Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை என்னை கேட்டால்?

நீங்கள் நான் இணைத்த ஒலிப்பதிவின் இறுதியை கேளுங்கள். அதிலேயே அவருக்கு நேரமாகி விட்டதால் தான் கேள்வி கேட்பதை முடித்துக்கொண்டார்கள்.

அவர் அவசரமாக சென்றமைக்கு என்ன காரணம் என எனக்கு தெரியாது. நாளைக்கு காலை flight என கூறினார். எத்தனை மணிக்கு என தெரியவில்லை. சிலவேளை அதிகாலை நேரமா தெரியாது.

அல்லது வேறு அலுவல்கள் இருந்து அவர் அவசரமாக சென்றாரா தெரியாது.

8 மணிக்கு முடிய வேண்டிய ஒன்று கூடல் 7.30 க்கு முடிந்த போதே ஏதோ அவசரம் என புரிந்துகொள்ள முடிகிறது.

முதலே மயூரன் அண்ணாக்கு சொன்னேன், யாழில் பலர் என்னை நம்புவதில்லை. எனவே நான் சொல்வதையும் நம்ப மாட்டார்கள் என்று. :)

அனந்தி அக்காவுக்கே நேரமின்மை மற்றும் வேறுபணிகள் இருக்கும் போது இங்கிலாந்துப் பிரதமர் கமரூன் அவர்களுக்கும் யாழ் விஜயத்தின் போது அதுவும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிலையின் நேரமின்மை, பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் இருந்திருக்கும். உங்களுக்கு அய்போனில் பதியமுடியாமல் போனது போலவே, அனந்தி அக்காவின் மகஜர் கமரூனிடம் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

கடைசியில் சுமந்திரன் சொன்னது போல சுமந்திரனிடமாவது கொடுத்து சமர்ப்பித்து இருக்கலாம். ஆர் குத்தினாலும் அரிசியானால் சரிதானே!

அனந்தி விரும்பினாலும்.. எங்கையும் தங்களை பெரியாக்கள் எண்டு காட்ட கொஞ்சப் பேர் இருப்பினம்தானே.. அவையள் நிற்க முடியாமைச் செய்திருப்பினம்!!  :o

ஓ அப்பிடியும் சிலபேர் இருக்கினமா?

  • Replies 100
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

______________________

அனந்தி அக்காவுக்கே நேரமின்மை மற்றும் வேறுபணிகள் இருக்கும் போது இங்கிலாந்துப் பிரதமர் கமரூன் அவர்களுக்கும் யாழ் விஜயத்தின் போது அதுவும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிலையின் நேரமின்மை, பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் இருந்திருக்கும். உங்களுக்கு அய்போனில் பதியமுடியாமல் போனது போலவே, அனந்தி அக்காவின் மகஜர் கமரூனிடம் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
 
கடைசியில் சுமந்திரன் சொன்னது போல சுமந்திரனிடமாவது கொடுத்து சமர்ப்பித்து இருக்கலாம். ஆர் குத்தினாலும் அரிசியானால் சரிதானே!

அனந்தி அக்கா மகஜரை கையளிக்கவில்லை என்று யார் சொன்னது? வெளியில் நின்று காரினுள் யாரிடமோ அவர் மகஜரை கொடுத்தாரே. ஆனால் யாரிடம் கொடுத்தார் என தெரியாது.

நியானி: மேற்கோள் காட்டிய கருத்தும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • தொடங்கியவர்

அனந்தி விரும்பினாலும்.. எங்கையும் தங்களை பெரியாக்கள் எண்டு காட்ட கொஞ்சப் பேர் இருப்பினம்தானே.. அவையள் நிற்க முடியாமைச் செய்திருப்பினம்!!  :o

அப்படியில்லை அண்ணா, அனந்தி அக்காவை சூழ்ந்தவர்கள் அவரை அழைத்து சென்று காரில் ஏற்றி அவர்களும் காரில் சென்றார்கள். அனந்தி அக்காவை பாதுகாப்பாக அழைத்து வந்தவர்களாக இருக்கலாம். தெரியவில்லை. அவர்களை சரியாக நான் கவனிக்கவில்லை. அதற்குள் பலர் அனந்தி அக்காவிடம் நலம் விசாரிப்பது உட்பட கேள்வி கேட்பது வரை. அதற்குள் நான் கேள்வி கேட்டு எனக்கு பதில் தந்ததே பெரிய விஷயம். :(

அவர் சென்றது சில்வர் கலர் காரில். :rolleyes:

இவ்வளவு ஆதாரம் தந்தும் நம்பவில்லை என்றால் நான் பேசாமல் இவ்வளவுக்கும் போனமா வந்தமா என்று போட்டு நித்திரை கொண்டிருந்தாலும் பிரயோசனம் போலிருக்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆதாரம் தந்தும் நம்பவில்லை என்றால் நான் பேசாமல் இவ்வளவுக்கும் போனமா வந்தமா என்று போட்டு நித்திரை கொண்டிருந்தாலும் பிரயோசனம் போலிருக்கு. :icon_idea:

அப்பாடா.. இப்பத்தான் புள்ளியைப் பிடிச்சிருக்கிறீங்கள்.. :D

நாங்கள் வாழ்கிற இடங்களைச் சுற்றி இருப்பது ஒரு மக்கள்கூட்டம் (community). அவர்கள் எல்லோரையும் நாம் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் இணையம் மூலம் உறவாடும் நாம் online community. இணையத்தில் தோன்றும் எமது விம்பத்திற்கும், எமது உண்மையான குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. அப்படி இருக்கவேண்டிய தேவையும் இல்லை..

(கனடா ஒன்றுகூடலில் என்னைச் சந்தித்த உறவுகள் மகாத்மா காந்தியைவிட அதிசிறந்த குணதிசயங்கள் என்னிடம் காணப்பட்டதாக சிலாகித்தார்கள்.. :o ஆனால் ஒன்லைனில் அது தெரியவில்லையாம்.. :blink::D )

இதேபாணியில், வானொலிகளில் பங்குபற்றுகிறவர்களும் ஒரு community. இது இப்படியாக இருக்க, முகம்காட்டி கருத்து எழுத முடியுமா என சவால் விடுவதும் இங்கு அடிக்கடி நடக்கிறது..

ஆகவே.. இங்கு வந்திருப்பது அனந்தியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே.. எங்களது குழுமத்தில் அவரை மனமார வரவேற்கிறோம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒன்றுகூடலில் என்னைச் சந்தித்த உறவுகள் மகாத்மா காந்தியைவிட அதிசிறந்த குணதிசயங்கள் என்னிடம் காணப்பட்டதாக சிலாகித்தார்கள்.. :o ஆனால் ஒன்லைனில் அது தெரியவில்லையாம்.. :blink::D 

அவர்கள் ஒப்பிடுவது சரி என்றே நினைக்கிறேன்! :icon_idea:

இந்த மாகாத்மா காந்தி எப்பவுமே ஒரு ' Dubious' கரெக்டர் தான்! :D

  • தொடங்கியவர்

நன்றி, இசை அண்ணா. :D

நான் யாழில் இணைந்திருப்பது அனந்தி அக்காவா என அறிய விரும்பியதற்கு வேறு காரணங்களும் உள்ளது. அறிந்து கொண்டேன். என்னை கேட்டவர்களுக்கும் பதில் கூறி விட்டேன். ஏனையோர் அதை நம்பினாலென்ன நம்பாவிட்டாலென்ன எனக்கு கவலையில்லை.

மல்லை அண்ணா என்னமோ நான் வெளிப்படையாக கேட்கவில்லை என்றால் record பண்ணிக்கொண்டு வந்து போட்டிருக்க வேண்டுமாம். அவர் யாழில் இருப்பது அனந்தி அக்காவா என தான் அறிய விரும்பினால் அதற்குரிய முயற்சிகளை தானே மேற்கொள்ளட்டும். சும்மா என்னை தொந்தரவு பண்ண அவருக்கு உரிமை கிடையாது. :lol: என்னை நம்பாத கள உறவுகளுக்கும் இதுதான் பதில். :D நான் என்னை கேட்ட, என்னை நம்பும் கள உறவுகளுக்கே யாழில் கூறியிருந்தேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி

இது போன்ற  கருத்தரங்குகள் மற்றும்  பொறுப்புவாய்ந்த கூட்டங்களில்

அங்கு அதை நிர்வகிப்பவர்களால் சொல்லப்படும் ஆலோசனைகள் மற்றும்   வேண்டுகோள்களுக்கு படிதல்  அவசியம்.

அதன்படி

அங்கு நடந்த சம்பாசனையை பதிவு செய்து வெளியில் கொண்டு வந்து இவ்வாறு ஒரு பொதுத்தளத்தில் இணைப்பது என்பது மிகவும் பாரதூரமான செயல்.

உடனடியாக அந்த பதிவை  அகற்றிவிடுங்கள்

(அனந்தி மீது உண்மையில் அக்கறையிருந்தால்)

  • தொடங்கியவர்

நான் முதலில் இணைக்க வேண்டாம் என்றே நினைத்தேன். பின்னர் அங்கு நடைபெற்றதை நீங்கள் எழுதியதால் நான் இணைத்து விடுவோம் என நினைத்தேன்.

இணைத்தது சரியா பிழையா என உங்களை கேட்க நேற்று திண்ணையில் உங்களை அழைத்தேன், உங்களை காணவில்லை.

இப்பொழுது நீக்கியுள்ளேன் அண்ணா.

நேற்று ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தது ஒரு முட்டாள் தனமான செயல் என்பதை அதை முன்னின்று செய்தவர்கள் நடந்து முடிந்த பின்னர் உணர்த்தனர் என்பது உண்மை .

அவர் வந்த நோக்கம் வேறு ஆனால் வரை புலம்பெயர் அரசியலை காட்டுவதுக்கு முற்பட்டு அவரை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது தவறு .

சாதாரண துளசியால் போனில் பதிவு செய்ய முடிந்தது என்றால் இதே வேலையா வருகிறவர்கள் எப்படி பதிவு செய்து இருப்பர் அவர் கருத்துக்களை பின்னர் அவர் நாடு திரும்பினால் பாராளுமன்ற சிறப்பு உரிமை மீறல் ....நாட்டுக்கு எதிரான கருத்து என்று பல பிரச்சினை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

______________________

அனந்தி அக்கா மகஜரை கையளிக்கவில்லை என்று யார் சொன்னது? வெளியில் நின்று காரினுள் யாரிடமோ அவர் மகஜரை கொடுத்தாரே. ஆனால் யாரிடம் கொடுத்தார் என தெரியாது.

நியானி: மேற்கோள் காட்டிய கருத்தும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன

சுமந்திரன் தான் மீண்டும் ஆனந்தியிடம் வானில் செல்லும் பொது வாங்கிச்சென்று கமருனிடம் கொடுத்தவர்

  • தொடங்கியவர்

சுமந்திரன் தான் மீண்டும் ஆனந்தியிடம் வானில் செல்லும் பொது வாங்கிச்சென்று கமருனிடம் கொடுத்தவர்

அனந்தி அக்கா காரிலுள்ள யாருக்கோ மகஜர் கொடுக்க முயன்றார். அந்த வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின் சிலவேளை அவர்கள் பெற்றுக்கொள்ளாமலேயே தாண்டி சென்று விட்டார்களோ தெரியாது.

  • தொடங்கியவர்

நேற்று ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தது ஒரு முட்டாள் தனமான செயல் என்பதை அதை முன்னின்று செய்தவர்கள் நடந்து முடிந்த பின்னர் உணர்த்தனர் என்பது உண்மை .

அவர் வந்த நோக்கம் வேறு ஆனால் வரை புலம்பெயர் அரசியலை காட்டுவதுக்கு முற்பட்டு அவரை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது தவறு .

சாதாரண துளசியால் போனில் பதிவு செய்ய முடிந்தது என்றால் இதே வேலையா வருகிறவர்கள் எப்படி பதிவு செய்து இருப்பர் அவர் கருத்துக்களை பின்னர் அவர் நாடு திரும்பினால் பாராளுமன்ற சிறப்பு உரிமை மீறல் ....நாட்டுக்கு எதிரான கருத்து என்று பல பிரச்சினை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

அண்ணா, ஏற்பாடு செய்தவர்கள் புலம்பெயர் அரசியலை எங்கு காட்டினார்கள்?

அங்கு வந்த மக்கள் தான் கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுதும் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையோ மாகாணசபையின் கருத்துக்களையோ தான் கூறமுடியாது என கூறினார். காரணம் இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருப்பதால் என அனந்தி அக்கா கூறினார்.

மற்றபடி அவர் இங்கு கூறிய கருத்துக்கள் ஏற்கனவே இலங்கையில் நின்று கூறிய கருத்துக்கள் தான். ஏனையவை சாதாரணமாக கூறக்கூடிய கருத்துக்கள்.

மாவீரர் தினத்துக்கு போனால் பலர் photo எடுப்பார்கள் என்று தெரியும். அதற்காக மாவீரர் தினத்தையே நடத்த வேண்டாம் என கூற முடியாது. அதுபோல் தான் இதுவும். சந்திப்பு என்றால் அனைத்து தரப்பினரும் அங்கு வருவார்கள். record பண்ண தான் வேணும் என்றில்லை. record பண்ணாமலேயே அங்கு கலந்துரையாடப்பட்டதை கூற முடியும்.

அனந்தி அக்கா காரிலுள்ள யாருக்கோ மகஜர் கொடுக்க முயன்றார். அந்த வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின் சிலவேளை அவர்கள் பெற்றுக்கொள்ளாமலேயே தாண்டி சென்று விட்டார்களோ தெரியாது.

கமருனின் வாகனத்தின் பின்னால் சுமந்திரனின் வாகனம் சென்றது ,அந்த சந்தர்ப்பத்தில் சுமந்திரன் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி பெற்றுச்சென்றவர் .

அண்ணா, ஏற்பாடு செய்தவர்கள் புலம்பெயர் அரசியலை எங்கு காட்டினார்கள்?

அங்கு வந்த மக்கள் தான் கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுதும் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையோ மாகாணசபையின் கருத்துக்களையோ தான் கூறமுடியாது என கூறினார். காரணம் இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருப்பதால் என அனந்தி அக்கா கூறினார்.

மற்றபடி அவர் இங்கு கூறிய கருத்துக்கள் ஏற்கனவே இலங்கையில் நின்று கூறிய கருத்துக்கள் தான். ஏனையவை சாதாரணமாக கூறக்கூடிய கருத்துக்கள்.

மாவீரர் தினத்துக்கு போனால் பலர் photo எடுப்பார்கள் என்று தெரியும். அதற்காக மாவீரர் தினத்தையே நடத்த வேண்டாம் என கூற முடியாது. அதுபோல் தான் இதுவும். சந்திப்பு என்றால் அனைத்து தரப்பினரும் அங்கு வருவார்கள். record பண்ண தான் வேணும் என்றில்லை. record பண்ணாமலேயே அங்கு கலந்துரையாடப்பட்டதை கூற முடியும்.

எல்லாவற்றையும் நாங்கள் தான் சொல்கிறோம் பின்னர் எதுக்கு நீங்க போட்ட லிங்கை நீக்கினியல் இவ்வளவு எதிர்வாதம் செய்தபடி நிக்கிறியள் துளசி .

எனக்கு நான் நல்ல நீதிபதி அம்புட்டுதான் .

தவறுகள் திருத்தப்படவேண்டியது நியாயபடுத்த வேண்டியது அல்ல .

அங்கு வந்த மக்கள் தான் கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுதும் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையோ மாகாணசபையின் கருத்துக்களையோ தான் கூறமுடியாது என கூறினார். காரணம் இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருப்பதால் என அனந்தி அக்கா கூறினார்.

இதைத்தான் எதிபார்க்கின்றோம் .

  • தொடங்கியவர்

எல்லாவற்றையும் நாங்கள் தான் சொல்கிறோம் பின்னர் எதுக்கு நீங்க போட்ட லிங்கை நீக்கினியல் இவ்வளவு எதிர்வாதம் செய்தபடி நிக்கிறியள் துளசி .

எனக்கு நான் நல்ல நீதிபதி அம்புட்டுதான் .

தவறுகள் திருத்தப்படவேண்டியது நியாயபடுத்த வேண்டியது அல்ல .

அதை இங்கு இணைத்ததில் நான் தவறை காணவில்லை. அனந்தி அக்காவை சிக்கலில் மாட்டி விடாதவாறு பொறுப்புணர்வுடன் நடக்குமாறு அங்கு ஏற்கனவே கேட்கப்பட்டது. அதற்கேற்ப தான் மற்றவர்கள் கேள்விகளை முன்வைத்தார்கள்.

எனினும் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்களை அவர் அனுமதியில்லாமல் இங்கு பதிவது சரியா என தெரியவில்லை என்பதால் தான் விசுகு அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க அதை நீக்கியுள்ளேன்.

Edited by துளசி

அந்த கூட்டத்தால்  அனந்தியின் வருங்காலத்தை சிதைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒப்பிடுவது சரி என்றே நினைக்கிறேன்! :icon_idea:

இந்த மாகாத்மா காந்தி எப்பவுமே ஒரு ' Dubious' கரெக்டர் தான்! :D

"இந்த மகாத்மா காந்தியும்" என்று சொல்லுவீங்கள் என்று எதிர்பார்த்தன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
துளசி அவர்களுக்கு!
 
பிரான்சில் நடைபெற்ற அனந்தி அவர்களின் நிகழ்வில் பங்குபற்ற முடியாது கவலைகொண்ட பல தமிழ்நெஞ்சங்களின் துன்பங்களைப் போக்க உதவிய தங்கள் ஒலிப்பதிவு உண்மையிலேயே மகிழ்வைத் தந்தது. பின்பு நீங்கள் ஒலிப்பதிவை நீக்கியது கவலையைத் தந்தாலும் ''எனினும் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்களை அவர் அனுமதியில்லாமல் இங்கு பதிவது சரியா என தெரியவில்லை என்பதால் தான் விசுகு அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க அதை நீக்கியுள்ளேன்''. எனத் தெரிவித்துள்ளமை வரவேற்புக்குரியதே. இருந்தும், அனந்தி அவர்கள் சிறீலங்காவின் அரசியல் புரியாது இதற்குள் காலடிவைத்துள்ளதாக சொல்லமுடியாது. அவர் துணிவுக்குக் காவல் எது என்பதை அவர் அறிவார். ஏற்பாட்டாளர்களும் எங்களைப்போல் மண்ணில் இருக்கத் துணிவின்றித், திறனின்றி புலம்பெயர்ந்து வந்தவர்களே. அவர்கள் வேண்டுதல் அப்படித்தான் இருக்கும். சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே அறைகூவல் விடுக்கும் மனோகணேசன் அவர்களை நாட்டைவிட்டுத் தப்பி ஓடிவிடும்படிதான் எங்களால் ஆலோசனை கொடுக்கமுடியும். :(:blink:  
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  துளசி

மற்றும் உறவுகளே

மிகவும்  இக்கட்டான காலகட்டம்

எப்படி உள்ளே  தள்ளலாம் என்றபடியும்

எவ்வாறு பயங்கரவாதியாக்கலாம் என்றபடியும்

சிங்களவெறி  அரசு.

தயவு செய்து புரிந்து கொள்வோம்.

கருத்தருங்கை  நடாத்தியர்களுக்கு சில கடப்பாடுகள் இருந்தன

பலரும் அதையே  விரும்பினர்

அதையே  நானும் விரும்பினேன்

குடும்ப  உறவு ஒன்றில் பிரிவில் நிற்கின்றேன்.

பின்னர் எழுதுகின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்ன முடிவுகள் கிடைத்தன என்பதை இதுவரை எவரும் சரியாகப் பதியவில்லை. திரி தொடங்கியதில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போயின என்று கொள்ளலாமா? :o

உண்மை  வாலி அங்கு எதுகும் கதைக்கப்படவில்லை எதை எழுதுவது வந்தார் இருந்தார் போனார் ஆனந்த்தி அக்கா அவ்வளவுதான் உண்மையில் ஏமாற்றம் தான் .

நாட்டில் இருக்கும் போது பேசும் துணிவு இங்கு அவரிடம் இருக்க வில்லை புலம் பெயர்த்தவர்களை நம்மவில்லையோ என்னமோ .

மேடைபோட்டுக் கதைபேசிக் கட்சிவளர்த்து அரசியல் செய்தோரை ஆதரித்து வளர்ந்த கூட்டமே தமிழர்களில் அதிகம். அதனால்தான் கதை குறைந்த, செயல் நிறைந்த தலைவன் தோன்றியபோது அவனை உள்வாங்க முடியாது உதாசீனம் செய்தார்களோ....??? புலம்பயர்த் தமிழர்களே! உங்கள் அனைவரது ஒன்றுபட்ட ஒற்றுமையே இன்று தேவை என்ற அனந்தியின் சொல்லை உள்வாங்கிச் செயற்பட முனைந்தாலே அது ஆயிரம் கதைகேட்பதை விடவும் மேலானது!!.

  • தொடங்கியவர்

உண்மையில் இந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்ன முடிவுகள் கிடைத்தன என்பதை இதுவரை எவரும் சரியாகப் பதியவில்லை. திரி தொடங்கியதில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போயின என்று கொள்ளலாமா? :o

என்ன கதைத்தார் என்பதை இணைத்தாலோ எழுதினாலோ அது பிழை. எழுதாவிட்டால் அதுவும் பிழை என்றால் என்ன செய்வது? :)

அனந்தி அக்கா அங்கு உரையாற்றினார். அதன் பின் அங்கு கூடியிருந்த மக்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். :rolleyes:

விசுகு அண்ணா தொடர முடிந்தால் தொடருங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா என்ன கதைத்தார் என்பதை இணைத்ததிலோ அல்லது எழுதியதிலோ யார் பிழை கண்டுபிடித்தார்கள்?

மக்கள் சந்திப்பை நிகழ்த்தியவர்கள் தொகுப்பு அறிக்கை ஒன்றையும் இதுவரை வெளியிடவில்லையா?

அண்மையில் சுமந்திரன் கனடாவில் சந்திப்பு ஒன்றை நடத்தியபோது அவரின் பேச்சினை குறைபிடித்தார்களே. அனந்தி விடயத்தில் அரசியல் வேண்டாம். சுமந்திரன் விடயத்தில் அரசியல் வேண்டும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.