Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! - இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! - இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி. 
[Monday, 2013-12-09 08:04:52]
jhoshi-091213-150.jpg
கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
 
அண்மையில் எம்.பீ. சீமன்காட் ஒஹியோ என்ற கப்பல் கைது செய்யப்பட்டது. அதில் நான்கு இனங்களை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 25 பேர் இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளையும் தோட்டக்களையும் சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். இந்த நபர்கள் வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்களிடம் இது பாதுகாக்கும் நிறுவனம் என்று கூறப்படும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இப்படியான சில நிறுவனங்கள் இந்து சமுத்திரத்தில் இயங்கி வருகின்றன. இவர்கள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குறிக்கப்பட்ட கடமை நேரத்தில் கப்பல்களில் ஏறி இறங்குகின்றனர். அவற்றில் அரசு சாரத தனியார் பாதுகாப்பாளர்களும் உள்ளனர்.
 
எந்தொரு நாட்டின் துறைமுகத்திலும் இவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை. இது மும்பாய் மீது தாக்குதல் நடத்தை போன்ற தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்து சமுத்திரத்தின் பொருளாதார பிராந்தியத்தில் இப்படியான எத்தனை கப்பல்கள் இருக்கின்றன?. அவற்றில் இருக்கும் ஆயுதங்கள் என்ன?. என்பது பற்றிய சர்வதேச தரங்களுக்கு அமைவான விபரங்கள் தேவை. இந்திய கடற்படை, கேரளா லட்சதீவுகளுக்கு அருகில் கடற்கொள்ளையர்களின் 4 படகுகளை மூழ்கடித்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து 450 கடல் மைல் தொலைவு வரை கடற்கொள்ளையர்களின் எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை. இதனால் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தேவையில்லை என்றார்.
 
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக தெரிவித்து, இலங்கையின் காலிக்கு அப்பால் தொலைவில் உள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருகிறது. இதனை நடத்தி வரும் முக்கிய நபர்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்வும் ஒருவர். அவருக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு நிறுவனம் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக திஸநாயக்கவும் இந்த நிறுவனத்தில் தான் சேவையாற்றி வருகிறார்.
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வகிக்கும் அரச அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனங்களை நடத்த முடியாது என்ற போதும் பாதுகாப்புச் செயலாளர் சில தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதுக்கு மிதக்கும் ஆயுதக்களஞ்சியம்?  :rolleyes: தெற்கு இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை சொறிலங்கா எடுத்துக்கொண்டு விட்டது..  :D தெற்காசிய வல்லரசு என்கிற பெயரை இந்தியாவிடமிருந்து பறித்துவிட்டது.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவாலை இந்தியனுக்கு இப்பதானே அரிப்பு எடுக்க தொடங்கியிருக்கு, கொஞ்சம் கொஞ்சமா அது சொறி சிரங்கா மாறேக்க தெரியுமடா மவனே தமிழன்ரை அருமை.

பலர் இந்தியா புகழ் பாடுகிறார்கள். இலங்கை இனி ஒரு போதும் இந்தியாவுடன் அணையப் போவதில்லை. தமிழர் ஐ.நா ஊடு போனால்த்தான் ஏதாவது கிடைக்கும். அதை உணர்ந்து அவர்கள் செய்தால் ஐ.நா வில் இந்தியாவின் ஆளுமை மிக அரிதாகவே அங்கே இருக்கும். இந்து சமுத்திரத்தில இந்தியா பேடியாக ந்டந்து கொள்ளாமல் பொலிஸ்மனாக நடந்து கொண்டால் மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தை இந்தியாவூடு கையாளும். ஆனால் அதற்கு காலம் பிந்திவிட்டது. 

ஆறாம் மாடிக்கு போவதென்றால் எப்பவும் மூன்றாம் மாடி தாண்டித்தான் போகவேண்டும் .

ஆறாம் மாடிக்கு போவதென்றால் எப்பவும் மூன்றாம் மாடி தாண்டித்தான் போகவேண்டும் .

அது சரி. படியேறிபோனால் 3ம் மாடியிலும் கால் படலாம். ஆனால் இது லிப்ட்.

 

கிழக்கு வீதியில் சாமி போய் தரிப்பதற்கு கிழக்கு வீதி  உபயகாரர் ஏண்டாப்பாக நடந்து  மடத்துக்கு வந்தவளுடன் சல்லாபம் போட்டு காலத்தை வீணாக்கியதால் பந்தல் போடவில்லை. பழம் பாக்கு வாங்கி பூசைக்கு வைத்திருக்கவில்லை.

 

அதானாலை சாமி எடுக்க போற லிப்ட் மூன்றாம் மாடியில் தரிக்காமல் மூன்றாம் மாடியை கடந்து நேராக ஆறாம் மாடிக்கு போகும். 

Edited by மல்லையூரான்

மிதக்கும் ஆயுத கடத்தல் கப்பல் சிரீலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க என்று சொல்வார் என்று பார்த்தால் இப்படி குண்டு போடுகிறார்.

இந்தியாவுக்கு தனது வேலை முடிந்து விட்டது, இனி இப்படி தான் மகிந்தாவுக்கு முன்னைய நண்பர்கள் எல்லம் எதிரிகளாவார்கள், இலங்கை இந்தியாவை பாவிக்கிறது என்பது தவாறான் எண்ணப்பாடு, உண்மையில் இந்தியா தான் தனது தேவைக்காக இலங்கைஅயை பாவிக்கிறது. இந்தியாவின் குறிகோள் புலி அழிய வேண்டும் அதை சாதித்துவிட்டது, சகல உலக நாடுகளையும் புலிகளுக்கு எதிராக திருப்பி விட்டது இந்தியா தான்,அதற்காக இந்தியா தமிழருக்கு உதவி செய்யும் என்பதெல்லம் பகல் கனவு, இன்னொரு முறை வேணுமானால் மீண்டும் எமது போராட்டத்தை அழிக்க உதவுமேயொழிய ஒரு நாளும் எமக்கு உதவாது , மேற்குலக நாடுகளில் காணப்படும் சாதகான நிலைமையையே எமக்கு சாதகமாக பாவிக்க வேணும்.

மிதக்கும் ஆயுத கடத்தல் கப்பல் சிரீலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க என்று சொல்வார் என்று பார்த்தால் இப்படி குண்டு போடுகிறார்.

 

தாங்க முடியவில்லை

மன்னிக்கவும் டாஷ். மாறி மாறி இதை தான் இந்திய, சிறி லங்கா அரிசியல்வியாதிகள் மற்றும் எமது மாசுக்கருத்துக்கள் சொல்வார்கள்.

தலைப்பை பார்த்தவுடன் குழம்பிவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.