Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார்.

131229-world-mexico-highway-story1-.jpg

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க் கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்த போதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார்.

தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் 300 அடி பள்ளத்துக்கு கீழிறங்கி சேதமடைந்துள்ளது.

carretera_escenica5.jpg

carretera_escenica7.jpg

carretera_escenica10.jpg

collapse122611.jpg

showImageInStory_4.jpg

showImageInStoryw.jpg

http://www.virakesari.lk/?q=node/360281

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய... சிவில் இஞ்சினியர்மாரை நம்பினால்.. இதுதான் கதி.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திலும் சமீபத்தில் குழி ஒன்று தோன்றி உள்ளது

http://www.bbc.co.uk/news/uk-england-derbyshire-25554549

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் லூசியான பிராந்தியத்தில் காடுகளை விழுங்கிவரும் பாரிய குழி (Sink Hole)

http://www.youtube.com/watch?v=isiJ5ruEYWU

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் லூசியான பிராந்தியத்தில் காடுகளை விழுங்கிவரும் பாரிய குழி (Sink Hole)

http://www.youtube.com/watch?v=isiJ5ruEYWU

http://www.youtube.com/watch?v=isiJ5ruEYWU

ரகுநாதனின் இணைப்பைப் பார்க்க... ப‌யங்கரமாக உள்ளது.

நிலத்தின் கீழ் உள்ள... நிலக்கரி, எண்ணை, உப்பு போன்றவற்றை அளவு கணக்கில்லாமல் மனிதன் சுரண்டி எடுக்கும் போது...

அந்த இடங்களில் ஏற்படும் வெற்றிடங்களை... நிரப்ப ஏதோ இடத்தில், மண் உள் வாங்குகின்றது என நினைக்கின்றேன்.

கனிமங்களை எடுத்தால் அந்த வெற்றிடங்கள் ஒட்டும் தன்மையுள்ள கழிபோன்ற கலவையால் நிரப்பப்பட்டுவிடும்..

சுண்ணாம்புப் படிவங்கள் உள்ள நில அமைப்புகளில் காலப்போக்கில் அது கரைந்து போனால் வெற்றிடம் உருவாகிவிடும்.. அதுவே இவ்வாறு தரை பொறிந்துபோக காரணமாகிவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய... சிவில் இஞ்சினியர்மாரை நம்பினால்.. இதுதான் கதி.  :lol:  :D

தம்பி

பதில் தருவார்........ :D

எல்லோரும் கள்ளராக இருக்க

அவர் மட்டும் நியாயத்தராக இருந்து என்ன  பயன்??? :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய... சிவில் இஞ்சினியர்மாரை நம்பினால்.. இதுதான் கதி.  :lol:  :D

தம்பி

பதில் தருவார்........ :D

எல்லோரும் கள்ளராக இருக்க

அவர் மட்டும் நியாயத்தராக இருந்து என்ன  பயன்??? :(

நீங்கள் கொடுக்கிற பணத்தின் அளவுக்கேற்பத்தான் கிடைக்கும் (you get what you pay for) :D என்கிற தத்துவத்தின் அடிப்படையில் ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் செலவைக் குறைத்து கட்டியுள்ளார்கள். :huh: கனடா, அமெரிக்கா, அவுசில் இப்படி கட்டுவார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மெக்சிக்கோ ஒரு வளர்ந்த நாடு அல்ல.

இங்கே பிரச்சினை மண்மலையை பலப்படுத்தாமை.. அதற்கு மண் ஊசி (Soil nailing) பெருமளவில் குத்தியிருந்தால் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வந்திராது.. ஆனால் அத்தகைய பாதுகாப்பைப் பெற அதிக பணம் செலவழிக்கவேண்டி இருந்திருக்கும்..

ஆகவே மறுபடியும்..

"எதுவுமே நீங்கள் கொடுக்கிற பணத்தின் அளவுக்கேற்பத்தான் கிடைக்கும்.." :D

அமெரிக்காவின் லூசியான பிராந்தியத்தில் காடுகளை விழுங்கிவரும் பாரிய குழி (Sink Hole)

http://www.youtube.com/watch?v=isiJ5ruEYWU

நன்றி இணைப்பிற்கு. :rolleyes: நானும் இதை பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. :o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொடுக்கிற பணத்தின் அளவுக்கேற்பத்தான் கிடைக்கும் (you get what you pay for) :D என்கிற தத்துவத்தின் அடிப்படையில் ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் செலவைக் குறைத்து கட்டியுள்ளார்கள். :huh: கனடா, அமெரிக்கா, அவுசில் இப்படி கட்டுவார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மெக்சிக்கோ ஒரு வளர்ந்த நாடு அல்ல.

இங்கே பிரச்சினை மண்மலையை பலப்படுத்தாமை.. அதற்கு மண் ஊசி (Soil nailing) பெருமளவில் குத்தியிருந்தால் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வந்திராது.. ஆனால் அத்தகைய பாதுகாப்பைப் பெற அதிக பணம் செலவழிக்கவேண்டி இருந்திருக்கும்..

ஆகவே மறுபடியும்..

"எதுவுமே நீங்கள் கொடுக்கிற பணத்தின் அளவுக்கேற்பத்தான் கிடைக்கும்.." :D

இது கட்டும் போது  இசை

ஆனால் 300  அடிக்கு வீழ்வதென்பது திடீரென  நடந்ததாகவோ

அல்லது  முன் அறிகுறிகள் தெரியாமல் இருந்திருக்வோ வாய்ப்பில்லை  அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

இது கட்டும் போது  இசை

ஆனால் 300  அடிக்கு வீழ்வதென்பது திடீரென  நடந்ததாகவோ

அல்லது  முன் அறிகுறிகள் தெரியாமல் இருந்திருக்வோ வாய்ப்பில்லை  அல்லவா??

திடீரென்று நடக்கும் சந்தர்ப்பங்கள்தான் அதிகம். பின்வரும் காரணங்களால் இவை ஏற்படலாம்.
 
1) வெட்டப்பட்ட மண்பரப்புக்கு போதுமான சரிவு கொடுக்காமை. (வடிவமைப்பாளரின் தவறு)
2) சரிவு காணாத பட்சத்தில் பலப்படுத்தாமை. (வடிவமைப்பாளரின் தவறு)
3) அதிக மழைப்பொழிவு
4) இறுகிய பனி இளகுதல்
 
கீழ்க்காணும் படத்தில் உள்ளது போன வருடம் ஒரு கனிமம் அகழும் வளாகத்தில் நடந்தது. எங்கள் நிறுவனத்தின் சில கனரக வாகனங்களும் புதையுண்டு போயின. இது நடக்கப்போவதை ஏற்கனவே அறிந்துவிட்டார்கள். கண்டுபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் யாரும் உள்ளே இருக்கவில்லை. ஆனால் கிலோமீட்டர் கணக்கில் இருக்கும் நெடுஞ்சாலைகள் வழியே கண்டுபிடிப்புக் கருவிகளைப் பொருத்துவது சாத்தியமற்றதுதானே.

H1-resize-380x300.png

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி   இசை

ஒரு தகவலுக்காக கேட்டேன்

எப்பொழுதும் அதில் அதில்  பிரம்மர்களிடம் கேட்டு ரெிந்து கொள்வதே நன்று :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனிமங்களை எடுத்தால் அந்த வெற்றிடங்கள் ஒட்டும் தன்மையுள்ள கழிபோன்ற கலவையால் நிரப்பப்பட்டுவிடும்..

சுண்ணாம்புப் படிவங்கள் உள்ள நில அமைப்புகளில் காலப்போக்கில் அது கரைந்து போனால் வெற்றிடம் உருவாகிவிடும்.. அதுவே இவ்வாறு தரை பொறிந்துபோக காரணமாகிவிடும்..

தகவலுக்கு நன்றி இசை.

உலகம் பூராகவும் தினமும் நிலத்திருந்தும், கடலிருந்தும்... எடுக்கும் எண்ணையின் அளவு மிகப் பெரியது.

அந்த வெற்றிடத்தை எது நிரப்புகின்றது.

ஒரு நாள் பூமியின் பல பகுதிகள்... பூமியினுள் பொறிந்து போய் விடும் என்றே, தோன்றுகின்றது.

அப்போ, மன்னாரில, இந்தியாக்காரன், பாக்கு நீரிணையைக் கெதியா 'பாக்கு சமுத்திரம்' ஆக்குவான் எண்டு சொல்லுறீங்கோ! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.