Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்காம் நாட் காலை

Featured Replies

மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை.
 
நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை.
 
காடு முற்றாக விழித்திருக்கிறது. இன்றைக்கும் இந்த மரத்தடியில் தான் நான் கிடக்கவேண்டும். நாளை ஒருவேளை எனது பலம் திரும்பக்கூடும். ஆயுதம் என் மடியில் கிடக்கிறது. கண்மடல்கள் கனமாகிக்கொண்டேயிருக்கின்றன...
 
கனவொன்றின் அதிர்ச்சியில் விழித்தவன் உர்ர் என்ற சத்தம் உண்மை என்று உணர நொடிப்பொழுதே செல்கிறது. நகரமுடியவில்லை, ஆயுதத்தை; தூக்கிச் சிறுத்தையினை நோக்கிக் குறிபார்க்கிறேன். சிறுத்தை மரங்களிற்குள் மறைந்து காணாமற் போய் விடுகிறது. இந்தக் குட்டித்தீவிற்குள் இந்தக் காடு. இருந்தும் மனிதர்களே இல்லாத ஒரு கிரகத்தில் கிடப்பதாய்க் காடு என்னை மிரட்டுகிறது.
 
ஏலாதபோதெல்லாம் அம்மா ஞாபகம் வந்துவிடுகிறது. பள்ளிநாட்களிற் காலையில் என்னைப் படுக்கையால் எழுப்புதற்கு என் அன்னை படும் பாடு. குட்டித் தங்கையின் நினைவு நெஞ்சை அழுத்துகிறது. என் வீடு. ஆட்டுக்கொட்டில், ஆடு தின்னக் கட்டித் தூக்கியிருக்கம் குழைக்கட்டு. என்னால் அந்தக் கொட்டிலின் புழுக்கை மணத்தை அப்படியே இப்போது உணரமுடிகிறது. இந்தக் காட்டிற்குள் ஒருவேளை நான் முடிந்து போகலாம். இனி எப்போதும் நான் மனிதரையே காணாது போகலாம். என் விரல்கள் குப்பியினைத் தொட்டுப் பார்த்துக்கொள்கின்றன.
 
சூரியன் திசை கூடத் தெரியவில்லை. எத்தனை மணிநேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. இருட்டுகிறதா அல்லது காடு ஒளியை மறைக்கிறதா என்று சொல்லமுடியவில்லை. ஆனால் மங்கல் ஒளியே மிஞ்சியிருக்கிறது. பலவீனம் படுத்துகிறது. கண்கள் கனக்கின்றன...
 
ஆசிரியர் இன்று புதுப்பிரம்பு வைத்திருக்கிறார்;. சஞ்சயன் என்றும் போலக் கொழும்புப் பாணியில் ஜீன்சும் சப்பாத்தும் போட்டிருக்கிறான். வகுப்பில் அவன் தனியாகத் தெரிகின்றான். கணித வாத்தியார் கணக்கெழுதி முடிக்கவில்லை நான் கையைத் தூக்குகிறேன். விடை சொன்னதும் ஆசிரியர் சரி என்று கூறி உற்சாகப் படுத்துகிறார். 'நெடுகலும் முதலாம் பிள்ளையாவது உனக்கு அலுக்கேல்லையோடா?' காதுக்குள் கோபி எரிச்சல் கலந்த நகைச்சுவையோடு கேட்கிறான். இன்னமும் சில மாதங்களே சோதனைக்கிருக்கிறது என்ற நினைவு கனக்கக் கனவு கலைந்து விழித்துக் கொள்கிறேன். என்னைச் சுற்றி வேடுவர்கள் நிற்கிறார்கள்.
 
நான் விழித்ததும், ஏதும் கூறாது நடக்கிறார்கள். அவர்களது உடல்மொழி அறிந்து, பலவீனம் உலாஞ்சிக் கொண்டிருக்க, ஆயுதத்தை ஊன்றி நான் அவர்கள் பின்னால் செல்கிறேன். பத்தடிக்கு மேல் என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. நான் விழுகின்றேன் என்று தெரிகிறது...
 
சோதனைக்கு இன்னமும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த வருடம் முழவதும் நான் விளையாடித் திரிந்துவிட்டேன். எந்த வகுப்பிற்கும் செல்லவில்லை. எதையும் கற்கவில்லை. எவ்வாறு நான் படித்து முடிக்கப்போகிறேன். மீண்டும் திடுக்கிட்டு எழுகிறேன். பள்ளியை இடைநிறுத்தி இயக்கத்தில் இணைந்தது முதல் இந்தக் கனவு என்னை வாட்டி எடுக்கிறது. கனவு முடிந்தபின்னும் படிப்புத் தொலைந்த கவலை வாட்டுகிறது. எங்கும் இருட்டாக இருக்கிறது. எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை.
 
கனவு கிழறி விட்ட உணர்வுகளில் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின. சும்மாயிருக்கும் உடலிற்குள் மனம் ஆடித்திரிகிறது. நான் தான் எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளை. ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசிலில் சித்தியடைந்து பிரபல பள்ளியொன்றில் இணைந்திருந்தேன். அனைத்து ஆசிரியரிற்கும் நான் செல்லப்பிள்ளை. எனது புள்ளிகளின் சராசரி 95க்குக் குறைந்ததில்லை. என் அம்மாவிற்கு என்னைக் காட்டிலும் எனது திறமை சார்ந்து பெருமை அதிகம். என்னை ஒரு மாபெரும் பொறியியலாளனாகக் காணவேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அப்பா கொழும்பில் வேலை பார்த்தாதால் அம்மாவோடும் தங்கையோடும் தான் எனது வாழ்வு அதிகம் களிந்தது. 
 
எமது கிராமத்தில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்துபோவது அசாத்தியமானதால் விடுதி எனக்குக் கட்டாயமாகியது. அம்மாவையும் தங்கையினையும் விட்டு என்னால் இருக்கவே முடியவில்லை. ஒவ்வொரு இரவும் அழுதபடியே நான் உறங்குவது வழமையாகியது. ஏனெடா புலமைப் பரிசிலில் சித்தியடைந்தோம் என்று எண்ணத் தோன்றியது. இரவானதும், விடுதிக்கு அருகிருக்கும் ஒரு கடையில் பழைய சினிமாப்பாடல்களை ஒலிக்கவிடுவர். அந்தப்பாடல்கள் என் அம்மாவின் நினைப்பை எனக்கு அதிகரிக்கும். கத்தி அழவேண்டும் போல்;த்தோன்றும். வாழ்வு நகர்ந்தது.
 
வகுப்பறையே எனது வீட்டைப் பிரிந்த வேதனைக்குச்; சற்றுக் களிம்பு போட்டது. கற்பது எனக்கு நிறையவே பிடிக்கும். என் வகுப்பில் எனக்குப் போட்டியே இல்லையென்றாகிப்போனது. வழமைபோல் கணித வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் ஏதோ பரபரப்பு உணரப்படுகிறது. என் வாழ்வைப் புரட்டிப்போட்ட சம்பவம் நடந்து முடிந்து விட்டிருந்தது.
 
குமுதினிப் படகிற்குள் குதறப்பட்டவர்களில் எனது தாயும் தங்கையும் உள்ளடக்கம் என்ற பேரிடி என்னை வந்தடைகிறது. நான் அழவில்லை. அண்ணாந்து பார்;த்தபோது, காகம் விழுந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. எது மேல் எது கீழ் என்று தெரியவில்லை. ஒரு குமிழுக்குள் நான் மிதந்துகொண்டிருந்தேன். யார் யாரோ என்னென்னமோ சொன்னார்கள். எவரோ என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
 
எங்கள் வீட்டில் இறைச்சிக் கறிக்காகச் சட்டிக்குள் வெட்டி வைக்கப்பட்டிருந்த கோழி போன்று தங்கச்சி கிடந்தாள். அம்மாவின் கரமொன்று தோலில் தொங்கிக் கொண்டிருந்தது--எலும்பு துண்டாகி இருந்தது. கழுத்திற்குள்ளால் புழுக்கள் போன்று உடற்பாகங்கள் நெழிந்துகொண்டிருந்தன. உணர்வுகள் எனக்குள் மீண்ட மறுநாள் நான் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன். நான் காத்திருந்த சோதனை என்னால் எழுதப்படாமலே போனது. 
 
சரசரப்புக் கேட்க, இருட்டைத் துழைத்துப் பார்க்கிறேன். தீவட்டிகளோடு யாரோ வருகிறார்கள். இல்லை தீவட்டிகள் இல்லை, அவர்களது கால்களும் கைகளும் இருட்டில் ஒளிர்ந்தபடி இருக்கின்றன. எழுந்து ஒடு என மனம் உந்துகிறது. முடியவில்லை. இறப்பதற்குத் தயாராகிக் கிடக்கிறேன். வந்தவர்கள் வேடுவர்கள். இல்லை வேடுவர்கள் மனிதர்கள். இவர்கள் வேடுவதோற்றத்தில் எவரோ..
 
வேடுவர்களோடு வேடுவனாக ஒரு மாதம் இரவு பகலாகப் பயணித்த அனுபவம் உள்ளவன் என்பதால் வந்தவர்கள் வேடுவர்கள் இல்லை என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால் இவர்கள் பேசியது வேடுவர் பாசை. 
 
புல்லோடு புல்லாகக் கிடந்த ஒரு கதவினை ஒருவன் தூக்குகிறான், ஒரு நிலக்கீழ் உலகம் வெளிப்படுகிறது. சுரங்கத்தின் படிகளில் அவர்கள் பின்னால் இறங்கிச் செல்கிறேன்;. அவர்களின் ஒளிரும் உடல்கள் சுரங்கத்திற்குள் போதுமான ஒளியினை கொடுத்துக்கொண்டிருந்தன.
 
ஒரு சபை போன்ற இடமாகத் தெரிகிறது. பல ஒளிரும் உடல்கள் கூடியிருக்கின்றன. உடல்மொழியினைப் புரிந்துகொண்டு சபையில் சென்று அமர்கிறேன்.
 
எத்தனையோ கூட்டங்களிற்குச் சென்றிருக்கிறேன். கூட்டம் தொடங்கும்வரையான நேரத்தில் எப்போதும் இரைச்சல் இருக்கம். இங்கு பூரண அமைதி. இவர்களிடம் மொழி இருக்கின்றபோதும், மொழியினை இவர்கள் அரிதாகவே உபயோகிக்கின்றார்கள் என்பதை உணரமுடிகிறது. இங்கு அமைதி நிலவினும் இவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். உயர்ந்த விழிப்புணர்வு இவர்களிற்குச் சாத்தியமாவது தெரிகிறது. கூட்டம் தொடங்குவதற்கு யாரேனும் ஒருவர் வரும்வரை காத்திருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் வெளியில் இருந்து யாரும் வரவில்லை. வரவேண்டியவர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். ஒருவர் பேசத்தொடங்கினார்.
 
'போராளியினை வரவேற்கிறோம்'
'இத்தீவின் புரதான குடிகள் நாங்கள். எங்கள் உடலின் ஒளிர்விற்கும் நாகத்திற்கும் தொடர்புண்டு'.
'எங்கள் வாழ்வு வீச்சு பலபத்தாயிரம் வருடங்கள் நீட்சி மிக்கது.'
'எங்களில் எவரும் இதுவரை இறந்தில்லை. இறப்பின் வலி நாங்கள் அறியாதது'
'பிறர் வலியினை உணரும் சக்தி எங்களது. உனது வலி முற்றாகப் புரிகிறது'
'இயற்கையோடு இருப்பவர்கள் நாங்கள். இயற்கை அழிப்புக்கள் எங்களிற்குச் சோகமானது'
'போர் எங்களிற்குக் கசப்பானது. போர் மடமையின் வெளிப்பாடு'
'ஆனால் வலியின் உந்துதலைப் புரிந்துகொள்கிறோம். அனுதாபங்கள்'
'உந்தன் நோய் குணமாக்கப்பட்டுள்ளது. எழுந்து செல்'
'நீ வந்த கதவு நாளை அங்கு இருக்காது. மீள வர முயலாதே. செல்'
 
கூட்டம் கலைந்து செல்கிறது. என்னை ஒரு ஓட்டைக்குள்ளால் தள்ளிவிடுகிறார்கள். மீண்டும் காடு. இது நான்காம் நாட் காலை. இப்போது உடலில் தென்பு தெரிகிறது. பசிக்கிறது. கால்கள் ஏதோ நினைவு வந்தவை போல் நடக்கத் தொடங்குகின்றன...
 

Edited by Innumoruvan

உண்மைச் சம்பவமா இன்னுமொருவன் ?

உண்மைச் சம்பவமா இன்னுமொருவன் ?

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131008

 

இதை படித்துவிட்டு மீண்டும்  கதையை படித்து பாருங்கள் ஈசன் அண்ணா

  • 1 month later...

இறப்பினூடான சுயதேடலும் ,மறுபிறப்புக்கான காரணகாரியங்களையும் அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் . நல்ல ஒரு கதை படித்த திருப்தி . உங்கள் கதைக்குப் பாராடுக்களும் இது போலப் பல கதைகளை படைக்க வாழ்த்துகின்றேன் இன்னுமொருவன்  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.