Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வா சிலைக்கு முன் பாவ மன்னிப்பு பெற்ற பின்னர் பதவி பிரமாணம் செய்தனர் -

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் பதவியேற்பு வைபவத்தை, அதன் பங்காளி கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய கட்சிகளிலிருந்து தெரிவானவர்களம் ரெலோவின் சிவாஜிலிங்கமும் புறக்கணித்துள்ளனர். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ரெலோவிலிருந்து மாகாணசபைக்கு தெரிவான இரு மாகாணசபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 22பேர் இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் விக்னே;வரன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

சிவாஜிலிங்கம் தனக்கு அமைச்சு பதவி தரவில்லை என கோரி இதனை புறக்கணித்துள்ளார் என்றும் எனினும் ரெலோ இந்த பதவி பிரமாண வைபத்தை புறக்கணிக்கவில்லை என்றும் ரெலோ சார்பில் பேசவல்லவர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உட்பட தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பதவி பிரமாணம் செய்வதற்கு முன்னார் தந்தை செல்வா சிலைக்கு முன்னால் பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டனர்.

தாங்கள் செய்யும் ஊழல் மோசடிகள் பொய்புரட்டுக்கள், சுத்துமாத்துக்கள் அனைத்தையும் மன்னித்து கொள்ளுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்களும் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தந்தை செல்வா சிலைக்கு முன்னால் பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டனர்.996927_1458611461030634_419014067_n.jpg1374258_1458611457697301_237633115_n.jpg1375243_1458611441030636_666982279_n.jpg1385730_1458611437697303_38990671_n.jpgNP-Member.jpg

 

- See more at: http://www.thinakkathir.com/?p=53052#sthash.oehgzFoX.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி எத்தினை நாளைக்கு வீரசிங்கம் மண்டபம்?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவர்களாவது தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டனர், புலத்து பூசாரிகள் தங்களுடைய பாவங்களுக்கு எங்கே போய் பாவமன்னிப்பு பெறப்போகின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவர்களாவது தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டனர், புலத்து பூசாரிகள் தங்களுடைய பாவங்களுக்கு எங்கே போய் பாவமன்னிப்பு பெறப்போகின்றனர்?

 

மகிந்தாவுக்கு முன்னால் .....கருணா,பிள்ளையான்,கே.பி :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமிழீழத்தை கேட்கவில்லை. அவர்கள் கேட்பது சிங்களவருடன் இணைந்து கௌரவமாக வாழக்கூடிய சுயாட்சியை தான் - சி.வி.விக்கினேஸ்வரன்

இதை ஏன் ஐயா வாக்கு கேட்க வரும் போது சொல்லவில்லை???

யாழில் இருந்து ஒருவரின் குரல் இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்கு வாங்க வந்தபோது சொன்னார்கள்.. அவர்களது தேர்தல் வாக்குறுதியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி தீர்வு என்று அனைத்து மேடைகளிலும் பேசியே வாக்கு கேட்டு ஜெயித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை நிச்சயமாக சிங்களம் தராது. சிங்கள இராணுவ பலத்தை நொருக்கிப் பெற்றாலே தவிர.. தமிழீழம் பேசிப் பெறக் கூடிய விடயமாக இன்றில்லை..!  இந்த யதார்த்தப் புறநிலையிலும்.. முக்கிய சர்வதேச நாடுகளின் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டிலும்.... மற்றும் சிறீலங்காவின் இறையாண்மையில் ஒற்றையாட்சியில்.. ஹிந்தியா தனது ஒருமைப்பாடு உள்ளது என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் நிலையிலும்.. சி வி யின் இந்தக் குரல் மாற்றி ஒலித்தால் பறுவாயில்லை என்று கொள்ளலாம். ஆனால் மேற்படி அழுத்தங்கள் சார்ந்து.. தமிழரின் தாகம்.. தமிழீழம் என்ற நியாயமான விருப்பையோ.. .. தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததையோ எவரும் நிராகரிக்க முடியாது. அதேபோல்.. மேற்படி சர்வதேசம்.. இந்தியா போன்ற நாடுகள்.. தமிழீழத்தை வாங்கித்தரும் நிலைக்கு நாம்.. இந்த நிலையில் இருந்து நகர்ந்தும் செல்ல வேண்டும். அதற்குரிய அரசியலையும் ஒருங்கே முன்னெடுக்க.. சிங்களத்திடம் கொஞ்சம் விட்டிக்கொடுத்து போக தயாராக இருந்தும் அவர்கள் இறங்கி வருகிறார்கள் இல்லை என்ற ஒரு விடயத்தையும்.. பிராந்தியத்தில் தங்கள் நலனையே முன்னிறுத்திச் செயற்படும் நாடுகளுக்கு இடித்து உரைக்க வேண்டியும் உள்ளது..! இதனை வெறுமனவே வடக்கு மாகாண சபை மட்டும் செய்ய முடியாது. கிழக்கு.. புகலிடம்.. தமிழகம் என்று எல்லா தமிழ் மக்களும் தமது ஒத்த கருத்தை உலகிற்கு இனங்காட்டுவதன் மூலமே தமிழீழத்தை ஸ்தாபிக்கக் கூடிய நியாயங்களை உலகின் முன் காத்திரமாகக் கொண்டு செல்ல முடியும்..! சிறீலங்கா தமிழின அழிப்பை செய்வதை மறைக்கவோ.. மறக்கவோ முடியாது. அதேபோல்.. எல்லை இடப்பட்ட நிர்வாக அமைப்புக்கள் கொண்ட.. தமிழீழம் ஒன்று நிறுவப்பட்டிருந்ததையும் மறைக்க முடியாது..! இந்த அடிப்படைகளையும் உலகம் உணரச் செய்ய வேண்டும்..!  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.