Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துத் திரைப்படப் பாடல்களும் குறிப்புகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

அவள்தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.........................

 

பாடலுக்கு நன்றி

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

ஆக்கபூர்வமான பகிர்வுக்கு நன்றி . பாதுகாக்க பட வேண்டிய கலைப் பொக்கிஷங்கள்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

  • Replies 56
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘காத்திருப்பேன் உனக்காக’
 

மலையகத்தில் வத்தேகமவில் உள்ள ஒரு தமிழருக்கு எஸ்றேற்றும் பல தொழில்களும் சொந்தமாக இருந்தன. சினிமாவைத் தன் வாழ்நாளில் பார்க்க விரும்பாத இந்தத் தந்தை, தன் தொழிலின் நிர்வாகத்தைப் புதல்வர்களுக்குக் கொடுத்தார். புதல்வர்களுக்கு சினிமாமீது தனிப்பிரியம்.

இந்தப் புதல்வர்கள் ஒரு சிங்களப் படம் தயாரிக்கலாமா? என்று எண்ணினார்கள். ஆனால், தேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றுக்கு முதலில் தமது பங்களிப்பைச் செய்யலாம் என்று பின்பு தீர்மானித்தார்கள். அதன்படி ‘காத்திருப்பேன் உனக்கா’ என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்த சகோதரர்கள்தான், எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். ஜெயராஜ் ஆகியோராவர்.

படத்துக்கான கதை தம்பி ஜெயராஜிடம் ஏற்கனவே தயாராக இருந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கலைத்துறையில் இவர்களது குருவான நவாலியூர் நா. செல்லத்துரை இம்மூலக்கதைக்கான திரைக்கதையையும், வசனங்களையும், பாடல்களையும் எழுதினார்.

இந்த மூன்று சகோதர்களின் உறவினர் துரைபாண்டியன். இவர் சினிமா உலகில் அனுபவப்பட்டிருந்தார். இயக்குநர் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம் என்றால், அவர் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தன் பெயரைப் பதிவு செய்திருக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு எஸ்.வி. சந்திரன் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது.

இளைஞர் எஸ்.வி. சந்திரன் நீண்ட காலமாகவே சிங்களப்பட உலகில் எடிட்டராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் எடிட்டரும் இவரேதான். ‘துப்பத்தாகே ஹித்த வத்தா’ என்ற சிங்களப் படத்தின்மூலம் முதன் முதலாக டைரக்டராக அறிமுகமானார். துரை பாண்டியன் இப்படத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.

உதவி டைரக்டராக மூனாஸ் தெரிவுசெய்யப்பட்டார். நிதி மேற்பார்வைப் பொறுப்பை எஸ்.வி. பாலசுப்பிரமணியம், வி. தர்மலிங்கம், பி. சுப்பையா ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

பல வருடங்களுக்கு முன் கண்டியிலிருந்து ‘செய்தி’ என்ற பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியர் நாகலிங்கம். அவர் மகன் சிவராம், நல்ல அழகான இளைஞன். இவரே இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

கொழும்பைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண்கதாநாயகியாக நடித்தார். கண்டி விஸ்வநாதராஜா நாடகங்களில் அனுபவப்பட்டவர். ஏற்கனவே ‘நிர்மலா’வில் நடித்தவர். இவருக்கும் இப்படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ரவிசெல்வராஜ் பிரதான உப பாத்திரத்தில் நடித்தார்.

ஏ.எம்.லதீப் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் இப்படத்தில் தந்தை பாத்திரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். நா.செல்லத்துரையும், தர்மலிங்கமும் கலைத் தாகமுள்ளவர்கள். இவர்கள் இருவரும் இப்படத்தில் முக்கியமான உப பாத்திரங்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மற்றும் சந்திரகுமார், மித்திரகுமார், குலேந்திரன், பாலகிருஷ்ண், கிருஷ்ணராஜா, ருக்மணிதேவி, ஸ்ரீதேவி, கிருஷ்ணகுமாரி, சந்திரா, ஜெயதேவி, நிர்மலா, ரத்னகலா, வசந்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

இது எம். முத்துசாமி இசை அமைத்த 5வது தமிழ்ப்படம். ஆரம்பத்தில் திலகநாயகம் போல் பின்னணி பாடினார். அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவர் பாடிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன் பாடினார். சுஜாதா அத்தநாயக்காவும் பாடினார்.

ஜெய்ந்திரா மூவிஸ் ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்தின் ஆரம்ப விழா 6.9.76இல் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஆரம்பப் படப்பிடிப்பு அங்கேயே தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து கொழும்பு, கண்டி, தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் நடைபெற்றது.

9மாதங்களின் பின் படம் சம்பூர்ணமாகியது. 24.06.77இல் இலங்கையின் பல நகரங்களிலும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ராஜாவை, ராஜி காதலிக்கிறாள். ஆனால், ராஜாவோ அத்தை மகள் சாந்தியைக் காதலிக்கிறான். ராஜியின் சகோதரனான கண்ணன் ராஜாவின் தங்கையான வனிதாவைக் காதலிக்கிறான்.

ராஜா, சாந்தா திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், வனிதாவைக் கெடுத்துவிட்டுத் தனது தங்கை ராஜியின் கழுத்தில் தாலி ஏறினால் வனிதாவுக்கு வாழ்வளிப்பேன் என்கிறான்.

தங்கைக்கு வாழ்வு கொடுப்பதா? அல்லது சாந்தாவை மணந்து வாழ்வதா? என்ற சிக்கலில் விழுகிறான். முடிவில் தன் தங்கைக்காகக் காதலியின் சம்மதத்துடன் ராஜியைத் திருமணம் செய்ய முன்வருகிறான் ராஜா. இதுதான் ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். எல்லாம் சரிதான் கதையின் முடிவுதான் சிறந்ததாக அமையவில்லை.

1977ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ‘கீதா’ என்ற சினிமா பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சனாவார். இவருக்கு உதவியாக ஜெயசீலனும் அதே பாத்திரிகையில் இருந்தார். இந்தக் ‘கீதா’ இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்திருக்கிறது. மற்ற தேசிய பத்திரிகை செய்யாத அளவுக்கு அதிகமாகவே உதவியிருக்கிறது.

இந்தக் ‘கீதா’வும் அப்பொழுது ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்துக்கு விமர்சனம் எழுதியது.

‘… ஒருகாதல் கதை, கருத்துள்ள குடும்பக் கதையாகவும் அமையும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. வசனத்தின் சிறப்புகள் படம் முழுவதும் பரவி இருந்தாலும் முக்கிய நடிகர்களின் வாயிலிருந்து வெளிப்படும்போது உயிர்ப்பு பெறுகிறது…. கதாநாயகன் சிவராமின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. விஸ்வநாத ராஜாவின் நடிப்பு அருமை. செல்வராஜின் துடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. கீதாஞ்சலி காதல் காட்சிகளைவிட, சோகக் காட்சிகளில் எடுபடுகிறார். ஸ்ரீதேவி வசனங்களை அழுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கிருஷ்ணகுமாரி கோபப்படும்பொழுது சிறப்பாக இருக்கிறது. செல்லத்துரை, லதீப், தர்மலிங்கம் ஆகியோர் தந்தைகளுக்குரிய தாக்கமான நடிப்பினைச் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். சந்திராவின் தாய்மை நடிப்பிலும் தரம் இருக்கிறது. ருக்மணிதேவி, தான் ஒரு பழம்பெரும் நடிகை என்கதை நிரூபிக்கிறார்.

ஆர். முத்துசாமி பாடல்களுக்கு ஏற்றவகையில் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ். தேவேந்திரா தனது தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். எடிட்டராகவும் டைரக்டராகவும் கடமையாற்றி சிறப்பான ஒரு படத்தை நமக்கு அளித்திருக்கிறார் எஸ்.வி. சந்திரன்.

இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டுமென்ற இலட்சிய வேட்கையில் பல இலட்சங்களை வாரி இறைத்து ஒரு படத்தைத் தயாரித்து இருக்கின்றனர். ஜெயேந்திரா மூவீஸார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு ‘சப்போட்’ பண்ணி விமர்சனம் எழுதியது.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  நினைவெல்லாம் போதுமா..?

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

https://www.youtube.com/watch?v=m6K7MIFxUdQ

 

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கு படம் பார்த்தேன். என்னை எமது பழைய வாழ்க்கைக்கு கொண்டு சென்று விட்டது. நல்ல பாடல்கள்.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே

இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா.....

நல்ல திரி. பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பேன் உனக்காக’..அருமை,,நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணங்களாலே இறைவன் தானே எனும் பாடலை பாடியவர் முத்தழகு  
 
  • தொடங்கியவர்

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  ஆரம்பம் ஆனதெங்கே?

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

http://www.youtube.com/watch?v=5-S-hsu9os8

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  இன்று நமக்கொரு உதயம்!

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

http://www.youtube.com/watch?v=xzkfj53kpqQ

காத்திருப்பேன் உனக்காக’..அருமை,,நன்றி

 

வருகைக்கு நன்றி!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணங்களாலே இறைவன் தானே எனும் பாடலை பாடியவர் முத்தழகு  

இனிமையான பாடல். பாடகர் முத்தழகுவின் குரல் அருமையானது. கவி வரிகளும் எனக்கு நன்கு பிடித்துள்ளது. இசையமைப்பும் நன்றாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.