Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசும் படங்கள் ஆனால் இது உண்மையை தான் பேசும்.

Featured Replies

IMG_1908.JPG

மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு.

இப்படிக்கு பாடசாலை

 

 

IMG_0758.JPG

ஒரு காலத்தில் எவ்வளவு பேர் வந்து தங்கி வெளிநாடு எல்லாம் சென்றீர்கள். ஊத்தைப் பாயென்றோ அல்லது வருடக்கணக்கில் தோய்க்காத தலைகணியென்றோ பார்க்கவில்லை, உயிர் தப்பினால் போதும் என்று இது தான் சொர்க்கம் என்று படுத்து எழும்பினீர்கள். நானும் கோடீஸ்வரன் ஆனேன். சண்டையும் நின்று விட்டது. இன்று ஒரு தரும் இங்கு வாறங்கள் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் அண்ணன் மீண்டும் வருவான் என்கிறர்கள். அவர் எப்ப வாறது என் பிள்ளைகளும் எப்ப கோடீஸ்வரர் ஆகுவது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி போதும் என்கிறார்கள்.

இப்படிக்கு Island Lodge நிர்வாகம்

 

IMG_2023.JPG

முந்தி வருசத்திற்கு ஒரு தரம் தான் அன்னதானம் செய்வார்கள். இப்ப வெளிநாட்டுக் காரரின் புண்ணியத்தால் அடிக்கடி எல்லா கோயில்களிலும் செய்கிறார்கள். இப்ப விளையாட்டுப் போட்டிக்கு கூட சாப்பாடு தாறங்கள். 

இப்படிக்கு பொதுஜனம்

 

IMG_2069.JPG

முந்தி போட்டி போட்டுக் கொண்டு எத்தனை பேர் 3 போகமும் தோட்டம் செய்தார்கள்.பேந்து ஆமிக்காரன் தோட்டம் செய்யாமல் தடுத்தான். ஆமி விட்டு 2 வருடம் ஆய்ச்சு ஒருவரும் திரும்பி பார்க்கிறாங்கள் இல்லை. இப்ப வெளிநாட்டு காசு வருகுது யார் குனிந்து வளைந்து வேலை செய்ய போறாங்கள். இப்படியே காணி எல்லாம் சும்மாய் கிடந்தால் சிங்களவன் தான் வந்து குடியேற போறான்.

இப்படிக்கு பலட்டன் தோட்டம்

 

IMG_2406.JPG

எவ்வளவு நாளாச்சு பேசி. ஆசை தீரும் மட்டும் பேசுவோம். இனி எத்தனை காலத்தக்கு பிறகு சந்திப்போமோ. நாட்டு பிரச்சனையாலை எல்லாரும் ஒவ்வொரு திசையிலை இருக்கிறோம். ஒன்றாய் பிறந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் அனால் இன்று திசை மாறிய பறவைகள் நாம். 

இப்படிக்கு அன்பு நண்பன்

 

Untitled-1.jpg

அடப்பாவிங்களா உங்கடை சொந்த தேவைக்கும், தேவையானவர்களை கைக்குள் போடுவதற்கும் , உங்கடை புகழைப் பாடுவதற்கும் என்ரை வரலாற்றை மாற்றி எழுதிப் போட்டிங்களே. உங்களுக்கு என்னடா துரோகம் செய்தேன். என்ரை பெயரை சொல்லி வாறவங்கள் போறவங்களட்டையெல்லாம் காசு வாங்றீங்கள். இது போதாதா.

இப்படிக்கு விளையாட்டு மைதானம்

 

IMG_2461.JPG

முந்தி இந்த மதகிலிருந்து தான் பெட்டையளை சைட் அடிப்பாங்கள். எத்தனை பெடியங்கள் இருப்பாங்கள் போறவர்களுக்கு விசில் அடிப்பாங்கள். றோட்டாலை போகைக்கை அவளவைக்கும் சந்தோசமாக இருக்கும். இப்ப மதகையும் காணோம் பெடியங்களையும் காணோம். பெடியங்கள் திருந்தி விட்டாங்களோ. வீட்டை விட்டே வெளியிலை வாறங்கள் இல்லை. இப்பத்தையான் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் தான். இன்னுமொண்டையும் சொல்லுறாங்கள் ஏதோ கொம்பியூட்டர் பேஸ்புக்கென்று என்ன இழவோ யான் அறியேன்.

இப்படிக்கு குப்பிழான் சந்தி

 

IMG_2470.JPG

அப்பாடியோ!!!! எவ்வளவு காலமாச்சு இதில் இருந்து, இந்த காத்தோட்டம், நண்பர்கள், நான் பிறந்த ஊர். இதில் இருப்பது எவ்வளவு சுகமாய் இருக்கு. சொர்க்கமே என்றாலும் நம்முரை போல வருமா. வெளிநாடு என்று வந்து உடம்பிலுள்ள ஒவ்வொரு பாட்சுகளும் பழுதானது தான் மிச்சம். வேலை விட்டு வந்தால் செற்றி செற்றியை விட்டால் வேலை இது தான் வெளிநாட்டு வாழ்க்கை உவங்களுக்கு இதை சொன்னால் விளங்கவா போகிறது. யாரேன் சிலதுகள் கள்ள மட்டையை போட்டுட்டு காசை இங்கு கொண்டு வந்து விசுக்கிறாங்கள். இங்குள்ளதுகள் வெளிநாட்டை சொர்க்கம் என்று யோசிக்குதுகள்.

இப்படிக்கு புலம் பெயர் தமிழன்

 

IMG_2957.JPG

வெளிநாட்டு காசு வருகுதோ வரவில்லையோ எனது உழைப்பை கைவிடேன். உவங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருந்து வருத்தத்தை தேட சொல்லுறீங்களா. உழைச்சு சாப்பிட்டால் தான் சாப்பிடுற சாப்பாடு கூட செமிக்கும்.

இப்படிக்கு உழைப்பாளி

 

IMG_2474.JPG

எடே ஆனந்தா இவங்கள் எல்லாம் ஊரை விட்டு ஓடிவிட்டாங்கள் இவங்களை மாதிரி நாங்களும் போய் இருந்தால் ஊர் கலகலப்பில்லாமல் போயிருக்கும். வெளிநாட்டில் இருந்து வாறங்கள் காசுகளை தூக்கி எறியிறாங்கள். எங்களுக்கும் தண்ணி வாங்கி தாறங்கள் நாங்களும் இரவிரவாய் றோட்டிலை கல கலப்பாக நிக்கிறோம். ஆனால் சிலதுகள் இந்த சின்னப் பெடியங்களுக்கும் தண்ணியை வாங்கிக் கொடுத்து அவங்களையும் எங்களை மாதிரி ஆக்குகின்றாங்கள். இத தாண்டா உவங்களிலை எனக்கு பிடிக்காத விசயம்.

இப்படிக்கு குப்பிழான் குடிமகன்

 

 

IMG_3016.JPG

முந்தி ஆட்டை வெட்டினாங்கள் மனிசனை வெட்டினாங்கள். இப்ப கோயில் கட்டி ஒழுங்காக கும்பிடுறாங்கள்.

இப்படிக்கு முனியப்பர் கோவில்

http://kuppilanweb.com/photonews/pesumpadankalpart1.html

 

DSC06749.JPG

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எங்கும் பிளாஸ்ரிக் எதிலும் பிளாஸ்ரிக் எனும் இன்றைய காலத்தில் அன்று எமது முன்னோர்கள் உணவு உண்ண பயன்படுத்திய உபகரணம்.

சங்கடன் படலை

sankadam-padalai.jpgஎமது கட்டடக்கலை பாரம்பரியத்தை கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு. வீதியால் வருவோர் வெயிலின் கொடுமைக்கு தங்கி இளைப்பாறி போவதற்கு என எமது முன்னோர்கள் அமைத்த பல நிழல் கூடங்களில் முக்கியமானதொன்று. வீட்டின் பிரதான வாயிலுக்கு மேலாக கூரைபோடப்பட்டு அத்துடன் கீழே இரு பறமும் அமர்வதற்கும் தூங்குவதற்கும் வசதியாக குந்துகளும் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒரு மூலையில் மண்குடத்தில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருக்கும். தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு முக்கிய சாட்சியாக மிளிர்வது சங்கடன் படலை என்றால் மிகையாகாது.

(படமும் கருத்தும் சர்வேஸ்)

 

 

 

 

 

 

alaveddy.ch

 

IMG_1908.JPG

மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு.

இப்படிக்கு பாடசாலை

 

 

 

 

இதை இணைச்சவர் இன்னும் குப்பிளானிலோ இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே குப்பிளான் சந்தியிலை  ஜலண்ட் லொச் புகழ் ராசாத்திக்கு ஒரு சிலையும்  கட்டாயம் வைக்கவேணும்.

படங்களுக்கு கண்ணீர் வரவழைக்கக்கூடிய சக்தியும் இருக்குது,
இப் படங்கள் இறுதிப் போராட்டக்காலங்களில் எடுக்கப் பட்டது.
(தமிழத்தேசிய கூட்டமைப்பின் மாகணசபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பனம்)

 

last_wor2.jpg

 

 

last_wor37.jpg

 

last_wor38-600x450.jpg

 

என் அன்புச் செல்வங்களே,
குண்டுச் சிதறலலை தாங்கிய உங்கள் மேனி -
எவ்வளவு துடித்திருக்கும்,
உங்களை காப்பாற்ற முடியா பாவி ஆகிப் போனேனே.......!

 

(தமிழத்தேசிய கூட்டமைப்பின் மாகணசபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பனம்)

 

 

 

பாவம் ஒரிடம் பழி இன்னோரிடமா ?
 
பாயில் கிடப்பவை பிஞ்சுகள் அல்ல.
நரபலி கொடித்தவர்களின் பிர‌ம்மாஸ்திரங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறி கொண்டு எம்மக்களை அழித்தவர்களுக்கு கூட்டமைப்பு என்ன செய்ய முடியும்?. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.