Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசைப்ரியாவின் மரணத்தை எண்ணி கண்ணீர் விடுகிறேன் --கலைஞர் அறிக்கை

காலக் கொடுமை .....

 

-FB-

9நாடுகளின் துணையோடு இந்தியா தலைமையில் ஈழம் அழியும் போது சொக்கதங்கம் சோனியா என்றும் மத்தியஅரசின் முடிவு தான் என் முடிவு கூறியதை கருணாநிதி மறந்துவிடலாம் மானமுள்ள தமிழன் யாரும் மறக்கமாட்டான்.இசைப்பிரியா கொலைவீடியோகாட்சியை இப்பொழுது தான் வேதனை என்றுகூறும்.கருணாநிதியே இரட்டை நாக்கு வசனம் இரட்டை வேசத்தை முதலில் கலைத்தெரி

 

சரவணன் மதிமுக

எம்மக்களின் அவலங்களை சேனல் 4 ஆவணப்படமாக தயாரிக்கிறது. அவர்கள் நிதி உதவி செய்யுமாறு கேட்ட போது இம்முறை பெரிதாக எம்மக்கள் பணம் வழங்கியது போல் தெரியவில்லை.

 

அடுத்த முறையும் வேறு ஆதாரங்களுடன் ஆவணப்படம் தயாரிக்க முற்பட்டு நிதி உதவி தேவை என அவர்கள் கேட்டால் நிதி உதவி செய்யும் பொருட்டு புலம்பெயர் தமிழர்கள் சிறு நிதியை இதற்காக சேர்த்து வையுங்கள். யாழ்கள உறவுகள் யாழ் நிர்வாகத்திற்கு அனுப்பி யாழ் மூலம் அவர்களுக்கு அனுப்பலாம். நிச்சயமாக நானும் சேர்க்க முயற்சிப்பேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96443&category=TamilNews&language=tamil

வெளியில் நடந்தேற வேண்டியவை நடக்காவிட்டல் பொது ஊடகங்கள் அது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

 

யாழில் நடக்க வேண்டியவை நடந்தேறாதபோது நமது கடமை குரல் எழுப்புவது.

அப்ப பொது ஊடகம் ஒன்று தொடங்கிட்டா போச்சு    :D  :D

Isaipriya is one of the clear examples of war crimes perpetrated by the occupying Sri Lankan state

 

1004698_10151770636183004_711312374_n.jp

 

CTYA

(facebook)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியாவின் கொலைக்கு உலகம் எல்லாம்மிருந்து கண்டனங்கள் வந்து கொண்டு இருக்க வழமை போல சம்மந்தனும் விக்கியும் மௌனம் கேட்டால் அடிபொடிகள் சொல்லுவினம் அரசியல் சாணக்கியம் என்று

அனந்தி அவர்களின் அறிக்கை எதுவும் வந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயலும் அறிக்கை விடேல்ல.....எதையுமே சூட்டோட சூடா செய்யணும் சம்மந்தன் அனந்திக்கு மிரட்டி இருப்பார்.......

இனி சுண்டலின் கடுமையான கண்டனங்களை பார்த்து அறிக்கை விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயலும் அறிக்கை விடேல்ல.....எதையுமே சூட்டோட சூடா செய்யணும் சம்மந்தன் அனந்திக்கு மிரட்டி இருப்பார்.......

இனி சுண்டலின் கடுமையான கண்டனங்களை பார்த்து அறிக்கை விடுவார்கள்

தேர்தலில் வெற்றி பெற்று வேலும் கிரீடம் மாலையுமாய் இருந்த ஆள் எங்ஙை இருந்து கொறட்டை விடுறாறோ :icon_mrgreen:  றோறோய் கட்டளைபகுதியில் இருந்து ஓடர் வரவில்லையாக்கும் வாயை அசைக்க சொல்லி இப்படியாணவர்கள் எப்படித்தான் வடக்கிலிருந்து ராணுவத்தை விலக்குவன் மாவீரர்களுக்கு தூபி அமைப்பன் என்றெல்லாம் வீரவசனங்கள் இப்ப எங்ஙை போச்சப்பு பதிலே வராது. ஒரு கிழமையாகப்போகுது ஒளி நாடா வந்து. ஒன்றும் உருப்படியா செய்யாமல் ஜரோப்பா விசிட் வேணாமப்பு இப்பதைக்கு  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம்:: 
இணையத்தில் யூட்யூப்-இல் உள்ள போர் காட்சிகளை, 2009 முதல் பதிவேற்றம் செய்ததை அந்த நிறுவனம் நீக்கிக் கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் “இனப்படுகொலை -போர்க்குற்ற” ஆதாரம் என்பதால் இலங்கை அரசின் கோரிக்கைக்கு இந்த நிறுவனங்கள் விலை போயிருக்கலாம்.. 

ஆகவே தோழர்களே, வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக நீங்கள் அறிந்த அல்லது தேடி எடுக்கும் காணொளிகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து , பிற இணையங்களில் பதிவேற்றம் செய்யவும்... 

யாரேனும் ஒரு குழு இதற்காக ஒரு இணையத்தினை உடனடியாக உருவாக்குவதும், அனைத்தினையும் தொகுப்பதும் அவசியம்.. இணைய போராளிகள் இதற்கு உடனடியாக நடவெடிக்கை எடுப்பது அவசியம்... முகநூலில் செலவழிக்கும் நேரத்தினை நம் இனத்தின் ஆவணத்தினை பாதுகாக்க செலவழிப்போம்.
இதற்கான ஒருக் குழுவினை ஏற்பாடு செய்யுங்கள்... பல நூறு பேர் சேர்ந்தே இதை காக்க முடியும்.... ஓரிருவரால் செய்து முடிக்க முடியாது.... 

இன்றே துவங்குங்கள்.. யாரேனும் ஒரு குழு இதற்கு பொறுப்பேற்க முடியுமா?.. இயக்க- கட்சிகளை கடந்து பணியாற்றுவது அவசியம் என நினைக்கிறேன்.. செய்வோமா?...

 

-thirumurugan gandhi

இசைப்பிரியாவின் காணொளி வெளியான பின் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கூறியவை..

 

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்


ஒரு நிமிடத்துக்கு முன் தமிழ்நாட்டில் திடீரென முளைத்த பெண்ணியவாதிகள் கவனத்திற்கு..! 

 

உங்களை போன்ற போலி பெண்ணியவாதிகளை விட, தன் தாயையும் , சகோதரியையும், மனைவியையும், மகளையும் கட்டுப்படுத்தியும், மதித்தும், காக்கும் சராசரி ஆண் (உங்கள் பார்வையில் ஆணாதிக்க வெறியன் ) எவ்வளவோ மேல்..! ஒரு சக பெண்ணுக்காக, சுயமாக சிந்தித்து போராட வக்கில்லாதவர்கள் தயவுசெய்து மைக்கை பிடித்துக்கொண்டு மீடியா முன்பு வாயாட வந்துவிடாதீர்கள்.. தலை நிமிர்த்தவே தகுதி அற்றவர் நீங்கள்.!!! -“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ” வல்வை அகலினியன்

 

 

 

இசைப்பிரியா அக்காவின் வாழ்க்கை வரலாறு....!

 

 v306.jpg

 

 

இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா. இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா…? சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ”இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..

இலட்சியப்போராளி - Iladsiyaporali

facebook

 

நன்றிகள் பையா நன்றிகள்!

அவசரம்:: 

இணையத்தில் யூட்யூப்-இல் உள்ள போர் காட்சிகளை, 2009 முதல் பதிவேற்றம் செய்ததை அந்த நிறுவனம் நீக்கிக் கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் “இனப்படுகொலை -போர்க்குற்ற” ஆதாரம் என்பதால் இலங்கை அரசின் கோரிக்கைக்கு இந்த நிறுவனங்கள் விலை போயிருக்கலாம்.. 

ஆகவே தோழர்களே, வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக நீங்கள் அறிந்த அல்லது தேடி எடுக்கும் காணொளிகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து , பிற இணையங்களில் பதிவேற்றம் செய்யவும்... 

யாரேனும் ஒரு குழு இதற்காக ஒரு இணையத்தினை உடனடியாக உருவாக்குவதும், அனைத்தினையும் தொகுப்பதும் அவசியம்.. இணைய போராளிகள் இதற்கு உடனடியாக நடவெடிக்கை எடுப்பது அவசியம்... முகநூலில் செலவழிக்கும் நேரத்தினை நம் இனத்தின் ஆவணத்தினை பாதுகாக்க செலவழிப்போம்.

இதற்கான ஒருக் குழுவினை ஏற்பாடு செய்யுங்கள்... பல நூறு பேர் சேர்ந்தே இதை காக்க முடியும்.... ஓரிருவரால் செய்து முடிக்க முடியாது.... 

இன்றே துவங்குங்கள்.. யாரேனும் ஒரு குழு இதற்கு பொறுப்பேற்க முடியுமா?.. இயக்க- கட்சிகளை கடந்து பணியாற்றுவது அவசியம் என நினைக்கிறேன்.. செய்வோமா?...

 

-thirumurugan gandhi

 

சிலவேளை பதிவு செய்யப்படாத youtube account இல் உள்ள வீடியோக்கள் குறிப்பிட்ட காலத்தின் பின் அகற்றப்படுகிறதோ தெரியவில்லை. channel 4 இன் youtube account இலிருந்து அகற்றப்படாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஏனைய செய்திகள், காணொளிகளுக்கான தமிழாக்கங்கள் அழிக்கப்படலாம். எனவே அனைத்தையும் தரவிறக்கி சேமித்து வைப்பது அவசியமானது.

 

தமிழ் வாணி நமக்கு கிடைத்த மிக பெரிய சாட்சி.

 

1459778_249056118580736_435397829_n.jpg


கொலைவெறி கொண்ட சிங்களவனின் இன அழிப்பை நேரில் பார்த்தவர் "நோ பயர் சோன்"(no fire zone) போரற்ற பாதுகாப்பான பகுதி' ஆவணப்படத்தில் இவரது சாட்சியும் வக்குமூலங்கலும் இடம்பெற்று உள்ளது, இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை அந்தஸ்தை பெற்றவர், மருத்துவ துறையில் பட்டமும் பெற்றவர்,வன்னியில் கடைசி நேர இன அழிப்பு போரில் மாட்டிக்கொண்ட இவர் அங்கு தன்னால் முடிந்த வரை போராடி பல உயிர்களை காப்பற்றி இருக்கிறார்,அமைப்புகளை சார்ந்த பலர் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஓடிக்கொண்டு இருந்தபோது இவர் தனது உயிரை பற்றி கவலைகொள்ளவில்லை தொடர்ச்சியான குண்டு மழைகளில் காயம்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ உதவிகளை செய்தும் இருக்குறார்,முடிவில் வதை முகாம்களில் சிறைப்பட்டு பின்பு எப்படியோ நாய்களின் பிடியில் இருந்து தப்பி மீண்டும் இங்கிலாந்து வந்தடைந்தார், தமிழ் வாணியின் இந்த சாட்சியம்கள் ஒரு சாதாரணமான பெண்ணின் சாட்சி அல்ல அழிக்கபட்ட ஒரு தேசிய இனத்தின் அவலக்குரல்,இந்த குரல் ஒரு நாள் அந்த மக்களின் நீதியை நிலைநிறுத்தும் இது சத்தியம் .....! தமிழ் வாணி அவர்களுக்கு, எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களை தமிழினத்தில் பெற்றதற்கு பெருமை கொள்கிறேன். உங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். உங்களின் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.....!

ரதீஷ் தமிழீழம்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை பதிவு செய்யப்படாத youtube account இல் உள்ள வீடியோக்கள் குறிப்பிட்ட காலத்தின் பின் அகற்றப்படுகிறதோ தெரியவில்லை. channel 4 இன் youtube account இலிருந்து அகற்றப்படாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஏனைய செய்திகள், காணொளிகளுக்கான தமிழாக்கங்கள் அழிக்கப்படலாம். எனவே அனைத்தையும் தரவிறக்கி சேமித்து வைப்பது அவசியமானது.

 

 

நன்றி துளசி

 

எது எப்படியாகினும் நமக்கான Youtube போல் ஒரு ஊடகம் வேண்டும் என்பதையே இது காட்டி நிற்கின்றது. அதற்கான வேலைகளில் இறங்குவது முக்கியம் என நினைக்கின்றேன். 

 

முடிந்தவர்கள் கைகொடுக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம்:: 

இணையத்தில் யூட்யூப்-இல் உள்ள போர் காட்சிகளை, 2009 முதல் பதிவேற்றம் செய்ததை அந்த நிறுவனம் நீக்கிக் கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் “இனப்படுகொலை -போர்க்குற்ற” ஆதாரம் என்பதால் இலங்கை அரசின் கோரிக்கைக்கு இந்த நிறுவனங்கள் விலை போயிருக்கலாம்.. 

ஆகவே தோழர்களே, வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக நீங்கள் அறிந்த அல்லது தேடி எடுக்கும் காணொளிகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து , பிற இணையங்களில் பதிவேற்றம் செய்யவும்... 

யாரேனும் ஒரு குழு இதற்காக ஒரு இணையத்தினை உடனடியாக உருவாக்குவதும், அனைத்தினையும் தொகுப்பதும் அவசியம்.. இணைய போராளிகள் இதற்கு உடனடியாக நடவெடிக்கை எடுப்பது அவசியம்... முகநூலில் செலவழிக்கும் நேரத்தினை நம் இனத்தின் ஆவணத்தினை பாதுகாக்க செலவழிப்போம்.

இதற்கான ஒருக் குழுவினை ஏற்பாடு செய்யுங்கள்... பல நூறு பேர் சேர்ந்தே இதை காக்க முடியும்.... ஓரிருவரால் செய்து முடிக்க முடியாது.... 

இன்றே துவங்குங்கள்.. யாரேனும் ஒரு குழு இதற்கு பொறுப்பேற்க முடியுமா?.. இயக்க- கட்சிகளை கடந்து பணியாற்றுவது அவசியம் என நினைக்கிறேன்.. செய்வோமா?...

 

-thirumurugan gandhi

என்னால் ஆனதைச் செய்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளை இலங்கை அரச படை மிக கொடூரமாக கற்பழித்து படுகொலை செய்தது என இந்தியாவின் தெலுங்கு செய்திச் சனல் ஒன்று வீடியோ செய்தி பிரசுரித்து உள்ளது.

http://www.youtube.com/watch?v=tLJP10QSWOM#t=69

 

 

 

http://thainaadu.com/read.php?nid=1383628557#.UnjB3hBrrE1

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளை இலங்கை அரச படை மிக கொடூரமாக கற்பழித்து படுகொலை செய்தது என இந்தியாவின் தெலுங்கு செய்திச் சனல் ஒன்று வீடியோ செய்தி பிரசுரித்து உள்ளது.

http://www.youtube.com/watch?v=tLJP10QSWOM#t=69

 

 

 

http://thainaadu.com/read.php?nid=1383628557#.UnjB3hBrrE1

 

இசைப்பிரியாவை தலைவருடைய மகள் என்று கூறியுள்ளார்களா? தவறான தகவல். :(

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்துக்கும் கருணாநிதிக்கும் நெத்தியடி .......... நன்றி வைக்கோ ஜயா

Edited by பையன்26

இதை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காதீர்கள்.

*இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அரசாங்க தரப்பு மேற்கொண்ட யுத்தக்குற்றங்களை வெளிப்படுத்தும் நோ பயர் சோன் காணொளி, பொதுநலவாய நாடுகள் அமைப்பை கவலையடைய வைத்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உக்கு, இன்று தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

செனல் 4 தயாரித்த நோபயர் சோன் காணொலியை தாம் தற்போதே பார்வையிட்டதாகவும், அதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் எந்த அளவு கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

1451454_417339468394497_2020182453_n.jpg

 

(facebook)

இலங்கை கொலைகளில் உடந்தையாக நடந்த ஐ.நா.வின் அதிகாரி விஜய் நம்பியாரின் திருதாளத்தை இங்கிலாந்தும், பொதுநலவாய அதிகாரி கமேஸ்சர்மாவின் திருகுதாளத்தை கனடா வும் வெளிப்படையாக கூறியிருந்தன. ஒதுக்கொண்டாரா மன்மோகன் சிங்?. முசோலினி அம்மா ஒத்துக்கொண்டாரா?

 

சிதம்ப்ரம் கடந்த மூன்று ஆண்டுகளும் தான் கோமாவில் இருந்தது போல் நடிக்க வைகோ இடம் கொடுக்கவில்லை. சிதம்பரம் போர் முடிய "பிரபாகரன் எங்கள் சொல்லைக் கேட்டிருந்தால் வடக்கு-கிழக்கின் முடிசூடா மன்னனாக" இருந்த்திருக்க முடியும் என்றார். இரண்டு ஆண்டுகளாக கோத்த மரணசான்றிதல் கொடுக்காமல் ஏமாற்றிய போது  பிரபாகரன் இறந்ததற்க்கான விளக்கம் இலங்கை அரசால் அளிக்கப்பட்டுவிடத்தாக கூறினார். என்ன விளக்கம் கோத்தா கொடுத்து தான் பிரபாகரனின் இறப்பை நம்பினார் என்றதை சிதம்பரம் வெளியில் சொன்னாரா? இசைபிரியாவின் முடிவு போன்றத்தால் எங்களால் மரண சான்றிதள் தரமுடியாது என்றாரா? அவர் மூன்று வருடத்தில் ஒரு நாளும் கோமாவில் இருக்கவில்லை.

 

கருணாநிதியுடம் பேசிய பின்னர் இரண்டு தில்லு முல்லு மன்னர்களும் களவு செய்கிறார்கள் என்ற்தை விளங்க தமிழ்நாட்டவர் அரசியல் குழந்தைகள் என்று நினைக்கிறார்கள். தேர்தல் வந்தால் இப்படித்தான். ஆனால் வைகோ பொன்ற்வர்கள் இவர்கள் தமிழ் நாட்டவரை அவ்வளவு எளிதில் ஏமாற்ற விட்டுவிடப் போவத்திலை. 2014 லிலும் இன்னொரு 2011 தேர்தலேதான் வருகிறது என்பதை இருவரும் ஞாபகத்தில் வைத்திருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்துள்ள இசைப்பிரியாவின் காணொளி!! photo.pngvideo.png

[Wednesday, 2013-11-06 10:22:45]
isaipriya-seithy-1-20131106-150.jpg

ஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது இசைப்பிரியாவின் வீடியோ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, இப்போது இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. மனதை கனக்கச் செய்யும் அந்தக் காட்சியில்... சேறு நிரம்பிய ஒரு வயல்வெளியில் இசைப்பிரியா வீழ்ந்து கிடக்கிறார். அவரது உடல் நிர்வாணமாக்கப்பட்டுள்ளது. அருகில் இலங்கை இராணுவ வீரர்கள் நிற்கின்றனர். இன்னொரு இராணுவ வீரர் கையில் ஒரு வெள்ளைத் துணியுடன் வருகிறார். அந்தத் துணியை இசைப்பிரியாவின் உடலின் போர்த்தி, அவரை அழைத்துச் செல்கின்றனர். "இவர்தான் பிரபாகரனின் மகள்" என்று ஒரு இராணுவ வீரர் சொல்கிறார்.

  

"அது நான் இல்லை" என்கிறார் இசைப்பிரியா. வெறும் மூன்று வார்த்தைகள்தான். அதை சொல்லும்போது இசைப்பிரியாவின் குரலை கவனியுங்கள்... சொல்ல முடியாத சோகம் மனதை கவ்விக்கொள்ளும். ஒரு மாபெரும் வீரப் போராட்டம் வீழ்ந்து போனதையும், எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானத்தையும், கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் அச்சத்தையும், துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்.... அந்தக் குரலில் உணரலாம். அது இசைப்பிரியாவின் குரல் மட்டும் அல்ல. அந்தக் காட்சியின் பின்னணியில் குண்டுச் சத்தங்கள் இடைவிடாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். அவற்றில் பல்லாயிரம் இசைப்பிரியாக்களின் உயிர் ஓலங்கள் உறைந்திருக்கின்றன. இசைப்பிரியா, அவர்களின் பிரதிநிதி.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பணிபுரிந்த இசைப்பிரியா கொல்லப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தி மூடிவைக்கப்பட்ட படத்தை ஏற்கெனவே சனல் 4 வெளியிட்டு இருந்தது. அந்த வெள்ளைத் துணிக்குப் பின்னே மறைந்திருந்த கதைதான் இப்போதையை வீடியோவில் உள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், இசைப்பிரியாவின் வீடியோ புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது.

 

isaipriya-seithy-1-20131106-853.jpg

இலங்கை அரசோ வழக்கம்போல, "அது போலியான வீடியோ" என்று புறங்கையால் மறுத்துள்ளது. அது மட்டுமல்ல... இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, "இந்தப் பொய்யான வீடியோவை மட்டும் காரணமாகக் கொண்டு, கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை இந்திய அரசு பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனெனில் தமிழ்நாடு மட்டுமே இந்தியா அல்ல" என்று கூறியிருக்கிறார்.

மனித உரிமை என்ற அம்சத்தில் இந்த வீடியோவை அணுகும் ஒருசில மேற்குலக நாடுகள், ஒருவேளை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கலாம். இந்த வீடியோவுக்கு முன்பே காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா அரசு அறிவித்து, அதற்கு இலங்கையின் போர்க்குற்றத்தையே காரணமாகவும் கூறியுள்ளது. வேறு எந்த நாடும் இதுவரை அப்படி அறிவிக்கவில்லை. இந்த சமயத்தில் கடந்த ஆண்டு சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப் படத்தை நினைவில் கொண்டுவர வேண்டும்.

அப்போது வெளியிடப்பட்ட பாலச்சந்திரன் புகைப்படங்களால் தமிழகத்தில் மிகப் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. கட்டுக்கடங்காத அந்தப் போராட்டம் மாநிலம் தழுவியதாகவும், அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. இறுதியில்... ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையும், மைய நோக்கமும், அமைப்பு பலமும் இல்லாமல் மாணவர்களின் எதிர்ப்பு அரசியல் சிதறிப்போனது என்றாலும், அந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அரசியல் படுத்தியது.

அதுபோன்ற பெருந்திரள் மாணவர் போராட்டத்துக்கான எழுச்சி இப்போது பெரிய அளவில் தென்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க... அத்தகைய எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதில் மாநில அரசு முனைப்போடு இருக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிரடியாக முடக்கப்படுகின்றன. அதில் ஈடுபடுவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.

 

isaipriya-seithy-2-20131106-302.jpg

இசைப்பிரியாவின் இந்த வீடியோப் பதிவு நம்மை நிலைகுலைய வைக்கிறது. இதுபோன்றுதானே ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் கோரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்? இதுபோன்றுதானே தமிழ் மக்கள் உயிர் வதையோடு உடல் சிதறி செத்திருப்பார்கள்? எந்த மண்ணில் காலூன்றி விடுதலைக் கனவுடன் போரிட்டார்களோ... அதே மண்ணில் எதிரிகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அவலத்திலும் அவலம்.

நான் இசைப்பிரியா

ஓயாத கடலின் அலைகள்

இடைவிடாது என்னுடலில் மோதியபடி

மடிந்து சரிகின்ற வேளையில்

ஆழமாய் வேர்ப் பரப்பி

விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல

என்னை இழுத்துச் செல்கிறாய்

என் காலடியிலிருந்து

ஒழுகி வழியும் நீர்த்துளிகள்

உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய்

வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும்.

அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும்

மிருகத்தின் வெறிகொண்டு

என்னை வல்லுறவு செய்கின்றாய்

சதையை ஊடுருவிய உன்னால்

என் நிலத்தின் நிணநீர் ஓடும்

எலும்புகளை என்ன செய்ய இயலும்?

என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு

அதன் அடியிலிருக்கும்

நெருப்பின் சூடு தகிக்கவில்லையா?

நீ ஏந்திய இரும்புக் கருவியும்

பாய்ச்சிய உடற்குறியும்

இனி எழுச்சியின் அமிலத்தில்

கரைந்தே போகும்

என் இரத்தத்தில் பூத்திருக்கும்

செங்காந்தள் மலர்களே

என் நிலமெல்லாம் செழித்திருக்கும்

வெகுகாலமில்லை வெகுதூரமுமில்லை.

- சுகிர்தராணி

 

 

http://seithy.com/breifNews.php?newsID=96530&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்
a0j9.jpg
  • கருத்துக்கள உறவுகள்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89061

 

இந்த இணைப்பிலே உள்ள செய்தியைத் தொடரும் பின்னூட்டங்களையும் பார்ப்போமே..

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது! நியாயப்படுத்துகிறார் கருணா.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.