Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம், ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது.

Featured Replies

140101102948_bulgarians_304x171_bbc_nocr

 

பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம்.

ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும்.

இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன.

ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.

அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.

இது குறித்து ருமேனியாவில் இருந்து பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் அவர்களின் காணொளி.

 

video news in Tamil (02:43)

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140101_romaniamig.shtml

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ருமேனியர்கள் இனிமேல் தங்களது திருடர்கள் சங்கக்கிளையை லண்டனில் அமைக்கலாம்.. :o  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ருமேனியர்கள் இனிமேல் தங்களது திருடர்கள் சங்கக்கிளையை லண்டனில் அமைக்கலாம்.. :o:unsure:

அப்ப நாங்க எங்க போறது
  • கருத்துக்கள உறவுகள்

01_romania_g_LRG.jpg


Most of the Romanians arriving on the 7.40am flight already worked in the UK but Victor Spiresau was coming to the country for the first time.

The 30-year-old who said he earned 10 euros a day working in construction at home said he hoped to make 10 euros an hour in Britain.

He said: "I don't come to rob your country. I come to work and then go home.

"Here you pay a lot, in Romania it's very cheap.

"I don't want to stay here. I want to renovate my home and to make a good life in Romania because it's much easier to live in Romania because it's not expensive."

http://www.channel4.com/news/new-dawn-for-romanian-and-bulgarian-migrants

  • கருத்துக்கள உறவுகள்

பதிலலிப்பவனுக்கு தற்போது புரியாது  இங்கிலாந்துகாரனை பற்றி இதே கதையைதான் போலந்காரனும் சொன்னான் 10 வருடங்களுக்குமுன் ஆள் இப்பவும் இங்கு மனைவி பிள்ளைகளுடன் சரளமான இங்கிலாந்து உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசியபடி இருக்கிறார்  :lol:

என்ன மறுபடியும் ரெண்டல் வீட்டு வாடகைகள் லண்டனிற்க்குள் கூடப்போகுது.

tesco காரணும் தமிழ் மூலைக்கடைகளுடன் மல்லுகட்ட நம்மாட்களும் தமிழ்,பொலிஸியா,கொரிய,வரிசையில் ருமேனியா சாமானை அடுக்கி விற்க்க வேண்டியதுதான்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூகோஸ்லாவியாக்காரங்கள்.துருக்கிக்காரங்கள் மற்றது முஸ்லீம் நாட்டுக்காரங்களெல்லாம் பல்கேரியா ருமேனியா காரங்களின்ரை கள்ள பாஸ்போட்டிலை ஐரோப்பாவுக்கு வரத்தொடங்கீட்டாங்கள்......எங்களுக்கு உப்பிடியான விசயங்கள் புதிசில்லைத்தானே.... :lol:  :D  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ருமேனியர்கள் இனிமேல் தங்களது திருடர்கள் சங்கக்கிளையை லண்டனில் அமைக்கலாம்.. :o  :unsure:

 

லாச்சப்பல் சண்டியர்களைப் போன்றவர்கள் தங்கள் கிளைகளைப் பரப்பி முழுநேர வேலைக்குப் பதியலாம். :D  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதில வாற உடனடி பிரச்சனை, பிரிட்டிஸ் சுதேசிகளுக்கு அல்ல. எம்மவர்களுக்குத் தான்.

அங்கிருந்து வரும் கீழ்மட்ட தொழிலாளர்கள், இங்கே, plumbing, building, cleaning போன்ற வேலைகளை எடுத்து விடுகிறார்கள் என்ற வகையில் தான் சுதேசிகள் எதிர்ப்பு.

ஆனால், எம்மவர்களது, வேலைவாய்புகளின் கற்பக தருவான மத்திய தர நிறுவனங்களை நாடி வரும் இந்த வெள்ளைத் தோள் கிழக்கு ஐரோப்பியர்கள் தரும், தரப்போகும் பிரச்சனை கவலை தரவைப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.