Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுக் குளமும் யாழ் கிளிநொச்சி மக்ளைப் பிரித்தாளும் தந்திரமும் மூளைச் சலவை செய்யும் அதிகாரிகளும்

Featured Replies

Iranaimadu.jpg

 பின் குறிப்பு:-

இதற்கு முன்னர் எம்மால் ஆசிய அபிவிருத்தி வங்கி கொழும்பு கிளைக்கு அனுப்பப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் எமக்கு அதிகாரிகளின் அழுத்தங்களும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களும் இருக்கும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தோம். அதன் அடிப்படையில் தற்போது விவசாய பிரதிநிதிகளாகிய எம்மை தனித்தனியே இருப்பிடங்களுக்கு வந்து சந்தித்து முளைச்சலவை செய்கின்றார்கள். இதன்போது பணம், பதவி அச்சுறுத்தல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. தனித்தனியே சென்று இவ்வாறு பணத்தைக் கொடுப்பதன் மூலமும், பதவிதருவதாக ஆசை காட்டுவதன் மூலமும், இதற்கு இணங்காதவர்களை அச்சுறுத்துவதன் மூலமும் எமது விவசாயப் பிரதிநிதிகளின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை வேறுவேறாக்கி எங்களிடம் இருந்து சம்மதக் கையொப்பம் பெறும் முயற்சி நடைபெற்று வருகின்றது. இதில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு பொறியியலாளர் திரு.பாரதிதாசன் அவர்களே முன்னின்று செயற்படுகின்றார். இவருடன் மாவட்ட செயலாளரான ரூபவதிபோன்றோரும் ஈடுபடுகின்றனர்.

இந்த எம்மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் இரணைமடு குடிநீர்த்திட்டம் தொடர்பாக இறுதி முடிவுஎடுக்கப்படும் வரை நீடிக்கும் என்பதாலும் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் இறுதியாக 14.11.2013 அன்று வடமாகாண முதலமைச்சர் அதிமேதகுவிக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் முன்னிலையில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் விவசாயிகளாகிய நாங்கள் இத்திட்டத்தில் எமக்கு துளியளவும் விருப்பமில்லை யென அதற்கான காரணங்களுடன் உறுதியாகவும் இறுதியாகவும் தெரிவித்து எக்காலத்திலும் இதற்கு சம்மதித்து கையொப்பம் இடமாட்டோம் என்று தீர்மானம் மேற்கொண்டதனாலும் இது தொடர்பாக தாங்களே இதில் நேரடியாக தலையிட்டு இத்திட்டத்தை நிரந்தரமாக நிறுத்தி விடுவதன்மூலம் எமக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல்களில் இருந்து எம்மைப் பாதுகாத்து அதன்மூலம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுக்குளம் வன்னிவாழ் மக்களுக்குமட்டுமே சொந்தம்.அது அவர்களுக்கு மட்டுமே உரித்தான வாழ்வாதாரம். அதில் உரிமைகோரவோ பங்காளிகளாக வரவோ எவருக்கும் அதற்கான அருகதையே இல்லை.

மற்றும்படி, வடமாகாண முதலைச்சர் விக்கு வினாயகம் அவர்கள் சாதாரணமாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, அரசாங்கம் ஒன்றின் வரிவசூலில் சம்பளமும் இதர படிவசதிகளும் பெற்றுக்கொள்ளும், மக்களது பிரதிநிதி மட்டுமே. அவரை "அதிமேதகு " எனும் சொற்பதம் கொண்டுவிழிப்பதற்கு, எந்தவித காரணமும் அவரிடம் இல்லை.

வன்னியில்லிருந்து இரணைமடுத்தண்ணீரை யாழ் குடாநாடு கொண்டுவருவதற்குமுன்பு, குடாநாட்டு மக்களுக்கு நீர் முகாமைத்துவத்தைப்பற்ரிய அறிவூட்டல் நடவடிக்கையை எடுப்பதுடன், உள்ளூர் வளங்களைப் பாவிப்பதுடன் உள்ளூரில் சுற்றுச்சூழல் மாசுபடாதிருக்கும்வண்ணம் பல நீரேந்து நிலையங்களைத் தோற்ருவித்தல், இருக்கும் நீரேந்து நிலையங்களைப்பராமரித்தல், வளுக்கியாறு எனப்படும் மழைநீர் வடிகாலாற்றில் புதிய நீர்ப்பிடிப்புப்பகுதிகளை உருவாக்குதல், ஆனையிறவு கழியாறு தொடங்கி தொண்டைமானாற்றின் முடிவுவரைக்கும் புதிய நன்நீர் நிலைகளை உருவாக்குதல் இவைபோன்ற அனைத்தையும் செய்துவிட்டு அதன்பின் தேவைப்படுமிடத்து இரணைமடுக்குளத்தின் தண்ணீரை குடாநாட்டுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை யோசிக்கலாம்.

அதைவிடுத்து இப்போதே குடாநாட்டு மக்களை சிந்திக்கவிடாது இன்னமும் சுற்றுச்சூழல்பற்றிய அறிவே வளரவிடாது, ஏற்கனவே சுற்ருச்சூழல்ச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு இனக்குழுமத்தை மேலும்மேலும் பழுதடைய வைப்பது கொஞ்சமும் நல்லதல்ல.

தம்பி நாந்தான் அவர்களே, வரலாறு அதுபாட்டுக்கு தனது வரைபுகளை இட்டபடி நடந்தேகிக்கொண்டேயிருக்கும். அவற்றைக் கவனித்து நாம் எமக்குள் பதிய வைத்துக்கொள்வது எமது திறன் சம்பந்தபட்ட விடையம். யுத்தகாலத்தில் எவ்வேளையிலும் இரணைமடுகுளம் விடுதலைப்புலிகளால் சேதமாக்கப்படவில்லை. பழைய விடையங்களை இன்னுமொருமுறை தேடிப்படிக்கவும். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளால் அனுமதி கேட்ட பொழுது தலைவரால் இரணைமடு குளத்தின் முக்கியம் பற்றியும் வன்னி மக்களின் வாழ்வாதார முக்கியத்துவம் பற்றியும் குளத்தை உடைப்தால் ஏற்படும் நீண்டகால வாழ்வாதார  பொருளாதார இழப்புகள் பற்றியும் போராளிகளுக்கு அறிவுறுத்தினார். உண்மையில் உடைப்பு நிகழ்ந்து இருந்தால் பாாரிய மாற்றதை கண்டிருக்க முடியும் ஆனால் அந்நேரமும் தலைவரால் நீண்டகால நோக்கிலேயே பார்க்கப்பட்டிருந்தது.

நீரில் உணர்ச்சி வசப் படுகிறார் சிறிதரன் MP! கண்டுபிடித்தார் முதலமைச்சர் சி.வி

கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி கல்வி வலயம் நடாத்திய ´மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா´ இன்று சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´வடமாகாண முதலமைச்சர் கேட்பது இரணைமடுத் தண்ணீரை.அவர் தாகமாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இரணைமடுக் குளம் 34 அடி நீரைக் கொண்டது. ஆனால் மேலதிக இரண்டு அடி நீரைக் கூட்டி அதனைத்தான் தாங்கள் கொண்டு செல்வதாக கொண்டு செல்பவர்கள் சொல்கிறார்கள்.

கிளிநொச்சியில் 34 ஆயிரம் ஏக்கருக்கு நீர் தேவை இருக்கிறது.ஆனால் எண்ணாயிரம் ஏக்கருக்கு மட்டுமே நீர்பாய்ச்ச முடிகிறது. அந்த எண்ணாயிரம் ஏக்கரை 16 ஆயிரம் ஏக்கராக மாற்ற முடியுமா? என விவசாயிகள் கேட்கிறார்கள். மேலதிக நீர் என்பது 34 ஆயிரம் ஏக்கருக்கு காலபோகம், சிறுபோகம் ஆகியவற்றுக்கு நீர் வழங்கிய பின்னர் இருப்பது. இங்கு மீதம் இல்லை. அவ்வாறு மீதமிருந்தால் கொடுக்கலாம்.

இரணைமடுக் குளத்தில் தற்போது 34 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 12 அடி தண்ணீர் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்கே இருக்கிறது மேலதிக நீர்´ என கேள்வியும் எழுப்பினார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதற்கு இவ்வாறு பதிலளித்துப் பேசினார்.

´செயற்திட்டங்கள் பற்றிப் பேசும்போது உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை. அது உள்ளத்திலிருந்து வரவேண்டும். அறிவு பூர்வமாக இந்தச் செயற்திட்டம் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட விடயத்தை நாங்கள் பேசி ஆராய்ந்த பின்னர்தான் நான் தம்பியிடம், நீங்கள் தண்ணீர் கொண்டு வருவீர்களா? இல்லையா? என்று கேட்டேன்.

இரணைமடுக் குளத்தில் 12 அடி தண்ணீர் இருந்தால் அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. 32 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும்.´ எனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்விற்கு இவர்களோடு, வடமாகாண விவசாய அமைச்சர், பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை, தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டை பேணுகின்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மறவன்புலவு க.சச்சிதானந்தன் அறிஞர் வரிசையில் இன்று கௌரவிக்கப்பட்டார்.

தலைப்பு இரணைமடு குளத்தில் இருந்தான நீர் வினியோகம் சம்பந்தமானது. தயவு செய்து  இது நீர் விநியோகம் தொடர்பான பொருளாதார, தொழில் நுட்ப சாத்தியப்பாடுகள் அல்லது சாத்தியமின்மைக்கான காரணங்கள்,  பொருளாதார தரவுகள் தொடர்பான விவரங்களை பற்றி உரையாடினால் பிரயோசனமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைப்பு அது தலைப்புக்கு மட்டும்தான் இங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் என்பது தேசிய சொத்து போதுமான நீர் இருக்கின்ற பொழுது அதை வறட்சி மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது பொதுவானது மத்திய அரசின் துணையுடன் இரணை மடு நீரை எப்பிடி எடுத்து செல்வது என்று யாழ் மாவட்ட அதிகாரிகளுக்கி தெரியும்

இரணைமடுக்குளம் வன்னிவாழ் மக்களுக்குமட்டுமே சொந்தம்.அது அவர்களுக்கு மட்டுமே உரித்தான வாழ்வாதாரம். அதில் உரிமைகோரவோ பங்காளிகளாக வரவோ எவருக்கும் அதற்கான அருகதையே இல்லை.

மற்றும்படி, வடமாகாண முதலைச்சர் விக்கு வினாயகம் அவர்கள் சாதாரணமாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, அரசாங்கம் ஒன்றின் வரிவசூலில் சம்பளமும் இதர படிவசதிகளும் பெற்றுக்கொள்ளும், மக்களது பிரதிநிதி மட்டுமே. அவரை "அதிமேதகு " எனும் சொற்பதம் கொண்டுவிழிப்பதற்கு, எந்தவித காரணமும் அவரிடம் இல்லை.

வன்னியில்லிருந்து இரணைமடுத்தண்ணீரை யாழ் குடாநாடு கொண்டுவருவதற்குமுன்பு, குடாநாட்டு மக்களுக்கு நீர் முகாமைத்துவத்தைப்பற்ரிய அறிவூட்டல் நடவடிக்கையை எடுப்பதுடன், உள்ளூர் வளங்களைப் பாவிப்பதுடன் உள்ளூரில் சுற்றுச்சூழல் மாசுபடாதிருக்கும்வண்ணம் பல நீரேந்து நிலையங்களைத் தோற்ருவித்தல், இருக்கும் நீரேந்து நிலையங்களைப்பராமரித்தல், வளுக்கியாறு எனப்படும் மழைநீர் வடிகாலாற்றில் புதிய நீர்ப்பிடிப்புப்பகுதிகளை உருவாக்குதல், ஆனையிறவு கழியாறு தொடங்கி தொண்டைமானாற்றின் முடிவுவரைக்கும் புதிய நன்நீர் நிலைகளை உருவாக்குதல் இவைபோன்ற அனைத்தையும் செய்துவிட்டு அதன்பின் தேவைப்படுமிடத்து இரணைமடுக்குளத்தின் தண்ணீரை குடாநாட்டுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை யோசிக்கலாம்.

அதைவிடுத்து இப்போதே குடாநாட்டு மக்களை சிந்திக்கவிடாது இன்னமும் சுற்றுச்சூழல்பற்றிய அறிவே வளரவிடாது, ஏற்கனவே சுற்ருச்சூழல்ச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு இனக்குழுமத்தை மேலும்மேலும் பழுதடைய வைப்பது கொஞ்சமும் நல்லதல்ல.

தம்பி நாந்தான் அவர்களே, வரலாறு அதுபாட்டுக்கு தனது வரைபுகளை இட்டபடி நடந்தேகிக்கொண்டேயிருக்கும். அவற்றைக் கவனித்து நாம் எமக்குள் பதிய வைத்துக்கொள்வது எமது திறன் சம்பந்தபட்ட விடையம். யுத்தகாலத்தில் எவ்வேளையிலும் இரணைமடுகுளம் விடுதலைப்புலிகளால் சேதமாக்கப்படவில்லை. பழைய விடையங்களை இன்னுமொருமுறை தேடிப்படிக்கவும். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான்.

அண்ணே இதை தான் கேரளா காரனும் கர்நாடகா காரனும் எங்கள் தொப்புள் கோடி தமிழ்நாட்டுக்கு சொல்லுவது...

ஆனால் இங்கு எங்கள் வீரத்தமிழர்கள் தமிழ்நாட்டுகாரனை இதே காரணத்துக்காக தமிழ்நாட்டை பிரிக்க சொல்லுகிறார்கள்... இப்படி பார்த்தால் நாங்கள் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கோனும்..

Canada வில் இந்த இரணமடுகுள தாக்குதல் அந்த மாதிரி ஓடிச்சு... முள்ளிவாய்க்கால் விழுமட்டும் நான் நினைத்தேன் இரணைமடு குளத்தோடு சிங்கள ஆமி துலஞ்சுதெண்டு :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.