Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்
November 13, 2013 at 11:22pm

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் உண்மைத் தமிழ்த்தேசிய அன்பர்களுக்கு தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்...

இந்த நினைவிடம் நன்றேதான்.

அது அமைக்கப்பட்டவிதமும் அதற்காக உழைத்த ஓவியர் வீர சந்தானம் போன்றவர்களும் சிற்பிகள் முருகன் குழுவினரும் பாராட்டப் படவேண்டியவர்கள்தான்.

அவர் தேர்ந்த கல்லும் அதன் நிறமும் “மயமதத்திலோ” “சிற்பசாத்திரத்திலோ” முன்மொழியப்பட்டதைவிட அதிகம் முரண்படாத வகையில் அமைந்தவைதான்.

நினைவிடத்திற்காகன இருப்பிடமும் அமைந்த திசையும் நன்றேதான்.

இன்றைக்கான உலகில் தவறைச் செய்துவிட்டு அதை சரியானதாக்க முயல்வதை யாரும் கருணை கொண்டு பார்ப்பதில்லை. முறையற்றவிதத்தில் பட்டா போட்டால் யார் தான் ஏற்பார்கள்? அரசுக்கு சொந்தமான (நெடுஞ்சாலைகள் மத்தியவா? மாநிலவா?) நிலத்தில் ஆக்கிரமிப்புச் செய்தால் அவர்கள் வந்து இடித்தால் என்ன செய்யலாம்?

சட்டத்தின் நுண்மான் நுழைபுலம் அறிந்தவரான வை.கோ வைத் துணைக்கிருத்தியிருக்கும் அய்யா நெடுமாறனுக்கு ஏன் இது புரியாமற் போனது என்பதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது! இருக்கட்டும். ஆனால் “இடிக்கட்டும் இடித்துப் பார்க்கட்டும்” என்பதாகச் சவால் விட்டார்களே! ஆது ஏன்?

இன்றைக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் விரும்புவது ஒன்றுபட்ட தமிழகத் தமிழர்களின் முனைப்பைத்தான்.

நீங்கள் ஓர் நினைவிடத்தைக் கட்டினீர்கள். அதற்கு போட்டிக்கு ஆள் அழைப்பு விட்டுத் திறப்பு விழா வைக்கிறீர்கள். அப்படியான திறப்பு விழாவிற்கான தேவை என்ன? இது நினைவிடமா அல்லது ஓட்டப்பந்தய மைதானமா?

இன்றைக்கான தமிழர் உலகெங்கும் இருந்து கேட்பது, இரண்டு கிழமைகளுக்கு முன்பு சட்டசபையில் இருந்து வந்ததே அந்தக் குரலைத்தான். ஓன்றுபட்ட தமிழகத்தின் குரலைத்தான். உடைந்துபோன தமிழகக் குரலில் எந்த சாரியையும் இல்லை, சந்தியும் இல்லை, சுருதியும் இல்லை.

தமிழகத்தின் ஆளும் கட்சியையும் எதிர்க் கட்சியையும் துணைக் கட்சிகளையும் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் பிறரையும் மற்றவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டு உங்களுக்கு ஈழத்து தமிழருக்காக்க குரல் கொடுக்க முடிந்தால் தாருங்கள். இது, இந்த ஒருமைப்பாடு உங்களால் எட்டாக் கனியானதாகக் கருதப்படுகிறதா!... சற்றே தள்ளியிருங்கள்.

வழிவிடுங்கள்.

இது தமிழகத்தின் நெடுமாறனுக்கும், வை.கோவுக்கும் இன்ன பிறருக்கும் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் எதிரிக் கட்சிகளுக்கும் உதிரிக் கட்சிகளுக்கும் நாள் பேரில் இருப்போருக்கும் நேரத்தின் பேரில் இயங்குவோருக்கும் கூடப் பொருந்தும்.

சரி இவர்கள், இந்தக் கட்சிக்காரர்கள் ஒன்றுபடமாட்டார்கள் என்றாலும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இருக்கும் தமிழின உணர்வாளர்களாவது ஒன்றுபட வழியிருக்கிறதா? இந்த திறப்புவிழா நடத்தப்பட்ட முறையே பல கட்சியினரை வெளியே நிற்க வைக்கும் வெறுப்பையும் குரோதத்ததையும் வளர்க்கும் வகைதான்.

பட்டதுபோதும் என்று இருக்கும் ஈழத்து மக்களுக்கு உங்கள் முரண்பாடுகளின் முகங்கள் இனியும் வேண்டாம். ஓன்றிணைந்த கருத்துக்கு வரவேண்டாமாயினும் பொது நன்மைக்கான ஒன்று பட்ட வேலைச் செயற்பாட்டிற்கு வாருங்கள்.

இந்த நினைவிடத்தை ஓர் ஈழத்தமிழர் வந்து பார்க்க முடியுமா? அவர் எந்த நாட்டு குடியுரிமையில் இருப்பினும் அவர் ஈழத்தில் பிறந்தவராயின் தனியான விண்ணப்பப் படிவம் நிரப்பித்தான் விசா பெறவேண்டும் என்பது தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா?  அமெரிக்க குடியுரிமை உள்ள, ஆஸ்திரேலியக் குடியுரிமை உள்ள, பிரிததானியக் குடியுரிமை உள்ள ஒருவர் எளிதாகத் தமிழகத்திற்கு வந்து போகலாமே என்றுதான் தோன்றும். அது நடைமுறைச் சாத்தியமே இல்லை.

ஈழத்தில் பிறந்ததனால் தனியான சிறப்புக் கவனிப்பு அவர்களுக்கு உலகம் முழுதும் உள்ளது. அது அவரவர் நாட்டுப் பாதுகாப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தது என இந்தியாவின் விசாக் கெடுபிடிகளை மன்னிக்கலாம். சரிதான். ஆனால் இது தமிழகத்திற்கு தெரியுமா என்பதுதான்...அப்படியாயின் இந்த நினைவிடத்தைப் பார்வையிட, இறந்து பட்ட தன் தங்கையின் நினைவிடத்தைக் காண வரத்துடிக்கும் ஓர் தமிழருக்கு என்ன ஏற்பாட்டை நீங்கள் செய்திருக்கிறீர்கள்...? அது இல்லாவிட்டால் இந்த நினைவிடம் யாருக்கு? எதற்கு?

இருக்கின்ற போக்குவரத்து வாய்ப்புக்களில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்னையில் இருந்து வந்து போவதென்றால் ஆகும் சிரமங்களை எண்ணிப்பாருங்கள். பிற நாடுகளில் இருந்து சென்னைக்கு வருவதே பெரும்பாடு. இதில் தஞ்சையின் மூலைக்கு...?

சரி, அதையும் விட்டுவிடுவோம். ஆரோவில் என்ற, இதே தஞ்சைக்குப் பக்கத்தில் உள்ள ஓர் பொது இடம் இருக்கிறதே. பிரஞ்சு மொழி பேசும் நாடுகளின் மக்களும் உலகப்பொதுக் குடிமக்களும் வந்துபோவதற்காகன கட்டற்ற விசா நடைமுறைகள் உள்ளனவே... அண்ணல் நேருவின் கைகாட்டலில் நிறைவேறியதே! அவற்றின் சிறுபகுதியாவது இங்கு சாத்தியமா? இல்லை.

அடிப்படையில் இந்த நினைவிடத்தின் பெருநோக்குத்தான் என்ன? அதன் உடன் விளைவுதான் என்ன? அதன் நீண்டகாலப் பயன்தான் என்ன?


ஈழத்தில் இந்திய அமைதிப்படை வந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போரிட்டு திரும்பிவந்த வரலாறு எல்லாரும் அறிந்தது.

அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அந்தப் போரில் மடிந்தவர்களுக்கும் கூட நினைவிடம் உண்டா? அப்படியாயின் அதை எந்த இந்திய விருப்பபுடையவர் மதிப்பார், இருக்கவிடுவார்? அதற்கான தந்திரோபாய நடவடிக்கை ஏதும் உண்டா?

தமிழர்கள் போரில் இறந்துபட்ட ஈழத்தவரை நினைவிருத்தி வைத்திருப்பதற்கா? இதற்கான அரசியல், சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டதா?

எழுந்தமானத்துக்கு அய்யா வை.கோ போல உணர்ச்சியின் வசப்பட்டுப் பேசியும் செய்தும் வருவதனால் தமிழர்கள் திரும்பியும் திரும்பியும் முள்ளிவாய்க்கால்களையும் நந்திக் கடல்களையுமே சந்திக்க நேரிடும் என்பதை முதலில் புரிந்து கொண்ள்ளவேண்டும்.

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டும் வரும்வரை தமிழகத்தில் வீர வசனம் பேசி வந்தார்கள். ஏமாந்தாயிற்று. இப்போது நினைவிடம் அமைக்கும்போதுமா அதே பாணியில் ...சற்றே திருந்துங்கள் அய்யா!

நாங்கள் இங்கு பெருங்கட்சிகளான தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் தேசியக் கட்சியான காங்கிரசையும் ஏதும் சொல்லத்தேவையில்லை. அவர்கள் தங்கள் மத்திய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை நன்மைகள் கருதியே காய் நகர்த்துவார்கள், என்பதும் தெரியும்.
இதில் இன்றைய முதலமைச்சர் என்ன, முன்னாள் முதல் அமைச்சர் என்ன, நாளைய முதல் அமைச்சர் என்ன, “எல்லாருமே....தி...ங்கதான்.”

இப்படிப்பட்டவர்களிடம் சவால்;விட்டு வாழ்க்கை ஓட்டும் அய்யா நெடுமாறனை நாம் என்னவென்பது?

இந்தக் கடிதம் எழுதும் போது காட்சிக்குள் வராததால் எவரும் நல்லவரும் இல்லை. தப்பித்தார்கள் என்பதும் இல்லை.

எல்லாமே ஒரே குட்டையின் மட்டைகள்தான்.

எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

எங்களை ஏமாற்ற வேண்டாம்.

தயவு செய்து உங்கள் அரசியலை நீங்கள் பாருங்கள்.

ரத்தம் துடிக்குதா? கொஞ்சம் தானம் கொடுங்கள்.

புலம் பெயர்ந்திருக்கும் சில மனம் பெயர்ந்தவர்கள் சொல்லும் கதைகளை நம்பாதீர்கள். அவர்கள் கடந்தகாலத்தில் இப்படித்தான் அண்ணன் சீமானை நம்ப வைத்தார்கள். இன்றோ அண்ணன் சீமான் அவர்களை வெறுக்கிறார்.

தமிழகத்தில் இருந்து யாராவது வந்தால் மதிப்போடு நடத்துவது புலம்பெயர் தமிழர் வழமை. ஆது சொல்லும் உட்கருத்து, அனைத்தையும் அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதல்ல.

புலம்பெயர் தமிழர்களும் ஈழத்து தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் (இது வரை சொன்னவற்றின்பாற்பட்ட புரிதல்களோடு கேட்பது) ஒன்றுமட்டுமே!

பாவம் ஈழத் தமிழர்கள். அவர்களை விட்டுவிடுங்கள்!

 

(ராபேல்லின் முகபுத்தகத்தில் .)

 

சரிங்க தமிழக உறவுகளை ஒதுங்கி இருங்க என்று ஒரு எடுகோள் எடுப்போம் ........................அவர்களின் வேகத்தைப்போல செயல்படக்கூடிய ,நமபகத்தன்மையுள்ள யாராவது உங்களை [இந்த கட்டுரை ஆசிரியரும் ,அதற்கு வக்காளத்து வாங்குபவர்களும்] நாம் எதிர்பார்க்கிறோம் ..............செய்து காட்டுங்கள் பின் தொடர்வோம் .....................நீங்க படுங்க .அல்லது படுக்க துணிவுள்ளவங்கள தடுக்காதீங்க ....................சொறி [..............]  மாதிரி 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்

 

 

இந்த கடிதம் எழுதிறது தமிழ் இனத்துக்கே வந்த ஒரு சாபக்கேடா? :D

 

முறையற்றவிதத்தில் பட்டா போட்டால் யார் தான் ஏற்பார்கள்?

 

அனைத்தும் சட்டப்படியே செய்யப்பட்டது என்று நெடுமாறன் அவர்கள் அறிவித்துவிட்டார். இந்த பிரச்சனையை சட்டப்படி அணுகுவோம் என அவர் அறிவித்துள்ளார். உங்கள் காதுகளிற்கு அது வரவில்லையா?நொடுமாறன் அவர்கள் சொன்னது பொய் என்றால் அதற்கு அரசாங்கம் ஏன் மெளனம் காக்கின்றது? 

 

அரசுக்கு சொந்தமான (நெடுஞ்சாலைகள் மத்தியவா? மாநிலவா?) நிலத்தில் ஆக்கிரமிப்புச் செய்தால் அவர்கள் வந்து இடித்தால் என்ன செய்யலாம்?

 

நெடுஞ்சாலைகளில் வேறு எந்த சிலைகளும் விதிகளை மீறி கட்டப்படவில்லையா? கட்டப்பட்டுள்ளது என்று நிரூபித்தால் அதனை இடிப்பார்களா? 

 

இன்றைக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் விரும்புவது ஒன்றுபட்ட தமிழகத் தமிழர்களின் முனைப்பைத்தான்.

ஆமா என்னமோ நாங்க எல்லாம் ஒற்றுமைக்கு பேர் போன மாதிரி...

 

 

நீங்கள் ஓர் நினைவிடத்தைக் கட்டினீர்கள். அதற்கு போட்டிக்கு ஆள் அழைப்பு விட்டுத் திறப்பு விழா வைக்கிறீர்கள். அப்படியான திறப்பு விழாவிற்கான தேவை என்ன? இது நினைவிடமா அல்லது ஓட்டப்பந்தய மைதானமா?

 

எதுவாக வேண்டும் என்றாலும் இருந்துவிட்டு போகட்டுமே. இதில் உங்களிற்கு என்ன பிரச்சனை? அவர்களை போல் சிந்தனை உள்ளவர்களின் பணத்தில் அவர்கள் ஒரு குழுவாக அதனை கட்டினார்கள். வேண்டும் என்றால் நீங்கள் இதுபோன்ற தவறுகளை திருத்தி இதே போன்ற முயற்சியை முன்னெடுக்கலாமே. 

 

இன்றைக்கான தமிழர் உலகெங்கும் இருந்து கேட்பது, இரண்டு கிழமைகளுக்கு முன்பு சட்டசபையில் இருந்து வந்ததே அந்தக் குரலைத்தான்.

 

இந்த உலகெங்கும் உள்ள தமிழர்கள் என்ற புள்ளிவிபரம் எங்கே எடுத்தீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா? தீர்மானங்கள் போட்டு ஏமாற்றுவதும், ஏமாற்று தீர்மானங்கள் போடுவதும் தான் நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் போல் உள்ளது. 

 

தமிழகத்தின் ஆளும் கட்சியையும் எதிர்க் கட்சியையும் துணைக் கட்சிகளையும் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் பிறரையும் மற்றவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டு உங்களுக்கு ஈழத்து தமிழருக்காக்க குரல் கொடுக்க முடிந்தால் தாருங்கள். இது, இந்த ஒருமைப்பாடு உங்களால் எட்டாக் கனியானதாகக் கருதப்படுகிறதா!... சற்றே தள்ளியிருங்கள்.

 

ஈழம் என்ன உங்க குடும்ப சொத்தா? யார் யார் குரல் கொடுக்கனும் என்று நீங்கள் தீர்மானிக்க? ஒருமைப்பாடு முதலில் நம்மிடமிருந்து வரட்டும். 

 

 

வழிவிடுங்கள்.

 

நீங்களும் தான் :D 

 

இந்த நினைவிடத்தை ஓர் ஈழத்தமிழர் வந்து பார்க்க முடியுமா? அவர் எந்த நாட்டு குடியுரிமையில் இருப்பினும் அவர் ஈழத்தில் பிறந்தவராயின் தனியான விண்ணப்பப் படிவம் நிரப்பித்தான் விசா பெறவேண்டும் என்பது தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா?  அமெரிக்க குடியுரிமை உள்ள, ஆஸ்திரேலியக் குடியுரிமை உள்ள, பிரிததானியக் குடியுரிமை உள்ள ஒருவர் எளிதாகத் தமிழகத்திற்கு வந்து போகலாமே என்றுதான் தோன்றும். அது நடைமுறைச் சாத்தியமே இல்லை.

 

:huh: தெரிந்தவர்கள் இருந்தால் விளக்கம் தாருங்கள். நம்மளையே சிந்திக்க வச்சிட்டாங்கய்யா...

 

ஈழத்தில் பிறந்ததனால் தனியான சிறப்புக் கவனிப்பு அவர்களுக்கு உலகம் முழுதும் உள்ளது.

 

சொல்லவே இல்ல...

 

இருக்கின்ற போக்குவரத்து வாய்ப்புக்களில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்னையில் இருந்து வந்து போவதென்றால் ஆகும் சிரமங்களை எண்ணிப்பாருங்கள். பிற நாடுகளில் இருந்து சென்னைக்கு வருவதே பெரும்பாடு. இதில் தஞ்சையின் மூலைக்கு...?

 

கவலைப்படாதீங்க. ஒரு விமானச்சேவை தொடங்கிடலாம். உங்களை நேரா எங்க கொண்டு போய் விடணுமோ அங்கயே கொண்டு போய் விடப்படும். 

 

இதுக்கு மேல பொறுமை இல்ல (பேனா பிடிச்சவன் எல்லாம் கட்டுரை எழுத தொடங்கினா இப்படி தான். 

 

இப்படி ஏதாவது எங்களுக்காக செய்கிறவர்களை பகைக்க செய்து ஒன்றும் இல்லாமல்  பண்ணுவதே இப்படி கட்டுரை எழுதி பிழைப்பவர்களின் நோக்கம்

சட்டப்படி அனுமதி இல்லை என்றால் அதை கட்டும் போது ஏன் சட்டப்படி நடவடிக கை எடுக்கவில்லை. பொதுவாக சட்டத்தை மீறி ஒரு கட்டடம் கட்டப்பட்டால் முறைப்படி நோட்டீஸ் கொடுத்து அதை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அதன்பின்னர் நீதிமன்ற ஆணையின் பிரகாரம் இடிக்கப்படுவதுதான் உலக நடைமுறை. எந்த முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவா இடிக்கப் படுவது காடைத்தனம். சட்டத்தின் ஆட்சி இல்லாத இந்தியாவின் காட்டுமிராண்டித்தனம். ஜனநாயகம் தெரியாதவர்கள் என்று புலிகளைச் சாடுபவர்கள் எங்கே? புரியவில்லை.. பாலியல் வல்லுவை எதிர்க்க முடியாவிட்டால் அதை சந்தோசமாக அனுபவித்துவிட்டு போங்கள் என்று பெண்களுக்கு புத்திமதி சொன்ன காவல்துறையை புலனாய்வுத் தலைவரைக் கொண்ட நாடெல்லவா?

Edited by tulpen

இந்த அலசலின் சுருக்கம் என்ன எண்டால்...   நாங்களும் சாப்பிட மாட்டம்  உங்களையும் விட மாட்டம்....   மீறி செய்தால் நொட்டை சொல்லுவம்.... !!!   

 

ஆனால்  நவனீதம் பிள்ளை வந்தால் , விக்கினேஸ்வரன் வந்தால் , டேவிட் கமரூண் வந்தால் ,  எல்லாம் ஓடி செண்று தங்கட பிரச்சினைகளை சொல்ல வரும் மக்களுக்கு தெரியும் ஏன் போகிறோம் எண்டது அது எங்களுக்கும்  தெரியும்....    

 

அப்படி இல்லையா இந்த வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்பதை எனக்கு புரிய வையுங்கள்.... 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஆம் இதை கட்டிய விதம்....
கட்டிய இடம் ....
அதை திறந்து வைத்த நபர்கள் ......
 
எல்லாம் பிழைதான்.
 
எல்லாம் சரியாக தெரிந்த நீங்கள் சொறிந்து கொண்டிருந்தால் ......??
 
சரியானது தெரியாதவர்களால் இதுதான் முடியும்.
 
உங்களால் முடிந்தால். 
இதுவரையும் இறந்த தமிழனுக்காக ஒரு கல்லையாவது நடுங்கள்.
அப்போது புரியும் ஒருகல்லை அதுவும் இறந்த மனிதருக்கு வைக்கும் நினைவு கல்லை புடுங்க இத்தனை நாதாரிகள் இருக்கிறார்களா என்று.
 
அவன் அவன் எங்கோ பிறந்தவன் ஈழத்தமிழனின் இறந்த செய்தி கேட்டு. தன்னை தானே பற்ற வைக்கிறான். இன உணர்வு இரத்தத்தின் துடிப்பு அவர்களையும் இரையாக்கி போகிறது. குனி குறுகி .... வெட்கி தலை குனிந்தே இப்போ தமிழன் வாழுகிறான்.
இந்த கடதாசி வர்ணங்கள் அடிப்பதென்றால் எமக்கு இதைவிட ஆயிரம் மடங்கு அதிகம் தெரியும்.
எதோ கடதாசியில் விடுதலை காட்டுவது  என்பது இமயம் ஏறுவதுபோல் அதுக்கு ஒரு பில்டப்பு.
 
 
 
 
தமிழர்கள் இப்படியெல்லாம் இறந்துபோனார்கள் ....... என்று அடுத்த சந்ததிக்கே சொல்ல முடியாதவர்களாக நிற்கிறோம்.
துகிலுரியபட்டு கோமனங்களுடன் நிற்கிறோம்...................
இப்போதும் அதிகார வர்கத்தின் அகங்காரம் அடங்கவில்லை.
அடி வாங்கி இருந்தால்தான் ................ யார் யார் எல்லாம் அடிக்கிறான் என்பது தெரிந்திருக்கும்.
 
போலி ஜெனநாயகத்தை பேப்பரில் படித்தவர்கள் நீங்கள்..........
உண்மை ஜெனனயக்த்தை நேரில் பார்த்தவர்கள் நாங்கள்.
 
முட்டையில் மயிர் பிடுங்குவதை தவிர  கடந்த 30 வருடத்தில் நீங்கள் கிழித்தது ஏதும் இல்லை.
இப்போ அதி உச்ச போரில் இருந்து சேலை கிழிந்து வந்த தாய்களுக்கும்  ஏதும் ஈர்ந்ததில்லை.
 
இது உணர்வுள்ள மனிதரின் போராடம்.
விலங்குகளில் இருந்து கொஞ்சம் விலகி மானத்தோடு வாழ துடிக்கும் மனிதரின் சரா சரி வாழ்க்கை.
 
முட்டையில் மயிர் பிடுங்க பிறந்த உங்களுக்கு புரியாமல் போவதில்....... அதிசயிக்க ஏதும் இல்லை.
 
காகிதத்தில் வர்ணம் அடித்து ......... இணையத்தில் ஏற்றுங்கள்.
சுய விளம்பர தாரர்களின் தொல்லைகளை இணையத்தின் முன்பே தாங்க பழகிவிட்டோம்.
  • கருத்துக்கள உறவுகள்
நெடுஞ்சாலையின் பகுதிக்குள் .........
இந்த நினைவு முற்றம் ஒன்றுதான் இந்தியாவிலேயே இருக்கிறது????
 
துரத்தி துரத்தி அடிக்கிறான் .............
முன்பு புலியை சொல்லி அடித்தான்.
 
அப்போ இலகு காத்த கிளிபோல காவல் இருந்து எப்போ புலி ஒரு தவறு விடும் என்று தவம் கிடந்தது. புலியில் இருந்த ஒருவன் ஏதாவது ஒரு தவறை செய்தால். புலி புலி புலி என்று புலி வாந்தி எடுத்து. 
அதிகார வர்க்கத்தின் அனைத்து கொடூரங்களையும். அதற்குள் போட்டு மூடி மெழுகி வந்தீர்கள்.
இப்போ புலி இல்லை.
 
தமிழன் என்பதால்தான் தேடி தேடி அடிக்கிறான்.
ஒரு நொடி என்றாலும் உங்களது வாழ்நாளில் தமிழனாக இருக்க முயற்சி செய்து பாருங்கள். எத்தனை கைகள் ஓங்குகிறது என்று அப்போ தெரியும்.
 
அடிப்பவர்கள் இப்போதும் ஜெனனாயகமாக அடிக்கிறார்களாம்.
வேண்டும் நாங்கள்தான் பயங்கரவாதிகளாக கத்துகிறோமாம்.
 
புறம்போக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.