Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசினோ சூதாட்டம் ஒரு நல்ல விளையாட்டு!! பரிந்துரை செய்யும் உயர்கல்வி அமைச்சர்!!

Featured Replies

SB-Disanatake.jpgஇலங்கையின் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கசினோ சூதாட்டத்தை சிறந்தவொரு விளையாட்டு என பரிந்துரை செய்துள்ளார்.

கசினோ சூதாட்டத்தை ஓர் மோசமான விளையாட்டாக சிலர் சித்தரிப்பதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

கசினோ சூதாட்டம் ஓர் மோசமான விளையாட்டு கிடையாது. இவ்வாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தான் கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு அமெரிக்க டொலர்களுக்கு சூதாடியதாகவும், அங்கிருந்த பெண்கள் தன்னை 140 டொலர் வைத்து ஆடுமாறு கோரியதாகவும் கூறினார். எனினும், தான் பெண்களின் தூண்டுதலை கண்டு கொள்ளாது நிதானமாக ஆடியதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் அதிகளவு பணத்தை இதற்காக செலவிடுகின்றனர் எனவும் இது நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் கசினோ சூதாட்டத்தை எதிர்க்கவில்லை எனவும், உள்நாட்டுப் பிரஜைகள் கசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதனை தேவையென்றால் தடை செய்ய முடியும் எனவும் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொழும்புத் தலைநகரில் பல நடுத்தர இளைஞர்கள் கசினோ சூத்தாட்டத்திற்கு அடிமையாக, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன், சொத்துக்களை இழந்தும், கடன் தொல்லையில் சிக்கியும் தவித்து வருகின்ற வெளியே சொல்லப்படாத பல சம்பவங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/home

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விபச்சார விடுதியையும் சட்டமாக்கி விட்டு அது நல்ல விளையாட்டு நான் அண்மையில் தாய்லாந்து போன பொழுது முயற்சித்து பார்த்தேன் சும்மா தில்லாலங்கடி ஆடின மாதிரி இருந்திச்சு என்ன 500 டாலர்ஸ் கொடுத்து try பண்ண சொன்னாங்க ஆனா நான் 150 dollars ஓட விஷயத்த முடிச்சிட்டு வந்துட்டான் எண்டு இலங்கையின் அமைச்சர் மார் சொன்னாலும் ஆச்சரியம் அல்ல :D :d

  • கருத்துக்கள உறவுகள்

SB-Disanatake.jpg

 

வேறு... அமைச்சர்மார் சொன்னாலும்.... போனால் போகுது என்று விட்டுவிடாலாம்,
உயர் கல்வி அமைச்சர் சொன்னதால், எதிர்காலச் சந்ததி... உருப்பட்ட மாதிரித்தான்.

அது ஒரு அடிமைக்குட்டி. சென்ற கார்த்திகையில் கைது செய்த யாழ்ப்பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டுமாயின் வெளியெ இருந்த திசாநாயக்கா தனக்கு அறிக்கை தர வேண்டும் என்றார் மகிந்தா. இவர் வந்த போது கேட்க தான் மகிந்த, கோத்தா சொல்வதின் படிதான் நடப்பேன், யாரரையும் வெளியே விடமுடியாது என்றுவிட்டார். 

 

ஆக மொத்தாமாக தன்னை அரசகுடும்பம் பாவிக்க தடையில்லை என்கிறார். ஒரு தடவை தன்னும், மகிந்தா தனது அறிக்கைகளில் தங்கி அல்ல பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க போவது என்றதை வெளியே சொல்ல தைரியம் இல்லாமல் அரசகுடும்பம் சொன்னல்த்தான் வேளியே போகலாம் என்றவர். இவர் உயர்கல்வி மந்திரியே அல்ல. கக்கீம் இவரைவிட சுயாதீனமக முடிவுகள் எடுப்பர். இது அஸ்வரையும் விட அடிமை மோகத்தில் தவழ்வது. 

உயர் கல்விக்கு ஒதுக்கிய நிதியில் கசினோ சூதாட்டத்தை ஆடிய உயர் கல்வியமைச்சர்!! 

[Friday, 2013-10-25 16:38:52]
thissanayakka-seithy-20131025.jpg

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை செலவு செய்தா அமெரிக்காவில் கசினோ சூதாட்டத்தை ஆடினார் என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சோசலிஸ மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கசினோ சிறந்தது. நான் விளையாடினேன் என உயர்கல்வி அமைச்சர் கூறியிருந்தாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. நாட்டின் பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான எஸ்.பி. திஸாநாயக்கவின் இந்த கருத்து மிகவும் பாரதூரமானது என்பதால் நாட்டு மக்கள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கசினோ சூதாட்டத்திற்கு சமூகத்தில் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையின் சகல மத தலைவர்கள், சிவில் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் அதனை எதிர்க்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் உயர்கல்வி அமைச்சர் கசினோ என்ற கெடுதியான சூதாட்டத்திற்கு பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார். தற்போது கசினோ அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தால் அதனை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பல்கலைக்கழக சமூகத்திற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் இப்படியான கசினோ சூதாட்ட பித்தராக இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு வழங்கும் முன்னுதாரணம் என்ன என்று நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பிச்சைக்காரப் பயலா இருப்பான் போல கிடக்கு! :o

 

ஆராவது மினக்கெட்டு, லாஸ் வெகாஸ் வரையும் போய், இரண்டு டொலருக்கு 'விளையாடுவாங்களா?

 

மனுசன் 'சிங்களத்தின்' மானத்தையே கப்பல்ல ஏத்திப் போட்டு வந்திருக்கு!

 

புத்தனின் விசுவாசிகள், சம்பிக்க, விமல், அமிலம், காரமெல்லாம் இதைச் சும்மா விடக்கூடாது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பிச்சைக்காரப் பயலா இருப்பான் போல கிடக்கு! :o

 

ஆராவது மினக்கெட்டு, லாஸ் வெகாஸ் வரையும் போய், இரண்டு டொலருக்கு 'விளையாடுவாங்களா?

 

மனுசன் 'சிங்களத்தின்' மானத்தையே கப்பல்ல ஏத்திப் போட்டு வந்திருக்கு!

 

புத்தனின் விசுவாசிகள், சம்பிக்க, விமல், அமிலம், காரமெல்லாம் இதைச் சும்மா விடக்கூடாது! :icon_idea:

 

பிச்சைக்கார.... சிங்கவனிடம், நாம் எதனையும்....

எதிர் பார்த்தால்... நாமும், நமது சந்ததியும்...... பிச்சை எடுத்தே... வாழ வேண்டும்.

கனடா, இந்தியா இல்லாத பொதுநலவாய மாநாடு மணப்பெண் இல்லாத திருமண வீடு போன்றது 

[Friday, 2013-10-25 16:39:21]
keren%20fernando-seithy-20131025.jpg

கெசினோ தொடர்பில் சில அமைச்சர்கள் புத்தியின்றி செயற்படுவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவின் செயற்பாடு அவ்வாறானதொன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார். தங்களுடைய தேவைகளுக்காக அவர்கள் அப்படி செயற்படுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

  

மக்களுக்கு நிவாரணம் வழங்காது அரசாங்கம் கெசினோவை கொண்டுவர முயற்சிக்கிறது. ஐதேக இதனை முழுமையாக எதிர்க்கிறது. ஹோட்டல் வியாபாரம் என்ற போர்வையில் கெசினோவிற்கு அனுமதியளிக்க முடியாது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கத்தின் உள்ளக மோதலை காண முடிந்தது. அந்த கூட்டத்தில் பற்றவைக்கப்பட்ட குண்டு இன்று தீப்பொறியாக மாறியுள்ளது. அதனோடு அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் வெடி வெடித்துள்ளது. இந்தியா, கனடா இல்லாத பொதுநலவாய மாநாடு மணப்பெண் அற்ற திருமண வீடு போன்றது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது என ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.