்கு பொருத்தி வைச்ச கிளைமோர இறக்கம் கைப்பற்றி காட்டினா ஓகே. ஆனா இவங்கள் என்னடா எண்டா?????? என்ன இறக்கம் முன்னேறக்க துவக்குக்க பதிலா கிளைமோரயா கொண்டு போனவங்கள்????? ஆருட காதுல புூ சுத்துறாங்கள் நிங்களவன்????? சர்வதேசத்தையும் தன்னை போல முட்டர் என்டு நினைக்குறான் போல கிடக்க நீங்கள் என்ன சொல்லுறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிளாலிப் பகுதிக்கு பொலிஸார் சகிதம் விஜயம் செய்த சாவகச்சேரி..நீதியாளர் மிகவும் பழுதடைந்த நிலையில் 21 (16 ஆண்கள் 5 பெண்கள்) கண்டு அவற்றினை உடனடியாக எரியூட்ட பொலிஸாரைப் பணித்துள்ளார். நேற்று சண்டை நடந்து 24 மணி நேரத்துக்குள் எப்படி உடலங்கள் மிகக் கெட்டுப் போகின என்பது மர்மமாகவே இருக்கிறது.

இதற்கிடையே ஐ சி ஆர் சி..அரசு தங்களுடன் உடலங்கள் கையளிப்புத் தொடர்பில் எந்தத் தகவலும் பரிமாறவில்லை என்று கூறி இருக்கிறது..!

சமீபத்தில் இணையத்தளங்களில் வந்த வரணி மற்றும், கிளாலிப் பகுதிகளில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்கள் உண்மையாகத் தான் போலிருக்கின்றது. அப்பாவிகளைக் கொன்று விட்டு, அவர்களுக்கு பக்கத்தில் ஆயுதம் வைத்து நாடகம் ஆடும் கபடம் இலங்கையரசிற்கு புதிதில்லைத் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்ப இருப்பதாகக் கதைகள் அடிபடுது.உணவுப்பொருட்கள் மக்களுக்கு வந்தால் சந்தோசம் தான். ஆனால் உண்மையில் அதில் உணவுப்பொருட்கள் தான் வருதோ யாருக்குத் தெரியும்.

முந்திய சதியை மீண்டும் இந்தியா செய்யாது என நம்புவோம்!

  • தொடங்கியவர்

என்ன மாயமோ தெரியல்ல...சிறீலங்கா அதிபர் செயலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு உதவியளிக்க உள்ளதாக சிங்கள இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது..! அதே நேரம் புலிகளின் தேர்வு செய்யப்பட்ட இலக்குகளை தேசிய பாதுகாப்புக் கருதி தங்கள் விமானப்படை தாக்கி அழித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போர்க்களத்தில் கடும் யுத்தம் தணிந்து ஆங்காங்கே சில சிறிய அளவிலான முன்னகர்வு முயற்சிகளே இடம்பெறுகின்றன போல்தான் தெரிகிறது. இதனிடையே புலிகள் தொடர்பிலான இழப்புக்கள் மிகைப்படுத்திய செய்திகள் என்று ரெய்டர் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கிடையே கண்காணிப்புக்குழு வெளியேற்றத்தின் பின் திருமலை நோக்கி பெருமளவிலான படைகள் நகர்த்தப்படுவதுடன்..யாழ் குடாநாட்டுக் கரை நோக்கி கப்பல்களைத் தவிர்த்து சிறு படகுகள் மூலம் படையினரையும் தளபாடங்களையும் படையினர் நகர்த்தக்கூடும். தற்போது யாழ்ப்பாணத்துக்கு படகுகளின் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை போய்ச் சேர 55 மணி நேரங்கள் எடுக்கும் என்றும் அரசு சொல்லி இருக்கிறது. இதேவேளை இராணுவத்துக்கு அவசியமான பொருட்களும் ஆளணியும் உலங்குவானூர்திகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன..!

படையினர் வெளியிட்ட உடலங்கள் கையளிப்பும்..புலிகள் பலர் சரணடைகின்றனர் என்ற கதைகளுக்கும்..சர்வதேச ஊடகங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையும் ஐசிஆர்சி அரசின் பிரச்சாரங்களைப் பற்றி அரசுக்கு சார்ப்பான அறிக்கைகள் எதனையும் இதுவரை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி களத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலங்களை அப்புறப்படுத்த படையினர் இன்னும் அனுமதிமறுப்பதும் அரசின் செயற்பாடுகள் குறித்து பலத்த சந்தேகங்களை..எழுப்புகிறது...!:idea

The Government has decided to extend all facilities for medical treatment of injured Tiger cadres on humanitarian grounds. HE the President Mahinda Rjapakse announced this decision at a meeting with the representatives of political parties that supported his candidature at the last Presidential Elections. The political parties attended represented National parties, Tamil and Muslim parties as well as socialist and liberal parties. - pro-srilankan sinhala army site says

The army has lost 106 men killed and 170 wounded in weeklong fighting on the Jaffna Peninsula.

The military estimates Tiger losses at 700 dead and 500 wounded, but analysts say both sides understate their own losses and exaggerate those inflicted on their opponent - AP (reuters also pointed it out many time.)

இந்தியாவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்ப இருப்பதாகக் கதைகள் அடிபடுது.உணவுப்பொருட்கள் மக்களுக்கு வந்தால் சந்தோசம் தான். ஆனால் உண்மையில் அதில் உணவுப்பொருட்கள் தான் வருதோ யாருக்குத் தெரியும்.

முந்திய சதியை மீண்டும் இந்தியா செய்யாது என நம்புவோம்!

:shock: :shock: :shock: :shock:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.