Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

 
Benefits-of-Honey.jpg
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது. 

 
 
 
 
 

 

தினமும் காலை ஒரு துளி எப்படியாவது சாப்பிடுவேன் .(எல்லாம் மனைவியின் உபயம் )

தேனை, தேநீர், கோப்பி போன்ற பானங்களுக்குள் சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.  சுவையும் நன்றாக இருக்கும்.  நான் தேனை இளம் சுடுதண்ணீருக்குள் கலந்தும் குடிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தேனைச் சூடாக்கி ஆறவிடும்படி yidlivi இன் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலையும் மாலையும் பாலுடன் தேனும் கலந்து அருந்துவேன். ஒரு வயதிற்கு பின் தேன் நல்ல நிவாரணி என என் குடும்பவைத்தியர் அம்மா அடிக்கடி சொல்வார்.

சீனிக்குப் பதிலாக தேனை தேனீரில் கலந்தால் சுவையாக இருக்குமா? நான் வெள்ளை நிறைச் சீனி உடம்புக்கு கூடாது என்று பழுப்பு நிறச் சீனியைத் தான் பயன்படுத்திக் கொண்டு வாருகின்றேன்.

 

கடும் சளித் தொந்தரவு இருக்கும் காலங்களிலெல்லாம், தேனும் லெமனும் (இதுக்கு சரியான தமிழ் வடிவம் என்ன?) கலந்து அதில் இஞ்சிச் சாறையும் விட்டு குடிப்பதுண்டு. துரிதமாக நிவாரணம் தரும்.

 

தேனில் கனடா போன்ற நாடுகளில் கிடைக்கும் வளர்ர்புப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் தேனா அல்லது, காட்டுத் தேனா நல்லது?

 

 

தேனை இன்னும் சில இடங்களில் தடவி சுவைத்துப் பயன்படுத்தலாம்...ஆனால் அவற்றைச்  சொல்லமாட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

காலையும் மாலையும் பாலுடன் தேனும் கலந்து அருந்துவேன். ஒரு வயதிற்கு பின் தேன் நல்ல நிவாரணி என என் குடும்பவைத்தியர் அம்மா அடிக்கடி சொல்வார்.

 

தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது.

குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.

நச்சு தேன்:-[தொகு]

அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது.

தேன்

 

இயற்கையாகவே இனிப்பானதும், ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றையும் கொண்டது தேன்.

தேனீக்கள் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் தேனானது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தடிமல், காய்ச்சல், சிறுவெட்டுக்காயம் போன்றவற்றிக்கு கைமருந்தாக பயன்பட்டு வந்திருக்கின்றது.

தேன் ஒரு தடிப்பான, இனிப்பான, தேனீக்களால் தயாரிக்கப்படும் பானமாகும். இது சீனியை விட குறிப்பிடதக்க அளவில் அதிகம் இனிப்பானதாகும்.

தேனீக்கள் தமது தேவைக்காக தேனைச் செய்து பாதுகாத்து வைக்கின்றன. கூட்டாக வாழும் தேன் கூட்டில் இராணித் தேனீ, வேலையாள் தேனீ, ஆண் தேனீ என மூன்று வகையான தேனீக்களுண்டு. வேலையாட் தேனீக்கள், மலர்களிலுள்ள தேனையும், மகரந்த மணிகளையும் சேர்த்து (கால்களில் மகரந்தம் கொண்டு செல்லும் பைகளுண்டு) தமது கூட்டிற்கு எடுத்துச் செல்கின்றன. இவற்றை தேனீயின் உடலினுள்ளமைந்த 'தேன் வயிறு' (கணி ஸ்ரொமக்) என்னும் பையினுள்ளெடுத்து, நெஞ்சுப்பகுதியில் சுரக்கும் ஒருவித திரவத்தைப் பயன்படுத்தி பகுதியாக சமிபாடடையச் செய்கின்றன. இறுதியாக திரவத்தன்மையான இப்பதார்த்தத்தை, தேன் வதையின் அறைகளில் விட்டுவிடுகின்றன. தேனீக்கள் தமது செட்டையை வேகமாக வீசுவதன் மூலம் தேனிலுள்ள நீர் அகற்றப்பட்டபின், தடிப்பான, பாகுநிலை கூடிய இனிப்பு கூடிய தேன் வதைகளில் அடைக்கப்படுகின்றன. 'றோயல் nஐலி' (அசர பாகு) என ஒரு பால் போன்ற, போசாக்கு கூடிய பாகு ஒன்றை வேலையாட் தேனீக்கள் வெளிவிடுகின்றன. இந்தப் பாகு தெரிவு செய்யப்பட்ட சில தேன் புழுக்களுக்கு (லாவா) கொடுக்கப்படும். இவை இராணித் தேனீயாக விருத்தியடையும். 'அரச பாகி'ல் 20க்கும் அதிகமான முக்கியமான அமினோஅமிலங்களுடன், உயிர்ச்சத்துக்களில் - உயிர்ச்சத்து 'பி' கலவை, உயிர்ச்சத்து 'சி' போன்றனவும் சில தாதுப் பொருட்களுமுண்டு. அமினோ அமிலங்களில் சில எமக்கு வேண்டியன, ஆனால் அவற்றை எமதுடல் தயாரிப்பதில்லை. 'அரச பாகு' தொடர்ச்சியாக தினமும் 3 – 5 மாதங்களுக்கு எடுத்துவந்தால் உடலில் சக்திப் பெருக்கமும், யௌவனம் அதிகரிக்குமென கூறுவார்கள். மேலும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நாடிக்குழாய்கள் தடிப்படையாமலிருக்கவும் தேன் உதவுதாக கருதப்படுகிறது. 'அரச பாகு' மருந்துளிகளாக கிடைப்பதோடு (கப்சுல்) தோல் மேற்பூச்சுக் கலவைகளிலும் சேர்க்கப்படுகின்றது.

தேனில் அதிகளவில் (80வீதம்) இனிப்புத்தன்மையைத்தரும் பழவெல்லம் (பிரக்ரோஸ்), குளுக்கோஸ் ஆகியவற்றுடன் உயிர்ச்சத்துக்களும், (பி, சி, டி, ஈ) அமினோ அமிலங்களும் சில கனிப்பொருட்களும் (பொட்டாசியம், மங்கனிஸ்) காணப்படுகின்றன. தேனினுள்ள சீனி வகைகள் இலகுவாக சமிபாடடைந்து, உடனடியாக சக்தியை விடுவிக்கக் கூடியதா;ல் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தலாம்.

தேன் நஞ்சு நீக்கியாக செயற்படக்கூடியதால், தோல் புண்கள், எரிகாயங்களில் தடவி விடலாம். புண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவதால், நோய் கிருமிகளான பற்றீரியா, பங்கசுக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. தொண்டை புண்;ணாவதற்கு காரணமான ஸ்ரெபிலோகொக்கை, ஸ்ரெப்ரோகொக்கை போன்ற பற்றீரியாக்களை தாக்கி அழிப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் வகையிலும் செயற்படுவதனால், சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படலாம் என கருதப்படுகின்றது.

மனுக்கா தேன் - நியூசிலாந்தில் மனுக்கா மரப்பூக்களிலிருந்து கிடைக்கும் தேனில் விடசேடமானதோர் பற்றீரியா தொற்றை தடுக்கவல்ல தன்மை காணப்படுகின்றது. இத்தன்மையின் வலுவை யு.எம்.எவ் (யுனிக் மனுக்கா பக்ர) என்று குறியிடப்பட்டிருக்கும் (யு.எம்.எவ் 5பிளஸ், யு.எம்.எவ் 10பிளஸ், யு.எம்.எவ் 15பிளஸ், யு.எம்.எவ் 30பிளஸ்).

தேன் ஓர் சிறந்த உணவாகும். மேலும் சீனியை விட அதிக இனிப்பாதலால் சீனியின் அளவை விட குறைவாக பயன்படுத்தலாம். தேனில் பதனிட்ட பண்டங்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

சித்த, ஆயூர்வேத வைத்திய முறைகளில் தேன் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. கசப்பான மருந்துகளை தேனில் குழைத்துக் கொடுக்கும் பொழுது கசப்பு தெரியாத வேளை தேன் மருந்தின் தன்மையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை.

 

தேனின் மருந்துவ குணங்கள்:

- பசியை அதிகரிகச் செய்யும்

- உடற்கழிவை இலகுவில் அகற்றும் 

- நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும்

- குருதியை தூய்மைப்படுத்தி, சிவப்பனுக்களின் உற்பத்தியைத் தூண்டும்.

- சீழ் பிடித்த புண்ணை குணப்படுத்தும்

- வயிற்றுப் புண்ணை ஆற்றும்

- நரம்புகளுக்கு வலுக்கொடுத்து கை, கால் நடுக்கத்தை போக்கும்

- எலும்புகளுக்கு வலிமையைத் தரும் 

- தீப்புண்ணை ஆற்றவல்லது.

- சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி

- மூளைக்கு இரத்தோட்டத்தை சீராக்க நினைவாற்றல் அதிகரிக்கும்

- போதைப் பொருட்களின் நஞ்சை முறிக்கும்

- உடல் சூட்டை தணிக்கவல்லது

- உடல் வனப்பையும் தாது விருத்தியையும் அதிகரிக்கும்

 

தேனில் பதனிட்ட இஞ்சி

இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலரவைத்து. அதிலுள்ள நீர் காய்ந்ததும், அதை ஒரு கண்ணாடிப் போத்தலில் போட்டு, சுத்தமான தேனை ஊற்றிக் கலக்கி மூடி வைக்கவேண்டும். இது நெடு நாள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியது. காலையிலும் மாலையிலும் இரண்டு தொடக்கம் மூன்று துண்டுகளை சாப்பிட சுவையாக இருப்பதோடு, சமிபாட்டு நோய்களும் வராது.

 

தேனும் இஞ்சிச் சாறும்

இஞ்சியைத் தோல் நீக்கி நசுக்கிப் பிளிய சாறு வரும். சற்றை வடிகட்டி எடுத்து, ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றிற்கு ஒரு கரண்டி தேன் என்னும் அளவில் கலந்து காலையில் அருந்தி வர, இரத்தம் சுத்தப்பட இரத்தம் விருத்தி அடைவதோடு, வாத, நரம்பு சம்பந்தமான நோய்கள் தலை காட்டா.

 

தேனும் பாலும்

நீண்ட நாள் நோயுற்று இருந்தோர்க்கும், உடல் நலம் குன்றியோர்க்கும், பாலில் தேனைக் கலந்து தினமும் கொடுத்து வர, உடல்; போசக்குப் பெறும், சோர்வு நீங்கி, புதிய தென்பு உண்டாகும்.

தேனை எல்லா வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

http://www.marunthu.com/honey.html

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி nunavilan பகிர்விற்க்கு.

இங்கு uk யில் மனுக்கா தேன் 15+ விலை sainsbury போன்ற சுப்பர் மார்கட்களில் £15 பவுன்சுக்கு மேல் சாதாரண தேன் மூன்று பவுனுக்குள் என்னை பொறுத்தவரை ஊரில் வேப்பம் பூ பூக்கும் காலத்தில் வேப்பமரத்தில் கிடைக்கும் தேன்கூட்டு தேனை போல் அருமருந்து உலகில் வேறெங்கும் கிடையாது ஊர் போய் வருபவர்களிடம் சொல்லி கேட்டு வாங்கி உபயோகித்து பாருங்கள் ஜரோப்பிய காலநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல்,தடிமன் போன்றவற்றிற்க்கு இயற்க்கை தடுப்பு மருந்து.

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.