Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணொளி : இலங்கை நிலவரம் தொடர்பாக மொரிசீயஸ் பிரதமர் சணல்-4 விற்கு வழங்கிய பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தான் 2015 ல் பொது நல மா நாட்டை நடத்த மாட்டேன் எனக் கூறி உள்ளார். மற்றும் தமிழருக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும், போர் குற்றங்களுக்கு விசாரணை தேவை. நல்ல கருத்து. நன்றி மொரிசியஸ் பிரதமரே

  • கருத்துக்கள உறவுகள்
maur.jpg

 

மொரீசியஸ் பிரதமர் ராம் கூலம் அவர்களின் உடலில் ஓடுவது.... மனித இரத்தம்.
நாம்... எதிர் பார்க்காத இடத்திலிருந்து, நமக்கு ஆதரவு கிடைக்கும்.
அதனை.. தகுந்த முறையில்... அணுக வேண்டியது, நமது கடமை.
மொரீசியஸ் பிரதமர் அவர்களுக்கு நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளொட் இயக்கத்துக்கும் முந்தி மொரீசியஸிலை நல்ல வரவேற்பு இருந்தது....இப்ப என்ன மாதிரியெண்டு தெரியேல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

மொரிசியஸூக்கு அழுத்தம் கொடுத்தார் கமலேஷ் சர்மா! - அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் நவீன் ராம் கூலம்!!

கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிப்பது என மொரிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த பொதுநலவாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பை அந்நாடு இழந்துள்ளது.

2015ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை மொரிசியசில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த பொதுநலவாய மாநாட்டை நடத்தும் நாட்டின் தலைவர் அதற்கான பொறுப்பை கொழும்பு மாநாட்டில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதாக மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மொரிசியஸ் அடுத்த மாநாட்டை நடத்துவதானால், பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம் கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பது என்ற முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், இதனால் அடுத்த பொதுநலவாய மாநாட்டை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொரிசியஸ் பிரதமரின் இந்த முடிவினால் 2015ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிசியஸ் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=0ce11c87-1637-419f-96f5-16f4d7ac2848

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதரை  இன்று  பார்த்தேன்

நன்றி  ஐயா

மொரிசியசின் முடிவை அடுத்து அடுத்த பொதுநலவாய மாநாடு Malta இல் நடைபெறவுள்ளது.

 

Malta has been chosen to host the next summit, in 2015, says the BBC's James Robbins, in Colombo.

 

Mauritius, which was due to hold the summit, boycotted the meeting in Colombo in protest at Sri Lanka's human rights record.

 

http://www.bbc.co.uk/news/world-asia-24977597

"இதையடுத்து, மொரிசியஸ் அடுத்த மாநாட்டை நடத்துவதானால், பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம் கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்."

 

http://www.pongutham...f5-16f4d7ac2848

 

அவர்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமல்ல என்று இந்தியன் சர்மாவுக்கு காட்டியுலார்கள். நன்றி.

ஆயுத போராட்ட கால ஆரம்பத்தில் பகிரங்கமாக எங்களை முதலில் ஆதரித்தவர்கள். அப்போது இருந்த பிரதமர் ஜெகநாதன் (??) நல்ல ஆதரவாக இருந்தார். முதலில் Plote அவர்களுடன் தொடர்பு வைத்ததால் அவர்களுக்கு ஆதரவு இருந்திருக்கும் என நினைக்கிறேன். இயக்கங்கள் தங்களுக்குள் அடிபட்டதால் ஒதுங்கிப் போனார்கள்.

அங்குள்ளவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். ஆனால் தமிழ் பேசத் தெரியாது. முன்பு என்னுடன் 'முருகன்' எனும் குடும்பப் பெயர் உள்ளவரும் வேலை செய்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.