Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள்.


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர்.


இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர்.

Police%20Jaffna1.JPG

Police%20Jaffna2.JPG

 

முன்னர் வந்த செய்திகள்:

 

 

இராணுவப் புலனாய்வாளர்களின் வட்டமிட யாழ் பொதுசன நூலகத்தை சுற்றி வளைத்து பொதுமக்கள் திரண்டிருப்பதாக களத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் உறவுகள், முக்கிய தமிழ் அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், யாழ் பல்கலைக் கழக சமூகத்தினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பெருந்திரளான மக்கள் திரண்டு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் வருகையை எதிர்பார்த்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்தார். பாதாகைகள் சுலோகங்கள் சகிதம் திரண்டுள்ள மக்கள் ஏற்கனவே காலை அங்கு விஜயம் செய்த பொதுநலவாய மகாநாட்டு பிரதிநிதிகளை வழிமறித்து தமது பிரச்சனைகளைத் தெரிவித்ததாக கூறுகிறார்.

 

ராணுவப் புலனாய்வாளர்களின் சுற்றி வளைப்புகளிடையே காணாமல் போனோரின் உறவுகளின்  போராட்டம்  ஆரம்பம்:- யாழ் செல்லும் கமரூனிடம் தம் கவலைகளைச் சொல்வார்களா உறவுகளைத் தொலைத்தவர்கள்?

15-11-2013 - 4:44 - முதலாம் இணைப்பு

காணாமல் போயுள்ள தமது உறவுகளது நிலையினை கண்டறிந்து தருமாறு கோரி அவர்களது உறவுகள் நல்லூர் ஆலய முன்பதாக இன்ன்று காலை முதல் (15.11.13) அடையாள எதிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.

missin%20jaff1.jpg

 

இன்று காலை 10 மணியளவினில் அங்கு குவிந்த நூற்றிற்கும் மேலான காணாமல் போனரது குடும்ப உறவுகள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களிற்கு ஆதரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமது கட்சியினர் சகிதம் பிரசன்னமாகியிருந்தனர்.


இதேவேளை மத தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சார்ந்தவர்களும் ஆதரவாக அங்கு பிரசன்னமாகியிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமது போராட்டத்தை அங்கு முன்னெடுத்திருந்த காணாமல் போனோரது உறவுகள் பின்னர் அங்கிருந்து யாழ்.பொதுசன நூலகத்தினை சென்றடைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள பிரிட்டன் பிரதமரிடம் தமது நிலையை சொல்ல அவர்கள் முயற்சிப்பதாக தெரியவருகின்றது. அவர்கள் தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வாளர்களினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால் அச்சமான சூழலொன்றும் காணப்படுகின்றது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99031/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன உறவினர்களை தேடி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்

 

ஆதவன்
 
வடக்கில் யுத்தகாலத்தில் காணாமல் போன தமது உறவினர்களை மீட்டு தருமாறு கோரி போராட்டம் ஒன்று இன்று காலை யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
 
சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட இந்தப்போராட்டத்தில் அரசியல் தலைவர்களும் தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
 
காணாமல் போனவர்களின் நிலையை பகிரங்கப்படுத்த கோரியும் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் உறவினர்கள் கண்ணீர் மல்க உறுக்கமாக வேண்டுகோள்விடுத்தனர். காணாமல் போன எனது பிள்ளையைத்தாருங்கள் நான் அனாதைபோன்று தெருவில் இருந்து கண்ணீர் விடுகின்றேன். உங்களுக்கு இரக்கமேயில்லை என்று இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்ட தாய் பலர் கதறி அழுதனர்.
 
எனது அண்ணாவை எங்கே வைத்திருக்கின்றீர்கள் நான் பாடசாலைக்கு செல்லக்கூட முடியாமல் அவரைத்தேடிக்  கொண்டு திரிகின்றேன் என்று சிறுமியொருத்தி கண்ணீர்விட்டு கதறி அழுதால் இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் காணாமல் போன தமது உறவுகளை மீட்க அழுது புலம்பினர்.DSC_0081.JPGDSC_0088.JPGDSC_0097.JPG
DSC_0005.JPG
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பிரதமரின் உதவியாளர்களிடம் - மகஜர், காணாமல் போனவர்களின் படங்கள் உள்ளிட்ட விடயங்களை மக்கள் கையளித்தனர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Jaffna%20Media%204_CI.JPG

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் காணாமல்  போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டம் யாழ்நகரின் இயல்பு வாழ்க்கையினை இன்று பாதிக்கச்செய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையினில் அவர்கள் பிரிட்டன் பிரதமரை சந்திக்காத வகையில் பிரதம நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது. மறுபுறத்தே அரச ஆதரவு படைத்தரப்பின் ஏற்பாட்டில் 50 பேரைக்கொண்ட கும்பலொன்று சனல்-4 இற்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. பிரிட்டிஸ் பிரதமர் அவர்களை பார்வையிடும் வகையில் நூலக நுழைவாயிலினில் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருந்தது.

can1.jpg

தமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இத்தகைய ஏற்பாடுகள் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்த கட்டுப்பாட்டினை தகர்த்து மக்கள் பொலிஸாரை மீறி நுழைவாயிலினை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்நிலையில் அவர்களை பெண்கள் மதகுருமார் என பாகுபாடேதுமின்றி தாக்க பொலிஸார் முற்பட வன்முறை வெடித்தது. பொலிஸ் தடையினை தாண்டி புறப்பட்ட மக்கள் அங்கிருந்து சென்று பிரதான நுழைவாயிலை முற்றுகையிட முற்பட அங்கு ஏற்கனவே வந்து கூட்டமைப்பின் மூவர் அணியினை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருந்தார். இதனிடையே அழைத்து வரப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட கும்பல் தப்பி ஒடியிருந்தது. எனினும் பிரதமருடன் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மக்களது உணர்வுகளை புரிந்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டிருந்தனர். சனல்-4 அணி நேரடியாக தனது அறிக்கையிடலை செய்திருந்தது.

can2.jpg


இதனிடையே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஸம் எழுப்பியிருந்தனர். மூடப்பட்ட காரினுள் மக்களை சந்திக்காது தப்பி செல்ல முற்பட்டவேளை இந்நெருக்கடிக்குள் அவர் அகப்பட்டுக்கொண்டார். எனினும் பின்னர் அவரும் நூலக பின் கதவினால் சென்றிருந்தார்.


எனினும் தமக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இன்றைய சந்திப்பு பற்றி தகவல் தரும் வரை விலகமாட்டோமெனக ;கூறி மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99041/language/ta-IN/article.aspx
 

 

  • கருத்துக்கள உறவுகள்

||இதனிடையே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஸம் எழுப்பியிருந்தனர். மூடப்பட்ட காரினுள் மக்களை சந்திக்காது தப்பி செல்ல முற்பட்டவேளை இந்நெருக்கடிக்குள் அவர் அகப்பட்டுக்கொண்டார். எனினும் பின்னர் அவரும் நூலக பின் கதவினால் சென்றிருந்தார்.|| நல்ல தலைவர்.

கொதித்து எழுந்தது யாழ்ப்பாணம்!

November 15, 2013
செய்திகள்0
5
1452141_612252758830971_13743377_n-1.jpg
முள்ளி வாய்க்காலுக்கு பின்னர் காணாமல் போன தம் உறவுகள் எங்கே? என்று பிரிட்டிஷ் பிரதமர், கேமரூனின் வாகனத்தை மறித்து உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!இன்று பிரிட்டிஷ் பிரதமர் திரு கேமரூன் அவர்கள் யாழ்பாணத்துக்கு விஜயம் செய்தபோது,அவர் சென்ற காரை மறித்து நூற்றுக் கணக்கான தமிழ்ப்

பெண்களும் ஆண்களும் போராட்டம் நடாத்தினர்.அனைவரும், சென்ற முள்ளி வாய்க்கால் அனர்த்தத்தின்போது இலங்கை அரசால் கைது செய்யப் பட்ட..அல்லது காணாமல்போன தமது பிள்ளைகளை,தமது கணவன்மாரை,உறவினரை கண்டு பிடித்து தருமாறு பதாகைகளை தூக்கி போராட்டம் நடாத்தினர்.உணர்வுகளின் பரிமாணங்கள் ஒன்று கூடி நடாத்திய போராட்டத்தை கண்டு பிரிட்டிஷ் பிரதமர் அதிர்ந்து விட்டார்.இந்த சம்பவம் நாளை கொழும்பில் ,பொதுநலவாய மாநாட்டில் எதிரொலிக்கும் என்று திடமாக நம்பலாம்!

 

 

http://www.velichaveedu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA/

 
 
 
மு.வே.யோகேஸ்வரன்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பதற்றம்....... சிங்கள காவல்துறைக்கும் தமிழர்களுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கிறது.......

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Cameron to hear pain of war on historic Jaffna visit  
 
 
 

 

Sitting in his home in Jaffna, Kaanamylnathan had a simple message for Cameron, who is leaving a Commonwealth summit and heading north to shine a spotlight on Colombo's alleged abuses against ethnic minority Tamils.Surrounded by bullet holes and photos of bloodied reporters, newspaper editor M.V Kaanamylnathan readied Friday for an historic visit by British Prime Minister David Cameron to Sri Lanka's former warzone.

"One, we are suffering as a press and the rights of our readers are still suffering even after the war," Kaanamylnathan said he would tell Cameron, as his staff posted photos of their reporters beaten by security forces over the years to the walls.

"This needs to be told to the international world," the editor told AFP.

"Everyone is pretending that everything is okay, that Tamils have equal rights, but it's not true."

Cameron, who will become the first foreign leader to visit Jaffna since Sri Lanka won its independence from Britain in 1948, is to visit the Tamil newspaper's offices and the editor's home in the same compound.

The newspaper Uthayan ("The Sun") has a long history of coming under deadly attack by security forces because of its reporting of alleged abuses during the war.

The conflict, in which more than 100,000 people were killed, ended in May 2009 in an onslaught against the Tamil Tiger rebels on their last stronghold, but that did not signal an end to the paper's woes.

As recently as April, its printing presses were torched while Kaanamylnathan himself was attacked in 2001.

 

"We expect the prime minister's visit will not make a change to the government's and the paramilitaries' attitudes towards us," he said in his lounge room, which still has bullet holes from yet another attack.

During his short visit, Cameron is also expected to meet the chief minister of Sri Lanka's northern province, a Tamil who won provincial elections earlier this year.

A short distance from Jaffna's town library, where the meeting is set to take place, about 100 mainly women, whose relatives went missing during and after the war, are gathering to hold a peaceful protest.

Among them is Subalashimi Tharshan, who hopes the prime minister's visit will force Sri Lankan President Mahinda Rajapakse's Sinhalese-majority government to finally tell the women the fate of their sons and fathers.

"The government should be answerable for what they have done. International people coming here must pressure the president to tell us where they are," she told AFP clutching a large photo of her son Rajathurai.

Tharshan, 48, travelled some 100 kilometres (62 miles) by private bus from Mannar in the north for Cameron's visit, while other women also came from neighbouring districts.

She said her son was recruited as an 18-year-old to fight alongside the Tigers in 2007. He was held in a northern military-run camp after the rebels were defeated in 2009, but has not been seen or heard of since.

She said she was not scared of retribution by the military which still has a large presence in the north four years after the end of the war, despite fears plain-clothed officers will be present at the protest.

"We are not afraid. They have taken our children, what can they do?" she said, her voice breaking, as women sat nearby in the dirt outside a Hindu temple.

Emmanuel Sebamali, a Catholic priest who has organised the protest, said he wanted Cameron to meet those still carrying the daily burden of the war's legacy.

"We want David Cameron to see the suffering of our people, hear about the human rights violations ... and the killings," he told AFP.

tha/co/erf

http://www.globalpost.com/dispatch/news/afp/131115/cameron-hear-pain-war-historic-jaffna-visit

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பதற்றம் --சிறிலங்காவின் காவல்துறை மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மக்கள் எதிர் தாக்குதல்................ ** இப்போது வந்த காணொளி **

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பதற்றம் --சிறிலங்காவின் காவல்துறை மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மக்கள் எதிர் தாக்குதல்................ ** இப்போது வந்த காணொளி 

 

 

இதில்  காவல்துறைக்கு பின்னால் நின்று படம் எடுப்பவர்கள் யார்?????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைவரின் பாதுகாப்பையும் மீறி சென்றது அந்த பெண்களில் தான் பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.