Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்குத் தலையசைத்து குர்ஷித் தமிழருக்கு துரோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுக்குத் தலையசைத்து குர்ஷித் தமிழருக்கு துரோகம்
 

அதிகாரப் பகிர்வுக்கு இலங்கையைப் பணிய வைக்காமல் ராஜபக்­ஷ கூறியதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார் குர்ஷித். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் இறையாண்மைக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார் என பா.ம.க. நிறுவுநர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தரும் என்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.'' என்றும் ராமதாஸ் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை அரசு போரை நடத்தியபோது அதை முடிவுக்கு கொண்டுவந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்தியது.

ஜனாதிபதி மஹிந்த போர் முடிந்து 6 மாதங்களில் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆயினும் போர் முடிந்து நான் கரை வருடங்கள் முடிந்துள்ள போதும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையிலும், காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அவமதிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறானதொரு நிலையில், இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மஹிந்தவை எச்சரித்து 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்தச் சம்மதிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்தபோது அவர் எதனையும் வலியுறுத்தவில்லை. மாறாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே முடிவெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்ததற்குத் தலையசைத்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நேரடியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையை குர்ஷித் பணிய வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ ராஜபக்­ஷ கூறியதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்.

இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவின் இறையாண்மைக்கும் குர்ஷித் துரோகமிழைத்திருக்கின்றார். தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத சல்மான் குர்ஷித்துக்கும் மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றார்

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=101532352410262216#sthash.l9jBYN0n.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

'சம்பூர்' அலுவல் முடிஞ்சுது!

 

நடையைக் கடடீற்றார் ஆக்கும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

சல்மான் குர்ஸீத் மகிந்தவுடன் நேற்றுப்பேசியபோது 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இந்தியாவினுடைய விருப்பம் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த மகிந்த இதுதொடர்பாக தான் செய்யக்கூடியது ஒன்றுமில்லையென்றும், பாராளுமன்றத் தெரிவிக்குழுவே இதுபற்றி முடிவெடுக்க வேணும் என்றும், ஆகவே இதற்குத் தான் பொறுப்பளியாக இருக்கமுடியாதென்று கூறியிருக்கிறார். சல்மான் குர்ஸீத்தும் இப்பதிலை ஏற்றுக்கொண்டுள்ளதாக ச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

ஆக இந்தியா வழமைபோல பல்லவியைப் பாட மகிந்த அதை லாவகமாக முடித்து வைத்திருக்கிறார். இனிப் பாராளுமன்றத் தெரிவிக்குழு கூட்டம் கூடி ஒரு தீர்வைக் கண்டுபிடித்து தருவதற்கிடையில் இன்னொரு 50 ஆண்டுகள் ஓடிவிடும். அதன்பிறகு 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கான தேவையே இருக்காது. இதையேதான் இலங்கையும் இந்தியாவும் விரும்புகின்றன.

 

இந்தியாவை அனுசரித்துப் போகவேண்டும் என்று இங்கே அறைகூவல் விடும் அன்பர்கள் இதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பார்கள். 


ஆனால் ராமதாஸ் , திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளின் கருத்தை நாம் சட்டை செய்யத் தேவையில்லை. இப்போது இப்படிக் கண்டனம் தெரிவிப்பார்கள், ஆனால் தேர்தல் வரும்போது வழமைபோல சொக்கத் தங்கம் சோனியாவின் கரத்தைப் பற்றிப் பிடிப்பார்கள். கருநாநிதியின் 3 மணிநேர உண்ணாவிரதமும் ஒன்றுதான் , ராமதாஸ் - திருமாவின் அறிக்கைகளும் ஒன்றுதான்...எந்த உப்புச் சப்புமில்லாதவை. 

தமிழகம் பலவீனமாக இருக்கும் வரை   எமக்கு ஒரு போதும் ஒன்றும் கிடையாது   இது சத்தியம். 

 

வட இந்தியருக்கு இது நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்வீட்டுப் பிரச்சனையில் வெளியார் தலையிடவேண்டாம் என வடமாகாண

முதலமைச்சரே தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டார்.
அதற்கும் சேர்த்துத் தானே மக்கள் வாக்களித்து அவரை முதலமைச்சராக்கியுள்ளார்கள்.
ஆகவே குர்ஸித் தலையாட்டியது சரி என எடுத்துக்கொள்ளலாம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.