Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் பெயர் .!

Featured Replies

புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் .

 

 

பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

நிவேதன் ,நர்த்தனா 

நண்பா இதை ஏற்கனவே எம் யாழ்க்கள தளபதி பாஸ் நந்தன் கேட்டுவிட்டார் :) ...சரி நீங்களும் கேட்டுள்ளீர்கள் நல்ல விடயம் .................எனது செல்வங்களுக்கு 
 
தமிழவன் 
தமிழ் நிலா 
  • தொடங்கியவர்

இருவருக்கும் நன்றி அருமையான பெயர் விளக்கமும் கொடுத்தா நல்லம் அண்ணே .

 

தகவலுக்கு நன்றி சூரியன் அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒரு பிள்ளையின் பெயர் ப்றேஹா.  இதெப்படியிருக்கு?  நல்ல வடிவான பெயராம் என்று சொன்ன ஒரு பிள்ளைத்தாச்சிப் பிள்ளை தனக்குப் பிறக்கப் போற பிள்ளைக்கு கொஞ்சம் மாத்தி ப்றேஷா எண்டு வைக்கப் போகுதாமெண்டு சொல்லிச்சுது.  வாயில கொஞ்சம் ஸ்டைலா(?)   நழையிற நுழையிற பெயர்களையெல்லாம் வைக்கிறதுதான்இப்ப பாஷன்.  உதாரணமாக, க்ளேமா, ஸ்லேலா, த்றேமா எண்டெல்லாம் பெயர் வைக்கலாம். சமீபத்தில கொஞ்சம் தமிழும் சேர்ந்து இருந்து நான் கேள்விப்பட்ட பெயர் 'இன்படக்ஸன்'.  நல்லாயிருக்குது என்ன!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனோலியா.

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழில் பெயர் வைத்தால் கர்நாடகமாக இருக்கும் என்பது பச்சைப்பொய். ஆங்கில நாடு என்றால் பெயருக்கான எழுத்துக்களை அவர்கள் உச்சரிப்பதற்கு ஏற்றமாதிரி அமைக்க வேண்டும்..

நானும் தமிழில்தான் பெயர் வைத்தேன்.. (சொல்ல விரும்பவில்லை).. ஆனாலும் அந்தப் பெயர் பற்றி பல வேற்றினத்தவர் சொல்லக் கேட்கிறேன்.. "Nice name..!" :D

ஜெனோலியா.

:lol: :lol: :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழில் பெயர் வைத்தால் கர்நாடகமாக இருக்கும் என்பது பச்சைப்பொய். ஆங்கில நாடு என்றால் பெயருக்கான எழுத்துக்களை அவர்கள் உச்சரிப்பதற்கு ஏற்றமாதிரி அமைக்க வேண்டும்..

நானும் தமிழில்தான் பெயர் வைத்தேன்.. (சொல்ல விரும்பவில்லை).. ஆனாலும் அந்தப் பெயர் பற்றி பல வேற்றினத்தவர் சொல்லக் கேட்கிறேன்.. "Nice name..!" :D

 

 

சரியாகச் சொன்னீர்கள் இசை.

நானும்.... எனது பிள்ளைகளுக்கு, ஏழு ஆங்கில எழுத்துக்குள்... அழகிய தமிழ்ப் பெயர் வைத்துள்ளேன்.

கூப்பிடும் வெள்ளைக்காரனும்... நாங்கள் உச்சரிப்பது போலவே... உச்சரிப்பார்கள்.

அவர்களுக்கு "ரங்" சிலிப் பண்ணுவது மாதிரி பெயரை.... வைத்தால்,

அவர்களும் பாவம், எங்களுக்கும் கேட்க ஒரு மாதிரி இருக்கும். :)

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

 

கழுதை, சொல்லுறதும்.... சரியாத்தானிருக்கு.

நான் வைத்த பெயர் சுரபி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

 

உண்மை.. வெறும் தமிழ்ப்பெயர் பாதிக்கிணறு தாண்டுவது மாதிரி..

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை ஆரம்பிச்ச,,, அஞ்சரன்,
தனது பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரா... வைத்திருக்கிறார்?
அத... முதல்ல, வெளீல விடுங்கப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனோலியா.

 

:lol:  :lol:  :lol: .தமிழ் சிறிக்கு டக்கென்று கிளிக் பண்ணிய பெயரா ஜெனோலியா?

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :lol:  :lol: .தமிழ் சிறிக்கு டக்கென்று கிளிக் பண்ணிய பெயரா ஜெனோலியா?

 

என்னவோ.... தெரியாது, நுணா....

கள்ளம், கபடமில்லாத... அந்தப் பச்சைப் பிள்ளையின்.. ஞாபகம் அடிக்கடி வருதப்பா... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் வைத்த பெயர் சுரபி.

 

என்ன அமுத சுரபியா இல்லை சும்மா சுரபியா? சும்மா சுரபியென்றால் சுரப்பியென்றாகிவிடும்.

 

  • தொடங்கியவர்

தலைப்பை ஆரம்பிச்ச,,, அஞ்சரன்,

தனது பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரா... வைத்திருக்கிறார்?

அத... முதல்ல, வெளீல விடுங்கப்பு.

 

அண்ணாச்சி நான் எனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர் மூத்தவர்கள் இரட்டையர் ...அகரன் @அஞ்சரன் ..மூனாவாது ஆள் ஆதிரன் (ஆரம்பம் .....பயம் அறியான் ...பெரியவன் அல்லது வீரன் )ஆங்கிலத்திலும் அழகா எழுதலாம் கூப்பிடலாம் எங்கள் அடையாளம் என்பது பெயரில்தான் தொடங்குது நாம் யார் என்பது தமிழில் பெயரா வைப்பது முக்கியம் .

 

இங்கு வெள்ளைகள் தங்கள் பரம்பரை பெயர் மிஷெல் ...பிலிப் ...இப்படி இருக்கும் அதில் தெரியும் இவர்கள் எந்த நாட்டு குடிமகன் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மானியர்களும், யேர்மானிய குடியுரிமை பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டபடியெல்லாம் பெயரை வைக்க முடியாது. அவர்களிடம் ஒரு பெரிய பெயர்ப் புத்தகமே உள்ளது, குழந்தைக்கு அஞ்சனா (Anjanna) என்று பெயர் வைத்தபோது, பதிவகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. An மற்றும் Janna என்ற பெயர்கள் புத்தகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி அஞ்சனாவைப் பிரித்து An Janna எழுதியபோதுதான் ஏற்றுக்கொண்டார்கள்.

 

தமிழர்கள் நாங்கள் கடிவாளம் அற்ற குதிரைகள். எங்களால் தறிகெட்டு எப்படியும் ஓடமுடியும், பெயர் என்ன பெயர் அது எப்படி இருந்தால் என்ன?.

  • தொடங்கியவர்

யேர்மனியில் தமிழில் பெயர் வைத்தவர்கள் இருக்குறார்கள் அது எப்படி .அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாஞ்ச் ரீல் விடுகிறீர்கள். என் பிள்ளைகளுக்கு என் விருப்பப்படிதான் பெயர் வைத் தேன். யேர்மனியில் பெயர் வைக்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்களே.

என் பிள்ளைகளும் ஜேர்மனியில் பிறந்தவர்கள். தமிழில் பெயர் வைத்தோம். பாஸ்போட் எடுக்கும்போது தாமாகவே விரும்பி தமிழில் கையெழுத்தும் வைத்துள்ளனர். நாம் உணர்வை ஊட்டினால் அவர்கள் தமிழர்களாக வளர்வார்கள்.

இன்னுமொன்று என் மூத்த மகள் கூறினாள் தனக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதோடு பெயருடன் சேர்த்து தமிழ் என்றும் பதிவேன் என்று. எம்மிலும் பார்க்க பிள்ளைகள் தெளிவானவர்கள்.
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் தமிழில் பெயர் வைத்தவர்கள் இருக்குறார்கள் அது எப்படி .அண்ணே .

 

அது எப்படி அண்ணே என்றால் இப்படித்தான் இருக்கமுடியும் அஞ்சரன் அவர்களே!. அடைக்கலம் தேடி வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பதெல்லாம் சுத்தப்பொய். <_<  என்னுடைய சிற்றியில் அடக்கலம் தேடி வந்தவர்கள் சிற்றிசனும் எடுத்து புதுவீடும் கட்டி வாழ்கிறார்கள் என்பதுபோல்தான். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.