Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன்! என கூறுபோட்டு சந்திக்கிறார் சல்மான் குர்ஷித்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Salman-Khurshid-150-seithy.jpg

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்தியத் துணைத் தூதரகமும் இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக, சல்மான் குர்ஷித் இடம்பெறுவார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். அதேவேளை, வரும் செய்வாயன்று யாழ்ப்பாணம் செல்லும், சல்மான் குர்ஷித், தெல்லிப்பழையில் இந்திய வீடமைப்புத் திட்டப் பணிகளை பார்வையிடவுள்ளதுடன், வடக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கவுள்ளார். இதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94393&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக, சல்மான் குர்ஷித் இடம்பெறுவார்
அதுவும் நல்லதுக்கே....வடமாகணசபை எங்கன்ட செல்லப்பிள்ளை என உலகத்திற்கு காட்ட என நினைக்கிறேன் :D
  • கருத்துக்கள உறவுகள்

இதொன்றும் புதிசில்லையே. அன்று தமிழீழம் கேட்ட போதும் 10 பேரா பிரிச்சு விட்டு அடிபட விட்டவை தானே..! இப்பவும் அதைத்தான் செய்யினம். சம்பந்தன் போன்றதுகள்.. திருந்தாத வரை.. இவர்களின் தந்திரங்களுக்கு இடமளிக்கும் வரை... உது மாறாது. ஆனால் மக்கள் இவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் நிலைக்கு.. புலிகள் மக்களை அறிவூட்டி உள்ளனர்..! அதுதான் புலிகள் பெற்றுத் தந்த வெற்றி.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்காவை விட்டு சீன முதலீட்டுக்கு கோரிக்கை விட்டால்தான் அடங்குவினம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே கொழும்பில சந்திச்சிருந்தா வடக்கு முதல்வரை ஏன் கொழும்பில சந்திக்கணும் என்பியள்.

சம்பந்தனும் விக்னேஸ்வரனும் என்ன பிராபாவும் உமாவுமே தனியச்சந்த்ஹிச்சு சண்டையை தூண்டிவிட.

அவையள் ஒரே விசயத்தை தான் ரெண்டு இடத்திலும் கேப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே கொழும்பில சந்திச்சிருந்தா வடக்கு முதல்வரை ஏன் கொழும்பில சந்திக்கணும் என்பியள்.

சம்பந்தனும் விக்னேஸ்வரனும் என்ன பிராபாவும் உமாவுமே தனியச்சந்த்ஹிச்சு சண்டையை தூண்டிவிட.

அவையள் ஒரே விசயத்தை தான் ரெண்டு இடத்திலும் கேப்பினம்.

எது எப்படியோ

உங்கட  இந்த நம்பிக்கையை தக்கவைக்கவே மிகவும் கஸ்டப்படப்போகினம் :) 

காலம் காலமாக செய்யும் இந்தியாவின் நரித்தனமான தமிழர்களை பிரித்தாளும் தந்திரம் 

1378191_666750113349938_898468676_n.jpg

இந்தியாவின் தொல்லை தாங்க முடியாமல் விக்கியர் சாமியார் ஆக வேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம் விசுகு, நான் கேள்விப்பட்டவரை தன்னால் முடியாது என்று தெரிந்த்ஹபின் ஒரு விடயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வகை இல்லை விக்னேஸ்வரன். அவரால் முடிந்தது என்று அவர் நினைப்பது இபோதைக்கு காணி பொலிஸ் அதிகாரம்.மக்களுக்கு மூச்சு விட அவகாசம். ராணுவம் குறைப்பு. நீண்ட நோக்கில் சமஸ்டி தீர்வு. இதுவரை வந்த எந்த தமிழ் தலைவரையும் விட இவர் தான் என்ன செய்வேன் இல்லை செய்ய முயற்சிப்பேன் என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். 5 வருடம் கொடுத்துத்தான் பார்ப்போமே. சொல்ல்வதில் பாதியை செய்தாலும் மக்களுக்கு நன்மைதானே.

புலத்தவர் விக்னேஸ்வரனுக்கு அர்சனை செய்வதையும் சம்பந்த்ஹருக்கு தேவாரம் பாடுவதையும் விட்டு விட்டு தாம் செய்யவேண்டியதை செவ்வனே செய்தாலே போதும். பெரும்பாலான புலத்தவர் இப்படித்தான் செய்வார்கள். நட்டு கழண்ட அரசு கூட இதையே சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.