Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க்கவி அவர்களின் முகநூல் ஆதங்கம்....அரசியலில் பேச ஆயிரம் விசயமிருக்க, இசைப்பிரியாவை ஏன் மீண்டும் மீண்டும்.கொடுமைப்படுத்துகிறீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்வரும் கருத்தை சமூகவலைத்தளமான முகநூலில் தமிழ்க்கவி அவர்கள் பகிர்ந்துள்ளார். இக்கருத்தானது இசைப்பிரியா பற்றி பொது விவாதத்துக்குரிய கருத்தாகவே எழுதியுள்ளார். எனவே இங்கு இதனை பதிகிறேன்.

இக்கருத்தாடலில் ஏதும் நிர்வாகத்திற்கு சங்கடங்கள் இருப்பின் இத்தலைப்பை நீக்கலாம் என்பதனையும் அறியத்தருகிறேன்.

அரசியலில் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க ஏன் இசைப்பிரியாவை என கேள்வி கேட்டுள்ள தமிழ்க்கவி அவர்களும் இசைப்பிரியா பணியாற்றி தொலைக்காட்சி ஊடகம் முதல் அனைத்திலும் பங்கெடுத்து பணியாற்றிய ஒருவர். இந்தவகையில் இவரது இத்தகைய ஆதங்கள் சரியானதா ? அல்லது ? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

 

தமிழ்க்கவி அவர்களின் முகநூல் கருத்து வருமாறு :-

Thamayanthy Ks (Thamilkavi)

ஒருபெண் ஒருதடவை பலரால் அல்லது சிலரால் கற்பழிக்கப்படுகிறாள். பின் அவள் தினந்தோறும் பத்திரிகைக்காரர்களாலும் மேடைப்பேச்சாளர்களாலும்.தினசரி கற்பழிக்கப்படுகிறாள். அவளைப் பெற்றவர்களும்.சகோதர சகோதரிகளும்.பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தால் வெளியே தலைகாட்டமுடியாமல்....அந்தப்பெண் உயிருடன் இருந்திருந்தாலும் தானாகவே தற்கொலை செய்யுமளவுக்குசமுதாயம் அவளைத் தள்ளிவிடும். பாவம் இசைப்பிரியா...அரசியலில் பேச ஆயிரம் விசயமிருக்க, இசைப்பிரியாவை ஏன் மீண்டும் மீண்டும்.கொடுமைப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஆயிரம் நியாயம் சொல்லுங்கள் ஒரு பெண்ணியலாளராக என்னால் இதை ஏற்கவே முடியவில்லை.பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் பெண்ணை பெயர்சுட்டியோ ஊர் விபரங்கள் கூறியோ இனங்காட்டலாகாது என்ற பத்திரிகைத் தர்மம் எங்கே போயிற்று .இசைப்பிரியா விடயத்தில் உலகம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறது.
 
 
 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

Thamayanthy Ks (Thamilkavi)

ஒருபெண் ஒருதடவை பலரால் அல்லது சிலரால் கற்பழிக்கப்படுகிறாள். பின் அவள் தினந்தோறும் பத்திரிகைக்காரர்களாலும் மேடைப்பேச்சாளர்களாலும்.தினசரி கற்பழிக்கப்படுகிறாள். அவளைப் பெற்றவர்களும்.சகோதர சகோதரிகளும்.பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தால் வெளியே தலைகாட்டமுடியாமல்....அந்தப்பெண் உயிருடன் இருந்திருந்தாலும் தானாகவே தற்கொலை செய்யுமளவுக்குசமுதாயம் அவளைத் தள்ளிவிடும். பாவம் இசைப்பிரியா...அரசியலில் பேச ஆயிரம் விசயமிருக்க, இசைப்பிரியாவை ஏன் மீண்டும் மீண்டும்.கொடுமைப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஆயிரம் நியாயம் சொல்லுங்கள் ஒரு பெண்ணியலாளராக என்னால் இதை ஏற்கவே முடியவில்லை.பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் பெண்ணை பெயர்சுட்டியோ ஊர் விபரங்கள் கூறியோ இனங்காட்டலாகாது என்ற பத்திரிகைத் தர்மம் எங்கே போயிற்று .இசைப்பிரியா விடயத்தில் உலகம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறது.

 

 

நடந்தது நடந்து போச்சு சட்டுபுட்டுண்ணு அடுத்த வேலைய பாருங்க... இதை தானே சொல்ல வாருகிறார் தமிழ்கவி. 

 

இதை ஒரு பெண் எழுதியுள்ளார் என்பதை நினைத்து கொஞ்சம் அவமானப்பட வேண்டும். இதற்குள் பெண்ணியம் வேறு பேசுகிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு நியாயம் கிடைக்கவிடாமல் தடுப்பதற்கு பெயர் பெண்ணியமா? 

இவரின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் இறந்த எவரை பற்றியும் நாம் பேசவே கூடாது. அது அவர்களை (இறந்தவர்களை) நாம் அவமதிக்கும் செயலாகும். 

 

எத்தனையோ ஆண்களை நிர்வானமாக்கி சுட்டுக்கொன்றார்கள். அவர்களிற்கு "ஆணியம்" தடை போட்டதா? இங்கு இசைப்பிரியா வெறும் பெண்ணல்ல. ஒரு விடுதலைப்போராளி. போராளிகளில் ஆண்/பெண் பாகுபாடு இருக்கவில்லை. 

 

இனிவரும் காலங்களில் எந்த ஒரு பெண்கள் மீதான வன்முறையும் நீதிமன்றம் செல்லகூடாது. அது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை உலகத்திற்கு அடையாளம் காட்டிவிடும். பின்னர் அந்த பெண் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியாது. இது தானே அவர் வாதம்? சமூகத்திற்கு பயந்து வாழ வேண்டும். இதற்கு பெயர் தான் பெண் அடிமை தனம்.  இல்லையா? 

 

டெல்லியில் நடந்தால் ஊடகங்களின் குரலிற்காக பெண்ணியம் போர் தொடுக்கும். அதுவே ஈழத்தில் நடந்தால் ஊடகங்கள் அவளை கொல்கிறார்கள். 

 

இவரின் பிள்ளைக்கு இந்த கொடுமை நேர்ந்தால் ஊடகங்கள் மௌனமாக இருப்பதை ஏற்றுக்கொள்வாரா? 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி உங்களது கருத்தே எனதும் கூட. இசைப்பிரியா பற்றி எதையும் பேசாதீர்கள் எனும் தொனிப்படவே தமிழ்க்கவியின் கருத்து அமைந்துள்ளது. இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமை ஒவ்வொரு ஈழப்பெண்ணுக்கும் நடந்த கொடுமை இந்த அநீதியை உலகம் கேட்கிறதோ இல்லையே இசைப்பிரியாவோடு பணியாற்றிய ஒருவரே இப்ப எழுதியது கவலை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி உங்களது கருத்தே எனதும் கூட. இசைப்பிரியா பற்றி எதையும் பேசாதீர்கள் எனும் தொனிப்படவே தமிழ்க்கவியின் கருத்து அமைந்துள்ளது. இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமை ஒவ்வொரு ஈழப்பெண்ணுக்கும் நடந்த கொடுமை இந்த அநீதியை உலகம் கேட்கிறதோ இல்லையே இசைப்பிரியாவோடு பணியாற்றிய ஒருவரே இப்ப எழுதியது கவலை தருகிறது.

 

உண்மை தான். நான் எழுத முதல் இவர் யார் என்று பார்க்கவில்லை. பிறகு தான் பார்த்தேன். எனது கணிப்பு சரி என்றால் இவர் முன்னர் ரிரிஎன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் (அரசியல் கலந்துரையாடல் மாதிரி ஒரு நிழக்ச்சி) பங்கெடுத்திருந்தார். 

ஒரு ஈழ திரைப்படத்திலும் நடத்திருந்தார் என நினைக்கின்றேன். பார்த்துவிட்டு இவரா இப்படி பேசினார் என நம்பமுடியவில்லை. கவலையாகவும் உள்ளது. 

இசைப்பிரியா பற்றிய செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வந்து விட்டது. இனி எத்தனை தடவை வந்தாலும் அதற்கு பெயர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்வது அல்ல.

இவர் போல் எத்தனையோ பெண்களுக்கு அங்கு நடந்ததுக்காக ஆதாரம் இது. ஆதாரமற்று நடத்தப்பட்ட இன அழிப்பு போர், மற்றும் எஞ்சிய ஆதாரங்களையும் எல்லாம் அழித்துக்கொண்டு வந்த இனவெறி அரசாங்கத்தின் உண்மை முகத்தை உலகத்துக்கு காட்ட பயன்படும் சிறு துரும்பு.

இசைப்பிரியா அக்கா மற்றும் எம்மக்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இன அழிப்பு போரை நடத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு கொடுமைகள் புரிந்த இனவெறி அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழமுடியாது, தமிழர்களுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை உலகுக்கு உணர்த்தி இப்பொழுதும் கொடுமைகளை அனுபவித்து வரும் ஏனைய மக்களையாவது காப்பாற்றும் வரைக்கும் இது பேசப்பட வேண்டிய ஒரு விடையம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்


இணைப்புக்கு நன்றி.

இசைப்பிரியா எமதினப்பெண்களது அவலத்தின் அண்மைய குறியீடாகும். அவரைக்குறித்துப் பேசுவதே இந்த, இதுபோன்ற ஆயிரமாயிரம்  அநியாயங்களுக்கான நீதியைக் கிடைக்கச்செய்ய வழிதிறக்கும். ஒரு படைப்பாளியாக, பெண்ணியம் பேசுபவராகத் தமிழ்க்கவியவர்களின்  கருத்து ஏற்புடையதல்ல.

nick-ut-vietnam.jpg

 

இந்த ஒரு பெண் சிறுமியின் படம் தான்  வியட்நாம் விடுதலை கேக்கிறது என்பதை உலகுக்கு சொல்லியது....   

 

ஏஜன் ஒரேஞ்ச் எனப்படும் அமெரிக்க இரசாயண தாக்குதலில் இருந்து தப்பிக்க எரிந்த உடைகளை களட்டி எறிந்து விட்டு ஓடும் இந்த சிறுமிதான் நீண்டகாலம் வேடிக்கை பார்த்த பலரின் மனசாட்ச்சியை தட்டி திறந்தது...  அதன் பால் வியட்நாமின் விடுதலைக்கு அமெரிக்கர்களையும் போராட தூண்டியது....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆகிவிடப் போகின்றது என்ற மன உழைச்சலில் தான் அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால்சகோதரி கிருசாந்தியின் படுகொலையினைப் பற்றிக் கனகாலமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஏதாவது நீதி கிடைக்க வேண்டும் என்ற வேட்கையில். இன்றும் இசைப்பிரியா திரும்பி வரப் போவதில்லை ஆயினும், அவரது கொலையால் சிறிலங்கா அரசு தண்டிக்கப்படாதா என்ற வேட்கை தான் இருக்கின்றது. பாலியல் வல்லுறவு என்ற பதமே தவறு, அது ஒரு பாலியல் வல்லுறவு. யாரும் இசைப்பிரியாவைத் தவறாக நினைக்கவில்லை. அனைத்துத் தமிழர்களும் கூடப் பிறந்த சகோதரிக்கு நிகழ்ந்த துன்பமாகவே பார்க்கின்றனர். அவள் எம்மோடு இருந்தவள் என்ற எண்ணம் மட்டுமே என்னிடமும் மிச்சம் இருக்கின்றது.

Edited by தூயவன்

பெண்களிற்கெதிரான பாலியல் வல்லுறவுகள் பற்றி பொது தளங்களில் பேசக்கூடாது. அவற்றை இயலுமானவரை மறைக்க வேண்டும் என்ற தமிழ் கலாச்சார பழைமைசார் பார்வையை ஊக்கிவிப்பவர்களின் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் அவ்வாறான குற்றங்களை இழைப்பவர்களே. ஏனெனில் குடும்ப கெளரவம், கலாச்சாரம், பண்பாடு போன்ற பதங்களின் பின்னால் தாங்கள் செய்த குற்றங்களையும் மறைக்க முடியும் என்ற அவர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கையாகும். ஆகவே தான் குற்றவாளிகளும் பழமை வாதங்களை மிக அதிகமாகவே ஊக்குவிக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி இசைப்பிரியா பற்றிப் பேசாமல் இருக்கும் படி வேண்டுவது இசைப்பிரியாவுக்கும் அவர் உறவுகளுக்கும் நீதி கிடைப்பதை ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை எனக் காட்டுகிறது. பாலியல் குற்றத்தால் பாதிக்கப் பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேணும் என்பது தான் "பெண்ணியலாளர்" என்று அழைக்கப் படுவோரின் எண்ணமாக இருக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே "பெண்ணியலாளர்" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் நபர்கள் இப்படி பட்ட தருணங்களில் தங்கள் பலவீனங்களைத் தாங்களே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்! :rolleyes:

வன்முறை நடந்து அந்த வேதனையுடன் உயிர் வாழும் பெண் ஒருத்தி ஒதுங்கி வாழ விரும்பலாம். 

 

மக்களை அடக்க பாலியல் கொடுமைகளை அரசாங்கம் ஆயுதமாக உபயோகித்துவரும் போது அதை கையாள வேண்டிய விதம் வேறு.  

 

இங்கே இசைப்பிரியா "முட்டாள் பெட்டை தெரிஞ்சு தெரியாமல் ஆமியிடம் போய் மாட்டிவிட்டாள்" அல்ல கதை. அவருக்கு நடந்தது தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தின் சரித்திரத்தின் ஒரு பிர்தான பாகம்.

 

அவரின் இரத்த உறவுகளில் ஒருவரா இவர்? இசைபிரியாவுடன் சேர்ந்து அதே களத்தில் போராடியவர்களுக்கு இசைப்பிரியாவைப்பற்றி கதைக்க  உரிமை இல்லை என்று தனக்கு மட்டும் உரிமை இருக்கென்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.