Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி:

 

நன்றி  துளசி

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

  • கருத்துக்கள உறவுகள்

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கும் ஜாமீன்: நடராஜனுக்கும் முன்ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

 

தஞ்சை அருகே உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடிப்பின் போது, எதிர்த்து போராட்டம் நடத்திய பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், 81 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நடராஜன், செல்வராஜ் ஆகியோருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111520

  • கருத்துக்கள உறவுகள்

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

 

கடந்த 13ஆம் தேதி தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்புறம் உள்ள பூங்கா மற்றும் மரங்கள், சுற்று சுவர் ஆகியவற்றை காலை 5 மணிக்கு மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தலைமையில் வந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் உடைத்து எறிந்தனர்.

 

சில நிமிடங்களில் அனைத்தையும் உடைத்துவிட்டு, இது நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகையையும் வைத்தனர். காலையில் 9 மணி அளவில் தகவல் அறிந்து திரண்டு வந்த உணர்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை வைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகைகளை உடைத்து அகற்றினர். இதனால் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது.

 

இதில் தடியடி நடத்திய போலீசார், 80க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு ஏடிஎஸ்பி பொன்நிறைவன், அயனாவரம் முருகேசன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நெடுமாறன் தரப்பிற்காக தடா சந்திரசேகரன், வடிவேல் ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அரசு தரப்பிற்காக ஆஜரான அடிசனல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.பி.செல்வம், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன் வழங்கினார்.

 

புதன்கிழமை இந்த வழக்கு முடிந்தவுடன் அதற்கான உத்தரவை எடுத்துக்கொண்டு திருச்சி வர காலதாமதமாகும். எனவே வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

 

பகத்சிங்

 

நன்றி:நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா வெளிய வந்ததையிட்டு மகிழ்ச்சி

இலங்கைப் பொதுநலவாய நேரம் காங்கிரசை காப்பாற்ற செய்த சதி போலவும் படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வினால் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா?, உருவாகி முதலிடத்தை அடையுமா?.

நெடுமாறன் ஐயா உட்பட 83 பேரின் விடுதலையின் பின்னர் நெடுமாறன் ஐயாவுடன் சீமான் அண்ணா உட்பட பலர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில்.

 

1426728_10153449045085012_753445899_n.jp

 

1474500_412207945575114_692004421_n.jpg

 

1470044_412207815575127_72429721_n.jpg

 

1450986_412194748909767_67897825_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இணைக்கப்பட்ட ஆகம் என்பதால் நீக்கபடுகின்றது

Edited by SUNDHAL

16.11.2013

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்ததற்கும், பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு கண்டனம்! - சீமான் !!

தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது. இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

1459252_665246176848328_1455376584_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தினம் ( படங்கள் )
 

mullivaaikal.jpg

 

 

 நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். 


 ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


 பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
 இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது.


      - இரா.பகத்சிங்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111887

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.