Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புதிதாக வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்கள் மத கலாசாரத்தை பிரதிபலித்தால் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
1-DSC07177.JPG
 
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால்  ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
 
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 
 
5-DSC00615.JPG
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் ஆள் அடையாள அட்டையானது  இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே மாதிரியாகவும் , நிற  புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும் எனவும், எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இவ்  ஊடகவியலாளர் மகாநாட்டில் கபே மற்றும் சி.எஷ்.ஆர் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்  ,தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
 

எந்தவொரு மத அடையாளங்களும் தேசிய அடையாள அட்டையில் பிரதிபலிக்க கூடாது என்பது சரியான முடிவு.

எந்த வித மத அடையாளமோ இன அடையாளமோ தேசிய அடையாள அட்டையில் பிரதிபலிக்க கூடாது என்பதே எனது விருப்பம் அதுதான் ஜனநாயக நாட்டிற்கு பொருந்தும் 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வித மத அடையாளமோ இன அடையாளமோ தேசிய அடையாள அட்டையில் பிரதிபலிக்க கூடாது என்பதே எனது விருப்பம் அதுதான் ஜனநாயக நாட்டிற்கு பொருந்தும்

ஜனநாயக நாட்டில் மக்கள் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கிறது. எந்த இன மக்களும் மதத்தவரும் தமது அடையாளங்களை வைத்திருக்கவும் அது பற்றி பெருமை படவும் உரிமை இருக்கிறது.

அடையாள அட்டைக்கு சுமங்கலி பொட்டை அகற்ற வேண்டும் என்று இன்று தொடக்கி நாளை தாலிக்கு தடை என்று வரும். பிறகு பொது இடங்களில் விபூதிக்கு தடை, தாலிக்கு தடை, பொட்டுக்கு தடை சேலை உடுக்க தடை என்றும் வரும்.இந்த தடைகள் உள்ள நாடுகள் ஜனநாயக நாடுகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
முகம் அடையாள அட்டைக்கு மிகத்தெளிவாக தெரிய வேண்டும்.  மதம் என்று சொல்லிக்கொண்டு முகத்தை மறைக்க முடியாது.இது எல்லா மதம், இனத்தவருக்கும் பொருந்தும்.
 
மேலே தாலி பொட்டு பற்றி பேசப்படவில்லை.அடையாள அட்டை பற்றி பேசப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

முகம் அடையாள அட்டைக்கு மிகத்தெளிவாக தெரிய வேண்டும்.  மதம் என்று சொல்லிக்கொண்டு முகத்தை மறைக்க முடியாது.

முகத்தில் உள்ள தோல் தெளிவாக தெரிய வேண்டுமா? அல்லது அந்த தோலை மயிர் மறைக்கலாமா?

எவ்வளவு தோலை மயிர் மறைக்கலாம்? மயிர் மறைத்த முகம் தெளிவான முகமா?

இதையே நீங்கள் தெளிவாக சொல்லவில்லையே?

 

மேலே தாலி பொட்டு பற்றி பேசப்படவில்லை.அடையாள அட்டை பற்றி பேசப்படுகிறது.

அடையாள அட்டை தனி மனித சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மீறும் போது நீங்கள் அடையாள அட்டை பற்றி பேசினால் நாங்கள் தனி மனித சுதந்திரமான பார்தா, தொப்பி, பொட்டு, தாலி பற்றி எல்லாம் பேச வேண்டிய தேவை வருகிறது.

இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தனி மனித சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மீறினால் நீங்கள் அவை பற்றி பேசுவதில்லையா? பயங்கரவாதம் பற்றி மட்டுமே பேசுவோம் என்று இருக்க மாட்டீர்கள் அல்லவா?

அப்படித்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் உள்ள தோல் தெளிவாக தெரிய வேண்டுமா? அல்லது அந்த தோலை மயிர் மறைக்கலாமா?

எவ்வளவு தோலை மயிர் மறைக்கலாம்? மயிர் மறைத்த முகம் தெளிவான முகமா?

இதையே நீங்கள் தெளிவாக சொல்லவில்லையே?

 

ஏதாவது ஒரு நாட்டில் அடையாள அட்டைக்கு மயிரின் அளவு பற்றி நான் அறியவில்லை. உங்கள் பொது அறிவுக்கே விட்டு விடுகிறேன்.

அடையாள அட்டை தனி மனித சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மீறும் போது நீங்கள் அடையாள அட்டை பற்றி பேசினால் நாங்கள் தனி மனித சுதந்திரமான பார்தா, தொப்பி, பொட்டு, தாலி பற்றி எல்லாம் பேச வேண்டிய தேவை வருகிறது.

 

 
இது நீதி அமைச்சர் ஹக்கிமுக்கான கேள்வி.

இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தனி மனித சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மீறினால் நீங்கள் அவை பற்றி பேசுவதில்லையா? பயங்கரவாதம் பற்றி மட்டுமே பேசுவோம் என்று இருக்க மாட்டீர்கள் அல்லவா?

அப்படித்தான் இதுவும்.

 

அப்போ  பேசலாமே!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.