Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் முடிவும் பின்னணியும்: செல்வரட்னம் சிறிதரன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

TNA%20Sambanthan_CI.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் உயர் மட்ட நிலையைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக விரிவு பெற்றிருக்கின்றது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கூட்டமைப்பு விரிவடைந்து பெரிதாகியிருக்கின்றபோதிலும், அதன் செயற்பாடுகள், எதிர்காலத்து நடவடிக்கைகள் குறித்த அக்கறையான போக்கு என்பன விரிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

வடமாகாண சபை செயற்படத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் மாகாண சபையும் அதன் முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஏற்கனவே செயற்பட்டு வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் என்னென்ன வழிமுறைகளில் செயற்பட வேண்டும். என்னென்ன விடயங்களில் தனித்துவமாக இருந்து செயற்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாக அல்லது உயர் மட்டத்தினராகக் கருதப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் அரசியல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை எந்த வகையில் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள், என்னென்ன வகையில் அல்லது எந்த வகையில் செயற்படப் போகின்றார்கள் என்பது பற்றி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடு

வவுனியாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கு பிரதேசங்களின் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆராயப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேநேரம், வவுனியாவில் நடைபெறவுள்ள மிகவும் முக்கியமான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தில் இராணுவ பின்னணி சார்ந்த வடமாகாண ஆளுனரை நீக்குவது தொடர்பில் முக்கியமாக ஆராயப்படும் என்ற தகவலும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதற்கான தீர்மானம் கொழும்பில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அத்தகைய முடிவு எடுக்கப்படாத நிலையில்,  அவ்வாறு தகவல் வெளிவந்திருந்தமை தொடர்பில் பின்னர் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் காரசாரமான விவாதம் ஒன்று, கிட்டத்தட்ட குழப்பகரமான ஒரு நிலைமை ஏற்படும் அளவுக்கு ஏற்பட்டிருந்ததாகத் தகவல்.

ஆயினும் கொழும்பில் நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் வவுனியாவில் கூடி, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி, பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ள யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு குடிநீர்த் திட்டம் தொடர்பாக, முக்கியமாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. இரணைமடு திட்டம் குறித்து வவுனியா கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுவதால், அந்தக் கூட்டத்தில்; வேறு விடயங்களைப் பற்றி விவாதிப்பதில்லை என நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்தபோது, வேறு விடயங்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.  

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட வவுனியா கூட்டத்தில் என்னென்ன விடயங்கள் ஆராயப்படும், என்னென்ன விடயங்கள் குறித்து பேசி தீர்மானிக்கப்படும் என்ற நிகழ்ச்சி நிரல் இருக்கவில்லை. கூட்டத்திற்ககு வருகை தந்திருந்தவர்களின் வருகையைப் பதிவு செய்த பதிவேட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்ததை சிவாஜிலிங்கம் போன்றோர், சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார்கள்;. இந்தக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்ற விடயங்கள் குறித்து முன்றிவித்தல் கொடுக்கப்படாத காரணத்தினால், எந்தவிதமான ஆயத்தமும் இல்லாத நிலையிலேயே பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இதனால் அந்தக் கூட்டத்தைக் கூடிய பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாமல் போனதென்று பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம் வவனியாவில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில், அந்த மாநாட்டில் முக்கிய விடயமாக எடுத:துக் nhகாள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு குடிநீர்த்திட்டமட் தொடர்பாகக் கலந்துரையாடப்படவில்லை. மாறாக இந்தக் கூட்டத்திற்கென அழைக்கப்பட்டிருந்த இரணைமடு குளத்து விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை தலைவர் ஆர்.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், வவுனியா கலாசார மண்டபத்தி;ன் நுழைவாயில் பகுதியில் வைத்து சில நிமிடங்களே அவர்களுடன் உரையாடினார்கள். அந்தப் பிரதிநிதிகள் கூற வந்த விடயங்களை முழுமையாக அவர்கள் கேட்கவுமில்லை. அந்த விடயம் குறித்து அவர்களுடன் விரிவாகப் பேசவுமில்லை.

மூன்று விடயங்கள்

இந்தக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் மூன்று விடயங்கள் குறித்து விளக்கமளித்திருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் அங்கீகாரம் பெறுகின்ற வகையிலேயே அந்த மூன்று விடயங்களும் அங்கு முன்வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமைகளை சம்பந்தன் முதலில் விரிவாக எடுத்துரைத்தார்.  அரசாங்கத்தின் அழைப்பையேற்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொண்டால் என்ன என்ற தோரணையில் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்ததாகக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்தும் மறுப்பதனால் பயன் ஏதுமில்லை. அரசின் அழைப்பை ஏற்று, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால் என்ன என்ற சிந்தனையைக் கிளப்பி, அவ்வாறு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்போவதாக எதிர்பார்க்கப்படுகின்ற தீர்மானம், இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பதற்கு மாறாக வெற்றி பெறலாம், வெற்றிபெறாமலும் போகலாம். சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்ற இனப்படுகொலை விடயமானது, சாதாரண விடயமல்ல. அதற்கு சரியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். இல்லையேல் அதனை சர்வதேச சமூகம் மார்ச் மாத மாநாட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இனப்படுகொலை என்பது சாதாரண விடயல்லை. இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்கள், கொலைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு, இனப்படுகொலை குற்றச்சாட்டை அரசுக்கு எதிராக சுமத்த முடியாது. ஆகவே, இனப்படுகொலை என்று எங்களுக்குள் பேசலாமே தவிர, சர்வதேச அரங்கில் அதனைக் கொண்டு செல்லும்போது பெரிய அளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அந்த விடயத்தை சர்வதேச மட்டத்தில் நாங்கள் எடுத்துச் செல்வது பொருத்தமாக இருக்கமாட்டாது என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துக்கள் அமைந்திருந்ததாக் கூறப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் இங்கு கருத்து வெளியிடுகையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் இணைந்து ஓர் அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒரு தீர்வு யோசனை அரசிடம் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. எனவே, புதிய அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நிலையில் உள்ள சம்பந்தன் விக்னேஸ்வரன் சுமந்திரன் ஆகிய மூன்று பேரும் இவ்வாறு முக்கிய கருத்துக்களை முன்வைத்த போதிலும், இவர்களுடன் தலைமை நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்ற மாவை சேனாதிராஜா இவ்வாறு எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகள் மூன்றுமே சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த யோசனைகள் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள். அரசாங்கத்தின் அழைப்பையேற்று பேச்சுவார்த்தைகளுக்குப் போவதால், எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் பலரும் வலியுறுத்தினார்கள். ஒரு வருட காலமாக அரசாங்கத்துடன் நேரடி பேச்ளூசுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதிலும், அந்தப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் அதிகாரபூர்மானது என்பதை ஏற்காமலேயே நிராகரித்திருந்துது. இந்த நிலையில் தீவிர சிங்கள இனவாத அரசியல் சக்திகள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்துவதால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என்று வினாவும் எழுப்பப்பட்டிருந்தது.

அதேநேரம் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறும்வரையில் அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இனப்படுகொலை என்ற விடயம் குறித்தும் காரசாரமான கருத்துக்கள் பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. சர்வதேச மட்டத்தில் பல அமைப்புக்கள் இனப்படுகொலை தொடர்பில் புலம் பெயர்ந்து சென்றுள்ளவர்களின் துணையோடு, ஆதாரங்களைச் சேகரித்து அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வகையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்பு, காணாமல் போயுள்ளவர்களின் விடயம், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் இனப்படுகொலை மற்றும் இன ஒடுக்குமுறை சார்ந்தது என எடுத்துக் கூறி, இது தொடர்பில் ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாண சபைகள் இணைந்து இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் ஆதரவைப் பெறவில்லை. இதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள சம்பந்தன், விக்னேஸ்வரன், சுமந்திரன் ஆகிய மூவரும் முன்வைத்த யோசனைகள் முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக எடுக்கப்பட்டவற்றில் அரசங்கத்தின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதில்லை என்பது முக்கிய விடயமாக கூட்டம் முடிவடைந்தபின்னர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள்

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வடமாகாண முதலமைச்சர் தொடர்பான கருத்துக்களும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. மாகாண சபை செயற்படத் தொடங்கி மூன்று மாதங்களாகப் போகின்ற நிலையிலும், மாகாண சபை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், முதலமைச்சர் மாகாண அமைச்சர்கள் நான்குபேருடன் மாத்திரமே தொடர்புகளை வைத்துச் செயற்படுகின்றார்கள் என்றும், சபை உறுப்பினர்கள் முக்கியமான விடயங்கள் தொடர்பில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடததவோ, குறிப்பாக அவருடன் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ள முடியாதிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முதலமைச்சருடன் தொடர்புகளைப் பேண முடியாத நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண அமைச்சர்களுக்கு உதவியாக அல்லது அவர்களின் சில பணிகளில், சில மாவட்டங்களில் உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பொறுப்புக்களை எவ்வாறு நிறைவேற்றுவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த வழிகாட்டல்கள், ஆலோசனைகள் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

முக்கியமாக மாகாண சபை உறுப்பினர்களிடம் பொதுமக்கள் முன்வைத்துள்ள முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அல்லது அவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு உறுப்பினர்கள் முதலமைச்சருடன் கலந்தாலோசிக்க அல்லது அவர் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கின்ற போதிலும், அவற்றைச் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சரைச் சந்திப்பதற்கோ அல்லது அவருடன் தொடர்புகொள்வதற்கோ முடியாதிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்;.

கூட்டத்தின் முடிவுகள் - தீர்மானங்கள்

வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் பூட்டிய கதவுகளுக்குள் காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி மாலை ஆறு மணிவரையில் தொடர்ந்து நடைபெற்றது. பலரும் தங்களுடைய கருத்:துக்களை விரிவாக எடுத்துக் கூறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. இந்த வகையில் இந்தக் கூட்டம் நல்லதொரு கலந்துரையாலாகவும், கருத்துப் பரிமாற்றத்திற்கு ஏற்ற களமாகவும் அமைந்திருந்தது.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற்றதன் பின்னர், அந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆயினும், வடமாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றதன் பின்னர், இரண்டு மாகாண சபைகளையும் சேர்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், கட்சித் தலைர்களுடனும் அமர்ந்து பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற சந்திப்புக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தி;ன் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் அழைப்பையேற்று, பேச்சுவார்த்தைகளில் இப்போதைக்குக் கலந்து கொள்வதில்லை, தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற போர்க்கால இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை நிராகரிப்பது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பில் உள்ள பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டத்தைத் தொற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது, வலிகாமம், சம்பூர் உட்பட மற்றைய பிரதேசங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும், இராணுவ பிரசன்னம், அதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள், பெண்களுக்கு ஏற்படுகின்ற ஆபத்துக்கள் என்பன நீக்கப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இடையூறுகளும் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

காலை முதல் மாலை 6 மணி;வரையில் நடைபெற்ற ஒரு நீண்ட கூட்டம் தொடர்பாக சுருக்கமான ஓர் அறிக்கை வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டது, முதலில் செய்தியாளர்களின் கேள்விகளுகு;குப் பதிலளிக்கப்படும் என்று சம்பந்தன் தெரிவித்தபோதிலும், ஒன்றிரண்டு கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்தார். முதல் கேள்pவக்குப் பதிளளித்ததுமே நன்றி கூறி எழுந்துவிட்டார். மொத்தமாக நான்கு கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்தார். அதேநேரம், செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், அருகுpல் இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தண்டாயுதபாணி சீககிரம் முடியுங்கள் நாங்கள் போக வேண்டும் என குறிப்பிட்டார.

தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே இருக்கின்றார்கள. மக்கள் சம்பநதப்பட்ட விடயங்கள் பற்றியே அவர்கள் கூடியிருந்து கதைக்கின்றார்கள். முடிவுகளை மேற்கொள்கின்றார்கள். அந்தத் தகவல்களை ஊடகங்களே மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. அவ்வாறிருக்கும்போது எட்டு மணித்தியாலங்கள் அவர்கள நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் செய்தியாளர்களிண் கேள்விகளுகுகுப் பதிலளிப்பதற்கு ஆர்வமிருவர்களாகவே காணப்பட்பருந்தனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கு

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி, ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் புதிய பரிமாணத்திற்குள் பிரவேசித்திருக்கி;ன்றது. அதேநேரம் பல்வேறு சவால்களுகு;கும் புதிய புதிய பிரச்சினைகளுகு;கும் முகம் கொடுக்கத் தொடங்கியுள்ள மாகாணசபையின் எதிர்காலச் செயற்பாடுகள், அதன் உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பான விடயங்கள் என்பன குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவே இல்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின தேசிய மாநாடாக வவுனியா கூட்டத்தைக் குறிப்பிட்டிருந்தார்களேயொழிய, ஓர் அரசியல் மாநாட்டுக்கு உரிய வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்கால்ச செயற்பாடுகள், அதன் கட்டமைப்பு, கட்சி ரீதியாக அதனைப் பலப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதுவுமே பேசப்படவில்லை.

2013 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி இந்த மாநாடு நடத்தப்பட்ட போதிலும் குறைந்த பட்கசம் வருகின்ற 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் - குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஐநாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது, அந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் எடுக்கப் போகின்ற நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த வகையில் நடந்து கொள்வது என்பது பற்றி கூட இந்தக் கூட்டத்த்pல் சிந்தி;க்கப்படவில்லை. பேசப்படவில்லை. விவாதிக்கப்படவில்லை.

பேச்சுவாரத்தைகளுக்கான அரசாங்கத்தின் அழைப்பை நிராகரிப்பதென்பது ஏற்கனவே கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதேபோன்று ஏனைய விடயங்களும் பழைய விடயங்களேயொழிய புதிய விடயங்களல்ல. போரழிவுகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்கின்ற கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை நிராகரிப்பது என்பது மட்டுமே புதிய விடயமாக இருக்கின்றது.

மொத்தத்தில் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடானது அரைத்த மாவை அரைப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகவே தெரிகின்றது.
  http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100942/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும், சுமந்திரனும்... கூட்டணியில் இருக்கும் வரை...
எமுக்கு, விமோசனம் இல்லை.
தமிழ்மக்களின் நன்மை கருதி, இவர்கள்... அரசியலிருந்து விலகி இருப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும், சுமந்திரனும்... கூட்டணியில் இருக்கும் வரை...

எமுக்கு, விமோசனம் இல்லை.

தமிழ்மக்களின் நன்மை கருதி, இவர்கள்... அரசியலிருந்து விலகி இருப்பதே நல்லது.

 

 

முழுவதையும் வாசித்தீர்களா  சிறி??

நானும் வாசிக்கத்தொடங்கி

அரை வாசியில் நிறுத்திவிட்டேன்.

உங்கள் பொறுமையைப்பார்க்க  எனக்கு பொறாமையாக  இருக்கு :D  :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுவதையும் வாசித்தீர்களா  சிறி??

நானும் வாசிக்கத்தொடங்கி

அரை வாசியில் நிறுத்திவிட்டேன்.

உங்கள் பொறுமையைப்பார்க்க  எனக்கு பொறாமையாக  இருக்கு :D  :D

நேரே கடைசி பந்தியை வாசிச்சால் போச்சு :D  :D

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதையும் வாசித்தீர்களா  சிறி??

நானும் வாசிக்கத்தொடங்கி

அரை வாசியில் நிறுத்திவிட்டேன்.

உங்கள் பொறுமையைப்பார்க்க  எனக்கு பொறாமையாக  இருக்கு :D  :D

 

 

நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் உயர் மட்ட நிலையைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக விரிவு பெற்றிருக்கின்றது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கூட்டமைப்பு விரிவடைந்து பெரிதாகியிருக்கின்றபோதிலும், அதன் செயற்பாடுகள், எதிர்காலத்து நடவடிக்கைகள் குறித்த அக்கறையான போக்கு என்பன விரிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

------

 

நீங்கள் தான்... பொறுமைசாலி விசுகு.

நான் ஐந்தாவது வரியுடன், நிற்பாட்டி விட்டேன்.

அவ்வளவு அவசரத்தில... "நோஸ் கட்" கொடுக்க வேணும் என்பதால்...

கருத்து எழுதி விட்டேன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் உயர் மட்ட நிலையைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக விரிவு பெற்றிருக்கின்றது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கூட்டமைப்பு விரிவடைந்து பெரிதாகியிருக்கின்றபோதிலும், அதன் செயற்பாடுகள், எதிர்காலத்து நடவடிக்கைகள் குறித்த அக்கறையான போக்கு என்பன விரிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் தான்... பொறுமைசாலி விசுகு.

நான் ஐந்தாவது வரியுடன், நிற்பாட்டி விட்டேன்.

அவ்வளவு அவசரத்தில... "நோஸ் கட்" கொடுக்க வேணும் என்பதால்...

கருத்து எழுதி விட்டேன். :D  :lol:

 

ஐயோ  சிறி

இதே  இடத்தில் தான் நானும் நிறுத்தினேன்

மிச்சம் புரிந்த  மாதிரி  இருந்தது....... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நேரே கடைசி பந்தியை வாசிச்சால் போச்சு :D  :D

 

மொத்தத்தில் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடானது அரைத்த மாவை அரைப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகவே தெரிகின்றது.

 

"அரைத்த மாவை... அரைத்த கூட்டமைப்பு" என்று நீங்கள் தலைப்புப் போட்டிருந்தால்...

நாம் எமது வாழ்வில்... சில நிமிடங்களை, வீணாக்கியிருக்க மாட்டோம்... பெருமாள். :D  :lol:

சம்பந்தனும் சுமந்திரனும் விலக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கூட்டமைப்பில் ஜனநாயக தன்மையை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். புலிகளில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டிய  இவர்கள் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். அதை விடுத்து முடிவுகள் எடுப்பதில் தன்னிச்சையாக தமது சொந்த முடிவுகளை எடுப்பார்களானால் எப்படி இவர்களால் புலிகளை குற்றம் சாட்ட முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் சுமந்திரனும் விலக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கூட்டமைப்பில் ஜனநாயக தன்மையை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். புலிகளில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டிய  இவர்கள் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். அதை விடுத்து முடிவுகள் எடுப்பதில் தன்னிச்சையாக தமது சொந்த முடிவுகளை எடுப்பார்களானால் எப்படி இவர்களால் புலிகளை குற்றம் சாட்ட முடியும். 

 

 

புரியல

அவர்கள் மாறவேண்டும் என்பது கோரிக்கையா?

அல்லது

புலிகளைக்கேள்வி  கேட்கவேண்டுமென்பதற்காக

அவர்கள் அவர்கள் மாறவேண்டும் என்பது கோரிக்கையா? :(

சம்பந்தனும் சுமந்திரனும் விலக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கூட்டமைப்பில் ஜனநாயக தன்மையை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். புலிகளில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டிய  இவர்கள் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். அதை விடுத்து முடிவுகள் எடுப்பதில் தன்னிச்சையாக தமது சொந்த முடிவுகளை எடுப்பார்களானால் எப்படி இவர்களால் புலிகளை குற்றம் சாட்ட முடியும். 

 

கூட்டமைப்பின் கடைசி தேர்தல் விஞ்ஞாபனம் கோட்டில் இருக்கு. வழக்கு முடிய கூட்டமைப்பை இலங்கை தடை செய்ய முடியும். அதாவது உண்மையான ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை. கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவிட்டால் தடை செய்யப்படும் என்ற நிலையில் இருக்கும் போது அவர்கள் பேசுவதை உண்மையாக பிரசுரிக்கும் எந்த பத்திரிகையுமே பதிவை இலங்கையில் சட்டப்படி வைத்திருக்க முடியாது. எனவே கூட்டமைப்பின் மகாநாடு பற்றி உண்மையை எழுத முடியாது. நஞ்சை மட்டும்தான் கக்க முடியும். இதனால் தான் ஊரிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் சில கூட்டமைப்பின் மீது அவர்கள் ஜனநாயக விரோதிகள், தமிழ் மக்களின் எதிரிகள் என்று தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கின்றன. இதில் கூட்டமைப்புக்கு ஒரு வாசி மட்டும் இருக்குகிறது. அது என்ன பிழைவிட்டாலும் அதவும் இந்த வாரி இறைக்கப்படும் சேற்றுக்குள் சேறாகவே மறைந்து போகிறது. தேர்தல் வந்தால் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்திப்பார்கள்.  மக்களுக்கும், தமக்கும் இடையில் இந்த தமிழ் விரோத ஊடகங்கள் இல்லாத போது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தமிழ் பத்திகைகள் நோக்கம் இல்லாமல் சேற்றை வாரி இறைத்ததை மக்களுக்கு விள்ங்கப்படுத்துவது கஸ்டமில்லை. இதனால் மக்கள் வீட்டுக்கு நேரே புள்ளடி இட்டுவிட்டு தம் பாட்டுக்கு போய்விடுகிறார்கள். இதில் தமிழ் விரோத ஊடகங்கள் ஒரு கொஞ்சம் அக்கறை காட்டி எதையாவது உபயோகமானதை, மக்கள் நம்பதக்கதை எழுதினால் தேர்தல் நேரம்  மக்கள் அதை பற்றி வேட்பாளர்களிடம் விசாரிப்பார்கள். 

 

இந்த கட்டுரையில் சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் மூவரும் மூன்று பிரேரணைகள் வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பெருமாள் முன்னர் பதிந்த சங்கதியின் கட்டுரையில் அவை எல்லாமே சுமந்திரனால் கொடுக்கப்பட்ட பேச்சாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும்,  உள்ளே என்ன நடந்தது என்பது தமக்கு தெரியும் என்று மார் தாடுகிறாகளே ஒழிய இந்த  இரண்டில் ஒரு ஊடகம் தன்னும் பேச்சாளர்களின் வசனங்களில் எதையும் பிரசுரிக்கவில்லை. அதே நேரம் தம் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று கவலைப்பட்டு காட்டுகிறார்கள். எட்டு மணிதியாலமாக உள்ளே நடந்ததை தெரியும் என்று மார் தட்டுபவர்கள் எதற்கு இப்படி கவலைப்படுகிறார்கள்?

 

"தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே இருக்கின்றார்கள. மக்கள் சம்பநதப்பட்ட விடயங்கள் பற்றியே அவர்கள் கூடியிருந்து கதைக்கின்றார்கள். முடிவுகளை மேற்கொள்கின்றார்கள். அந்தத் தகவல்களை ஊடகங்களே மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. அவ்வாறிருக்கும்போது எட்டு மணித்தியாலங்கள் அவர்கள நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் செய்தியாளர்களிண் கேள்விகளுகுகுப் பதிலளிப்பதற்கு ஆர்வமிருவர்களாகவே காணப்பட்பருந்தனர்."

 

ஒன்றில் நடந்தை இவர்களுக்கு தெரியாது, அல்லது விஷமமாக எழுதுகிறாகள் என்பதுதான் உண்மை. 

 

நீங்கள் கூட்டமைப்புக்குள் ஜனநாயகம் இல்லை என்று நினைக்கிறீர்கள். சுமந்திரன், சம்பந்தர், விக்கினேஸ்வரன் தங்கள் பாட்டுக்கு முடிவெடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். அதே நேரம் அவர்கள் செய்வது சரியா பிழையா என்ற ஒரு விவாதம் எழுந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்.  ஆனால் நடந்தவற்றை பார்த்தீர்களானால் எல்லாமே ஒரே குழ்ப்பம்.

 

திரும்பவும் இந்த கட்டுரையின் படி சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் கொண்டுவந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு அங்கதர்வர்களின் விருப்பங்களான, பேச்சுவார்தையை நிராகரிப்பது, புள்ளிவிபரம் எடுத்து இனவ்ழிப்பை நிறுவுவது, விக்கினேஸ்வரன் கேட்டது போலன்றி புதிய தீர்வுத் திட்டமொன்றை அரசிடம் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்படாமை மூன்றும்தான் நிறைவேறியிருக்கு. இதில் தலைமை தான் தோன்றிதனமாக நடக்காமல் ஜனநாயகத்தை மதிப்பத்தாக அல்லாவா காட்டியிருக்கு. நோக்கம் கெட்ட முட்டாள் தனமான இந்த கட்டுரை இல்லாததை நிறுவியிருக்கு. 

 

ஆனால் நமக்கு ஒன்று தெரியும். "கூட்டமைப்புக்குள் சர்வாதிகாரம் இருக்கு." அது தமிழ் மக்களுக்கு நனமையா தீமையா என்பது வேறு விவாதம். தமிழ் மக்களின் பாதுகாப்பாக இருந்த புலிகளை அழித்து முதல் அமைச்சராக துடித்த ஆனந்தசங்கரிக்கும், அனந்திக்கும் ஒவ்வொரு வாக்கு கொடுத்து முடிவு எடுப்பது சரியா என்ற கேள்வி வேறு.  தாயகத்தில் இருக்கும் ஊடகங்களுக்கு அரசாங்க கூட்டங்களை பற்றி பீத்தியும், கூட்டமைப்பின் கூட்டங்களை கேவலப்படுத்தியும் எழுதாவிட்டால் பதிவு நீக்கப்படும். பத்திரிகைகள் எரிக்கப்படும். சூடு விழும். ஆனால் புலம் பெயர் ஊடகங்கள் நோக்கம் கெட்டு தம்மைதாம் அப்ப நெல்லு மூட்டை சாக்குகுள் இல்லை என்று காட்டிக் கொடுத்து தம்மை தேசிய வாதிகளாக நடிப்பதை பார்க்க நகைச்சுவையாக இருக்கு. என்ன இருந்தும் இவர்கள் தேசிய வதிகள் அல்ல, அரசுக்காக நடிப்பவர்கள் என்பதுதான் மக்களின் அப்பிப்பிராயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லையின் பதில்போல் கூத்தைமைப்பு தலைமையின் ஐனநாயம் பாதி விளங்கி மீதிவிளங்காது இவர்கள் பழைய காலம் தொட்டு  இந்த ஏமாத்து வித்தையை நன்றாக தமிழரை பேய்காட்டல் செய்வது இப்படித்தான் எல்லாம் விளங்கினால் கள்ளுக்கடைக்கு போறவனும் கேள்வி கேட்க்க தொடங்கிடுவான் அது சுமத்திரன் , சம்மந்தன் போன்ற லங்கன் வால்பிடிகளின் இருப்புக்கு ஆபத்தாகிவிடும் உதரணத்திற்க்கு மல்லையிடம் "எவ்வளவோ பொறுத்தமானவார்கள் இருந்தும் ஏன் சுமத்திரனை சம்மந்தன் பின் வாசலால் கொண்டுவந்தவர்?"                இப்படியொறு கேள்விக்கு மல்லையின் பதில் ஊமை ஊரைக்கெடுத்த கதையாய் பந்தி பந்தியாய் வந்து விழும் எழுதிற மல்லைக்கும் விளங்காது என்பது வேறுவிடயம். :D

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவு குழுவில் கலந்து குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பொரிவு குழு அமைக்க வேண்டியது அவசியமாகிறது.. அந்த பொரிவு குழுக்கு அலோசனை வழங்க சைடிஸ் குழு அவசியமாகிறது..

டிஸ்கி;

ஏம்ப்பா அவன் ஜிகிடி குழுவை வைத்து ஆட்டம் ஆடும்  போது..  ஆப்புக்கு பதில் ஆப்பாகத்தான் இருக்க முடியும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

8 மணித்தியாலங்கள் நடந்த கூட்டத்தின் முடிவில் அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு பதலளிப்பதே சிறந்த ஜனநாயகத்தலைவர்களின் பண்பு.இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களையும் மக்களையும் நேரடியாக சந்திப்பதற்கு சம்பந்தர் தயங்குவது ஏன்?ஒரு தலைப்பட்சமான உளறல் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.இந்தியா இன அழிப்பைப் பற்றி அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கும்.

எல்லாம் விளங்கினால் கள்ளுக்கடைக்கு போறவனும் கேள்வி கேட்க்க தொடங்கிடுவான் அது சுமத்திரன் , சம்மந்தன் ........

உங்களின் மேட்டுக்குடித்தனத்தை விடவா?

வட் ஐ தினக் .....நோ கொமன்ஸ் :D

:mellow:  :unsure: இவர்களிடம் சிறந்த ஜனநாயகம்   உள்ளது ஏன் என்றால் அறிவுயீவிகளை தான் முக்கியபொறுப்பில் போடுகிறார்கள் தங்கள் விசுவாசிகளிற்கும் பதவி கொடுக்கவில்லை சொந்தங்களிற்கும் பதவிகொடுக்கவில்லை. இன்று உலகமே வியக்கிறது முதல்வரை பார்த்து- :unsure:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:mellow:  :unsure:1-  இவர்களிடம் சிறந்த ஜனநாயகம்   உள்ளது

ஏன் என்றால் 2- அறிவுயீவிகளை தான் முக்கியபொறுப்பில் போடுகிறார்கள்

3- தங்கள் விசுவாசிகளிற்கும் பதவி கொடுக்கவில்லை

4- சொந்தங்களிற்கும் பதவிகொடுக்கவில்லை.

 

 

5- இன்று உலகமே வியக்கிறது முதல்வரை பார்த்து- :unsure:  :icon_idea:

 

முதலுள்ள  நாலுக்கு எதிராக உள்ளது

உங்களது ஐந்தாவது வசனம்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.