Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறுமையாக இருந்தால் அதிகாரங்களை பெறலாம் - கூட்டமைப்பிற்கு யசூசி அகாஷி அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
yasusi-akashi-seithy-2-150.jpg

"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது." இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். தெரிவித்துள்ளார்.

  

இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நேற்றிரவு கொழும்பு ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போதே இலங்கை அரசுக்கு சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது. வலி.வடக்கு, சம்பூர் மக்கள் இன்னும் மீள்யேற்றப்படவில்லை. யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள், இந்துக் கோவில்கள் மற்றும் பாடசாலைகளை இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். இதனை நேரடியாகப் பார்வையிட அண்மையில் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இராணுவத்தினர் தடைவிதித்து அவரைத் திருப்பியனுப்பியுள்ளனர்.

வடக்கு மாகாணசபையில் முதல மைச்சர் தமது பணிகளைத் தொடங்க மத்திய அரசு தொடர்ந்து முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகின்றது. மாகாணசபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்கே அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், பாதுகாப்பு செலவீனங்களுக்கு அரசு ஏன் இவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது?

இலங்கை அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளினால் நாட்டில் நல்லிணக்கத்துக்குரிய வழியே இல்லாமல் உள்ளது. இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான பிரதிநிதியாக நீங்கள் 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதன் பின்னர், 23 ஆவது தடவையாக இலங்கைக்கு தற்போது வந்துள்ளீர்கள். 24 ஆவது தடவையாகவும் நீங்கள் வரும்போதும் இதே நிலைமைதான் இங்கு இருக்கும். முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இந்த அரசு எடுக்கவேமாட்டாது - என்றார்.

சம்பந்தன் எம்.பியின் இந்தக் கருத்துக்களுக்கு யசூசி அகாஷி பதிலளிக்கும்போது, வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குமாறு நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளேன். நீங்கள் எதற்கும் அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் - என்றார்.

இரண்டரை மணி நேரம் நடை பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன். செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98834&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

24 தடவை வந்தும் தமிழரை பொறுமையாக இருக்க சொல்பவர் தமிழரின் நன்மை கருதி சொல்லி இருப்பார் என நினைக்கவில்லை.

ஒரு காலத்தில், இலங்கை சமாதானத்தை நோக்கி நகர்ந்த போது, அதை முன்னேற்ற இரண்டு பக்கங்கள் மீது அழுத்தத்தை சமனாக பிரயோகிக்காமல்,  இணைத்தலைமையில் பிரதான பொறுப்புக்களுடன் இருந்த பிளேக், கோபத்தபையாவை வருடிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நிர்பந்தித்து, SLMMமை வெளியேற்றி தனது விருப்பத்துக்கு அமைய புலிகளை பழிவாங்கி முடித்தார் என நினைத்தேன்.  ஆனால் இன்று புலிகளை அழித்த புகழ்  இந்த மனிதனுக்கா, அல்லது  பிளேக்குக்கா என்று சந்தேகம் வருகிறது.

 

இப்போது விளங்குகிறது எப்படி ஓரிரு நாத்தல் யப்பானியர் அப்பாவிகள் மீதும் அணுக்குண்டை விழவைத்திருப்பார்கள் என்பது.

 

ஆழிப்பேரலையால் அடித்து செல்லாமல் தவறவிடப்பட்ட இந்த நாத்தலின் தலையில் போட மட்டும்  உலகம் இன்னொரு தடவை ஒரு அணுக்குண்டைத்  தயாரித்துவிட்டு அத்துடன் அந்த உலைகளை நிரந்தரமாக மூடி வைக்கட்டும். 

<_<

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாக்காலில் எங்கட மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும்போது போரை நிறுத்தும்படி ஒரு பேச்சுக்கு கூட வாய் திறக்காத யசூசி அகாஷி உங்களின் பேச்சைக்கேட்டு பொறுமையாக இருந்தால் மீதம் உள்ள தமிழர்களும் அழிந்துபோவார்கள் என்பதினை உணர்ந்து செயல் ஆற்றவேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு .... 

அக்காசி எப்படி சம்பந்தருக்கு தண்ணி காட்டி ஏமாத்தினார் என்பதை இது காட்டுகிறது.

 

 

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் ஜப்பான் – ஹக்கீமிடம் அகாசி வாக்குறுதி

[ புதன்கிழமை, 11 டிசெம்பர் 2013, 09:54 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
அடுத்த ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று, சிறிலங்காவின் புனர்வாழ்வு, மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி உறுதி அளித்துள்ளார்.

இந்த தகவலை சிறிலங்கா அரசாங்க இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த போதே, யசூசி அகாசி இந்த உறுதிமொழியை அவரிடம் வழங்கியுள்ளார்.

ஜெனிவாவில், சிறிலங்காவுக்கு ஜப்பான் அளிக்கும் ஆதரவு, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அகாசி தெரிவித்ததாக, சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131211109609

யப்பானுக்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவமும், தமிழரின் உடல் உறுப்புகளும் தான் தேவை.

எங்களுக்கு பொறுமை காக்க சொல்பவர் நடு கடலில் இருக்கும் கல்லுக்காக சீனாவுடன் சண்டை பிடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தினை காலம் பொறுமையா இருக்கிறது. இதே ஆலோசனையை ஜப்பான் சீனாவோடு குட்டித் தீவுகள் விடயத்தில் முரண்டுபிடிக்கும் தன்மைக்கும் சொல்லலாமே..??!

 

அகாசி.. ஒரு சகுனி. இவர் உருவாக்கிய இணைத்தலைமை நாடுகள் அமைப்புக்கு என்னாச்சு. முதலில் அதற்கு அகாசியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

 

ஜப்பான் சிறீலங்காவின் முக்கிய கடன்கொடுனர். அவர்கள் இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பார்கள். அதுவும் சீன ஆதிக்கம் சிறீலங்காவில் வலுப்பெறும் நிலையில்.. ஜப்பான் பொறுமையா போகும். தினமும் சாவுக்கு மத்தியில ஆக்கிரமிப்புக்கு மத்தியில.. வாழுற நாங்க எப்படி பொறுமையா இருக்க முடியும். ஜப்பான் பொறுமையா இருந்திருந்தா.. அணு குண்டு வீச வேண்டி வந்திருக்காது. அதனையும் அகாசி போன்ற அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லும் சகுனிங்க புரிஞ்சு கொள்ளனும். உந்த நரியை ஊருக்க விட்டது யார்..??! :rolleyes::(:icon_idea:

இன்னும் எத்தினை காலம் பொறுமையா இருக்கிறது. இதே ஆலோசனையை ஜப்பான் சீனாவோடு குட்டித் தீவுகள் விடயத்தில் முரண்டுபிடிக்கும் தன்மைக்கும் சொல்லலாமே..??!

அகாசி.. ஒரு சகுனி. இவர் உருவாக்கிய இணைத்தலைமை நாடுகள் அமைப்புக்கு என்னாச்சு. முதலில் அதற்கு அகாசியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

ஜப்பான் சிறீலங்காவின் முக்கிய கடன்கொடுனர். அவர்கள் இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பார்கள். அதுவும் சீன ஆதிக்கம் சிறீலங்காவில் வலுப்பெறும் நிலையில்.. ஜப்பான் பொறுமையா போகும். தினமும் சாவுக்கு மத்தியில ஆக்கிரமிப்புக்கு மத்தியில.. வாழுற நாங்க எப்படி பொறுமையா இருக்க முடியும். ஜப்பான் பொறுமையா இருந்திருந்தா.. அணு குண்டு வீச வேண்டி வந்திருக்காது. அதனையும் அகாசி போன்ற அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லும் சகுனிங்க புரிஞ்சு கொள்ளனும். உந்த நரியை ஊருக்க விட்டது யார்..??! :rolleyes::(:icon_idea:

எங்களுக்கு பக்கத்தில் இருந்து சவுண்டா ஊழையிடும் வீக் நரி.

அதுதான் மேற்கு நாடுகள் தொடக்கம் எல்லா பெரிய தலைவர்களும் வந்து புது லைக்கா ஒப்பந்தங்கள் போட்டு செல்கின்றார்கள்.

இலங்கை அரசிற்கு பிரச்சனைகள் வரும் போது ஓடிவந்து... தமிழர்களுக்கு காதில் பூ சுற்றி சிங்களதை காப்பாற்றும் நரிக்க்கூடத்தில் இவரும்
ஒருவர் சிவசங்கரி மேனன், சுப்புரமணி சுவாமி
 போன்றவர்களின் வரிசையில் இவரும் ருத்தர்..இலங்கை ஒரு இலக்கில் தனி சிங்கள
புத்தமத நாடக்கும் தீவிரவாத கட்சிகளை
திருப்திபடுத்தும் தனது நிகழ்ச்சி நிரலின் பிழைக்கும்
போது  இப்படி நரிகள் அழைக்கபட்டு சாத்தான்
வேலைகள் நடக்கும்..
தமிழர்கள் உசார் ஆகிவிட்டனர்... எமது
ஒற்றுமையும், விழிப்புணர்வும்  தொடரவேண்டும்.

நம்பவைத்து கழுத்து அறுத்தவர்கள் வரிசையில் ஜசுஷி அகாஷியும் ஒருவர் வன்னிக்கு சென்று விருந்துண்டு சாப்பிட்ட கோப்பைக் குள்ளேயே க ---- இருந்த பெரிய மனிசன்    

  • கருத்துக்கள உறவுகள்

http://en.m.wikipedia.org/wiki/J._R._Jayewardene

இரண்டாம் உலகப்போரின் பின் ஜப்பானை சர்வதேச சமூகத்துக்குள் உள்ளடக்க ஜே ஆர் உதவினார் என்றும் ஜப்பான் - சிங்களம் இடையேயான உறவு அதன்மூலம் பலப்பட்டது என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா

இந்த சனியனை

வாழ்வில் நான் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை தா...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.