Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்தவர்கள் இல்லாத மத்திய கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது - போப் பிரான்ஸிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
pope-1352013-150.jpg

கிறிஸ்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை வத்திக்கான் ஒப்புக்கொள்ளாது என்று இராக், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க தலைவர்களிடையே பேசிய போப் பிரான்ஸிஸ் குறிப்பிட்டார். ரோம் நகரில் மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்து வந்த பேராயர்களை சந்தித்த போப், இந்தப் பகுதியில் குறைந்துவரும் கிறித்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பற்றி அவர்களுடன் விவாதித்தார். இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பல லட்சக்கணக்கான கிறித்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர்.

  

திங்களன்று போப் பிரான்ஸிஸ் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை சந்திப்பார். மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி வரும் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவர்களுக்கு மாஸ்கோ அதிக அளவில் ஆதரவு அளித்து வருகிறது. இவர்களில் பலர் ரஷ்ய குடியுரிமை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97381&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு நாதரின் அன்பைப் போதிப்பதை விட்டிவிட்டு அரசியல் பேசுகின்றார் பாப்பாண்டவர். பாவம் இயேசு நாதர், அவர் புனித இராயப்பரின் கால்களைக் கழுவினாராம். இங்க என்னவென்றால் அரசியல் நடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் பரிசுத்த பாப்பரசர் என்று அழைக்காமல் வெறும் பாப்பரசர் என்று அழைத்தால் போதுமானது என எண்ணுகின்றேன்! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கருத்துக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை, இருவரும் வெவ்வேறு வகையிலான மதவெறியர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகள்  இருக்கக்கூடாத  இடத்திலிருந்து கொண்டு

மண்ணாசை  கொண்டு பேசுகின்றார்

 

இதன் பிரதிபலன்களான

வன்முறையை  ஏவி  விடுகின்றார்

நவகாலனித்துவம் இவ்வாறு தான் தொடங்கியது......

இன்றைய  பொருளாதாரசிக்கலால்

மீண்டும்  அது பிறப்பெடுத்து

புறப்படுகின்றதா??? :(

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, இங்கே பாப்பாண்டவர் கூறியதற்கும் எமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா? ஈழத்தில் தமிழினம் இருக்கக் கூடாது, இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சிங்களப் பெளத்தப் பேரினவாதம் கூறுகிறது.இதேபோல பாலஸ்த்தீனம் உற்பட்ட அனைத்து அரபு தேசமும் இஸ்லாமியர்களுக்கே சொந்தமானது, இங்கே கிறீஸ்த்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற எந்த மதத்தினரும் இருக்கமுடியாது என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் கூறுகிறது.

 

நாங்கள் ஈழத்தில் எமது இருப்பிற்காகப் போராடுகிறோம், அங்கே அரபு தேசங்களில் காலம் காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத அடாவடித்தனகளுக்குள் வாழ்ந்துவரும் கிறீஸ்த்தவர்கள் தமதிருப்பிற்காகப் போராடவில்லை, மாறாக இடம்பெயர்ந்து போகிறார்கள். இதுபற்றிப் பேசினால் உடனேயே மதப் பயங்கரவாதம் அது இதென்று பேசுகிறீர்கள். 

 

ஒரு இனத்தின் மதத்தின் இருப்புப்பற்றிப் பேசுவது மதவாதம் என்றால், நாம் ஈழத்தில் போராடுவதுகூட ஒருவகையில் இனவாதம், மதவாதம் தான். 

 

சிங்களப் பயங்கரவாதத்தின் பிடிக்குள் வாழ்வது என்பது எத்துனை கொடூரமானதென்பதை அனுபவித்த நீங்களே, நாள்தோறும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் கொத்துக்கொத்தாக தேவாலயங்களிலும் வீடுகளிலும் கொன்றுகுவிக்கப்படும் ஒரு மக்கள் குழுவின் வேதனைகளைப் புரிந்துகொள்ளாது வெறுமனே மதவாதம் என்று பேசியது வெட்கக் கேடானது. 

 

இங்கே கருத்தெழுத முன்னர் அரபு நாடுகளில் கிறீஸ்த்தவ சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து கருத்தெழுதுங்கள். சகட்டுமேனிக்கு கிறீஸ்த்தவர்களை எதிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்க வேண்டாம். 

 

இறுதியாக, தென்னாபிரிக்காவில் வெள்ளையின் இனவெறியர்கள் தனது மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்காகக் ஆயர் டெஸ்மன் டூட்டூ அவர்கள் குரல் கொடுத்தார்கள். அதை எவருமே மதவாதம் என்றோ இனவாதம் என்றோ பேசவில்லை. ஆனால், இன்று அரபுலக கிறீஸ்த்தவர்களுக்காக பாப்பாண்டவர் குரல் கொடுப்பது உங்களுக்கு மதவாதமாகப் படுகிறது அப்படியானால் நீங்கள் விரும்புவது அரபுலக் கிறீஸ்த்தவர்கள் ஒன்றில் முற்றாக அழிக்கப்பட வேண்டும் அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்படவேண்டும் என்பதையா?? அருமை, இனவாத ஆக்கிரமிப்பிற்குள்ளிருந்து வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் மக்களிடமிருந்து இதேமாதிரியான இன்னொரு மக்கள் கூட்டம் பற்றி வரும் இவ்வாறான கருத்துக்களும், புரிதல்களும் மிகவும் ஆரோக்கியமானவை. நல்லது, தொடர்ந்து உங்கள் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுங்கள். 

ரகு உம்மை போன்றவர்களே அரசியல், பொது விடயங்களை பற்றி ஆய்வு செய்ய மிகவும் தகுதியானவர்கள் .....

நான் இதை எப்படி சொல்லாம் என்று யோசிதுகொண்டிருக்கும் பொது மிக நிதானமாக ஆணி அடித்தால் போல் சொல்லிவிட்டீர் ....

நன்றி ரகு அண்ணா, எனக்கும் புரியவில்லை மற்றவர்கள் ஏன் இவ்வாறு கருத்திட்டுள்ளார்கள் என்று.

கிறிஸ்தவர்கள் தமது விருப்பின் பேரில் இடம்பெயரவில்லை. அங்குள்ள பதற்ற சூழ்நிலை காரணமாக இடம்பெயர்கிறார்கள் என்பதை செய்தியை வாசிக்கும் போதே விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, இங்கே பாப்பாண்டவர் கூறியதற்கும் எமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா? ஈழத்தில் தமிழினம் இருக்கக் கூடாது, இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சிங்களப் பெளத்தப் பேரினவாதம் கூறுகிறது.இதேபோல பாலஸ்த்தீனம் உற்பட்ட அனைத்து அரபு தேசமும் இஸ்லாமியர்களுக்கே சொந்தமானது, இங்கே கிறீஸ்த்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற எந்த மதத்தினரும் இருக்கமுடியாது என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் கூறுகிறது.

 

நாங்கள் ஈழத்தில் எமது இருப்பிற்காகப் போராடுகிறோம், அங்கே அரபு தேசங்களில் காலம் காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத அடாவடித்தனகளுக்குள் வாழ்ந்துவரும் கிறீஸ்த்தவர்கள் தமதிருப்பிற்காகப் போராடவில்லை, மாறாக இடம்பெயர்ந்து போகிறார்கள். இதுபற்றிப் பேசினால் உடனேயே மதப் பயங்கரவாதம் அது இதென்று பேசுகிறீர்கள். 

 

ஒரு இனத்தின் மதத்தின் இருப்புப்பற்றிப் பேசுவது மதவாதம் என்றால், நாம் ஈழத்தில் போராடுவதுகூட ஒருவகையில் இனவாதம், மதவாதம் தான். 

 

சிங்களப் பயங்கரவாதத்தின் பிடிக்குள் வாழ்வது என்பது எத்துனை கொடூரமானதென்பதை அனுபவித்த நீங்களே, நாள்தோறும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் கொத்துக்கொத்தாக தேவாலயங்களிலும் வீடுகளிலும் கொன்றுகுவிக்கப்படும் ஒரு மக்கள் குழுவின் வேதனைகளைப் புரிந்துகொள்ளாது வெறுமனே மதவாதம் என்று பேசியது வெட்கக் கேடானது. 

 

இங்கே கருத்தெழுத முன்னர் அரபு நாடுகளில் கிறீஸ்த்தவ சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து கருத்தெழுதுங்கள். சகட்டுமேனிக்கு கிறீஸ்த்தவர்களை எதிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்க வேண்டாம். 

 

இறுதியாக, தென்னாபிரிக்காவில் வெள்ளையின் இனவெறியர்கள் தனது மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்காகக் ஆயர் டெஸ்மன் டூட்டூ அவர்கள் குரல் கொடுத்தார்கள். அதை எவருமே மதவாதம் என்றோ இனவாதம் என்றோ பேசவில்லை. ஆனால், இன்று அரபுலக கிறீஸ்த்தவர்களுக்காக பாப்பாண்டவர் குரல் கொடுப்பது உங்களுக்கு மதவாதமாகப் படுகிறது அப்படியானால் நீங்கள் விரும்புவது அரபுலக் கிறீஸ்த்தவர்கள் ஒன்றில் முற்றாக அழிக்கப்பட வேண்டும் அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்படவேண்டும் என்பதையா?? அருமை, இனவாத ஆக்கிரமிப்பிற்குள்ளிருந்து வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் மக்களிடமிருந்து இதேமாதிரியான இன்னொரு மக்கள் கூட்டம் பற்றி வரும் இவ்வாறான கருத்துக்களும், புரிதல்களும் மிகவும் ஆரோக்கியமானவை. நல்லது, தொடர்ந்து உங்கள் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுங்கள். 

 

 

உங்களது  கருத்திலிருந்து தள்ளி  நிற்க  எவருக்கும் முடியாது.

 

ஆனால் இவற்றிற்கெல்லாம் காரணம் இவர்கள் தான்

பகையை  வளர்த்ததும்

ஆயுதங்களை  அள்ளிக்கொடுத்ததும்

பொருளாதாரச்சுரண்டலைச்செய்து

பேதங்களை வளர்த்ததும்  இவர்கள் தான்

அத்துடன் இன்று நினைத்தாலும் 

இவர்களால் இவற்றை சுலபமாக முடிக்கமுடியும்

ஏன் தீர்க்கவில்லை???

சிரியாவில் 11  ஆயிரம் சிறுவர்கள் பலி  என்பதை இவர்கள் தானே  சொல்கிறார்கள்

ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள்

எவரிடமும் யாசித்து பெறும் நிலையிலா  இவர்களது பலம் உள்ளது???

உலக தாதாக்கள் ஆச்சே.

 

 

அதென்ன மத்திய  கிழக்கில் எம்மவர் இல்லாத பகுதி  இருக்கமுடியாது  என்பது???

அப்படியாயின் யூதக்குடியேற்றங்களைப்பற்றி  வாய்திறக்காதது ஏன்??

என்னைப்பொறுத்தவரை

இவர்

எல்லோருக்கும் பொதுவானவர்

ஒரு மதம் சம்பந்தமாக மட்டும் கதைப்பாராக இருந்தால்

மதவெறி  பிடித்தவர் மட்டுமே.............

 

இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்

இலங்கைபற்றிய  இவர்களது தீர்வு

சிங்களவர் எல்லா  இடமும் பரந்து

தமிழரது சுயநிர்ணயக்கோட்பாட்டை இல்லாதொழிக்கவேண்டும் என்பதே....................

அப்படியாயின் மத்திய  கிழக்குக்கு மட்டும் ஏன் வேறு சட்டம்??? :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

 

மிகவும் சுவாரசியமாக இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள். முதற்கண் அதற்கு எனது நன்றிகள். சரி, நீங்கள் கூறிய விடயங்களுக்கு இனி வருவோம்.

 

பொருளாதாரச் சுரண்டல்கள், வர்க்க வேறுபாடுகள், பிரித்தாழுதல்கள்....இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று பார்த்தால் மார்க்கிஸம் பேசிக்கொண்டு முதளாளித்துவத்தையும் கிறீஸ்த்தவத்தையும் ஒன்றென்று குழப்பியடிக்கும் முகாமிலிருந்துதான் என்பது விளங்கும். முதலாவதாக , குகன் நீங்கள் ஒரு மார்க்ஸிஸ்வாதியா என்று அறிய ஆசை. ஆமென்றால் நான் தொடர்ந்து எழுதுவதில் எந்தப்பயனுமில்லை. அப்படியில்லை என்றால், உங்களுடன் இதுபற்றி தொடர்ந்தும் கருத்தாட ஆவல்.

 

கிறீஸ்த்தவர்கள் பொதுவாகவே மறைநூலின்படி நடப்பவர்கள் அல்லது நடக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்கள். முதலாளித்துவ வாதிகள் கிறீஸ்த்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அவர்களையும் கிறீஸ்த்தவ மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்ப்பது அபத்தம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஜப்பான் கூட முதலாளித்துவ நாடுதான், ஆனால் பெளத்தர்கள். 

 

முதலாளித்துவ வாதிகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள். பகைய வளர்த்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் எமது பிரச்சினையில் இலங்கை அரசுக்கு முதலாளித்துவ வாதிகள் அள்ளிக் கொடுத்தாலும், இறுதியில் எம்மை அழிக்கத் துணைபோனதுமுதல், அழிப்பை மறைத்ததுவரை செய்துவருவது முதலாளித்துவ நாடு கிடையாது. அது இந்துத்துவ இந்தியா. ஒரு இந்திய அதிகாரியின் கூற்றுப்படி அமெரிக்க கப்பற்படையின் புலிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பான வெளியேற்றல் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்துத்துவ இந்தியா.

 

சரி, இவர்கள் நினைத்தால் இன்றுகூட பிரச்சினையை முடித்துவிட முடியும் என்று கூறினீர்கள். அப்படி அவர்கள் முடிக்க நினைத்ததை இன்றுவரை தடுத்து வருவது யார்? முதலாளித்துவ நாடுகளா? சீனா, ரஷ்ஷியா, இந்தியா எப்போது முதலாளித்துவ நாடுகளாக மாறின? சிரியாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து தனது போர்க்கப்பல்களை வளைகுடாவுக்கு அனுப்பியது யார்? ரஷ்ஷியா. அது எப்போது ஒரு முதலாளித்துவ நாடாக மாறியது ? இன்றுவரை ஐ.நா வில் இலங்கை மற்றும் சிரியாவுக்கெதிரான பிரேரணைகளை வழிமறித்து தடுத்து நிறுத்துவது யார்? சீனாவும் ரஷ்ஷியாவும். இவர்கள் எப்போது முதலாளித்துவ நாடுகளாக மாறின? 

 

மத்திய கிழக்கின் சரித்திரம் என்னெவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இற்றைக்கு 2013 வருடங்களுக்கு முன்னர் கிறீஸ்த்தவ மதத்தின் தாபகரான யேசு நாதர் வாழ்ந்த பகுதி சரித்திர காலம் தொடக்கம் யூதர்களுடையது. அவருக்குப் பின்னர் அரேபிய நாடுகளிலிருந்து நடத்தப்பட்ட படையெடுப்புகளினால் யூதர்கள் தமது நாடான இஸ்ரேலிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்த உலகமெங்கு அகதிகளாக குடியேறினார்கள். 2 ஆம் உலக யுத்தத்தில் மிகவும் அதிகமாக அழிக்கப்பட்ட இனம் என்கிற அடிப்படையில் தாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்குத் தமது பூர்வீக இடம் மீண்டும் தமக்கு வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். அதுவரை தனது காலணிகளாக இருந்த பகுதிகளில் புராதன இஸ்ரேலினை மீண்டும் அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றது இங்கிலாந்து. அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் என்கிற நாடு உலக வரைபடத்தில் இருக்கக்கூடாதென்று திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதனைச் சுற்றியிருக்கும் அனைத்து அரபு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. 1967 ஆம் 1973 ஆண்டு அரபு நாடுகளின் கூட்டு ராணுவ ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்த இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக எல்லைகளை விஸ்த்தரித்துக்கொண்டது. இது தவறானதுதான் என்பதில் எந்த ஐய்யமுமில்லை. 

 

ஆனால் இங்கே பப்பரசர் கூறுவது யூதர்களைப் பற்றியல்ல. மாறாக கிறீஸ்த்தவர்களைப் பற்றியே. யூதர்களை அரபுக்களாலரெதுவும் செய்ய முடியாது. ஆனால் அரபு நாடுகளில் வாழும் சிறுபான்மை கிறீஸ்த்தவர்களை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். இந்த கிறீஸ்த்தவர்கள் வந்தேறுகுடிகள் அல்லர். அரபு நாடுகளில் வரலாற்று ரீதியாக வாழ்பவர்கள். இவர்களுக்கு நடக்கும் அநீதிபற்றித்தான் பாப்பரசர் பேசுகிறார். அவர்கள் தமது பூர்வீக இடங்களில் வாழ விடப்பட வேண்டும் என்று கோருவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

 

அடுத்தது, இவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? அவர் உலகத்திலுள்ள கிறீஸ்த்தவர்களின் வழிநடத்துனர். உலகின் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதம் கிறீஸ்த்தவம் என்பதால் அவரது சொல்லுக்கு மதிப்பிருக்கிறது. தனது மதத்தைப் பின்பற்றுபவர்கள் தக்கப்படும்போது குரல் கொடுப்பது மதவாதமா? நாங்கள் எமது கோயில்களை அழிக்கிறார்கள் , தேர்களை எரிக்கிறார்கள், பக்தர்களை கொல்கிறார்கள் என்று பேசினால் அது மதவாதமா? எமது சமயத்திற்கும், பக்தர்களுக்கும் நடக்கும் அநீதிபற்றிப் பேசுவது எப்படி மதவாதமாக முடியும்? இன்னொரு மதத்தின்மேல் ஆக்கிரமித்து அவர்களது விருப்பத்திற்கு எதிராக தனது மதத்தை பரப்புவதுதான் மதவாதம். இது அரபுக்களால் இன்றுவரையும் , கிறீஸ்த்தவர்களால் முன்னரும் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது பேசப்படுவது அரபு இஸ்லாமிய ஆக்கிரமிப்புப் பற்றி.

 

இலங்கை பற்றிய இவர்களது தீர்வு சிங்களவர் எல்லா இடங்களிலும் வாழவேண்டும் என்பதுதான் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? ஆனால் இதே நொக்கத்துடன் தனது செயற்பாடுகலை எடுத்துவரும் நாடுதான் இந்தியா. 2008 இன் இறுதியிலும், 2009 இன் ஆரம்பத்திலும் இலங்கையின் கொழும்பில் இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் செயற்பட்டு வந்த உயரதிகாரி ஒருவர் சில வருடங்களுக்கு முன்னால் இந்திய நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆனையிறவுக்கு வடக்கே அமைக்கப்பட வேண்டிய சிங்களக் குடியேற்றங்கள் பற்றி இந்தியாவின் திட்டத்தை அம்பலப்படுத்தியிருந்தார். தமிழரின் இனப் பரம்பலின் ஆதிக்கத்தை வடக்குக் கிழக்கில் கட்டுப்படுத்தி தமது பூர்வீக பூமியில் அவர்கள் சிறுபான்மையாக்கப்பட வேன்டும் என்கிற திட்டம் நீங்கள் சொல்லும் பப்பரசரை விடவும் இந்தியாவுக்கே அதிகம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். உங்களுக்கு இதை ஒத்துக்கொள்வது சங்கடமாகக்கூட இருக்கலாம். 

 

தமிழரின் சுயநிர்ணயக் கோட்பாட்டை இல்லாதொழிக்கவேண்டும் என்று இன்று சொல்வது யார்? ஒன்றுபட்ட இலங்கை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் நுழையுங்கள் என்று தமிழர்களை இன்று வற்புறுத்துவது யார்? பாப்பரசரா இந்தியாவா? 

 

பாப்பரசர் முதலாளித்துவ நாடுகளின் தலைவர் அல்ல. அவர் கிறீஸ்த்தவர்களின் தலைவர் மட்டுமே. மேற்குலகின் செயற்பாடுகளுக்கு அவர் காரணமாக இருக்க முடியாது.இதை விளங்கிக்கொண்டால் எல்லாம் புரிந்துவிடும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.