Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசின் ஒட்டுமொத்த காடைத்தனங்களையும் புட்டு வைக்கிறது கம்ரூனின் விஜயம்.

Featured Replies

இதுவரை சென்ற யாரும் இந்தளவிற்கு செல்லவில்லை.

போக கூடாது என்ற கண்ட பேரணி கள்தான். கொழும்போடு இல்லது அவரை இங்குவரை கூட்டி சென்றுள்ளது.

 

 

இதில் உண்மை உள்ளது.

 

கமரூன் இலங்கைக்கு செல்வதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்து சந்தோசமாக அனுப்பியிருந்தால் இன்று நடந்தவை கூட நடந்திருக்காது. :rolleyes:

 

பிரித்தானியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு கமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதே போல் Frances Harrison கூட தான் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படத்தை பார்க்குமாறு கூறியிருந்தார். Sri Lanka Campaign இன்னொரு பக்கத்தால் அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் பற்றி கூறி அழுத்தம் கொடுத்தார்கள். twitter இல் பார்த்தேன். சேனல் 4 உடனுக்குடன் செய்திகளை பிரசுரித்து அதை willum hague க்கும் கமரூனுக்கும் அனுப்பி அழுத்தம் கொடுத்தபடி இருந்தது. (அனைத்தையும் விட இது மிக முக்கிய இடத்தை பெறுகிறது.)

 

எனவே தனது பொதுநலவாய மாநாடு பயணத்தை கமரூன் நியாயப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதன் பலனே இது.

 

இவை அனைத்துமற்று கமரூனின் பயணம் அமைந்திருந்தால் நிச்சயம் இப்பொழுதுள்ள நிலை ஏற்பட்டிருக்காது. அதை அர்ஜுன் அண்ணா புரிந்துகொள்ள வேண்டும். :rolleyes:

 

அதே போல் பொதுநலவாய நேரத்தில், அதுவும் கமரூனின் யாழ் விஜயத்தின் போது அங்கு தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

செய்திகளில் வந்தமை முக்கிய ஆதாரம். அதை அங்கு ஒழுங்கு செய்தவர்களும் போராடியவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Edited by துளசி

அனுராதபுரத்தில் சனல் 4 ஐ மறித்ததில் இருந்து உலகுக்கு தெரிய வந்தது சிறிலங்காவின் பத்திரிக்கை சுதந்திரம்.

 

இது தான் point :) இது நடக்காவிட்டால் கமரூனின் யாழ் பயணமும் ஒரு தலைப்பு செய்தியுடன் முடிந்திருக்கும். :)

 

பொலிசை நாடு எங்கும் பிரிக்க நேர்ந்துவிட்டது. அத்தோடு சில நிபந்தனைகள் இருக்கும் போது சிலவற்றை செய்ய முடியாது என்று பொலிசில் சிலர் நினைக்கிறாகள் போல் இருக்கு. அவர்கள் UNP ஆக இருக்கலாம். அல்லது கோத்தாவால் பதவி இறக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.  இதை சனெல்-4 இன் முன்பு, அரசு கொடுத்த கடமைகளை ஆர்வமாக விழுந்து விழுந்து நிறைவேற்றாத சில பொலிசுகள் வெளிக் காட்டியிருக்கிறார்கள். இது யாழ்பாணத்திலும் காணப்படுகிறது

 

எந்தக் கட்டத்திலும் பிரதமர் போகும் இடமெல்லாம் அரசு நேரத்திற்கே பொலிஸ் போட்டிருக்க வேண்டும். அது மகிந்தாவுக்கு 100% நம்பிக்கையானதாக இருக்க வேண்டும். ரஜீவுக்கு நேவியை கொண்டு J.R செய்வித்ததை கமருனுக்கு செய்திருந்தால் பொதுநலவாய மகாநாடு முடிவடைந்திருக்கும். :lol:  ஒரே ஒரு சிறு கூட்ட பொலிசை நம்பிக்கையானவர்கள் என்று கூறி  1 1/4 மணித்தியாலத்திற்குள்  பலாலி,  யாழ்ப்பாணம், சுண்ணாகம்  இடம் மாற்ற முடியாது. இந்த சிக்கல் யாழ்ப்பாணத்தில்  பொலிசை சரியாக திட்ட மிட்டு பாவிக்க முடியாமல் பண்ணியது.

 

கமருனுக்கு முன்பாக அரசு தான் யாழ்ப்பாணத்துக்காக மினக்கெட்டு தயார்ப்படுத்தி வைத்திருக்கும் ஆமியை போடவும் முடியவில்லை.

 

அங்கு நின்ற பொலிஸ், ஆர்ப்பாட்ட காரர்கள்  வயது போன கிழவிகள் தான் என்றாலும் அவர்கள் தடையை உடைத்துப்போட்டு ஓடும் போது அவர்களை நாகரிகமான முறையில் தடுப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. ஓரிருவர், பதவிக்காகவோ அல்லது பயத்தாலோ கிழவிகளை அடித்தார்கள். மற்ற்வர்கள் தடையை உடைப்பதை தடுக்க முடியாது என்ற மன நிலையில் காணப்பட்டார்கள். ஓப்பீட்டளவில் வ்யதில் இளையவர்களான கஜேந்திரனும், எனக்கு பெயர் தெரியாத அந்த பாதிரியாரும் மூர்க்கமாக பொலிஸ் தடுப்பை திரும்பத் திரும்ப உடைத்தாதால் பொலிஸ் குழம்பி போய் இனி துவக்கை இழுக்கவா என்று தடுமாறியது படங்களில் தெரிகிறது. இது தான் சரித்திரத்தில் எங்கும் நிகழாதவாறு, மிகமோசமான அடக்கு முறை மிருகங்களாக செயப்பட்டு வந்த இலங்கைப் பொலிசை மீறி, கிழவிகளால் பொலிஸ் தடைகள் உடைக்கப்பட்டு செனெல்-4யை சென்று சேர முடிந்தது.

 

கூட்டமைப்பின் எல்லோரும் உண்ணாவிரத்ததில் இருக்கிறார்கள். அனந்தி ஒரு ஆள் ஆர்ப்பட்டத்தில் வயது போகாத இளைய பெண். சுமந்திரன் பிரதமருடன் பயணித்திருக்கலாம் போலிருக்கு. 

 

கவனமாக திருட்டுதனத்தை திட்ட்மிட்டுக்கொடுக்க முடியாதவாறு நேரத்திற்கே கதிர்காமரை போட்டுத்தள்ளிவிட்டார்கள். இதனால் மகிந்தாவின், திருட்டுத்தனத்தையும், வெறித்தனத்தையும் "சிங்கள ராஜதந்திரமாக " எழுதிவந்த தமிழ் சூரப்புலி எழுத்தாளர்கள் இந்த பயங்கரமான பொதுநலவாய P.R. disaster ல் என்ன நடந்தது என்று விளக்கங்கள் எழுத முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். 

கூட்டமைப்பின் எல்லோரும் உண்ணாவிரத்ததில் இருக்கிறார்கள். அனந்தி ஒரு ஆள் ஆர்ப்பட்டத்தில் வயது போகாத இளைய பெண். சுமந்திரன் பிரதமருடன் பயணித்திருக்கலாம் போலிருக்கு.

 

இந்த வீடியோவில் அனந்தி அக்கா, போலிஸ் தடையை உதறித்தள்ளி ஏதோ மகஜரை கொடுப்பதற்காக முயற்சிக்கிறார்.

 

Edited by துளசி

mr.கமரூன் நீங்கள் யாழ் சென்றது நல்லவிடையம் ,நீங்கள் சம்பந்தருடனும் ,விக்கியுடனும் நின்று எட்டிப்பார்த்தது இங்கு பலருக்கு அலேஜியாக இருக்காம் :icon_idea:இதைவிட இன்னொன்றையும் சொல்லியாகனும் நீங்கள் போறஇடமெல்லாம் என் சுமந்திரனை அழைத்து சென்றநீங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

mr.கமரூன் நீங்கள் யாழ் சென்றது நல்லவிடையம் ,நீங்கள் சம்பந்தருடனும் ,விக்கியுடனும் நின்று எட்டிப்பார்த்தது இங்கு பலருக்கு அலேஜியாக இருக்காம் :icon_idea:இதைவிட இன்னொன்றையும் சொல்லியாகனும் நீங்கள் போறஇடமெல்லாம் என் சுமந்திரனை அழைத்து சென்றநீங்கள் :D

 

 

தயவு  செய்து

எல்லா இடத்திலும் அரசியல் வேண்டாமே...

தயவு  செய்து.

தயவு  செய்து................

டேவிற் கமரூன் போனாலென்ன கார்ப்பர் போகாமல். விட்டாலென்ன இருவரும் மனித உரிமை, போர்க்குற்ற சுயாதீன விசாரணை, தமிழருக்கான நீதியான அரசியல் தீர்வு என்ற விடயத்தில் உறுதியுடனும் நேர்மையுடனும் உள்ளார்கள். அவ்விடத்தில் தமிழ்மக்கள நிம்மதி அடையலாம். பக்கத்து நாட்டு பண்டாரப் பர்தேசி பயல் போனலும் தமிழரை கருவறுப்பான் போகாமல்விட்டாலும் எம்மை கருவறுப்பான். இப்போதுகூட என்ன திருட்டு சதித்திட்டம் தீட்டுகிறானோ யாரறிவார். இந்த பூமிப்பந்தில் மிகவும் கீழ்தரமான நாடு என்றால் அது இந்த பண்டார நாடு தான். திரு விக்கினேஸ்வரன் அவர்களும் , சம்பந்தர் அவர்களும், சுமந்திரன் அவர்களும் தமது ராஜதந்திரம் எல்லாவற்றையும் பாவித்து அவர்களுடன் நணபர்கள் போல் நடித்தாவது இந்திய ஈனப்பிறவிகளிடம் இருந்து தமிழரை காப்பாற்ற இறைவன் அவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்.

Edited by tulpen

இந்தியாவின் அவிட்டுக்கள் எல்லாம் கொழுத்தி முடிந்துவிட்டன. இந்திய மனித உரிமைகள் சபையில் சரித்திரம் காணாத தோல்வியை தவிர்க்க இனி கரை மாறி கதைக்கும். மகிந்தவுக்கும் அது தெரியும்.

 

ஆனால் இந்தியாவுக்கு தனது கடைசி ஆனால், நியாமான ஆசையை மேற்குநாடுகளிடம் இராஜதந்திர முறையில் வெளிவிடப்பார்க்கும். அதாவது, தான் இருக்க தன் கோடிக்குள் நடக்கும் சமாசாரத்தில் மேற்குநாடுகள் தனக்கு முதல் இடம் தந்து விட்டு அவர்கள் இரண்டாம் இடம் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் டேவிட் கமருன் தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவேன் என்று வெளிப்படையாக பேசும் போது, அப்படி ஒரு கோரிக்கையை இந்தியா முன்னால் வைக்கும் போது, 4 1/2 ஆண்டுகள் இந்தியா எதையும் செய்ய முடியாததால் இனி இந்தியாவுடன் மட்டும் தனிய விடமுடிது என்றும், இதை உலக சமாசாரமாக வேண்டும் என்றும்தான் பதில் அளிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

...பக்கத்து நாட்டு பண்டாரப் பர்தேசி பயல் போனலும் தமிழரை கருவறுப்பான் போகாமல்விட்டாலும் எம்மை கருவறுப்பான். இப்போதுகூட என்ன திருட்டு சதித்திட்டம் தீட்டுகிறானோ யாரறிவார். இந்த பூமிப்பந்தில் மிகவும் கீழ்தரமான நாடு என்றால் அது இந்த பண்டார நாடு தான். ..

 

'தமிழர் நாடு' நீங்கலாகத் தானே? :o:(

 

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழர் நாடு' நீங்கலாகத் தானே? :o:(

 

 

 

அப்படித்தான்   சொல்ல  ஆசை

ஆனால் அனுபவம் அதை இல்லை  என்கிறது

தமிழர்  நாட்டுத்தலைவர்கள் எம்மை பலி  கொடுத்தது  தான் இதுவரை நடந்திருக்கிறது :(  :(  :(

 

தமிழர்நாட்டு மக்கள் நீங்கலாக என்று சொல்லலாம்........ :)

நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள். நீங்கலாக. எமது உறவுகளான உங்களின் அன்பை நாம் என்றும் மதிக்க கடமைப்பட்டுள்ளோம். அவர்களைக்கூட நாமாக வெறுக்கவில்லை. அவர்கள் தான். வெறுக்கிறாரகள் எந்த காரணமும் இன்றி எம்மை கருவறுக்க நினைக்கிறார்கள்.

Edited by tulpen

கமரூன் பற்றி ஒன்றும் எழுதாமல் மதில் மேல் பூனையாக இருந்து விட்டு சந்தர்ப்பம் பார்த்து நான் அப்பவே சொன்னேன் என்று புளுக வேண்டாம். டேவிட் கமரோனோடு சனல் 4 ஐ சேர்ந்தவர்களும் சென்றாகள்.  தேனும் பாலும் ஓடுவதாக சொன்ன முக்கியமான ஆள் நீங்கள். அனுராதபுரத்தில் சனல் 4 ஐ மறித்ததில் இருந்து உலகுக்கு தெரிய வந்தது சிறிலங்காவின் பத்திரிக்கை சுதந்திரம்.

"நான் அப்பவே சொன்னேன் " என்று நான் எழுதியதாக நீங்களாகவே கற்பனை பண்ணி எல்லாம் கதை விட வேண்டாம் .

படம் காட்ட உண்ணாவிரதம்,போகாதற்கு நன்றி தெரிவித்து  ஊர்வலம் இதற்குள் எங்களால் தான் இவ்வளவும் நடந்தது தங்களுக்கு தாங்களே செர்டிபிகேட் புலி கொடி பிடித்தவன் கதை கேட்டு எவனும் நடக்கவில்லை ,

உலகிற்கு தெரியும் இலங்கையில் என்ன நடந்தது  நடக்கின்றது என்று .

"நான் அப்பவே சொன்னேன் " என்று நான் எழுதியதாக நீங்களாகவே கற்பனை பண்ணி எல்லாம் கதை விட வேண்டாம் .

படம் காட்ட உண்ணாவிரதம்,போகாதற்கு நன்றி தெரிவித்து  ஊர்வலம் இதற்குள் எங்களால் தான் இவ்வளவும் நடந்தது தங்களுக்கு தாங்களே செர்டிபிகேட் புலி கொடி பிடித்தவன் கதை கேட்டு எவனும் நடக்கவில்லை ,

உலகிற்கு தெரியும் இலங்கையில் என்ன நடந்தது  நடக்கின்றது என்று .

 

 

இலங்கையிலை 1958 ல் இருந்து படுகொலைகள் நடக்குது...  தமிழ் மக்களை மட்டும் அல்ல 60 000 மேற்பட்ட சிங்கள இனத்தவரையும் கொண்றதும் கூட சிங்கள அரசு தான் அப்போது எல்லாம் இல்லாத சத்தம் இப்ப போடுகிறார்கள் எண்டா காரணம் அவர்களுக்கு தெரியும் என்பதாலா...?? 

 

உங்களின் அறிவு அவ்வளவு தான் என்பது மட்டும் புரிகிறது... 

"நான் அப்பவே சொன்னேன் " என்று நான் எழுதியதாக நீங்களாகவே கற்பனை பண்ணி எல்லாம் கதை விட வேண்டாம் .

படம் காட்ட உண்ணாவிரதம்,போகாதற்கு நன்றி தெரிவித்து  ஊர்வலம் இதற்குள் எங்களால் தான் இவ்வளவும் நடந்தது தங்களுக்கு தாங்களே செர்டிபிகேட் புலி கொடி பிடித்தவன் கதை கேட்டு எவனும் நடக்கவில்லை ,

உலகிற்கு தெரியும் இலங்கையில் என்ன நடந்தது  நடக்கின்றது என்று .

 

நீங்கள் ஏற்கனவே சொன்னீர்களா இல்லையா என தெரியாது. ஆனால் இவ்வாறு நடக்குமென உங்களுக்கு ஏற்கனவே தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது. அவர்கள் வீணாக கொமன்வெல்த் மாநாட்டை எதிர்த்தார்கள் என்று கூற வருகிறீர்கள்.

கமரூனின் பிரயாணம் இவ்வளவு பேசப்படுவதற்கும் ஏனைய கலந்து கொண்ட நாடுகளின் பிரயாணம் பேசப்படாமைக்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

உலகத்துக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பது அப்பொழுதும் தெரியும், இப்பவும் தெரியும். எனவே அப்ப பேசாமல் இப்பொழுது பேசுவதற்கு காரணம் என்ன? எனவே இந்த நிலைக்கு வர பாடுபட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். (தனியே தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல.)

இது கொஞ்சம் தெளிவாக இருக்கின்றது துளசி ,

இன்று இலங்கைக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தங்களுக்கு தமிழர் அமைப்புகள் தொடக்கம் வேறு பல அமைப்புகளும் ஒரு காரணங்களாக இருந்தாலும் .,

மிக முக்கிய காரணம் சில அத்துமீறல்கள் நடந்தாலும் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து அதன் பின்  தமிழர் பிரச்சனைக்கு  ஒரு தீர்வை இலங்கை கொடுக்கும் என்று சர்வதேசம் நம்பியது .ஒபாமாவின் ஆலோசகர் ஒருவர் ராஜபக்சாவை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பேசிய பேச்சை அனைவரும் கேட்டோம் .

ஆனால் போரை வென்ற மமதையில் சிங்களம் வேறு பாதையில் போக முடிவெடுத்தது மாத்திரம் இல்லாமல் சர்வதேசத்தின் பேச்சை கேட்காமல் எங்களுக்கு தெரியும் எங்கட நாட்டில் என்ன செய்வது என்ற பாணியில் செயல்படுகின்றது .இதற்கு முக்கிய காரணம் இந்தியா அதற்கு கொடுக்கும் ஆதரவுதான் .

இந்தியாவை தாண்டி சர்வதேசம் குரல் கொடுக்க தொடங்குவதும் இந்தியா சில அழுத்தங்களால் குரலை இடைக்கிடை மாற்றி பேசுவதும் சிங்களத்தின் அணுகுமுறையை இனி மாற்ற வேண்டிவரும் என நம்புகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.