Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் .

 

உங்களுக்கு நகல் வேற அக்கா :rolleyes:

 

நாளை உங்களைப் பார்த்து கள்ளமட்டை, கள்ளத்தோணி, தட்டுக்கழுவி என்று யாராவது விமர்சித்தால் எப்படி அது அசிங்கமாக இருக்குமோ அது போன்றே உங்களது கருத்தும் இருக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் நியாயமான விமர்சனம் என்பதற்கு அப்பால், அவருவருப்பான கருத்துக்களையே தூண்டுகின்றீர்கள். ஏன் பெண்களுக்கு இனவுணர்வு இருக்கக்கூடாதா? நெடுமாறன் ஐயா கைது செய்யப்படும்போது, அவரது மகளும் அருகில் தான் இருந்தார். சீமானை விமர்சிப்பது என்பது நியாயமாக இருப்பின் அதற்குப் பதிலைத் தருகின்றேன்.

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

நாளை உங்களைப் பார்த்து கள்ளமட்டை, கள்ளத்தோணி, தட்டுக்கழுவி என்று யாராவது விமர்சித்தால் எப்படி அது அசிங்கமாக இருக்குமோ அது போன்றே உங்களது கருத்தும் இருக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் நியாயமான விமர்சனம் என்பதற்கு அப்பால், அவருவருப்பான கருத்துக்களையே தூண்டுகின்றீர்கள். ஏன் பெண்களுக்கு இனவுணர்வு இருக்கக்கூடாதா? நெடுமாறன் ஐயா கைது செய்யப்படும்போது, அவரது மகளும் அருகில் தான் இருந்தார். சீமானை விமர்சிப்பது என்பது நியாயமாக இருப்பின் அதற்குப் பதிலைத் தருகின்றேன்.

 

ஐயா இவனுங்க சினிமா எல்லாம் பார்த்து களைச்சு போனம் இனி எவனையும் நம்பும் எண்ணம் இல்லை எல்லாம் வெறும் சீன் நாளை வேறு ஒன்று கிடைக்கும் அதுவரை இது ஓடும் படங்களை போட்டு சேர் பண்ணிட்டு திரியவேண்டியது தான் ஒன்னும் ஆகுற காரியம் இல்லை பாருங்கோ .

முள்ளிவாய்க்கால் முற்றம் தற்போதய நேரடி நிலவரம்.........

முற்றத்தின் உள்ளே ம.தி.மு.கபொது செயலாளர் திரு வைகோ அவர்களுடன் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கட்சி பேதமின்றி திரண்டுள்ளனர். இவர்களோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானும் அவரது துணைவியாரும் பங்கேற்றுள்ளார்.....

முற்றத்தின் வெளியே ஆயிரக்கணக்கில் போலிசார் திரண்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுத்து வைத்துள்ளனர்.

பல்வேறு திசைகளில் இருந்து உணர்வாளர்கள் திரள்வதால் பரபரப்பு நிலவுகிறது.......

 

(facebook)

ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் என்பது தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கும் வெறும் வாக்குகளை கவரவும் மட்டுமே என்பதனை முன்கூட்டியே தெரிந்து வைத்ததனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு என்பது ஆச்சரியம் தரவில்லை

 

 

ஜெயலலிதாக்கு என்ன பிரச்சனை எண்டா நடராஜன் இப்பிடி எல்லாம் செய்யவோ? எண்டது தான்

 

மத்தியில் இருந்து வந்த அழுத்தத்தால் இடிக்கப்படுவது போல்ப்படவில்லை. மானில அரசின் காணி மீது ஏற்கனவே நெடுமாறன் ஒப்பந்தம் வைத்திருக்கிறார். ஒப்பந்த நேரம் கட்டிய கட்டடங்களை அறிவித்தல் கொடுக்காமல் இடிக்க இப்படி தமிழ் நாட்டின் சட்டக்கோவைகளில் இடம் இருக்கா தெரியவில்லை. 

 

நடந்து கொள்ளும் விதம் நாகராஜன் மீது காட்டும் கோபம் போலத்தான் தெரிகிறது. மத்திய தேர்தல் வருவதால் தமிழர் விவகாரங்களை அவ்வளவு விரைவாக மறந்திருக்க முடியாது.

 

ஜெயலலிதா உழைத்து முன்னேறிய அரசியல் வாதி அல்ல. கருணாநிதி போன்ற ராஜதந்திரியும் அல்ல. சினிமா விலாசம், எம்.ஜி. ஆர். கட்டி எழுப்பிய கட்சி என்பவற்றை பாவித்து பதவிக்கு வந்து அராஜரீகமாக ஆண்டு கருணாநிதியிடம் பதவியை கொடுத்தவ.  பழைய அனுபவங்களால் படித்திருந்த்தாலும் இன்னும் தெளிந்த அரசியல்வாதி அல்ல.

 

நாகராஜனை பழிவாங்க ஜெயலலித மிக மோசமான தவறாக இதில் நடந்து கொள்கிறார். ஆனால் இது மத்திய தேர்தலுக்கு காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் வாய்ப்பாக மாறப் போகிறது. அது தமிழ் மக்களுக்கு மேலும் இடராக மாறலாம். மானில தேர்தலில் அ.தி.மு..க. தோற்று   பதவி கைமாறினாலும், மத்திய தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஒரு தொகுதிகூட பேற முடியாது என்ற நிலை அவசியம். இதை ஜெயலலிதா தொடர்ந்தால் 2014ல்  தமிழக மக்கள் வாக்களிக்க கட்சி இன்றி தவிக்கப் போகிறார்கள். பழைய உடல் இருந்திருந்தால்  கருணாநிதி சந்தர்ப்பத்தை பாவித்து வந்து குத்தித்திருப்பார். ஆனால் அவரின் அடிதடி பிள்ளைகளை இதற்குள் அனுப்புவது அவ்வளவு நல்ல தல்ல என்று ஒதுங்கியிருக்கிறார் போலும். 

Edited by மல்லையூரான்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலலிதாவின் தமிழர் விரோத வன்செயலை கண்டித்து புதுவை நாம் தமிழர் கட்சியின் திடீர் சாலை மறியல்

 

1451593_544278118997045_1115586028_n.jpg

 

1452214_544278295663694_2108502234_n.jpg

 

1472909_544278455663678_546930428_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இவனுங்க சினிமா எல்லாம் பார்த்து களைச்சு போனம் இனி எவனையும் நம்பும் எண்ணம் இல்லை எல்லாம் வெறும் சீன் நாளை வேறு ஒன்று கிடைக்கும் அதுவரை இது ஓடும் படங்களை போட்டு சேர் பண்ணிட்டு திரியவேண்டியது தான் ஒன்னும் ஆகுற காரியம் இல்லை பாருங்கோ .

 

ஓ நல்லது! அப்படி எனில் நீங்கள் என்னத்தைக் கிழிக்கலாம் என எதிர்பார்க்கின்றீர்கள். சீமான் ஒரு பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல், ஏமாற்றி இருந்தால் கூட அவரைத் திட்டுவதில் நியாயம் உள்ளது. ஆரம்பித்த கட்சியே என்னமும் முழுமையடையவில்லை. அதுக்குள் அவர் இப்படித் தான் என்று சொல்ல நீங்கள் என்ன குடுகுடுப்புக்காரனா? உங்களை யாரும் நம்பச் சொல்லவில்லை. நீங்கள் எது முடியுமோ அதைச் சொல்லுங்கள். நாங்களும் வருகின்றோம். இல்லையெனில் பொத்திக் கொண்டு வேலையைப் பாருங்கள்...

எனக்கும் கூத்தாடிகளுக்கும்  என்ன சம்மந்தம் நான் என் அவங்களுக்கு அழவேணும் .

 

எம்முடன் களத்துக்கு வந்தனா அல்லது

பதுங்குகுழி வெட்டி தந்தானா எம்

மக்களின் துயரில் கூட இருந்தார்களா

எதுக்கு ஆதரவு கொடுக்க வேணும் நான்

ஏன் கொடுக்கவேணும் ஆதரவு எமது

சக போராளி பெண்களுக்கு ரைபிள் துடைத்து

கொடுத்தாரா அல்லது சமையல் செய்தாரா

நாங்கள் போராடும்போது சிங்களத்தி

பூஜாவுடன் சினிமா சூட்டின்க்  இனம்

அழிந்தபின் ஈழ பிழைப்பு

பகலவன் விஜய்யுடன்

அஜித்திடம்  அழைப்புக்கு காத்திருப்பு

ஒன்றும் இல்லை இப்போ கட்சி

இதில நான் கொடுக்க வேணும் ஆதரவு ...

 

 

ஈழத்து நொந்த பொம்மம்ன் :D :D

 

ஈழ தமிழன் அனைவரும் போராடினானா.

போராடினால் இப்படி தோற்றிருப்பானா. :D

நீங்கள் களத்தில் நின்றீர்களா?

இல்லை ஓடி வந்தீர்களா? :D

வசவுகள் எமக்கு இல்லையா?

தனியே தமிழக தமிழனுக்கா? :D

நாங்கள் எதையும் செய்ய மாட்டோமா?

செய்பவனையும் திட்டி தீர்ப்போமா? :D

 

சும்மா அடுத்தனவை குறை சொல்ல முன்னம் நாங்கள் என்ன பண்ணினோம் என்பதையும் பார்த்தால் நல்லது. :lol::icon_idea:

உங்களை யார் அழ சொன்னது? <_<

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு சொல்லி  அழ???

 

இங்கு  சிலருக்கு

தமிழகத்தையும்  சினிமாவையும் நக்கலடிக்க

அவர்களது பாடல்களே  தேவைப்படுகிறது............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அழவில்லை.... பாவம்... புலம்புகின்றார்....

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு பரபரப்பு காணொளி

ஓ நல்லது! அப்படி எனில் நீங்கள் என்னத்தைக் கிழிக்கலாம் என எதிர்பார்க்கின்றீர்கள். சீமான் ஒரு பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல், ஏமாற்றி இருந்தால் கூட அவரைத் திட்டுவதில் நியாயம் உள்ளது. ஆரம்பித்த கட்சியே என்னமும் முழுமையடையவில்லை. அதுக்குள் அவர் இப்படித் தான் என்று சொல்ல நீங்கள் என்ன குடுகுடுப்புக்காரனா? உங்களை யாரும் நம்பச் சொல்லவில்லை. நீங்கள் எது முடியுமோ அதைச் சொல்லுங்கள். நாங்களும் வருகின்றோம். இல்லையெனில் பொத்திக் கொண்டு வேலையைப் பாருங்கள்...

 

ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் .

ஈழ தமிழன் அனைவரும் போராடினானா.

போராடினால் இப்படி தோற்றிருப்பானா. :D

நீங்கள் களத்தில் நின்றீர்களா?

இல்லை ஓடி வந்தீர்களா? :D

வசவுகள் எமக்கு இல்லையா?

தனியே தமிழக தமிழனுக்கா? :D

நாங்கள் எதையும் செய்ய மாட்டோமா?

செய்பவனையும் திட்டி தீர்ப்போமா? :D

 

சும்மா அடுத்தனவை குறை சொல்ல முன்னம் நாங்கள் என்ன பண்ணினோம் என்பதையும் பார்த்தால் நல்லது. :lol::icon_idea:

உங்களை யார் அழ சொன்னது? <_<

 

மொத்தமா எல்லோரு ஓடி வந்தவங்க தான் போற பயத்தில்தான் இப்புட்டு ஒப்பாரி இருக்கும் போது பாலுத்த மாட்டம் செத்தபின் எதுக்கு .

 

ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .

1425519_10201124988902331_856934394_n.jp

 

இந்த உணர்வூட்டல் தங்களுக்கு கத்தியாக மாறிடக் கூடாது என்பதில் ஹிந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழர்கள் மீது ஒரு கண்காணிப்போடு தான் இருக்கிறார்கள். 

இன்னொரு குந்தவையும் அருள்மொழியும். (கையை எங்கோவோ கட்ட அக்காவின் வாயை மட்டும் பார்க்கிறது. இப்படி பட்ட அவதான விளக்கத்துடன் தான்  வருங்கால சி.வி. ராமனும், சந்திர சேகரரும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது :D  )

13 நவ அதிகாலை இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்.

 

அரசின் தமிழ் தமிழர் விரோதப்போக்கினை கண்டித்து மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலையருகில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழ்ர் கட்சியினர் 15 கைது செய்யப்பட்டனர்.

 

547856_663212770385002_247275678_n.jpg

 

1012778_663212930384986_985110382_n.jpg

 

1464737_663212950384984_1556520247_n.jpg

 

(facebook)

 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் உங்களின் வாதத்தில் நியாயமில்லை. உலகெங்கும் சொந்த மக்கள் மாண்டு போன தம் மானுட சொந்தங்களை பல வடிவிலும்.. நினைவு கூர்ந்து வருவது.. வியாபாரமோ.. பணம் பண்ணுதலோ மட்டுமல்ல... ஏன் உங்கள் வீட்டில் அந்தியேட்டி நடத்திறதை சாப்பாடு சாப்பிட என்று சொல்லி நிப்பாட்டுவீர்களோ.. இல்லைத் தானே... அதையும் தாண்டிய மானுடவியல் பண்பு அங்குள்ளது.

 

இந்தப் பூமிப்பந்தில் எம் இனம் வாழ்ந்து வீழந்தது.. சதிகளால்.. துரோகங்களால் வீழ்த்தப்பட்டது என்பதற்கான அடையாளங்களையும் நாம் விட்டுச் செல்ல வேண்டும். போரில் மடிபவர்கள் மட்டுமல்ல.. எந்த மனிதனும் சிரஞ்சீவியாக வாழப் போவதில்லை. அந்த வகையில்.. இவை வரலாற்றுக் குறிப்புக்கள். இவற்றை அழிக்க அண்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்கு வந்த ஒரு நடிகைக்கு மக்கள் அளித்த அதிகாரம் மட்டும் கருவியாவது வேதனையானது. மானுட நீதிக்குப் புறம்பானது.

 

அதைக் கூட கண்டிக்க முடியாத கருணாநிதிகள் போன்ற சுத்தச் சுயநல ஆந்திர வழித்தோன்றல் நடிகர்களைக் காட்டிலும்.. சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயோ போன்ற தமிழன் சோத்துக்கு நன்றிக்கடன் காட்டும் மனிதர்கள் எவ்வளவோ மேல்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் .

 

 

பிணத்தில் மேலே பணம் பார்த்துத் தானே புலத்திற்கு ஓடி வந்தீர்கள். அதில் மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். " இப்போது அங்கே சனம் சந்தோசமாக இருக்கு" " எங்களின் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கோ!" என்று சிங்களப்பல்லை எங்களுக்குக் காட்டுகின்ற எத்தனையோ பேரை நாங்களும் பார்த்துவிட்டோம். அதுக்கு "லைக்" வேறு.... ஜல்ரா ஆவது பரவாயில்லை... ஏதோ தங்களுக்கு மக்கள் மேலே பற்று என்று நடிக்கின்ற எச்சில்பொறுக்கிகளைத் தான் நம்பமுடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு குந்தவையும் அருள்மொழியும். (கையை எங்கோவோ கட்ட அக்காவின் வாயை மட்டும் பார்க்கிறது. இப்படி பட்ட அவதான விளக்கத்துடன் தான்  வருங்கால சி.வி. ராமனும், சந்திர சேகரரும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது :D  )

 

அக்கா சொல்லுது தம்பி உன்னைப் போலவே அந்தத் தம்பியும் இருக்காண்டா. பாவம் அவன் சிங்களவனால் சாகடிக்கப்பட்டு செத்துப் போயிட்டான். நீயாவது அவன்ர அவல நிலையை தீர்ப்பியா என்று சுட்டிக்காட்டிக் கேட்க.. அவன் அக்காவின் ஏக்கத்திற்கு அவள் முகம் பார்த்து  அப்படிப் பதில் அளிக்கிறான். நாளை இவனே இன்னொரு பிரபாகரனாகவும் வரக் கூடும்.

 

Edited by nedukkalapoovan

 

ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .

 

விளங்கித்தான் எழுதுகிறீர்களா?

 

அப்போ இன்றைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்கும் கட்சிகளின் நிலை எங்கே?. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை கட்டும் கட்சிகள் நிலை எங்கே?

 

அதற்கு நீங்கள் தரப்போகும் விடையை வைத்து ஆனா ஊனா என்றல் "ஈழம்" என்பதனில் தவறா?, ஆனா ஊனா என்றால் "இடி"  என்பதனின் தவறா அல்லது அது உங்கள் ஆய்வில் மட்டும்முடதான் நின்றுவிடுகிற்தா? என்ப்தையும் கூர முடியுமா?

 

நீங்கள் சொல்லவருவது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க வேண்டும் என்ப்தா? அல்லது இடிக்க கூடாது என்பதா? 

 

நேரான பதில் இருந்தால் "இடிக்க வேண்டும்" என்று அல்லது "இடிக்கக் கூடாது" என்று எழுத முடியுமா?

ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் .

 

மொத்தமா எல்லோரு ஓடி வந்தவங்க தான் போற பயத்தில்தான் இப்புட்டு ஒப்பாரி இருக்கும் போது பாலுத்த மாட்டம் செத்தபின் எதுக்கு .

 

ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .

 

அவர்கள் தமிழகத்தில் போராடுகிறார்கள். அவர்களை போராட வேண்டாம் என்று சொல்ல எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. அவர்கள் போராட்டத்தால் எந்த மாற்றமும் வராது என்றால் ஈழ தமிழனுக்கு மட்டும் என்ன பிரச்சினை வந்து விடப்போகுது? :icon_mrgreen: பிறகென்ன அவர்கள் ஈழ தமிழனை வாழ விட்டா காணும் என்று புலம்பல்? :icon_mrgreen: அவர்கள் போராட்டம் நடத்தினால் சாப்பாடு இறங்குதில்லையோ? :icon_mrgreen:

 

அவர்கள் போராட்டம் பிடிக்கலையோ, ஒதுங்குங்கள். பிடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துக்கொள்வார்கள். :icon_idea:

 

நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் வரும் அமைப்பே தவிர வளர்ந்து விட்ட அமைப்பு கிடையாது. அப்படியிருந்தும் ஈழ மக்கள் பிரச்சினை பற்றி தமிழகத்தில் மக்களை திரட்டி அவர்களுக்கு சீமான் அண்ணா விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை சீமான் அண்ணா உட்பட ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான் இப்பொழுது இவ்வளவு போராட்டங்களுக்கும் ஆதரவை திரட்டி வருகிறது.

அன்று ஏன் எதுவும் பண்ணேல்லை என்று கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் கேளுங்கள்.  <_< போராடியவர்களை எதற்காக அடக்கினீர்கள் என்று கருணாநிதியை கேளுங்கள். <_<

 

மொத்தமா எல்லாரும் ஓடி வரவில்லை. சண்டை நடக்கும் போது நானும் இலங்கையில் தான் இருந்தேன். நானும் போராடவில்லை. என்னை போல் பலரும் போராடவில்லை. அதே போல் போராடாமல் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பலர். அவர்கள் வெளிநாட்டில் என்ன முயற்சி எடுத்தாலும் உங்கள் கூற்றுப்படி அவர்கள் களத்தில் போராடாதவர்கள் தான்.

 

ஆனால் தமிழக தமிழர்கள் ஏதும் போராடினால் உடனே சொல்வது நாங்கள் பார்த்துக்கொள்வம். அன்று போராடாத நீங்கள் இனியும் போராட வேணாம் என்று. ஆனால் அன்று போராடாத நீங்கள் மட்டும் எப்பிடி இனி போராட முடியும்? <_< குற்றம் சொல்வது தனியே தமிழக தமிழர்களுக்கு மட்டும். <_<

Edited by துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். <_< சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்தியை கொண்டு வந்து இங்கு இணையுங்கள். எல்லாம் மற்றவர்கள் செய்ய வேணும். நீங்கள் கேள்வி மட்டும் கேட்பீர்கள். <_<

 

முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்படுவதை விட சீமான் அண்ணாக்கு எதிராக கருத்து எழுதுவது தான் முக்கியம். <_<

 

எவர் ஈழத் தமிழர்மேல் சவாரி செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஈழத் தமிழனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். பதில் தெரியாதவர்கள் ஈழத் தமிழர்கள் மீதான சவாரியை நிறுத்திவிடுவது நல்லது.  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

 

சரியா சொன்னீங்கள் விறதர்....

எவர் ஈழத் தமிழர்மேல் சவாரி செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஈழத் தமிழனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். பதில் தெரியாதவர்கள் ஈழத் தமிழர்கள் மீதான சவாரியை நிறுத்திவிடுவது நல்லது.  :)

 

சீமான் அண்ணா ஈழ தமிழர்கள் மேல் சவாரி விடுபவர் என்று நினைத்தால் சீமான் அண்ணா எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கேள்வியை அவரிடம் தானே கேட்க வேண்டும்? யாழில் எழுதினால் அவர் பதில் தருவார் என்ற நினைப்போ?

இல்லை அவர் என்ன செய்தார் என்று அறிய வேண்டும் என நினைத்தால் செய்திகளை தேடிப்பிடித்து யார் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை கொண்டு வந்து இங்கு இணைக்க சொல்லுங்கோ. அல்லது மற்றவர்கள் இணைக்கும் வரையாவது பொறுமையா இருக்க சொல்லுங்கோ.

அதை விடுத்து முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்திற்குள் அங்கு என்ன நடக்கிறது என்று செய்திகளே வருவதற்கு முன்னம் சீமான் அண்ணா என்ன செய்தார் என்று கேட்பது, சீமான் அண்ணா மீதான காழ்ப்புணர்வையே காட்டுகிறது. இவ்வளவுக்கும் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. தனியே சீமான் அண்ணா தான் இலக்கு. இங்குள்ள கருத்துகளை பார்த்தால் அது புரியும்.

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான தமிழக பொலிஸார்.

 

குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சுற்றுமதில்கள் இடிக்கப்பட்ட நிலையில் மாவீரர் திருவுருவப்படங்களை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டுவருவதாக தஞ்சையிலிருந்து நாம் தமிழர் கட்சியின் சர்வதேச தொடர்பாளர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.

 

புனிதபூமி இணையத்தளத்திற்கு அங்கிருந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாக நெடுஞ்சாலைகள் துறை போக்குவரத்து அதிகாரிகளிடம் அந்தப் பகுதி தொடர்பிலா அனுமதி பெறப்பட்டே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. தற்போது திட்டமிட்ட வகையில் அதே துறையினரைக் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றப்பகுதியை இடித்தழிப்பதற்கான அனுமதி பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். நீதி கேட்ட பிரதிநிதிகள் பொலிஸாரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

 

தானும் தாக்குதலில் காயமடைந்திருப்பதாகவும் செந்தில்நாதன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மதில் சுவர்கள் இடித்தழிக்கப்பட்டிருப்பதுடன் மாவீரர்களின் நினைவுப் படங்களை அழிக்குமாறு பொலிஸார் மிரட்டிவருவதாகவும் முள்ளிவாய்க்கால் முற்றம் முற்றாக சீல் வைக்கப்பட்டிருப்பதுடன் ஆயிரக்கணக்கான பொலிஸார் சுற்றிவளைத்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

 

- See more at: http://www.punithapoomi.com/news/1-1-1-2#sthash.5evxEhGA.R1cARfih.dpuf
 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப்புலிகள் கட்டமைப்புடன் ஆட்சி நடத்தியபோது எதிக்கருத்து வைத்தவர்கள்......
 
2009 ல் நடந்த இன அழிப்பிற்கு பின்னரும் தங்களை மாற்றவில்லை.....இன்றும் மாறவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
தஞ்சையில் பழ. நெடுமாறன் கைது:முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிப்பு
 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் – பூங்கா இடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் ஈழத் தமிழர் படுகொலையை சித்தரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு பகுதியை இடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தோழமைக் கட்சியினர் விரைந்து வந்தனர்.

அப்போது அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தோழமைக் கட்சியினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன், செந்தில்நாதன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தோழமைக் கட்சியினர்கள் திரண்டு சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஏ.ஐ.டி.யூ.சியை சேர்ந்த மதிவாணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாலு, செந்தில்நாதன், தனபாலன் உள்ளிட்ட 14 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு சம்பவம் பக்கத்து கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. இதனால் தோழமைக் கட்சியினர்களும், பொது மக்களும் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டு உள்ளனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினரும் மறியல் செய்தனர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. அமல்ராஜ், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோர் அதி விரைவுப்படை போலீசாருடன் அங்கு வந்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட தோழமை கட்சியினரை போலீசார் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பின்னர் பழ. நெடுமாறனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:–

எனக்கு சிறைவாசம் என்பது புதிதல்ல. இன்று மாலை தோழமை கட்சியினர் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை கொடுக்க தயாராக உள்ளனர்.

தொண்டர்கள் கோபப்பட்டு எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபட கூடாது. நீங்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழ. நெடுமாறனுடன் ம.தி.மு.க.வை சேர்ந்த விடுதலை வேந்தன், தமிழ் தேச பொதுவுடமை கட்சி குழ. பால்ராஜ், மள்ளர் மீட்பு கழக நிறுவன தலைவர் செந்தில் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தஞ்சை மேலவீதியில் உள்ள உதயா திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் இரும்பு கம்பி வேலி அமைத்து இருந்தனர். அதனை பொதுமக்கள் பிரித்து எறிந்தனர்.

பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.canadamirror.com/canada/18003.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.