Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியருக்கு தலேக்க என்ன பிரச்சனையா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 25 வருசமாக மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளியிட முடியாமல் தவித்தார்களாம்.. இப்போ மாகாண சபை தேர்தலில் வெளியிட்டு விட்டார்களாம்..??!

 

இதன் அர்த்தம்...????????????! எமது போராட்டத்தையும் போராளிகளையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகள் ஏற்படுத்திய அரசியல் தெளிவுகளையும்.. ஏன் தமிழ் தேசிய அடையாளம் என்பதையும்.. இவர் கொச்சைப்படுத்த நினைக்கிறாரா..???!

 

விக்கியர் தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக.. ஒவ்வொன்றைப் பேசுவதை நிறுத்திக் கொண்டு.. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அப்பால் அலட்டுவதை தவிர்ப்பது நல்லது..!

 

https://soundcloud.com/tamilnet/npc_cm_wigneswarans_maiden_speech/s-5kGZ3

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36739

விக்கினேஸ்வரன் ஆயுதபபோராட்ட அவசியம் பற்றிக் கருத்து சொல்லவில்லை. தமிழ் மக்கள் பிரச்சனை சர்வதேசம் அடைந்ததை பற்றி சொல்லவில்லை. EPDP, EPRLF, TELO அரசு, புலிகள் எல்லோருடைய ஆயுதம் ஏந்தலையும் ஒரு குடைக்குள் கீழ் கொண்டுவந்து பேசியிருக்கிறார். ஆனால் அது தவிர அவரின் மற்றைய பேசுக்களுக்கு மக்களிடமிருந்து வந்த அளவு வரவேற்பு மற்றவர்கள் எவருக்கும் வரவில்லை. அவர் எல்லோரும் தவறு விடமுடியும் என்றிருக்கிறார். இதில் தவறு என்பது அரசியல் பற்றியது மட்டுமே. துரோகம் என்று பொருள் கொள்ளாது.

 

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேசுக்கு பல பொதுமக்கள் கைதட்டினாலும் எனக்கு வழமைபோல் சம்பந்தரின் பேச்சில் ஆழநீளம் நிறையை இருந்தது போலிருந்தது. மாகாண சபையை நோக்கி இருக்கவில்லை. மாகாண சபை உரிமை விடையத்தில் நேரடியாக இறங்க முடியாததொன்று. உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் மட்டும் சுயாதினமாக இயங்கக் கூடியது. பேச்சு தமிழ் மக்களை நோக்கியும் இருக்கவில்லை. பிரிந்து போனவர்களை மீளவும் அழைத்திருந்தார். மற்றைய பேச்சு முழுவதும் அரசை நோக்கி இருந்தது. 

 

ஆயுதப் போராட்ட காலத்தில்  புலிகள் வெற்றியடைந்திருந்த போது அதன் பலத்தை வைத்து அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். அவர்களின் மனத்தில் அரசும், சர்வதேசமும் குழி பறிக்கும் என்ற சந்தேகம் தொடர்ந்தும் இருந்தது. முடிவில் அது 100% உண்மையும் ஆனது. சம்பந்தர் தானும் இன்று அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார். தான் புலிகள் வடகில் பெற்றிருந்த ஒரு வெற்றி போலவே மக்களின் ஆணையை பெற்றிக்கும் பலத்தை தன் மனதில் உணருகிறார்.  புலிகளை ஏமாற்றிய அதே அரசுதான் பதவியில் இருக்கிறது என்றும் சொல்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம். சர்வதேசம் மட்டும் தன்னுடன் இருக்கிறார்கள் என்றும் நம்புகிறார்.  அரசு சரவதேசத்துக்கு, தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும் என்றதை அழுத்தி சொல்லியிருந்தார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கினேஸ்வரனுக்கு வட மாகாணத்தில் வாழும் மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்தால், ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், அப்படி நடக்க மற்றையவர்கள் லேசில் விட்டுவிட மாட்டார்கள். ஜெயிக்கப்போவது யார் என்று போகப்போக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனுக்கு வட மாகாணத்தில் வாழும் மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்தால், ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், அப்படி நடக்க மற்றையவர்கள் லேசில் விட்டுவிட மாட்டார்கள். ஜெயிக்கப்போவது யார் என்று போகப்போக தெரியும்.

 

ஜெயிக்க வேண்டியது தமிழ்மக்களின் அரசியல் உரிமை என்று எண்ணுவோம்......

  • கருத்துக்கள உறவுகள்

1382111_10151726105133801_1655040801_n.j

திரு விக்கினேஸ்வரன் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி "உலக நாடுகளின் உதவியுடன் மாகாண சபைக்கான அதிகாரங்களை உறுதிப்படுத்துவதனூடாக இராணுவ நெருக்குவாரங்களை அகற்றி தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, அரசியல் தீர்வாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி (சமஸ்டி) அரசை அடைவது",என்பதேயாகும். இந்த இலக்கை அடைய அவரால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் இதில் ஐம்பது வீதத்தை அவரின் காலத்தில் செய்ய முடிந்தால் தற்போதைய களயதார்த்தத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு பெரிய முன்னேற்ற பாய்ச்சலாக இருக்கும். இந்த அடித்தளத்தில் இருந்து அடுத்து வருபவர்கள் அதை மேலும் ஸதிரப்படுத்தி இலக்கை அடைய முடியும். ஆனால் இது விக்கினேஸ்வரனுக்கு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு எந்த சிறிய உரிமையும் வழங்காமல் அவர்களை மென்மேலும் நசுக்கி அடிமைகளாக வைத்திருப்பது என்ற சிங்கள அரசின் உறுதியான கடும் போக்கினை அரசியல், ராஜதந்திர அழுத்தங்கள் மூலம் உடைப்பது என்பது மிகக் கடுமையான சவால் நிறைந்தது என்பதை விளங்கிக் கொள்ள பெரிய அரசியல் ஆற்றல் தேவையிலலை. இதை விளங்கியே மக்கள் வாக்களித்தார்கள். அதாவது இந்த கடினமான விடையத்தில் திரு விக்கினேஸ்வரன் வகித்த பதவிசார் கௌரவமும், அவரின் தனிப்பட்ட திறமையும் உலக நன்மதிப்பை எம் நோக்கி திருப்ப வைத்து எமது இலக்கில் நாம் முன்னேற உதவி செய்யும் என்று மக்கள் நம்பியதாலேயே அவருக்கு அதிகூடிய விருப்பு வாக்கு கிடைத்தது.

2004 பொதுதேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்ற கஜேந்திரன் பாராளுமன்றன்றத்தில் 40000 சவப்பெட்டிகளை யாழில் இருந்து அனுப்புவோம் என்று தலைப்பிரச்சனை வந்து பேசி எவ்வாறு தமிழ்மக்களின் நன்மதிப்பை பாழாக்கினாரோ அதுபோல் திரு விக்கினேவரன் அவர்கள் செய்யப்பட்டார் என்பது நம் அனைவரதும் எதிர்பார்க்கை. நம்பிக்கை பொய்க்குமா காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.