Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொரிஷியஸ் தலைமை அமைச்சர் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கிறார்

Featured Replies

கொழும்பில்  எதிர்வரும் 15ம் திகதி  ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிப்பதாக மொரிஷியஸ் தலைமை அமைச்சர் நவீன் சந்திரா ராம்கூலாம் தெரிவித்துள்ளார்.

navin-ramgoolam-soreze.jpg?w=590சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவின் ; மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய அனைத்து விடயங்களை விடவும் மனித உரிமைகள் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.

சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக எதிர்வரும் 2015ம் ஆண்டு மொரிஷியஸில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1968ம் ஆண்டு மொரிஷியஸ் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அந்நாட்டின் 

தலைமை அமைச்சர் ஒருவர் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கொழும்பில் நடைபெறும் அமர்வுகளில் மொரிஷியஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அர்வின் புலில் பங்கேற்க உள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் கனடா மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்கனவே புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். எதிர்பார்க்கக்கூடியதுதான்.

பிராந்திய வல்லரசு என்று தன்னை தானே அழைத்துக்கொண்டு கொள்ளும் இந்திய பிரதமரை விட தைரியமாக தான் கூறவந்த செய்தியை கூறிய மொரிசியஸ் பிரதமர் உண்மையில் ஜென்ரல் மன் தான். எமது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவின் ; மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய அனைத்து விடயங்களை விடவும் மனித உரிமைகள் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.

சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக எதிர்வரும் 2015ம் ஆண்டு மொரிஷியஸில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. :icon_idea: 

 

இதற்காக   உழைத்த அத்தனை மொரிசியஸ்  தமிழர்களுக்கும்  நன்றிகள்

செய்தி : இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு அறிவித்துள்ளது .

# தமிழகத்தை விட மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட நாடு , காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லமாட்டார் என்றும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக அறிவிக்கிறது. இந்தியப்பிரதமர் போக முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ... மொரிசியஸ் மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் ... மொரிசியஸ் இறையாண்மை கொண்ட மரியாதைக்குரிய நாடு ,இந்தியா ?

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது.  உடன் பிறப்புகளே நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
மொரிசியஸ் இறையாண்மை கொண்ட மரியாதைக்குரிய நாடு ,இந்தியா ?

 

 

நானறிந்து டபிள் கேம் விளையாடும் நாடுகளில் முதன்மையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.