Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்': ஜனாதிபதி மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார்.

வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் 60 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

'மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாணசபை ஒன்றை நிறுவி, பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவுசெலவுத் திட்ட விவாதம் நடக்கிறது' என்றார் மகிந்த ராஜபக்ஷ.

தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு
120129164727_tna_gosl_talks_304x171_gosl

ஆளுங்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன

வடக்கு மாகாணசபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

'நான் தலைவர் ஆர். சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்' என்றார் இலங்கை ஜனாதிபதி.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவந்த இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன.

இடையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துவருகிறது.

ஆனால், அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131220_mahindabudgettna.shtml

  • கருத்துக்கள உறவுகள்

போர் செய்வதற்கு வெளிநாடுகளை நாடமாட்டேன் என்று முன்னம் சொல்லியிருந்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இசை. தமிழரை கொல்ல வெளிநாடு தேவை.தீர்வுக்கு மட்டும் வெளிநாடுகள் தேவை இல்லை.பொருளாதார தடையை போட்டு தீர்வை தர வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்': ஜனாதிபதி மகிந்த

 

ஏதோ  நீங்கள் கையில் வைத்திருக்க

அவர்கள் தட்டிவிட்டு ஓடுவது   போலுள்ளது

முதலில் உங்கள் கையைக்கொஞ்சம் திரும்பிம் பாருங்கள்

மற்றவர்களுக்கு வசனம் பின்னர்   சொல்லலாம்

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை

தீர்வை  வையுங்கள்

நாம் அல்ல வெளிநாடுகளை அழைப்பது. நமிடம் ஒரு நாட்டுக்கான தூதுவராலயம் கூட கிடைக்காது. நாம் அல்ல முட்டாள்களாக பொதுநலவாய மகா நாடு நடத்தி கமருனை வருந்தி அழைத்து நம் தலையில் மண் அளிப்போட்டது. நாம் அல்ல அமெரிக்காவிடம் GSP+ இரப்பிரப்பதால் அமெரிக்கா சொலவதை தட்ட முடியாமல் இரப்பிரக்க. நாம் அல்ல LLRC அமைத்து அறிக்கையை ஐ.நாவில் கொடுத்தது. நாம் அல்ல தென் ஆபிரிக்காவிடம் TRC தேடிப் போக முடிவெடுத்தத்து. 

 

நாம் LLRC கமிசன் அமைத்தை எதிர்த்தோம். நாம் பொதுநலவாயம் என்ற பெயரில் வெளிநாடுகள் இலங்கைக்கு வருவதை எதிர்த்தோம். நாம் இலங்கை பிருத்தானியாவின் பிரதமரை அழைத்ததை எதிர்த்து லண்டனில் உண்ணாவிரதமிருந்தோம். இப்போது நாடுகடந்த தமீழ அரசு  TRC அமைப்பதை எதிர்த்து பிரேரணை நிறைவேற்றி இருக்கிறது. சம்பந்தர் தெனாபிரிக்க போவதற்கு விரும்பவில்லை. இலங்கை TRC யை கைவிட்டுவிட்டு அறிக்கை வெளிவிடுமா? 

 

மேற்குநாடுகள் இலங்கையில் புகுந்திருப்பதுபொன்சேக்காவின் சிறை, லசந்தாவின் கொலை, அக்சன் பாம் கொலை, தங்காலைக்கொலை,  வெல வேரியா கொலை, சிராணியின், பதவி நீக்கம், மேற்குநாடுகள் விற்பதற்கு GSP+ சந்தை கொடுக்க, சீனாவுக்கு மட்டும் தொழில் கொடுப்பது, போன்ற சேட்டைகளாள் மட்டுமே. அவற்றை திருத்த வேண்டும் முதல்.

சதாம் குசைனுக்கு நடந்தது உனக்கும் நடக்கவில்லை என்றால்  இருந்து பார்

13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று பேசத் தயார்! – இரா.சம்பந்தன் தெரிவிப்பு.
[sunday, 2013-12-22 06:42:19]
News Service
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13-ம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை ஆற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 'வெளிநாட்டிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டிலேயே தீர்வொன்றை' எட்ட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

'ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளூரிலேயே இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம்.ஓராண்டுக்கும் மேலதிகமாக அரசாங்கத்துக்கும் எமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன்போது நாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை.பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 2012-ம் ஆண்டு ஜனவரி 17, 18, 19-ம் திகதிகளில் இடம்பெற இருந்த பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சமூகமளிக்காதபடியாலேயே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முறிந்து போனது.

பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதில் இடம்பெறுமாறு அரசாங்கம் தமக்கு விடுத்த அழைப்பை ஏற்கவில்லை. 13-ம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது. ஒரு நியாயமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், 'ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்' என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99610&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.