Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆட்டுமந்தைச் சமூகத்தினை நம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi

தனது இளமை வயதுமுதல் சமூகத்திற்காக உழைப்பவர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாக தனது சொந்த சாதியினை மறுத்து பதிலடி செய்து அழித்தொழிப்பு பணியை செய்து நக்சல்பாரி வாழ்க்கை வாழ்ந்தவர்.

வன்முறையை காட்டியவர்களிடம் வன்முறைமூலம் பதிலடி கொடுத்து அதனால்மிக இளம் வயதில் தூக்குதண்டனைப் பெற்றவர்.

சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உரிமைக்காக போராடிய பொதுவுடமைவாதி. சமரசமில்லா தோழர். நீண்ட நெடிய உண்ணாநிலைப் போராட்டத்தினை சிறையில் இருந்த பொழுதே கட்டிஎழுப்பி அரசினை அச்சுறுத்திய தோழர் அவர்.

தூக்குத்தண்டனையிலிருந்து குறைப்பு பெற்று ஆயுள்தண்டனையை அனுபவித்து தனது இளமைக் காலம் முழுவதும் இழந்த பின்னரும், சமூகத்திற்காய் தொடர்ச்சியாக செயல்பட்டவர், செயல்படுகிறவர்.

காரல்மார்க்சின் மூலதனம் என்கிற நூலை அழகிய எளிய தமிழில் மொழிப்பெயர்த்து அனைத்து மக்களும் படித்து பொதுவுடமைவாதியாக மாற பெரும்பணியாற்றியவர்.

தமிழ்த் தேசியம் பாசிசம் , சாதியம் என்று அவதூறுப் பிரச்சாரங்களை முறியடித்து , முற்போக்கு சிந்தனையை தமிழ்த் தேசிய சிந்தனையாற்றலாக தமிழர்களை திரட்டியவர்.

தொடர்ச்சியாக அறிவுசார் விவாதத்தினை சமூகத்தில் முன்வைத்த போராளி, கருத்துரையாளர். தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று தமிழ்த் தேசிய சிந்தனைகளை பரப்பியவர்.

எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்கின்ற தோழர். எளிதில் அனுகக்கூடிய அன்பான தோழராக இருந்து பயிற்றுவிக்கிறவர்.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்களோடு தமிழ்ச் சமூகத்தில் மீது முக்கிய தத்துவார்த்த விவாதங்களை கொண்டுசேர்த்த மூத்த தோழர்.

ஆழமான அரசியல் சாசனப் புரிதல்களையும், விவாதங்களையும் எளிமையாக முன்வைத்தவர். திரிபு அரசியலை முன்னெடுத்தவர்களிடத்தில் ஆழமான வாதத்திறமையால் வீழ்த்திய தோழர்.

இவ்வாறு சொல்லிச் செல்ல ஆயிரம் உண்டு தோழர். தியாகுவைப்பற்றி.

ஆயினும் எந்தவித கவலையுமின்றி அவரை பலிகொடுக்க தயாராகிறது தமிழ்ச் சமூகம். பல்வேறு அவதூறுகளையும், விமர்சனங்களையும் போராட்டக் களத்தில் நிற்பவர்மீது வைத்து செய்யும் வன்ம அரசியலை பார்க்கும் பொழுதும், பெரும்பாலான தோழர்கள் இந்த பட்டினிப் போராட்டத்தினை வலிமைப் படுத்தாமல் மெளனம் காப்பதுவும், தியாகுவின் உடல்மீதும், உயிர்மீதும் ஆக்கறையின்றி புறக்கணிக்கும் அரசியலையும் காணும் பொழுதும் மனம் சோர்வடைகிறது.

ஒரு ஆட்டுமந்தைச் சமூகத்தினை நம்பி தம்மை வருத்திக்கொண்டு பலியிட தயாராக நிற்கும் தோழர். தியாகுவை இழந்துவிடக் கூடாது என்கிற கவலை கடந்த சில நாட்களாக ஆட்கொண்டிருக்கிறது.

அக்கரைப்படாத அரசும், அதிகாரவர்க்கமும், தமிழ்ச் சமூகமும், அறிவுசீவி வர்க்கத்தினையும் பார்க்கும் பொழுது இவர்கள் மீது குறைந்த பட்ச மரியாதையையும் இழக்க நேர்கிறது.

போராடாத சமூகத்தினையும், போராட்டத்திற்கு வராத சமூகத்தினையும் ஒரு எருமை மாட்டுச் சமூகமாகத்தான் பார்க்க இயலும்.

தோழரின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் அனைவரும் , இன்று, அவரது இடத்தில் திரளவேண்டும். வருவீர்கள் என நம்புகிறேன்.

Thirumurukan Gandhi

ஒரு ஆட்டுமந்தைச் சமூகத்தினை நம்பி தம்மை வருத்திக்கொண்டு பலியிட தயாராக நிற்கும் தோழர். தியாகுவை இழந்துவிடக் கூடாது என்கிற கவலை கடந்த சில நாட்களாக ஆட்கொண்டிருக்கிறது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

------

போராடாத சமூகத்தினையும், போராட்டத்திற்கு வராத சமூகத்தினையும் ஒரு எருமை மாட்டுச் சமூகமாகத்தான் பார்க்க இயலும்.

தோழரின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் அனைவரும் , இன்று, அவரது இடத்தில் திரளவேண்டும். வருவீர்கள் என நம்புகிறேன்.

Thirumurukan Gandhi

 

தனது மக்களுக்காக.... சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கும்... தியாகு அவர்களுக்கு தமது  ஆதரவினை தெரிவிக்க.... அனைத்து தமிழரும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா தொப்புள்க்கொடி உறவுகளுக்கு குரல் கொடுக்க சொன்னா நஸ்ரியாவின் தொப்புள்ள நிக்கிறீங்களே டா...

நஸ்ரியாவின் தொப்புளுக்கு இருக்கும் பிரபலம் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவிற்கு இல்லை

That is Tamil Nadu

தமிழன்டா

  • கருத்துக்கள உறவுகள்
அதில் பங்கு எடுக்கா விட்டால் கூட பரவாயில்லை ( நானும் ஒன்றையும் வெட்டி கிழிக்கவில்லை).
தாங்கள் பங்கு எடுக்காததற்கு தியாகு அவர்களின் சொந்த வாழ்வு புனிதமாக இல்லை என்று.
கட்டுரை வடிக்கிறார்கள் சில புனித வான்கள் ..........
அந்த கொமாடியைதான் தாங்க முடியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அவரின் சொந்த வாழ்க்கையை ஆராட்சி செய்யாமல் எமக்காக குரல் கொடுப்போருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது மக்களுக்காக.... சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கும்... தியாகு அவர்களுக்கு தமது  ஆதரவினை தெரிவிக்க.... அனைத்து தமிழரும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆட்டுமந்தைச் சமூகத்தினை நம்பி தம்மை வருத்திக்கொண்டு பலியிட தயாராக நிற்கும் தோழர். தியாகுவை இழந்துவிடக் கூடாது என்கிற கவலை கடந்த சில நாட்களாக ஆட்கொண்டிருக்கிறது

இந்த ஆட்டுமந்தைச் சமூகத்தை நம்பி எத்தனையோ ஆயிரம் பேர் தங்களைப் பலிகொடுத்துவிட்ட்டார்கள். இப்போதுதான் சிலருக்கு ஞானம் பிறந்திருக்கின்றது.

இந்த ஆட்டுமந்தைச் சமூகத்தை நம்பி எத்தனையோ ஆயிரம் பேர் தங்களைப் பலிகொடுத்துவிட்ட்டார்கள். இப்போதுதான் சிலருக்கு ஞானம் பிறந்திருக்கின்றது.

தாங்கள் தொடர்ந்து எல்லவ்வற்றையும் போட்டு குழ்ம்புகிறீர்கள்.

 

திருமுருகனின் பேச்சு தொழர் தியாகுவைக் காப்பற்ற  போராட்டத்துக்கு வருமாறு தனது தமிழ்நாட்டு உறவுகளுக்கு விடும் வேண்டுகோள். 

 

மாவீரர்கள் தங்கள் நிலத்தை காப்பாற்ற போரில் உயிர் துறந்தவர்கள்.

 

இதில் தமிழ் நாட்டு தமிழர்கள் மாவீரர்களாகவில்லை என்பதா தங்களின் கருத்து? இல்லை மாவீரர்களை காப்பற்றவில்லை எனவே இப்போது ஏன் தோழர் தியாகுவை காப்பாற்றுவான் என்கிறீர்களா?

 

இல்லைத்தான் களத்தில் போராடிய மாவிரகள்தான் வீரர்கள் தோழர் தியாகு கோழை என்று ஒரு ஈனத்தன ஒப்புவுவமை ஆரம்பிக்கிறீர்களா? மாவீரர் சிங்கள காடைகளுக்கு எதிராக எடுத்த அதே கொடியை அடிமை, குடிமை நடத்திய சாதி வெறியர்களுகு எதிராக எடுத்தவர் இல்லையா தோழர் தியாகு.

 

போகும் முதல் ஆட்டை பின்பற்றி அதன் பின்னால் போகும் ஆடுமந்தைகளாக போல இருந்து ஒருவரை பார்த்து மற்றவர்  பணத்துக்கும், சுகவாழ்வுக்கும் இரவுபகல் அலையும் சமாணிய மனிதர்களாக மட்டும் இருந்திடாமல் உயரிய நோக்கங்களுடன், சுய சிந்தனையுடன், மொழி, நாடு, மானுட சிந்தனை, மனித வர்க்கத்துக்கான சமுதாய உணர்வு என்பவற்றை வெளிப்படையாக காட்டி எல்லோருமே ஒரேநேரத்தில் முன்னால் வந்து  தங்கள் பதையை எல்லோருமே ஒன்றாக தீர்மானித்து தமிழ் என்ற ஒரு குறிக்கோளுக்காக பாடுபட்டு, தோழர் தியாகுவை காப்பாற்றும் படி திருமுகன் விடும் அழைப்பில் தங்கள் கருத்து எங்கே வந்து இணைகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 

 

உங்கள் கருத்தை நான் தப்பாக புரிந்து கொள்கிறேன் என்றால் அதை விபரமாக எழுத முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை நான் தப்பாக புரிந்து கொள்கிறேன் என்றால் அதை விபரமாக எழுத முடியுமா?

 

கொஞ்சம் பணம் செலவாகுமே! பரவாயில்லையா? <_<

 

தமிழர்களில் (ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம்)  அநேகமானவர்கள் சமூக அக்கறையில்லாமல் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் மட்டுமே பார்த்துக்கொள்ளும் சுயநலம் பிடித்தவர்கள். எது நடந்தாலும் எமக்கென்ன நமக்கு இலைகுழையும் புண்ணாக்குத் தண்ணியும் கிடக்க ஈரமில்லாத இடமும் கிடைத்தால் காணும் என்று மந்தைபோல வாழ்பவர்கள். அவர்களை இன உணர்வும் சமூகப் பொறுப்பும் உள்ள மனிதர்களாக நினைத்து காரியத்தில் இறங்குபவர்கள் சீக்கிரமாகவே மந்தைக் குணத்தைக் கண்டுகொள்வார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.