Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெப்பின் விஜயத்திற்கு எதிராக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_3685.jpg

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பின் இலங்கை விஜயத்திற்கு எதிராக தேசிய ஓழுங்கமைப்பு ஒன்றியத்தினர் இன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன)

IMG_3654.jpg

IMG_3754.jpg

IMG_3693.jpg

IMG_3724.jpg

IMG_5330(1).jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அழகான பதாகைகள் செய்து குடுத்திருக்கினம்.. :D

தயாரிப்பு வேலைகள் ஒத்திகைகள் எல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு 

 

பாராட்டுக்கள்.

Edited by Sooravali

நல்ல அழகான பதாகைகள் செய்து குடுத்திருக்கினம்.. :D

நல்லா செலவு செய்திருக்கினம் சகோதரர்கள்.

மேடை உடைய களியாட்டம், சொகுசு கார் இறக்குமதி என்று நல்ல காசு செலவு செய்கிறார்கள்.

ஆனால் இவர்களால் கொல்லபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர் தமிழர் தான் உதவவேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். பாசன் சோ வைத்தாலும் பொங்கி வந்து திட்டுவார்கள்.

நல்லா செலவு செய்திருக்கினம் சகோதரர்கள்.

மேடை உடைய களியாட்டம், சொகுசு கார் இறக்குமதி என்று நல்ல காசு செலவு செய்கிறார்கள்.

ஆனால் இவர்களால் கொல்லபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர் தமிழர் தான் உதவவேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். பாசன் சோ வைத்தாலும் பொங்கி வந்து திட்டுவார்கள்.

அது சண்டமாருதன் மட்டும்தான். எழுதுவதற்கு  அவர் திரிகளை தெரிவதில்லை.

 

லைக்காவை காப்பாற்ற வேண்டுமானால் சபேசனும் வருவார். :D

IMG_3654.jpg

 

 

அதிகளவு பதாகைகள் தயாரித்துள்ளார்கள். :D stephen rapp ஐ கோபத்திற்குள்ளாக்கினால் சந்தோசம். :D

 

அதிகளவு பதாகைகள் தயாரித்துள்ளார்கள். :D stephen rapp ஐ கோபத்திற்குள்ளாக்கினால் சந்தோசம். :D

அருமையான ஒழுங்கமைப்பு. சிறி லங்கா சாவல் துறையும் சூப்பரா வேலை செய்கிறார்கள்.

சாதாரண சாமானியனை தான் கூட்டத்தில் காணவில்லை.

இராணுவ சிவில் அணிவகுப்பு போல் உள்ளது.

தூதரகம் படங்கள், கேபிள் எல்லாம் அனுப்பியிருக்கும்.

IMG_3754.jpg

 

"Probe into Drawner Attacks in Pakistan"  :lol:

 

Drone, அதாவது ஆளில்ல விமானம். தனி சிங்கள சட்டத்தால் வந்த விளைவு. 

 

அமெரிக்க யுத்த குற்றம் பற்றி ஆசியாவின் வல்லரசான இலங்கை மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யலாமே

1956 ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழர்களின் இரத்தத்தில் அரசியலும், வாழ்க்கையையும் ஓட்டுபவர்களுக்கு வெளி நாடுகள் வந்து உண்மைகளை நேரில் அறிய வெளிக்கிட்டால் சிங்கள இனவாத பூதங்கள் அதனை தடுப்பதற்கும், திசை திருப்புவதற்கும் இப்படி ஆர்ப்பாட்டங்கள், குற்றம் சாட்டும் அறிக்கைகள்,வேறு நாடுகளை எதிராக தூண்டுதல் இப்படி பல செப்படி வித்தைகளை செய்துகாட்டி தான் இதுவரை செய்வது சரி என காட்டுவார்கள்... ஆயிரக்கணக்கில் மக்களை கொன்றுவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் உலகின் முன் நடிக்கவும் அதற்கும் ஒரு திறமை வேண்டும்.... நடத்துங்க, நடத்துங்க...

Edited by வழிகாட்டி

  • கருத்துக்கள உறவுகள்
 
 

 

அமெரிக்க தூதரகம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் தகவல் கோரப்படும்- வெளிவிவகார அமைச்சு
 
இலங்கை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இன்று தகவல் கோரப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இத்தகவலை தெரிவித்தார்.
 
வட பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள யுத்தக்குற்ற விசாரணை பிரிவின் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் சிசென் ஆகியோர் யுத்தம் இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டுள்ளனர்.
 
புனித அந்தோனி மைதானத்திற்கு அவர்கள் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றிய கொழும்பு அமெரிக்க தூதரகம், இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் நூறு குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம்தான் இது என்று விளக்கம் அளித்திருந்தது.
 
அமெரிக்க தூதரகத்தின் இத்தகவலை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
 
எனினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்கா, இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.