Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Featured Replies

  • தொடங்கியவர்

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

* பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..

* முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...

* கை பிடித்து நடக்கையில் அழகு...

* தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...

* ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...

* தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...

* தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...

* கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...

* என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...

* என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...

அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.

 

  • Replies 199
  • Views 22k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்...

First rule.

அதிகாரத்தில் கை வைக்க கூடாது. வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்.

நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension.

Second Rule.

அடிப்பெனு மிரட்ட கூடாது. ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க, அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது.

Third rule.

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும். நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க, அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்.

And 4'வது Rule.

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது. ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது.

And then 5th... இது தான் ரொம்ப முக்கியாமனது.

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும், மானம் ரோசம் அறவே கூடாது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5
ஆண்டுகளாக
குழந்தை பாக்கியமே இல்லை.
அதனால் அவர்கள் மிகவும்
வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய்
குட்டியை வாங்கி வந்தனர்,
அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.
அந்த நாய் குட்டியும் அவர்களுடன்
விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன்
அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய
எஜமானருக்கு விசுவசாமாக
நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால்
அவர்களை விரட்டியது.
நாட்கள் உருண்டோடின அந்த
குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த
தம்பதியனருக்கும் ஒரு மகன்
பிறந்தான்.
இப்போதெல்லாம் அந்த
குழந்தையுடன் தான் அந்த
தம்பதியினர்
நேரத்தை செலவிடுகின்றனர்
நாய்இப்போதெல்லாம்
தனிமையிலே தன்
பொழுதை கழிக்க
வேண்டியதாயிற்று. அவர்கள்
வளர்த்த நாய்க்கு அந்த
குழந்தை மேல்
பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர்
குழந்தையை தொட்டிலில்
தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து நாயின்
சத்தம் கேட்டதும்
மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர்.
படி அருகில் நாய் வாயில்
ரத்தக்கறையுடன்
நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.
பிறகு வீட்டின்
உள்ளே சென்று பார்த்த
அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல
பாம்பு இரண்டு துண்டுகளாக
கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த
பாம்பை கடித்து போட்டுள்ளது,
அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில்
இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.
தங்கள் குழந்தையை காப்பாற்றிய
நாயை அநியாயமாக
கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.
முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும்
என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.
எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக
ஆராய்ந்து முடிவு எடுக்க
வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. அதனால்தான் எப்பவும் எதிர்ப்பு புராணம் பாடிக்கொண்டிருக்கக் கூடாது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கோவம் வருவதில் தப்பில்லை....ஆனால் இடம்,பொருள்.ஏவல் அறிந்து வர வேண்டும்.நியாயமானவற்றுக்கு கோவப்படுவதில் தப்பில்லை.

  • தொடங்கியவர்

உண்மை.. அதனால்தான் எப்பவும் எதிர்ப்பு புராணம் பாடிக்கொண்டிருக்கக் கூடாது.. :D

ஹா ஹா இசை அதுகூட எங்களை வளர்க்கும் இல்லையா சேர்த்து பாடிட்டே இருந்தா ஜால்ரா என்பங்க  :D

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...!

முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ..

ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு பிலிப்பினிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட ஷாப்பிங். சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.

மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் பணத்தை புடிங்கிருவான். குடிக்கற தண்ணிக்கும் காசு தான். கார் பார்க்கிங்குக்கும் பணம்.. இதுக்கே மாசம் 20 ஆயிரம் அழணும்.

நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான்.

ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. லெபனான்காரன் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக் குடுத்துருவான். அந்த சீனாக்காரன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா..

ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன்.

ஏழாவது வாரம்- திரும்பிப் போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை.

எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. கசாப்க்கடை காதர் பாய் கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான்.

நான்.. போடாங்ங்ங்ங்...... 

 

  • தொடங்கியவர்

1654275_821930194494381_3754262926288198

  • தொடங்கியவர்

என்னதான் இருந்தாலும் ஊரில ஒரு வீட்டு விஷேசம் என்றால் ஒரு கிழமைக்கு முன்னமே உறவுகள் மாமன் மச்சான் மச்சாள் என்று வந்து நின்று வேலைகள் செய்து ..அதை அங்கவை இங்கவை என்று அப்பத்தாவும் ..அம்மம்மாவும் வேலைவாங்கும் அழகே தனி அழகு ..

ஒவ்வெரு ஆக்களின் பார்வைகள் கணித்து இவனை அவளுக்குத்தான் கட்டி வைக்கனும் என்று தங்களுக்குள் முடிவெடுத்து உனக்கு அவள் உரிமை மாமன் பெண்ணு என்று தூண்டி விட்டு எல்லோரும் சேர்த்து பகிடி பண்ணி வராத காதலை வரப்பண்ணி சேர்த்து விடும் விளையாட்டுகள் எல்லாம் இந்த கிழடுகளுக்கு கைவந்த கலை ..

இங்க என்னடா என்றால் வெளிநாட்டில் ஒரு போனில் எல்லா அலுவலும் பார்த்திட்டு அன்றுமட்டும் போய் ஒரு கரையா இருந்திட்டு யாரு யார் யாருடைய பெடி ..பெட்டை என்று தெரியாமல் முழிச்சுட்டு எழும்பி வர நிலையை பார்த்து பலமுறை மனம் வருந்தி இருக்கு எங்க பிள்ளைகளுக்கு அந்த கொடுபனவு இல்லை என்று நினைத்து .

மண் வாசனை ..!

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழடுகள் கோர்த்து விடுவதுக்கு பார்வைக் கணிப்புகள் காரணமில்லை.. :blink: சொத்துக்கணிப்பு / கணக்குகளே காரணம்... :lol:

  • தொடங்கியவர்

கிழடுகள் கோர்த்து விடுவதுக்கு பார்வைக் கணிப்புகள் காரணமில்லை.. :blink: சொத்துக்கணிப்பு / கணக்குகளே காரணம்... :lol:

ஹா ஹா அட இதுக்குள்ள இவ்வளவு அரசியல் இருக்கா கில்லாடிகள் தான் கிழடுகள் .

  • தொடங்கியவர்

வர்மம் - ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று

---------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

"அகஸ்தியர் வர்ம திறவுகோல்"

"அகஸ்தியர் வர்ம கண்டி"

"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்"

"அகஸ்தியர் வசி வர்மம்"

"அகஸ்தியர் வர்ம கண்ணாடி"

"அகஸ்தியர் வர்ம வரிசை"

"அகஸ்தியர் மெய் தீண்டா கலை"

ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்: வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார்

அவை:

தொடு வர்மம்:

இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்:

இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்:

பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் :

நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார்

எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்

நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்

முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்

கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்

கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்

கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

  • தொடங்கியவர்

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.

ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.

ஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!”

 

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை தனது தளபதியிடம் நம்மிடம் லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள்

அல்லவா? என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தளபதி அறுபதாயிரம் பேர்தான் உள்ளனர் என்றார்.

உடனே நெப்போலியன் அவர்களோடு என்னையும் சேர்த்துக் கொள் ஒரு லட்சமாகி விடும் என்றார்.

தன் மீதும் தனது வீரத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் நெப்போலியன்.

அடுத்தவர்களை நம்மை நம்ப வைக்க முயற்சி செய்வதை விட நாம் நம் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்வதே சிறந்தது. 

 

  • தொடங்கியவர்

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டாரஸ் மலையில் நதியாக உருவாகி துருக்கியில் யூப்ரடீஸ், டைகிரீஸ் எனும் இரு நதிகளாகப் பிரிந்து, சிரியா வழியாக ஈராக்கிற்குள் பாய்கின்றன. ஈராக்கில் மீண்டும் இரு நதிகளும் ஒன்றிணைந்து ஒரே நதியாக ஓடி ஈராக்கின் பஸ்ரா எனும் நகருக்கருகில் கடலில் கலக்கிறது. இந் நதிக்கரை ஓரங்களில்தான் உலகின் தொன்மையான சுமேரிய நாகரீகம் தோன்றியது. மிலானில் இருந்து துபாய் செல்லும் வழியில், எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து  அலைபேசியில் (SAMSUNG GALAXY S5) எடுத்த புகைப்படம்தான் இது.

10592826_10202576124953861_6091516399661

 

  • தொடங்கியவர்

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்ன கோபர்நிக்கசை கொடுமைப்படுத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர்.

கோபர்நிக்கசின் ஆய்வைப் பின்பற்றி, பைபிள் கோட்பாட்டுக்கு எதிராக, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்றும் பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் கருத்தைப் பதிவு செய்த புருனேவை 9 ஆண்டுகள் இருட்டுச்சிறையிலடைத்து உயிருடன் எரித்துக் கொன்றது மதவெறிக் கும்பல்.

அதே கருத்தை தக்க ஆய்வுகளுடன் வெளியிட்ட கலீலியோ வாழ்நாள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1992-அக்டோபரில் ரோமன் கத்தோலிக்க மதபீடம் கலீலியோ போன்ற அறிஞர்கள் சொன்ன கருத்துதான் சரி என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது.

பூமி உருண்டையானது என்று உரைத்த ரோஜா பேக்கன் நாடுகடத்தப்பட்டு 25 ஆண்டுகள் கடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உடல் கூறின் வரலாறு பற்றி எழுதிய வெசாலியஸ் என்ற அறிஞர் கிறித்தவ மத கட்டுக்கதைக்கு எதிரான செய்தியை எழுதியதால் பாதிரியார்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அரிஸ்ட்டார்க்கஸ், பித்தகோரஸ் முதலாக மதத்தின் கோரப் பசிக்கு ஆளான அறிஞர்கள் பலர் உளர்.

மதங்களின் ஆக்டோபஸ் கரங்களையும் மீறி, இன்று அறிவியல் வளர்ச்சி இந்தளவு பரவலாக்கப்பட்டிருப்பதற்கு, உயிரைப் பயைம் வைத்து உண்மைக்காய் உறுதியாய் நின்ற அறிவியல் அறிஞர்கள் மனத்துணிவும்-ஆய்வுப் புலமையும் தான் காரணம்.

நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் சாதனங்களிலும் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் இரத்தம் தேய்த்த வரலாறு புதைந்துகிடக்கிறுது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னதான் இருந்தாலும் ஊரில ஒரு வீட்டு விஷேசம் என்றால் ஒரு கிழமைக்கு முன்னமே உறவுகள் மாமன் மச்சான் மச்சாள் என்று வந்து நின்று வேலைகள் செய்து ..அதை அங்கவை இங்கவை என்று அப்பத்தாவும் ..அம்மம்மாவும் வேலைவாங்கும் அழகே தனி அழகு ..

ஒவ்வெரு ஆக்களின் பார்வைகள் கணித்து இவனை அவளுக்குத்தான் கட்டி வைக்கனும் என்று தங்களுக்குள் முடிவெடுத்து உனக்கு அவள் உரிமை மாமன் பெண்ணு என்று தூண்டி விட்டு எல்லோரும் சேர்த்து பகிடி பண்ணி வராத காதலை வரப்பண்ணி சேர்த்து விடும் விளையாட்டுகள் எல்லாம் இந்த கிழடுகளுக்கு கைவந்த கலை ..

இங்க என்னடா என்றால் வெளிநாட்டில் ஒரு போனில் எல்லா அலுவலும் பார்த்திட்டு அன்றுமட்டும் போய் ஒரு கரையா இருந்திட்டு யாரு யார் யாருடைய பெடி ..பெட்டை என்று தெரியாமல் முழிச்சுட்டு எழும்பி வர நிலையை பார்த்து பலமுறை மனம் வருந்தி இருக்கு எங்க பிள்ளைகளுக்கு அந்த கொடுபனவு இல்லை என்று நினைத்து .

மண் வாசனை ..!

 

இது... புலம் பெயர் தேசங்களில்,

தொடர்ந்து வரப் போகும் பெரிய பிரச்சினை.

இதனை... தீர்ப்பதற்கு, என்ன வழிமுறை உள்ளது என்பதை,

சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும், வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டவர்களும்....

கருத்துக்களை பரிமாறிக் கொள்ள... தனித்திரியை, ஆரம்பித்தால் நல்லது அஞ்சரன்.

  • தொடங்கியவர்

இது... புலம் பெயர் தேசங்களில்,

தொடர்ந்து வரப் போகும் பெரிய பிரச்சினை.

இதனை... தீர்ப்பதற்கு, என்ன வழிமுறை உள்ளது என்பதை,

சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும், வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டவர்களும்....

கருத்துக்களை பரிமாறிக் கொள்ள... தனித்திரியை, ஆரம்பித்தால் நல்லது அஞ்சரன்.

நிச்சயமா அண்ணே உறவு முறைகள் பற்றி பிள்ளைகளுக்கு தெளிவு வேணும் இரத்த செந்தங்கள் பற்றிய புரிதல் வேணும் இவை ஒன்றும் இல்லாமல் அயல் நட்பு என்னும் ஒரு மாறுபட வட்டத்தில் சுற்ற தொடக்கி இருக்கு இது எதிர்காலத்தில் நல்லதா தெரியவில்லை எனக்கும் அண்ணே .

  • தொடங்கியவர்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

 

கல்யாணாதிர்ற்க்கு யாரெல்லாம் ரெடியோ அவங்க கண்டிப்பாக படிச்சு பின்பற்ற வேண்டிய முக்கியமான அவசியமானது

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்

முதல் வீதி ....First rule ...

அதிகாரத்தில் கை வைக்க கூடாது

"No power of the house"

வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்

நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...

அடிப்பெனு மிரட்ட கூடாது

"No unwanted scaring"

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்

நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...

ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற

பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது

...

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்

கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...மானம் ரோசம் அறவே கூடாது...!

  • தொடங்கியவர்

முன்னம் எல்லாம் வீட்டு விஷேசம் என்றால் ஒரு கிழமை இரண்டு கிழமை முன்னமே எல்லோரும் அழகா முடி எல்லாம் வெட்டி ஷேவ் பண்ணி அந்த வீட்டில் எதோ நல்ல காரியம் நடக்கபோகுது என்று ஊருக்கே தெரிய திரிவாங்க ...

இப்ப ..

எல்லோரும் இரண்டு கிழமைக்கு மேல ஷேவ் எடுக்காமல் ஓடி திரியுறாங்க விஷேசத்துக்கு முதல்நாள் கண்டு என்ன நாளைக்கு விஷேசம் இப்படி தாடி எல்லாம் வளர்த்து நிக்கிறியள் என்ன பிரச்சினை என்று கேட்டல் அது ஒன்றும் இல்லை கோட்டு தாடி விடவாம் வளர்த்தது இது என்ன கொடுமை ஈஸ்வரா ...

ஊரின் வரைபடத்தை மூஞ்சியில் கீறி விடும் உங்க நேர்மை கண்டு நான் வியக்கிறேன் ..

கருங்கல்லில் ஏறும் ஊருவது போல இருக்கும் சிலரின் முகத்தில கோடு ...

சிலருக்கு நடைபாதையில் புல்லு முளைத்தது போல இருக்கும் தாடி அங்க ஒன்று இங்க ஒன்றா ..

உற்று கவனித்து .

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
.
ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
.
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று ஒழுங்ககள் எல்லாம் சுத்தியடிச்சு பூனையை விட்டு வந்தான்.
.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''


பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ...
.
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...
.
அடுத்த நிமிடமே சண்டை போட்டவர்கள் எதுவுமே நடக்காதது போல் அடுத்த பக்கம் திரும்பி நிற்க 
சீட் காலியாகவே இருந்தது !

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உடல்: அறிந்ததும்...அறியாததும்

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை

 

  • கருத்துக்கள உறவுகள்
மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்

 

 

படைத்தவன்  இங்கே தான் தவறு செய்துவிட்டான்! :o

  • தொடங்கியவர்

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து நாடாளுமன்றம் நடந்து கொண்டுஇருக்கிறது

காரசார விவாதங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது

பெர்ணாட்சா ஒரு கேள்வியை எழுப்புகிறார் உடனே அவையில் இருந்த ஒரு பெண் உறுப்பிணர் எழுந்து

பெர்ணாட்சாவைப் பார்த்து

நீங்கள் மட்டும் என் கணவராக இருந்தால் உங்களை விசம் வைத்து கொண்டு இருப்பேன் என்கிறார்

உடனே பெர்ணாட்சா சிரித்துக் கொண்டே சொல்கிறார்

ஒருவேளை நீங்கள் என் மனைவியாக இருந்து உங்கள் கையால் விசத்தை கொடுக்கும்போது

அதை சந்தோசமாக நான் குடித்திருப்பேன் என கூற

அவையில் அனைவரும் சிரிக்க

அந்த பெண் உறுப்பிணர் பதில் பேசமுடியாமல் தன் இருக்கையில் அமர்ந்து விடுகிறார்

எவ்வித சூழ்நிலையிலும் 

தன் பேச்சு சாமர்த்தியத்தால் 

கலகலப்பாக்குபவர்

பெர்ணாட்சா

 

  • தொடங்கியவர்

பேஸ் புக் ஸ்டேட்டஸ் பார்த்து புரட்சி நடத்த என் நாடு ஒன்னும் எகிப்து இல்லைன்னும் நல்லா தெரியும்
அமெரிக்க படைகளுக்கு எதிராக தலையில் சிகப்பு கலர் ரிப்பன் கட்டி கொண்டு கொரில்லா போர் முறையை உலகுக்கு அறிமுகபடுத்திய வியட்நாம் மக்கள் இல்லை எனவும் தெரியும்
லைக் போட்டாலே அடுத்தவங்க தப்பா நினைபாங்க என நினைத்து விலகி செல்லும் நாட்டின் மக்கள் எனவும் தெரியும்
இருந்தாலும் மனதில் பட்டதை எழுதாவிட்டால் அது பின்னாளில் உறுத்தி கொண்டே இருக்கும் .

  • தொடங்கியவர்

அரிய புகைப்படம் நேரு ...சே .

 

சே குவேராவை இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தனது அலுவலகத்தில் வரவேற்ற படம். ஜூலை 1 -1959

 

10374078_869186796447282_903838057706309


செம்மொழியான தமிழ்மொழியின் எழுத்துகளின் தத்துவம்…!!!

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 , மூச்சு ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15 x 24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள் ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் ­ உருவாக்கப்பட்டன ­. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் (oxidation) பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

Edited by அஞ்சரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.