Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் என்ன செய்யலாம் ????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றி சுண்டல் திறந்த திரி ஆறு பக்கங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பல பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை மேலும் உறவுக்குத் தூண்டியது என சில ஆண்கள்மேல் குற்றம் சுமத்தி ஒரு தமிழ்க் குழு அவர்களைத் தண்டித்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது.பலர் தவறென்றும் சிலர் சரி என்றும் மிக அழகாக வாதிட்டுள்ளீர்கள்.

ஆனால் அத்தனை வாதங்களிலும் இப்படியான சமூகச் சீரழிவுகள் எதனால் நடைபெறுகின்றன என்றோ??? அன்றி அதை நடக்காது தடுப்பதற்கு நாம் அல்லது எம்மால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்யலாம் அல்லது எதைக் கூறவேண்டும் என்று யாருமே எதுவும் கூறவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி வேதனைப்படவேண்டிய விடயமும் ஒன்றாகும்.

பொதுவாகவே பல பெண்கள் உணர்வுமயமானவர்கள். மிக விரைவில் மற்றவர் கூறுவதை நம்பிவிடுவதும் பின்னால் வரும் விளைவுகள் பற்றி தூரநோக்குச் சிந்தனை அற்றவர்களாக இருப்பதும், தமக்கெனப் பிரச்சனைகள் ஏற்படும்போது மனமுடைந்து போபவர்களாகவுமே இருப்பதும், எம் சமூகத்தில் ஒருவருக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது அவரை அதிலிருந்து காக்காது அவரைத் தூற்றித் தள்ளிவைத்து மரணம் வரை துரத்தும் முற்போக்குச் சிந்தனையற்ற எம் சமூகமுமே இப்படியான சீரழிவுகளை எம் சமூகமும் பின்பற்றக் காரணமாக அமைகின்றன.

புலம்பெயர் தேசங்களில் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அன்னியோன்னியம் அற்ற தன்மையும், வேலைப்பளு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவர்மேல் மற்றவர் அக்கறையற்றிருப்பதும் பிள்ளைகள் மேல் அன்பையும் அரவணைப்பையும் காட்டத் தவறுவதும் பெரும்பாலான பெண் பிள்ளைகள் இப்படித் தவறான வழியில் செல்லக் காரணமாக அமைகிறது.

கணனித் தொழில் நுட்பம் ஒருபுறம், தரமற்ற இணையத்தளங்களின் அதிகரிப்பு என்பவற்றிநூடே பணச் செலவின்றி உரையாட வசதியாக இருக்கும் skype ,Hotmail , googlemail போன்றவையும் ஒட்டுமொத்த சமுதாயச்  சீர்கேட்டுக்கும் காரணமாக அமைகின்றன. இன்னும் எனக்குத் தெரியாதவை எத்தனையோ இருக்கலாம்.

குறிப்பாகப் புலம்பெயர் பெற்றோரே தொழில் நுட்ப அறிவு அற்றவர்களாக இருப்பதும் பிள்ளைகள் கணனியில் என்ன செய்கின்றனர் எனத் தெரிந்துகொள்ளும் அக்கறை இன்மையும் அந்தந்த நாட்டின் மொழியறிவு அற்று இருப்பதும் கூட பிள்ளைகளோ, கணவன் மனைவியோ தவறு செய்வதற்குத் தூண்டுகிறது என்பதும் உண்மை.

கணனிப் பயன்பாடு இன்றியமையாது இருக்கும் காலகட்டத்தில் இப்படியான சீரழிவுகள் வராது தடுப்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தே சாத்தியமாகும் என்பது உண்மை.
சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை பற்றி அறிவுறுத்தி வருவதும், பெற்றோரின் செயல்களைப் பார்த்தே பிள்ளைகள் அனைத்தையும் பழக்கத்தில் கொள்வர் என்பதை மனதில் இருத்தி நாமும் அதுபோல் நடத்தையைப் பேணவேண்டியதும் அவசியமாகும். பிள்ளைகளுடன் நாம் இப்படியான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கூட நன்மை பயக்கும்.

பல பெற்றோர் பிள்ளைகளுக்கு தொலைபேசி, ipad என்பவற்றை கேட்டும் கேட்காமலும் தம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தும்  இப்படியான சீர்கேடுகளை ஊக்குவிக்கின்றனர் எனலாம்.
முக்கியமாக முகப்புத்தகத்திநூடாகவே பழ தவறுகள் ஆரம்பிக்கின்றன. அதனால் நாமோ பிள்ளைகளோ அதில் செலவிடும் நேரங்களை மட்டுப்படுத்தி, பிள்ளைகளை இணையங்களில் இருக்கும்போது கண்காணித்து தவறு நடக்காது காக்கமுடியும்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை எம் சமூகத்துக்கு மிகப் பெரிய அரணாக இருந்திருக்கின்றது. புலம்பெயர் தேசங்களில் அயலாவர்களுடனோ நண்பர்களுடனோ அன்றி உறவினர்களுடனோ சுமுகமான உறவுகளைப் பேண முடியாது, முயலாது தமிழர்கள் பலர் தனித் தீவுகளாகிவிட்ட நிலையில் எம் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து இளஞ் சமுதாயத்திற்கு ஏதாவது புதிய திட்டத்தை முன்வைத்துச் செயற்படுத்தினால் அன்றி இப்படியான சீரழிவைத் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்களும் தான் நம் உறவுகளை தவறான வழிகளில் இட்டு செல்கின்றன என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும்..

1525229_789156911099161_1061008088_n.jpg

இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன்.
**********************************************

நேற்று விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.
நடிகர் சிவகார்த்திகேயனும், பல கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது......

அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு வீட்டிலிருத்து பொங்கல் கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும் என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண் நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார். நடிகர் அவர் நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல் ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்...

இயக்குனர் அழ சொன்னால் அழும், சிரிக்க சொன்னால் சிரிக்கும், பல பெண்களோடு பல பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன் மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை பெரிய ஈர்ப்பு? தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக நடிக்கும் ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க வைக்கும் அளவிர்க்கு அன்பு? விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே...

பணம் செலவழித்து படம் பார்த்தால் அந்த இரண்டரை மனி நேரம் பொழுது போக்கு என்று உணருங்கள் குழநதைகளே. அதை கடந்து அந்த நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள் உங்கள் மனாளனை மன்மதனாக பாருங்கள்.

சிந்தியுங்கள் பெண்களே!!!

இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் பெண்களும், அதைக் கண்டிக்காத, கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும், ஏதாவது தவறுநடநதால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல் பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.

பெண்கள் தவறாக நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத, அவர்களை சரியாக வழி நடத்த எந்த முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள் நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. அப்போது மட்டும் கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை வைத்து பிரபலமாகத் துடிப்பவர்களே.

பெண்கள் இப்படி அதுவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் நடநது கொள்ளும்போது பார்தது, பெருமையடையும், பூரித்துப் போகும் அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை எந்த வகையில் சேர்ப்பது ?

- சேதுராம் கிருஷ்ணமூர்த்தி
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுக்குடும்பம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிள்ளைகளில் போதிய அன்பையும், அக்கறையையும் வைக்க முடியாதவர்கள்தான் அடுத்தவர் உதவியை நாடுவார்கள். பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அவர்கள் மட்டத்திலேயே தீர்க்கப்படல் வேண்டும். வெளியே எட்டுத்துச்செல்லும்போது பிள்லைகளுக்கு பெற்றோர் மீதான மரியாதை குறைந்துபோகும்.

பதின்ம வயதில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனாலும் பிள்ளைகளுக்கு தமக்கென்று வீடு ஒன்று உள்ளது. அங்கே தாய், தந்தையர் தமக்காக காத்திருப்பர் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு வருமாறு தாய் தந்தையர் நடந்துகொள்ள வேண்டும்.

பணம், வீடு என குறிக்கோள்களை வைத்துக்கொண்டு ஓடித்திரிந்தால் ஏதாவது ஒன்றை இழக்க தயாராக இருக்க வேண்டும். அதில் பிள்ளைகளின் நல்வாழ்வும் அடங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ சில பையன்கள் இல்லை ஒரு பையன் தான் இருபது பெண்களுக்கு மேல அல்வா கொடுத்து இருக்கான் வரலாறு முக்கியம் அமைச்சரே

தமிழர்களுக்கு சொத்து சேர்க்கும் ஆசை இருக்கும் மட்டும் பிள்ளைகளை ஒழுங்கா கவனிக்க முடியாது

அக்கா நீங்க முக புத்தகத்தில மட்டும் கைவைக்க வேண்டாம் எவளவு கஷ்டப்பட்டு ஒவொண்டு ஒவோண்டா சேர்த்து மெய்ன்டேன் பண்ணிட்டு வாறன் அந்த வலி வேதனை எனக்கு தான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லது கட்டுறநீங்க ஒரு டாக்டரோ engineer என்று பாத்து பிடிச்சு நம்ம இசை அண்ணா மாதிரி ஒரு 150 k வருஷத்துக்கு உழைக்கிரவங்களா இருந்தால் ஒராள் வீட்ட நிண்டு பிள்ளை குட்டியள பாக்கலாம் :D

ஏனப்பா

இந்த ஓர  வஞ்சகம்

இதில் மட்டும்  உன் அண்ணன்

ரத்தத்தின் ரத்தம் நந்தனை விட்டுவிட்டீர்கள்...........??? :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஒரு வருமானவரி கணக்காளராக இருந்திருக்க வேண்டியவர்.. :blink:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாங்க இங்க கஷ்டப்பட்ட ஆக்கள பற்றி மட்டும் கதைக்கிறம் நந்தன் அண்ணாவ விடுங்கப்பா

அவர் பிரபல கோழிக்கடை முதலாளி

அந்த காலத்திலையே நடிகை மும்தாஜை லண்டன் க்கு கூப்பிட்டு தன்னோட கோழிக்கடையை திறக்க பண்ணினவர்

லண்டன் ல மட்டும் 5 வீட்டுக்கு சொந்தக்காரர் என்று அவரோட புகழ அடிக்கிட்டு போகலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லது கட்டுறநீங்க ஒரு டாக்டரோ engineer என்று பாத்து பிடிச்சு நம்ம இசை அண்ணா மாதிரி ஒரு 150 k வருஷத்துக்கு உழைக்கிரவங்களா இருந்தால் ஒராள் வீட்ட நிண்டு பிள்ளை குட்டியள பாக்கலாம் :D

அவரவர் பொறுப்பை உணராதவரையில் எதுவும் சாத்தியமில்லை

கண்காணிப்புக்கும் ஒரு அளவு எல்லை  இருக்கிறது

ஒரு பிள்ளையோ

மனைவியோ

கணவனோ............  எவரையும் கட்டுப்படுத்த ஒரு அளவு கோல் இல்லை

அவரவர் உணரணும்

அதற்கு தகுந்தபடி   குடும்ப கௌரவம் நிம்மதியான வாழ்க்கை

எதிர்காலம்

இப்படி எத்தனையோ இருக்கு..

அதையும் தாண்டி

ஒரு பிள்ளை 1/4 நாட்களையே  ஒரு நாளில் எம்முடன்  கழிக்கிறார்கள்

மீதி

பாடசாலை

ஏனைய  வகுப்புக்கள்

நண்பர்கள்

பொழுது போக்கு .............. இப்படிப்போகிறதுஇதில் எதைக்கண்காணிப்பது.....??

சுண்டல் சொல்வது போல் பிள்ளையை  வளர்க்க

மனைவி  வீட்டிலிருந்து

மனைவியைக்கவனிக்க ஆள் வைக்கவேண்டி வந்த கதையுமுண்டு....

என்னைப்பொறுத்தவரை

சமுதாயம் எல்லாவற்றையும் கடந்து போகும்...

இதெல்லாம் கடலில் கலப்பது போல் காணாமல் போகுமே தவிர

கடலை நிறம் மாற்றிவிடமுடியாது.

அதே நேரம்

பிள்ளைகளுடனான அந்நியோன்யமான நட்பு

சரி பிழைகளைச்சொல்லிக்கொடுத்தல்

கண்காணிப்பு மற்றும் கண்டிப்புடனான வளர்ப்பு 

சமுதாயத்தில் நல்லவர்களாக வளர 

நாம் முன்னுதாரணமாக திகழ்தல்

நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தொழிலுநுட்ப உலகில்.. பிள்ளைகளை கண்காணிப்பது மிக இலகு. ஆனால் பெற்றோரிடம்.. இன்றைய தொழில்நுட்பத்தை விளக்கிக் கொள்வதற்கான.. பாவிப்பதற்கான.. அறிவு போதாது. இதனை.. இளையோர் அமைப்புக்கள் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்.. செயன்முறைப் பட்டறைகளை நடத்தி விளங்கப்படுத்தினால் நல்லது.

பார்ப்பம்.. எங்கள் குலாமிற்கு நேரம் கிடைத்தால்.. திட்டம் முன்மொழியப்பட்டு.. ஒத்துழைப்பு கிடைத்தால்.. இங்கிலாந்தில் அதனை செய்ய ஆரம்பிக்கலாம். அதற்குள் வேறு இளையோர் இதனை செய்ய முன்வந்தால் நல்லம்.  :icon_idea:

அப்படி எதையும் உருவாக்க முடியாது நெடுக்கு

அப்படி வந்தாலும்

அதை எவ்வாறு குறுக்காலளிக்கலாம் என்பதும் தெரிந்துவிடும்

அத்துடன்

இது   போன்ற  கண்காணிப்புக்கள்

பெற்றோரையும்

பிள்ளைகளையும் தானாகவே எட்ட வைத்துவிடும்

பாசத்தாலும்

அன்பாலும்

அவர்களுடன் மனம் திறந்து பழகுவதனூக  மட்டுமே எதனையும் சாதிக்கமுடியும்

அதனை  நான் என் வாழ்வில் செய்துள்ளேன்

வெற்றியும் கண்டுள்ளேன்...

சுமோ!

சீரழிவு, தவறான வழி என்று எவைகளை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? எமது இளையோர்கள் எல்லோரும் போதை வியாபரம், கொலை, கொள்ளை என்று அலைந்து கொண்டிருக்கிறார்களா? நன்றாகத்தானே இருக்கிறார்கள்!!

அப்ப எதுக்கு விசுகு அண்ணா பொலிஸ்காரன் குழப்படிகாரருக்கு.. Tag கட்டிட்டு வெளில விட்டுவிடுறான். பேசாம.. அப்பு ராசா.. ராசாத்தின்னு கொஞ்சிக்கிட்டு இருந்தால்.. திருந்தக் கூடுமில்ல..!

பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமல்.. பள்ளிகளே கண்காணிக்கின்றன. அப்படி இருக்கும் போது.. பெற்றோர் அதனை செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது. இப்போ இங்கிலாந்தில் பள்ளிகளிலும்.. CCTV பொருத்திட்டார்கள். அதற்காக சொந்த மாணவர்களையே பள்ளி நம்பவில்லை என்று அர்த்தப்பட முடியுமா..???! அல்லது.. வருமுன் காக்க சாத்தியமானவற்றை செய்வது நல்லமா..???! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்களும் தான் நம் உறவுகளை தவறான வழிகளில் இட்டு செல்கின்றன என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும்..

1525229_789156911099161_1061008088_n.jpg

இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன்.

**********************************************

நேற்று விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.

நடிகர் சிவகார்த்திகேயனும், பல கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது......

அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு வீட்டிலிருத்து பொங்கல் கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும் என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண் நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார். நடிகர் அவர் நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல் ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்...

இயக்குனர் அழ சொன்னால் அழும், சிரிக்க சொன்னால் சிரிக்கும், பல பெண்களோடு பல பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன் மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை பெரிய ஈர்ப்பு? தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக நடிக்கும் ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க வைக்கும் அளவிர்க்கு அன்பு? விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே...

பணம் செலவழித்து படம் பார்த்தால் அந்த இரண்டரை மனி நேரம் பொழுது போக்கு என்று உணருங்கள் குழநதைகளே. அதை கடந்து அந்த நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள் உங்கள் மனாளனை மன்மதனாக பாருங்கள்.

சிந்தியுங்கள் பெண்களே!!!

இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் பெண்களும், அதைக் கண்டிக்காத, கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும், ஏதாவது தவறுநடநதால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல் பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.

பெண்கள் தவறாக நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத, அவர்களை சரியாக வழி நடத்த எந்த முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள் நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. அப்போது மட்டும் கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை வைத்து பிரபலமாகத் துடிப்பவர்களே.

பெண்கள் இப்படி அதுவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் நடநது கொள்ளும்போது பார்தது, பெருமையடையும், பூரித்துப் போகும் அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை எந்த வகையில் சேர்ப்பது ?

- சேதுராம் கிருஷ்ணமூர்த்தி

இதில என்ன தப்பிருக்குது. ஒரு அண்ணனுக்கு தங்கச்சி தீத்தி விடுகுது. இன்னொரு தங்கச்சி.. சொக்கையை பிடிச்சு விடுகுது. சரி.. தங்கச்சி வேணா.. ஒரு ரசிகை... தான் விரும்பும் நடிகனுக்கு இதனை செய்வதால்.. என்னத்தை அவள் இழந்திடப் போறாள். கற்பு.. நன்னடத்தை.. ஒடுக்கம்... எதுவும் இல்லையே..??! இதுக்குப் போயி.. இப்படி ஒரு விளக்கம்.. தேவை தானா...??! சில விடயங்களை மேம்போக்கோடு பார்க்க வேண்டும். ஆனால் அதேவேளை.. தனிப்பட்ட முறையில்.. ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் அளிக்கும் போது.. கூடிய அவதானம் இருப்பது தவறுகள் நிகழ்வதை தடுக்கும். அதுவேற.. இது வேற..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த யாயினி, சுண்டல், விசுகு அண்ணா, இசை, சபேசன், நெடுக்ஸ் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்களும் தான் நம் உறவுகளை தவறான வழிகளில் இட்டு செல்கின்றன என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும்..

உண்மைதான். பண்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அந்நியர்களுக்கு முன் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார்கள்.

கூட்டுக்குடும்பம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிள்ளைகளில் போதிய அன்பையும், அக்கறையையும் வைக்க முடியாதவர்கள்தான் அடுத்தவர் உதவியை நாடுவார்கள். பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அவர்கள் மட்டத்திலேயே தீர்க்கப்படல் வேண்டும். வெளியே எட்டுத்துச்செல்லும்போது பிள்லைகளுக்கு பெற்றோர் மீதான மரியாதை குறைந்துபோகும்.

பதின்ம வயதில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனாலும் பிள்ளைகளுக்கு தமக்கென்று வீடு ஒன்று உள்ளது. அங்கே தாய், தந்தையர் தமக்காக காத்திருப்பர் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு வருமாறு தாய் தந்தையர் நடந்துகொள்ள வேண்டும்.

பணம், வீடு என குறிக்கோள்களை வைத்துக்கொண்டு ஓடித்திரிந்தால் ஏதாவது ஒன்றை இழக்க தயாராக இருக்க வேண்டும். அதில் பிள்ளைகளின் நல்வாழ்வும் அடங்கலாம்.

கூட்டுக் குடும்பம் என நான் குறிப்பிட்டது தாத்தா பாட்டி போன்றோர் எம்முடன் இருப்பதும் மற்றும் ஒரு இடத்திலேயே உறவினர்கள் அதாவது சகோதரர்கள் அண்மையில் வசிப்பதும் அவர்கள் குடும்பங்களுடனான ஒருமையான வாழ்க்கையில் பிள்ளைகள் தம் நேரத்தை உறவினருடன் அவர்கள் பிள்ளைகளுடன் செலவிடும்போது மேற்குறிப்பிட்ட தவறுகள் நடைபெற வாய்ப்புக் குறைவாகவே இருக்கும்.

ஹலோ சில பையன்கள் இல்லை ஒரு பையன் தான் இருபது பெண்களுக்கு மேல அல்வா கொடுத்து இருக்கான் வரலாறு முக்கியம் அமைச்சரே

தமிழர்களுக்கு சொத்து சேர்க்கும் ஆசை இருக்கும் மட்டும் பிள்ளைகளை ஒழுங்கா கவனிக்க முடியாது

அக்கா நீங்க முக புத்தகத்தில மட்டும் கைவைக்க வேண்டாம் எவளவு கஷ்டப்பட்டு ஒவொண்டு ஒவோண்டா சேர்த்து மெய்ன்டேன் பண்ணிட்டு வாறன் அந்த வலி வேதனை எனக்கு தான் தெரியும்

அதில் இரண்டுபேரைக் காட்டினார்களே சுண்டல். படத்தில் நிற்பவரும் அடி வாங்குபவரும் ஒருவர் அல்லவே.

அவரவர் பொறுப்பை உணராதவரையில் எதுவும் சாத்தியமில்லை

கண்காணிப்புக்கும் ஒரு அளவு எல்லை  இருக்கிறது

ஒரு பிள்ளையோ

மனைவியோ

கணவனோ............  எவரையும் கட்டுப்படுத்த ஒரு அளவு கோல் இல்லை

அவரவர் உணரணும்

அதற்கு தகுந்தபடி   குடும்ப கௌரவம் நிம்மதியான வாழ்க்கை

எதிர்காலம்

இப்படி எத்தனையோ இருக்கு..

அதையும் தாண்டி

ஒரு பிள்ளை 1/4 நாட்களையே  ஒரு நாளில் எம்முடன்  கழிக்கிறார்கள்

மீதி

பாடசாலை

ஏனைய  வகுப்புக்கள்

நண்பர்கள்

பொழுது போக்கு .............. இப்படிப்போகிறதுஇதில் எதைக்கண்காணிப்பது.....??

சுண்டல் சொல்வது போல் பிள்ளையை  வளர்க்க

மனைவி  வீட்டிலிருந்து

மனைவியைக்கவனிக்க ஆள் வைக்கவேண்டி வந்த கதையுமுண்டு....

என்னைப்பொறுத்தவரை

சமுதாயம் எல்லாவற்றையும் கடந்து போகும்...

இதெல்லாம் கடலில் கலப்பது போல் காணாமல் போகுமே தவிர

கடலை நிறம் மாற்றிவிடமுடியாது.

அதே நேரம்

பிள்ளைகளுடனான அந்நியோன்யமான நட்பு

சரி பிழைகளைச்சொல்லிக்கொடுத்தல்

கண்காணிப்பு மற்றும் கண்டிப்புடனான வளர்ப்பு 

சமுதாயத்தில் நல்லவர்களாக வளர 

நாம் முன்னுதாரணமாக திகழ்தல்

நன்று.

நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை.

நெடுக்ஸ் நீங்கள் கூற முதலே நாம் எல்லாம் திறந்தே வைத்துள்ளோம். என் பிள்ளைகளின் பாஸ்வேட்ஸ் எனக்கும் மற்றப் பிள்ளை களுக்குக் கூடத் தெரியும். எல்லாப் பிள்ளைகளுமே தவறு செய்வார்கள் என்று இல்லைத்தானே. இன்று இதுபற்றிக் கூட என் மூன்று பிள்ளைகளையும் இருத்திவைத்து உரையாடியபொழுது என்னிலும் பார்க்க அவர்கள் அனைத்து விடயங்களிலும் பாதுகாப்பு உணர்வுடன்தான் இருக்கின்றனர். என் மகளை நான் என் முகப்புத்தகத்தில் இணைக்கவில்லை. அவர்கள்மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. மற்றவர்களின் தொல்லையிலிருந்து தவிர்க்க. கடந்த மாதம் மூத்த மகள் கேட்டுகொண்டதற்கு இணங்க இணைத்திருந்தேன். மற்ற மகள் தன்னையும் இணைக்கும்படி கேட்டிருந்தாள். முதலில் விளையாட்டாக அவளை இணைக்க மறுத்துவிட்டு ஒருநாள் மட்டுமே இணைத்தேன். ஒரு வாரத்தில் இருவருமே தாமாகவே நிறுத்திவிட்டனர். அதற்கு எனக்குக் காரணமும் கூறினர். எதற்கு அம்மா தெரியாதவர்களை எல்லாம் வைத்திருக்கிறீர்கள். உடனே தமக்கு தொடர்ந்து நட்புக் கோரிக்கை விடுத்துத் தொந்தரவு தருகின்றனர் என்று.

பிள்ளைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம் நட்போடு அவர்களிடம் இருந்தால் அத்தனை விடயத்தையும் எம்மிடம் பகிர்வார்கள். என் பிள்ளைகள் அப்படித்தான்.

சுமோ!

சீரழிவு, தவறான வழி என்று எவைகளை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? எமது இளையோர்கள் எல்லோரும் போதை வியாபரம், கொலை, கொள்ளை என்று அலைந்து கொண்டிருக்கிறார்களா? நன்றாகத்தானே இருக்கிறார்கள்!!

நீங்கள் யேர்மனியில் இருப்பதனால் உங்களுக்கு அதிகம் தெரியவில்லை என நினைக்கிறேன். அதிகமாக எனக்குத் தெரிய எம் நகரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து முதல் இருபது வயதுவரையான பெண் பிள்ளைகள் தமது முகப்புத்தகத்தில் அசிங்கமாக தமது படங்களைப் போட்டிருந்தமை என் பிள்ளைகள் காட்டிப் பார்த்திருக்கிறேன். இங்கு உள்ள தமிழ் ரவுடிகளுடன் எத்தனை பெண்பிள்ளைகள் சீரழிந்து கர்ப்பம் தரித்து கஞ்சா கொடுத்து பலரிடம் விபச்சாரிகள் போல் நடத்திய கதையெல்லாம் இருக்கு.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன தப்பிருக்குது. ஒரு அண்ணனுக்கு தங்கச்சி தீத்தி விடுகுது. இன்னொரு தங்கச்சி.. சொக்கையை பிடிச்சு விடுகுது. சரி.. தங்கச்சி வேணா.. ஒரு ரசிகை... தான் விரும்பும் நடிகனுக்கு இதனை செய்வதால்.. என்னத்தை அவள் இழந்திடப் போறாள். கற்பு.. நன்னடத்தை.. ஒடுக்கம்... எதுவும் இல்லையே..??! இதுக்குப் போயி.. இப்படி ஒரு விளக்கம்.. தேவை தானா...??! சில விடயங்களை மேம்போக்கோடு பார்க்க வேண்டும். ஆனால் அதேவேளை.. தனிப்பட்ட முறையில்.. ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் அளிக்கும் போது.. கூடிய அவதானம் இருப்பது தவறுகள் நிகழ்வதை தடுக்கும். அதுவேற.. இது வேற..! :):icon_idea:

அண்ணனுக்கு தங்கை சாப்பாடு தீத்திவிடுவதில் தப்பில்லைத் தான்.அதை பொது இடத்தில வைச்சு தான் செய்யனும் என்று இல்லை..இப்படியான தவறுகள் தான் பின்னர் பெரிய விளைவுகளை கொண்டு வருபவை..சாப்பாடு மட்டுமா தீத்துகிறார்கள்..ரீசேட்டில் லிப்ஸ்ரிக்கால் முத்தம் கொடுத்துட்டு அதை போட விட்டு ரசிக்கிறார்களே அதை என்ன வென்று சொல்வீர்கள்..ஆ..இதுக்கு மட்டும் உங்களுக்கு பெண் பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்க சொல்லுதோ பிறதர்...

பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு இவையும் ஒரு காரணிகள் தான்...ஏன் இப்போ  ஆண்களை விட பெண்கள் பொது இடத்திலயே சியர்ஸ் அடிக்கிறார்களே அதுக்கு என்ன சொல்லப் போறீங்கள்...அதையும் கண்டு கொள்ளக் கூடாது என்கிறீகளா.....

கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்கள்.அதில் தந்தையார் தன் பிள்ளைகள் விடும் தவறுகளையே மூட்டை,மூட்டையாக அவிட்டு விட்டார்..தந்தை சொல்ல,சொல்ல மகள் உனக்கு வா வீட்டை இருக்கு....அத்தோடு தந்தையின் கதை சரி.....எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் நீ,நான்,போ,வா என்று எல்லாம் கதைப்பதில்லை..அதுவும் வயதுக்கு மூத்தவர்களைப் பார்த்து தவறியும் இப்படி எல்லாம் சொல்ல மாட்டோம்.இப்படியான வார்த்தைகளை கேட்கும் போது மிகுந்த கவலையாக  இருநந்தது.

அந்த தாய் தந்தையார்கள் அவர்களது பிள்ளைகளுக்கு எந்த விதக் குறையும் விட இல்லை..ஆனால் இப்போ பிள்ளைகள் தங்களை பெற்றோர் என்று சொல்லவே வெக்கப்படுகிறார்களாம்..அப்பா பள்ளிக்கு  பிள்கைளை பிக்கப்ப போனால் வெளியில்  முகத்தை, தலையைக் காட்டிப் போட வேண்டாம். இப்படிச் சொல்கிற பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா....??

இதுக்கு மேலயும் சொல்ல வேண்டுமா...பிள்ளைகள் பிழை விட்டாலும் தங்கள் பிள்ளைகள் தங்களோடு கிடந்திடனும் வெளியே தெரியக் கூடாது என்று எத்தனை பெற்றோர் மௌனித்து  நிக்கிறார்கள் தெரியுமா....?????

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அடி போட போனவருக்கு துணையா போனவரா இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

சிவா கார்த்திகேயனுக்கு புழைக்க தெரியல்ல ஒரு பொண்ணு வந்து தூக்க சொல்லுது இவரு வெக்கபட்டிட்டு நிக்குறாரு..... நம்பர் வாங்கிணமாம் dating போனமாம் எண்டு இருக்கிறதா விட்டிட்டு :D

சுமோ!

எனக்கு மீண்டும் விளங்கவில்லை. அசிங்கமாக படம் போட்டிருக்கிறார்கள் என்றால் எப்படி? பல்லு விளக்காமல் முகம் கழுவாமல் படம் போட்டிருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ!

எனக்கு மீண்டும் விளங்கவில்லை. அசிங்கமாக படம் போட்டிருக்கிறார்கள் என்றால் எப்படி? பல்லு விளக்காமல் முகம் கழுவாமல் படம் போட்டிருக்கிறார்களா?

lilac-aqua-dress-SH-2944-a.jpg

எனக்குத் தெரிந்த சிறுமி ஒருவர் இப்படி பட்டியில்லாத ஆடை ஒன்றை அணிந்துவிட்டார் என்று சொல்லி அவலப்பட்டார்கள் அவரது பெற்றோர். :huh: இப்பிடி இருக்கு நிலைமை. :D

இசை போட்ட படம் அசிங்கமாக இல்லை. ராதிகா சிற்சபேசன், உமா குமரன், மாயா அருள்பிரகாசம் போன்றவர்கள் அணிகின்ற ஆடைகளை போன்றுதான் எமது இளைஞிகளும் அணிகின்றார்கள். இதில் எங்கே அசிங்கம் இருக்கின்றது?

நாம் முதலில் இந்த "அசிங்கம்", "சீரழிவு", "தவறான பாதை" என்கின்ற எமது பார்வைகளில் இருந்து வெளியில் வரவேண்டும். இங்கே திருந்த வேண்டியது நாம்தானே தவிர எமது குழந்தைகள் அல்ல.

ஒரு தமிழ் குடும்பம் தமிழர்களே வசிக்காத நகரம் ஒன்றில் வசிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. அவர்களது பெண் பிள்ளைக்கு முகநூல், ருவிட்டர், இன்ஸ்ரகிராம் நட்புகள் எல்லாரும் வேற்றினத்தவர் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பிள்ளை கொஞ்சம் வெளிக்காட்டும் ஆடைகளை அணிந்தாலும் பெற்றோர் கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்.. :rolleyes:

இதே நிலமை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இராது.. அடியே.. கனகம்.. மங்களத்தின்ர பெட்டையை பார்த்தனியேடி.. என்று தொடங்கிவிடுவார்கள்.. :lol:

அண்மையில்

எனது பக்கத்து வீட்டில் கனடாவிலிருந்து ஒரு பெண் பிள்ளை வந்த நின்றார்

(பக்கத்த வீட்டுக்காறரின் மருமகள்)

மருமகள் போடும் உடுப்புக்கள் மாமனாருக்கு பிடிக்கவில்லை.

இருந்தாலும் வளர்ந்த படித்தபிள்ளை  என்பதால்

மாமனார் எதுவும் கதைக்கவில்லை

அவர் இங்கிருந்து

இசுரவேலுக்கு சென்றார்

அங்கு ஒரு குழுவால் அவதானிக்கப்பட்டு

வாகனத்தில் தூக்கப்படும் நிலையில் தப்பித்து நாடு திரும்பினார்... :(  

ஒரு தமிழ் குடும்பம் தமிழர்களே வசிக்காத நகரம் ஒன்றில் வசிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. அவர்களது பெண் பிள்ளைக்கு முகநூல், ருவிட்டர், இன்ஸ்ரகிராம் நட்புகள் எல்லாரும் வேற்றினத்தவர் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பிள்ளை கொஞ்சம் வெளிக்காட்டும் ஆடைகளை அணிந்தாலும் பெற்றோர் கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்.. :rolleyes:

இதே நிலமை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இராது.. அடியே.. கனகம்.. மங்களத்தின்ர பெட்டையை பார்த்தனியேடி.. என்று தொடங்கிவிடுவார்கள்.. :lol:

வேலை வெட்டியில்லாத கனகமும் மங்களமும் அப்படி கதைக்கிறார்கள் என்றால் அவர்களை திருத்த என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர பிள்ளைகளை அல்ல. தவறான பார்வை பார்ப்பதில் இருந்து திருந்தினால் இந்த பிரச்சனை இருக்காது. கனகத்தினதும் மங்களத்தினதும் பிரச்சனை தங்கள் காலத்தில் இப்படியான அழகான நவீன ஆடைகளை உடுத்த விடவில்லையே என்ற ஆதங்கத்தினால் வரும் வார்த்தைகள். இதை கணக்கெடுக்கவே தேவையில்லை.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.