Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்

Featured Replies

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு: ஐபில் நுணுக்கங்களை பயன்படுத்தினேன்: மாலிங்க, கிண்ணத்தை வெல்லவே விலகிகொண்டேன்: சந்திமால், 2015 உலக கிண்ணத்துக்கு தயாராகுவோம்: சங்கா,
ஜயவர்தன

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)  5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது.

SAM_0498_zps8dfeabd3.jpg

பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை  வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர்.

Sri-lanka-team-arraival_zps6a740a9c.jpg
பங்களாதேஷிலிருந்து இன்று பி.ப. 3.30 மணிக்கு இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  இலங்கை அணியினர் வந்தடைந்தனர். விமான ஓடுபாதையில் சம்பியன்களின் விமானம் தரயிறங்கியதும் வரவேற்பின் ஆரம்பகட்டமாக இருமருங்கிலுமிருந்து நோக்கி நீர்  பீச்சியடிக்கப்பட்டது.

IMG_0023_zpscbbf09ad.jpg
பின்னர் சம்பியன் அணித்தலைவர் லசித் மலிங்க கிண்ணத்துடன் விமானத்திலிருந்து வெளியேற தொடர்ந்து அணி வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர், உபதலைவர் மற்றும் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சுமார் 4.30 மணியளவில் உலக சம்பியன்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறந்த பஸ்ஸில் விமான நிலையத்திலிருந்து பலத்த உற்சாகத்துக்கு மத்தியில்  வெளியே அழைத்து வரப்பட்டனர்.
IMG_0077_zps73fea9dd.jpg

ஐபில் நுணுக்கங்களை பயன்படுத்தினேன்: லசித் மாலிங்க

இறுதிப் போட்டியில் நாம் திறமையான பந்து வீச்சை மேற்கொண்டிருந்தோம். இறுதி ஓவரை மிக நுணுக்கமாக வீசியிருந்ததாக இந்திய அணித் தலைவர் டோனி தெரிவித்திருந்தார். இந்திய அணி வீர்கள் இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஓட்டம் பெறும் வல்லமைகொண்டவர்கள். நான் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றமையால் நிறைய இந்திய அணி வீரர்களுடன் பழக கூடிய சந்தர்பம் கிடைத்த அதேவேளை அவர்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாடுவார்கள் அவர்களுக்கு எவ்வாறான பந்து வீச்சுகளை மேற்கொள்ள வேண்டு போன்ற நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருந்தேன்.

இந்த நுணுக்கங்களை பயன்படுத்தியே இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் சுமார் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஓட்ட இலக்கை மட்டுப்படுத்தியிருந்தோம்.
IMG_0192_zps991f124a.jpg
குறிப்பாக அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடும்; வீரர் நான் அல்ல. அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் விiயாடியமையாலேயே எம்மால் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடிந்தது.

இதேவேளை இத்தொடருடன் ஓய்வு பெரும் சிரேஸ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் உதவியுடனும் அணியின் பயிற்சியாளர்களின் உதவியுடனும் கிண்ணத்தை எம்மால் கைப்பற்ற முடிந்து. மேலும் தினேஷ் சந்திமால் சிறந்த அணித் தவைலர். முதல் மூன்று போட்டிகளில் அவருடைய தலைமையில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. இறுதி மூன்று போட்டிகளில் அணித் தலைவராக செயற்பட்டமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.


கிண்ணத்தை வெல்வதே இலக்காக இருந்தது: தினேஷ் சந்திமால்

1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக கிண்ணமொன்றை கைப்பற்றியதையிட்டு நான் மனதளவில் மிகவும் சந்தோசமடைகின்றேன். இத்தொடரில் சுப்பர்-10 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் உரிய நேரத்தில் பந்து வீசி முடிக்கத் தவறியமையால் போட்டித் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிய கிண்ணத் தெடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பிரகாசித்திருந்த இளம் வீரர் திரிமானவுக்கு வாய்ப்பு வழங்கினேன். அணியில் ஒரு சிறந்த வீரர் இருக்கும் போது அவரை மறைவாக வைத்து வாய்ப்பு வழங்காமல் விiளாயாடுவது சிறந்த விளையாட்டு வீரருக்கு அழகு அல்ல. எனவே அவருக்கு நான் வாய்ப்பு வழங்கினேன். அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

மேலும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக நான் விளையாட்டில் பிரகாசிக்கவில்லை. கிண்ணத்தை நாட்டுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தமையால் நானாக தொடரிலிருந்து விலகிகொண்டேன். அந்தவகையில் லசித் மாலிங்க தலைமையில் அணி கிண்ணத்தை கைப்பற்றியது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை வழிநடத்த முடியாது என இருந்து வந்த ஒரு எண்ணக்கருவை மாலிங்க தகத்தெரிந்துள்ளார்.

மேலும் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்சான் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரின் முழு பங்களிப்பு மூலமும் கிண்ணத்தை கைப்பற்றியதை இட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்;.


2015 உலக கிண்ணத்துக்கு தயாராகுவோம்: சங்கக்கார, ஜயவர்தன


சுமார் 18 வருடங்களின் பின் மீண்டுமொரு உலக கிண்ணத்தை இருபது-20 தொடரில் முதன் முறையாக வெற்றிகொண்டதையிட்டு மகிழ்ச்சிடைகின்றோம். எமது அணியின் திறமையால் கிண்ணத்தை வென்றுள்ளோம். இதுபோன்று நிகழ்வுக்காக நாம் நீண்ட காலம் காத்திருந்தோம். இன்று அது நிறைவேறியுள்ளது. சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெரும் நாம் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எமது கவனத்தை செலுத்துவோம். குறிப்பாக அடுத்த வருடம் இடம்பெற உள்ள ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் முகமாக எம்மை தயார்படுத்துவதோடு அதற்கு முன்னயை போட்டிகளில் திறமையாக விளையாடி எமது புள்ளிகளை அதிகரித்து கொள்வோம். மேலும் எமது உடல் தகுதி மற்றும் போர்ம் நிலையையும் கவனத்தில் கொண்டு இனிவரும் காலங்கில் விளையாடுவதா இல்லையாக என தீர்மானிப்போம்.



ஜனாதிபதியுடன் சந்திப்பு

கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டதோடு அணியின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் விழாக்கோலம்

காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீரர்கள் நனைந்த வண்ணம் ரசிகர்களை நோக்கி தமது கரங்கi அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

http://www.virakesari.lk/articles/2014/04/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

  • Replies 212
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி - சகோதரிகளை வல்லுறவு செய்து உறவுகளைக் கொண்டு, அடித்து உதைத்து ஊரைவிட்டு அனுப்பியவனுக்கே அடிவாங்கியவன் ஆதரவு தருவானா? பதில் - ஆம். சில ஈழத்தமிழர்கள்.

Edited by இணையவன்
சொற்பதம் மாற்றப்பட்டுள்ளது

கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பு


பங்களாதேஷில் நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி வீரர்களுக்கு இன்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளது.
ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் பொருட்டே கிரிக்கெட் வீரர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரும் கிரிக்கெட் வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படவுள்ளதோடு அதன் பின்னர் சபாநாயகர் விருந்தினர் பார்வையாளர் கலரிக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

சபாநாயகர் சமல் ராஜபக் ஷ, சபை முதல்வர் நிமால் சிறிபால டி. சில்வா உள்ளிட்ட ஆளுந்தரப்பு மற்றும் எதிரணி உறுப்பினர்களால் இலங்கை கிரிக்கெட் அணியினர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரியில் அமர்ந்த பின்னர் இன்று மாலை 5.00மணி தொடக்கும் 7.00மணி வரை அவர்களை பாராட்டி வாழ்த்தும் பிரேரணையொன்றும் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பதில் எதிர்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க அதனை வழிமொழிந்து உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் மாலை 7.10மணி வரை ஆளுந்தரப்பு மற்றும் எதிரணி உறுப்பினர்கள் இந்தப் பிரேணைக்கான நேரத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினரை பாராட்டி உரையாற்றவுள்ளனர்.

இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றபோதும் அந்த அணியினர் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

கோஹ்லிக்கு சங்கக்கார கூறியது என்ன?: விடையளித்தார் சங்கக்கார

ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியனானது. மைதானத்தில் இலங்கை அணி வீரர்கள் வெற்றிக் களிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை அணியின் நட்டசத்திர வீரர் குமார் சங்கக்கார விராட் கோஹ்லிக்கு ஏதோ கூறிக்கொண்டிருப்பதையும் கோஹ்லி சங்கக்காரவை தழுவுவதையும் காணொளியில் காண்ப்பிக்கப்பட்டது.
இக்காட்சியானது கிரிக்கெட் ரசிகர்கள் பலரால் முனுமுனுக்கப்பட்டது. அதாவது இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி உணர்ச்சிவசம் படக்கூடிய வீரர். களத்தில் இருக்கும் போது அடிக்கடி கோபம் படுவதும் ஆவேசமாக செயற்படுவதும் உண்டு. எனவே இதனை கருத்திற்கொண்டு சங்கக்கார விராட்கோலிக்கு ஏதாவது அறிவுரை கூறியிருப்பார் என பரவலாக பேசப்பட்டது.
 

Sri-Lankan-cricketer-Kumar-Sangakkara-C-
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாடு திரும்பியுள்ள இலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார தெளிவுப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தேசிய வானொலியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்திருப்பதாவது,

விராட் கோஹ்லி ஒரு சிறந்த வீரர். இந்திய அணியில் கடந்த இரு வடங்களாக பேசப்படும் முக்கிய வீரரும் ஆவார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நான் அரைச் சதத்தை கடந்தேன். இதன்போது இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தது. ஆனால் விராட்கோலியே என்னிடம் ஓடி வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றார். போட்டி முடிவடைந்ததும் அவர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போது நான் அவருக்கு எந்தவொரு அறிவுரையும் கூறவில்லை. உண்மையில் கோஹ்லிக்கு என்னுடைய வாழ்த்துக்களையே தெரிவித்தேன் என்றார்.

http://www.virakesari.lk/articles/2014/04/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0

 

கேள்வி - சகோதரிகளை வல்லுறவு செய்து உறவுகளைக் கொண்டு, அடித்து உதைத்து ஊரைவிட்டு அனுப்பியவனுக்கே அடிவாங்கியவன் ஆதரவு தருவானா? பதில் - ஆம். சில ஈழத்தமிழர்கள்.

 

 

கந்தப்பு இந்த திரியை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லைத் தான்!! 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132916

தயவு செய்து எப்பவும் நடு நிலமையாகக்  கதைத்துப் பழகுங்கள்!!!!!!! யார் எழுதினம் என்பதைப் பொறுத்துக் தயவு செய்து கதைக்காதீர்கள்!!! 

"உன்னை நீயே திருத்து சமூகம் தானாகத் திருந்தும்"

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இந்த திரியை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லைத் தான்!! 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132916

தயவு செய்து எப்பவும் நடு நிலமையாகக்  கதைத்துப் பழகுங்கள்!!!!!!! யார் எழுதினம் என்பதைப் பொறுத்துக் தயவு செய்து கதைக்காதீர்கள்!!! 

"உன்னை நீயே திருத்து சமூகம் தானாகத் திருந்தும்"

 

சில மாதங்களுக்கு முன்பு யாழில் வந்த செய்திகள். 1)மட்ராஸ் கபே திரைப்படத்தினைத் தடை செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம். யாழ்களத்தில் வந்த கருத்து - இவர்கள் தமிழகத்தில் இருக்கும் அகதிகளுக்கு குரல் எழுப்புவதில்லை. 2) ராதிகா சிற்சபேசனன் யாழ்ப்பாணத்துக்கு சென்றார் யாழ்களத்தில் வந்த கருத்து - அவர் ஏன் கோட்டுப் போட்டு சென்றார்.

இலங்கை உலக T20 சம்பியன்; நீண்ட பெருங்கனவு பலித்தது
புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014 16:48 0 COMMENTS

ஐந்தாவது உலக T20 கிண்ணம் ஐந்தாவது புதிய சாம்பியனுக்கு...

10010523_777730492246049_2107947495_o_zp

 

கடந்த கட்டுரையில் எழுதியிருந்த எண் கோலம் உண்மையானது. கடந்தமுறை போட்டியை நடத்திய நாடு இம்முறை சம்பியன் ஆகியுள்ளது.

எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் இப்படி ஒரு வெற்றிக்கு... எத்தனை இறுதிப்போட்டிகளில் தோற்று கவலையுடன் தொடர்ந்து வந்த நாட்களைக் கழித்து முடங்கியிருப்போம்?

ஒவ்வொரு தரமும் இதோ ஒரு கிண்ணம், அதிலும் ICC கிண்ணம் எமக்குத் தான் என்று நினைத்திருக்க, வெல்கிறோம் என்று பாதிவேளை நினைத்திருக்க, கையை விட்டுக் கிண்ணம் போக வெறுங்கையுடன் வந்திருப்போம்...

இப்படி ஏங்கிக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த ஞாயிறு இரவு தொடர்ச்சியான மகிழ்ச்சியை இன்னும் தந்துகொண்டே இருக்கிறது.

201446165253300734_zpsce0adb76.jpg
திசர பெரேராவின் வெற்றி, சிக்ஸர் உலகம் முழுவதும் வாழும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கிய உற்சாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மூலம் கிடைத்த மகிழ்ச்சி.

இலங்கை கிரிக்கெட்டின் இரு பெரும் சிகரங்கள் தமது இறுதி T20 சர்வதேசத் தொடராக இத்தொடரை அறிவித்தபிறகு விடைபெறுகின்ற நேரமாவது இந்த இரு கனவான்களுக்கும் பரிசாகக் கிண்ணம் ஒன்று வெற்றிகொள்ளப்பட்டிருப்பதானது இலங்கை கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் மனது மறக்காத விடயமாக மாறியுள்ளது.

உலக T20 கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இலங்கைக்கு ஒரு பக்கம் அழுத்தத்தையும் மறுபக்கம் வெல்லவே வேண்டும் என்ற உத்வேகத்தையும் வழங்கியிருந்தது.

இலங்கை அணியை விட இறுதிப்போட்டிக்கு செல்லும்போது இந்திய அணிக்கு மனநிலையில் அதிக உறுதியும் அணி நிலையில் அதிக உறுதியும் இருந்தது பற்றி முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

தொடர்ச்சியான இறுதிப்போட்டி வெற்றிகள் (அதிலும் டோனியின் தலைமையிலேயே) இந்தியாவுக்கு அளித்திருந்த மனவுறுதியும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிகளில் இலங்கை கண்டுவந்த தோல்விகள் இலங்கைக்கு அளித்திருந்த கிலேசமும் இந்தியாவை வெற்றிவாய்ப்பு அதிகமுடைய அணியாகக் காட்டியிருந்தன.

எனினும் இலங்கை அணியிடம் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பின் ஏற்பட்டிருந்த ஓர் உறுதியான மாறுதல், இந்தியாவுக்கு எதிரான பந்துவீச்சின் போது மிகத் துல்லியமாக தெரிந்திருந்தது.

இலங்கையும் இந்தியாவும் மோதிக்கொண்ட 3ஆவது ICC கிண்ணம் ஒன்றின் இறுதிப்போட்டி இதுவாகும். (2002 - Champions Trophy - மழையினால் கிண்ணம் பகிரப்பட்டது. 2011 உலகக் கிண்ணம் - இந்தியா வென்றது)

போட்டி ஆரம்பிக்குமுன் பெய்த மழையும், மழை வருவதற்கான அறிகுறிகளும் மழை விதியை மீண்டும் அழைக்குமோ அல்லது பகிர்வோ என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.

ஆனால், சற்றுத் தாமதித்த போட்டியானது இடைநடுவே ஒரு மழைத்துளி இடையூறு கூட இல்லாமல் இலங்கைக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பரிசளித்துப் போயுள்ளது.

இப்போது இலங்கை அணியும் இந்தியாவைப் போலவே, (மூன்றாவது அணியாக மேற்கிந்தியத் தீவுகளையும் சொல்லலாம்) ICCயின் எல்லாக் கிண்ணங்களையும் வென்றெடுத்துள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

இலங்கை - 1996 - உலகக் கிண்ணம்

3385946088_zps48399787.jpg
2002 - சம்பியன்ஸ் கிண்ணம் (மினி உலகக் கிண்ணம்) - இந்தியாவுடன் இணை சம்பியன். இப்போது உலக T20 சம்பியன்

இன்னொரு சுவாரஸ்ய விடயம்...

இந்தியா டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது முதலாவது உலகக் கிண்ணத்தை 1983இல் வென்றது. அதன் பின்னர் அவர்களுக்கான அடுத்த ICC கிண்ணத்தை வென்றெடுக்க 24 ஆண்டுகள் ஆனது. (தோனியின் தலைமையில் 2007இல் உலக T20), (சம்பியன்ஸ் கிண்ணம் 2002இல் இந்தியாவுக்கு இலங்கையோடு பகிரப்பட்டது) இந்த நீண்டகாலக் காத்திருப்புக்குப் பின்னர் அடுத்தடுத்து ICC கிண்ணங்கள் கிடைத்தன.

இலங்கையை இந்தியாவோடு ஒப்பிடும்போது விரைவு.

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகளுக்குள் 1996இல் உலகக் கிண்ணம் கிடைத்தது. இப்போது 18 ஆண்டுகளில் அடுத்த ICC கிண்ணமாக உலக T20. இது இவ்வளவு காலம் இருந்து வந்த மனத்தடை ஒன்றை உடைப்பதாக அமையலாம். இனி கிண்ணங்கள் குவியலாம்.

1396881987168_zps3bcb5cbc.jpg
இலங்கை அணியின் இரண்டு பொற்காலங்களைச் சேர்ந்த இரு தலைமுறை வீரர்களுக்கும் ஓர் உலகக்கிண்ணம்/ ICC கிண்ணமாவது அவர்களது ஓய்வுக்கு முன்னர் கிடைத்திருப்பது தன்னலமற்று அவர்கள் தாய்நாட்டுக்கு விளையாடியதற்கான பரிசாக அமைகிறது.

அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, ரொஷான் மகாநாம, அசங்க குருசிங்க, முரளிதரன், வாஸ், ஹஷான் திலகரத்ன, சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, மார்வன் அத்தப்பத்து ஆகிய மூத்த வீரர்கள் இலங்கையின் முதலாவது உலகக் கிண்ணத்தைக் கொண்டுவந்தவர்கள்.

1996WorldCup_zpsece3cc7c.jpg
இவர்களில் அர்ஜுன, குருசிங்க, மகாநாம, களுவிதாரண தவிர ஏனையோருக்கு 2002 சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லக்கூடிய பேறும் கிடைத்தது.

இந்த 90-2000 இருந்த அணிக்குப் பிறகு இலங்கையின் மிகச் சிறந்த சாதனைகள் படைத்த சிரேஷ்ட வீரர்கள் மஹேல, சங்கா, டில்ஷான், ஏன் மாலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு காலத்தை நெருங்கி வரும் நிலையில் இதுவரை உலகக்கிண்ண, மற்றும் ICC கிண்ணங்களின் தோல்விகளுடன் கழிந்த விரக்திப் பொழுதுகள் ஒரு மிகப் பெரிய வெற்றிக் கனியைப் பரிசளித்துள்ளன.

183475_zps82bfafa0.jpg
பங்களாதேஷின் இரவுப் பனி மிர்ப்பூரில் பெரிதாகத் தாக்கம் செலுத்தாவிட்டாலும், மழையின் அச்சுறுத்தல் காரணமாக நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இருந்தது.

இலங்கையின் தலைவராக மூன்றாவது போட்டியில் தலைமை தாங்கிய லசித் மாலிங்க, இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என்று முடிவெடுக்க சில காரணங்கள் இருந்தன.

மழை குறுக்கிட்டால் டக்வேர்த் - லூயிஸ் முறைப்படி இலக்கை அடைவது சாதகமானது.

தொடர்ச்சியாக இந்தியாவை வெற்றிகரத் துரத்தியடிக்கும் அணியாகக் காடும் பலமான துடுப்பாட்ட வரிசை எந்தப்பெரிய இலக்குகளையும் அண்மைக்காலமாக வெற்றிகண்டிருந்தன. அதிலும் குறிப்பாக விராட் கோளி இரண்டாவது துடுப்பாட்டத்தில் ஒரு மன்னர்.

ஆனால், கோளி முதலாவதாக ஆடினாலும் கூடத் தன்னால் வேகம் குறையாமலும் நிதானம் தவறாமலும் ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்பதை அதிரடியாட்டம் ஆடிக் காட்டியிருந்தார்.

ஆனால் இந்தியாவின் துரதிர்ஷ்டம் அவர் மட்டுமே இறுதிப்போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

இலங்கை அணியின் வியூகங்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

1396881950668_zpsa92ef40c.jpg

இந்தியாவின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களையும் பொறியில் சிக்கவைக்க அவர்கள் வகுத்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு வியூகங்களால் ஓட்டங்களைப் பெறுவதில் இந்தியாவின் விராட் கோளி தவிர்ந்த எல்லோருமே திக்கித் திணறினர்.

அதிலும் யுவராஜ் சிங்கும் வழமையாக இறுதி ஓவர்களில் சிக்சர் மழை பொழியும் தலைவர் டோனியும் மாட்டிக்கொண்டது தான் பெரும் ஆச்சரியம்.

நான் முன்னைய கட்டுரையில், "அடிக்கடி T20 வகைப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் சந்தித்திராவிட்டாலும் கூட, இரு அணிகளினதும் ஒவ்வொரு வீரர் பற்றியும், அணிகளின் பலம், பலவீனம் பற்றியுமே இரு பக்கமும் கொஞ்சமேனும் சந்தேகம் இல்லாமல் தெரியும்" என்று சொல்லியிருந்ததைப்போல ஒவ்வொரு இந்திய வீரர்களின் பலவீனம் அறிந்து அந்த இடங்களில் பந்துகளைத் துல்லியமாக இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தார்கள்.

lasithmaling_zps9ef328eb.jpg
களத்தடுப்பாளர்கள் புதிய, புதிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

குழம்பிப்போன இந்திய வீரர்களில், குழம்பாமல், இலங்கை வீரர்களால் சலனப்படுத்தப்படாமல் அடித்தாடிய ஒரேயொருவர் விராட் கோளி மட்டுமே. உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக துரிதமாக எழுந்துவந்திருக்கிறார் கோளி.

இலங்கையின் இந்த வியூக வகுப்பில் மாலிங்கவுக்கு நிச்சயம் மஹேல, சங்கா ஆகியோரின் துணை இருந்திருக்கும்.

விராட் கோளி, 58 பந்துகளில் 77 ஓட்டங்கள்

viratkohli_zps6608d950.jpg
துடுப்பெடுத்தாடிய ஏனைய அத்தனை இந்திய வீரர்களும் 62 பந்துகளில் 53 ஓட்டங்கள்.

ஆனால் இலங்கை அணி வீசிய கடைசி 5 ஓவர்களில் இந்தியாவால் 30 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் கோளியே ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறினார்.

அவ்வளவு துல்லியமாக இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அடித்தாட முடியாதவாறு பந்துவீசி இருந்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த T20 இறுதி ஓவர்களின் பந்துவீச்சாக இதைக் குறிப்பிடலாம்.

ஆனால் கோளி, டோனி ஆகியோர் ரசிகர்களின் வசைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, யுவராஜ் சிங் மட்டும் இந்திய ரசிகர்களின் கோபத்துக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிப்போனார்.

கடைசி 4 ஓவர்களில் யுவராஜ் - 9 பந்துகளில் 4 ஓட்டங்கள், டோனி - 7 பந்துகளில் 4 ஓட்டங்கள், கோளி - 8 பந்துகளில் 7 ஓட்டங்கள்.

லசித் மாலிங்க மட்டுமில்லாமல், குலசேகர, சச்சித்திர சேனநாயக்க ஆகியோரும் கூட மிகக் கட்டுப்பாடாக, முன்னாள், இந்நாள் வீரர்களின் பாராட்டுக்களைப் பெறும் அளவுக்கு மிகச் சிறப்பாகப் பந்துவீசி இருந்தார்கள்.

ஒரு பந்துவீச்சாளர் அணித் தலைவராக இருந்து ஓர் அணிக்கு ICC கிண்ணம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்த முதல் சந்தர்ப்பம் இது.


அதேபோல, அரையிறுதி வரை எந்தவொரு போட்டிகளையும் தோற்காமல் வந்த அணி, கிண்ணம் வென்றதில்லை என்பது மீண்டும் நடந்தது.

131 என்ற இலக்கு மேலோட்டமாக இலகு போல் தெரிந்தாலும், இறுதிப்போட்டியின் அழுத்தமும் இலங்கை அணிக்கெதிராக முன்னைய இந்திய செல்வாக்கும் இந்தப் போட்டியை போட்டித்தன்மையுடையதாக மாற்றும் என்றே எண்ண வைத்தது.

அதிலும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கையில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

குசல் ஜனித் பெரேரா, டில்ஷான் ஆகியோரின் ஆட்டமிழப்புக்களுக்குப் பின், தங்கள் இறுதிப்போட்டியில் விளையாடும் கிரிக்கெட் நண்பர்களும் கிரிக்கெட் தாண்டியும் உயிருக்குயிரான நண்பர்களாக இருக்கும் இலங்கையின் இரு கிரிக்கெட் சிகரங்கள் சேர்ந்துகொண்டார்கள்.

தமக்கிடையே 1,700 மணிநேரங்களையும், 600க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளையும் கொண்டுள்ள மஹேலவும் சங்காவும் T20 சர்வதேசப் போட்டியோன்றில் இறுதியாக இணைந்தார்கள்.

m296_zps3469799d.jpg
இந்த இறுதி இணைப்பு தனிப்பட்ட முறையில் இருவருக்கும் ஒரு முக்கிய கிண்ணம் பெறும் பெருங்கனவுடன் தங்கள் நாட்டுக்கான பெரிய கடமையொன்றை நிறைவு செய்யும் இறுதி முயற்சியோன்றையும் முன்கொண்டு இவர்கள் பெற்ற ஓட்டங்கள் 24 ஆனால் அந்த 24உம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானவையாக அமைந்தன.

மஹேல ஆட்டமிழக்கும் நேரம் இலங்கையின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிராவிட்டாலும் கூட, முன்னைய 4 இன்னிங்ஸில் மொத்தமாக 19 ஓட்டங்களையே பெற்றிருந்த சங்கக்கார நிதானமாக நின்று ஓட்டங்கள் பெறும் நிலையில் இருந்தார்.

சங்காவுக்கு மறுபக்கம் துணை இருந்தால் வெற்றி நிச்சயம் என்னும்போது, இந்தத்தொடர் முழுதும் இலங்கைக்கு நல்ல முடிவுத் தருணங்களைப் பெற்றுக்கொடுத்த Finisher மத்தியூஸ் வருவார் என்று நம்பியிருக்க, அதிரடியாக ஆடும், ஆனால் இத்தொடரில் பெரிதாக ஓட்டங்கள் பெறாத இன்னொருவர் திசர பெரேரா அனுப்பிவைக்கப்பட்டார்.

இது இலங்கையின் இன்னொரு சாமர்த்தியமான அணுகுமுறையாக அமைந்தது.

முக்கியமான தருணங்களில் formக்குத் திரும்பி தேவையான ஓட்டங்களைப் பெறும் Big match players போல திசர நிகழ்த்திய அதிரடி ஓட்டக்குவிப்பு இந்தியப் பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.

இது நிதானமாக ஓட்டங்கள் பெற்றுக்கொண்டிருந்த சங்கா, வேகமாக ஓட்டங்கள் குவிக்க வாய்ப்பை வழங்கியது.

சங்கக்கார தனது 8ஆவது T20 சர்வதேச அரைச் சதத்தைப் பெற்ற அதேவேளை, 25,000 சர்வதேச ஓட்டங்களையும் பூர்த்தி செய்தார்.

183475_zps82bfafa0.jpg
முன்னதாக மஹேல உலக T20 போட்டிகளில் 1,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

வழமையாக மைல் கற்களை அடையும் நேரங்களில் அமைதியாகக் கொண்டாடும் சங்கா, இந்த அரைச் சதத்தை மிக உற்சாகம் + ஆவேசமாகக் கொண்டாடிய காட்சி, இந்தப் போட்டியும் சங்காவின் ஓட்டங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் காட்டி நின்றன.

திசர அடித்த மூன்றாவது சிக்ஸர், இலங்கையின் வெற்றி ஓட்டங்களைக் கொண்டுவந்தது. 13 பந்துகள் மீதமிருக்க இலகுவான வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றிக்காகவே காத்திருந்த இலங்கை ரசிகர்கள், ஓடிவந்து மைதானத்தின் நடுப்பகுதியில் சங்காவையும் திசரவையும் ஆரத்தழுவிய காட்சி மீண்டும் 1996ஐ மனதுக்குள் கொண்டுவந்தது.

சின்னக் குழநதைகள் போல குதூகலித்தாலும், மறக்க முடியாத இந்த வெற்றியின் புல்லரிப்பும் நெஞ்சு நிறைந்த வெற்றிக்களிப்புடன் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடிய இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள், எத்தனை காலம் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தார்கள் என்று சிந்திக்க செய்தது.

அதிலும் தேர்வாளர் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய (இவர் இத்தொடர் ஆரம்பிக்க முதல் மஹெல & சந்காவுடன் கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தருணம் விளையாட்டின் வெற்றி எல்லாவற்றையும் மறக்கடிக்கும் என்று காட்டி நின்றது), பயிற்றுவிப்பாளர் குழாமில் இருக்கும் முன்னாள் வீரர்கள், இன்னும் முன்னாள் வீரர்கள் அனைவரும் களத்தில் நின்று வாழ்த்தி, மகிழ்ச்சியில் கலந்துகொண்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

இலங்கையின் இந்த வெற்றி சில முக்கியமான அடிப்படைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

லசித் மாலிங்க மற்றும் இலங்கையின் பந்துவீச்சாளர்களின் இறுதி ஓவர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு.

திட்டமிட்ட வியூகங்கள்

சிரேஷ்ட வீரர்கள் கைகொடுத்த தேவையான பொழுதுகள்.

இவ்வளவுக்கும் இந்தத் தொடர் முழுவதும் அதிக ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் முதல் வீரர் விராட் கோளி.

இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன தான் இலங்கை சார்பாகக் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர். கோளி பெற்ற ஓட்டங்களின் பாதியளவு ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த மஹேல, வரிசையில் 11ஆம் இடம்.

ஆனால், இலங்கையின் ஏனைய மூன்று வீரர்கள் 100 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்கள்.

பந்துவீச்சாளரிலும் அதிக விக்கெட்டுக்களைப் பெற்றவர்கள் வரிசையில் அஷ்வின் 11, மிஷ்ரா 10. இலங்கையின் குலசேகர 8 விக்கெட்டுக்கள்.

ஆனால் மீண்டும் இலங்கையின் ஏனைய பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.

அதேபோல, இந்தியா தான் சந்தித்த அத்தனை போட்டிகளையும் வென்று வந்த அணி.

ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றுப்போனது.

இங்கே தான் இலங்கை நிற்கிறது...

பலவீனப் புள்ளிகள் குறைவாக, அணியில் ஒருவரில் மட்டும் தங்கியிராமல், அந்தந்த போட்டிகளில் ஒவ்வொருவர் அணியின் ஹீரோக்களாக மாறி பெற்றுக் கொடுத்த வெற்றியின் தொடர்ச்சி தான் இந்த அரிய கிண்ணம்.

லசித் மாலிங்கவை இலங்கையின் அதிர்ஷ்டக்காரத் தலைவர் என்றும் சொல்லலாம். மூன்று போட்டிகள், மூன்றிலும் வெற்றி...

இந்த நேரத்தில் தான் அதிருப்திப்படாமல், அணிக்குள் குழப்பம் தராமல் நியமிக்கப்பட்ட தலைமைப் பதவியை அணியின் நலனுக்காக விட்டுக்கொடுத்த தினேஷ் சந்திமாலையும் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த அணியொற்றுமை தொடர்ந்தும் இருக்குமானால், 2015 உலகக் கிண்ணம் என்னும் பெரும் கனவும் கைகளில் வசப்படும்.

இரு பெரும் சிகரங்களுக்கு வெற்றியுடன் விடை கொடுக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்குக் கிடைத்ததையும் 18 ஆண்டுகாலத்தின் பின் பெற்ற வெற்றிக்கிண்ணமும் அளித்த உற்சாகத்தைத் தான் நன்றியுடன் நேற்று இலங்கை ரசிகர்கள் விமான நிலையம் முதல் காலி முகத்திடல் வரை காத்திருந்து வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இப்போது கனவு பலித்தது...
அடுத்து உலக T20 அணி புதிய சகாப்தம் நோக்கி இனி பயணிக்க இந்த வெற்றி ஓர் ஆரம்பமே...

தொடரின் நாயகனாக மிகப் பொருத்தமான விராட் கோளி, ஓட்டங்கள் குவித்த ரோஹித் ஷர்மா, பந்துவீச்சில் அஷ்வின், மிஸ்ரா ஆகியோரின் மிகச் சிறப்பான வெளிப்பாடுகள் இருந்தும் இந்திய அணி தொற்றுப்போனதானது நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமாகவும் இருக்கும்.

ஆனால் தொடர்ச்சியான நியூஸிலாந்து - தென் ஆபிரிக்கா தொடர் தோல்விகள், ஆசியக் கிண்ணத் தோல்வி ஆகியவற்றின் பின் இவ்வளவு தூரம் இந்திய அணியின் பெறுபேறு உண்மையில் இந்தியாவுக்கான ஒரு மகிழ்ச்சியான மாற்றமே.

இனி IPL ஆரம்பிக்க இவையும் கடந்து போகும்.

இந்த உலக T 20 தொடர் தந்த அதிர்ச்சிகள், அடையாளங்கள், சாதனைகள், தடங்கல் பல இருந்தாலும் வெற்றியின் வழித் தடமாகப் பதிந்த ஹேரத்தின் நியூஸிலாந்துக்கு எதிரான பந்துவீச்சு, மாலிங்கவின் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஓவர், திசரவின் சிக்சர்கள், சங்காவின் 50 உற்சாகம்...

இவற்றோடு சங்கா, மஹேலவின் ஆதரவு அணைப்பும் ஆனந்தக் கண்ணீரும் எத்தனை காலம் சென்றும் மறக்க முடியாத நினைவுகளாகப் பதியப்போகின்றன.

மகளிர் உலக T20 கிண்ணம் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக அவுஸ்திரேலிய மகளிர் வசம்.

ஹட் ட்ரிக் அடித்த சாதனைப் பெண்களையும் வாழ்த்துவோம்.

மெக் லனிங் தலைமையிலான இந்தத் துடிப்பான அணி தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே அணி என்பது மிகப் பொருத்தமான ஒன்றே.

ஒரு மாதத்துக்குள்ளேயே இலங்கைக்கு இரண்டாவது கிண்ணம்...

ஆசிய சம்பியன்கள் இப்போது உலக T20 சம்பியன்களும் கூட...

இலங்கையின் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டே மஹேல, சங்கா ஆகியோருக்குப் பதிலாக இலங்கை இனி T20 அணிக்குள் உள்வாங்கப்போகும் இளையவர்கள் யார் என்ற ஆர்வத்தோடு...

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/106424--t20-.html

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு பாராளுமன்றுக்கு அழைத்து கௌரவம்
0
Submitted by ceditor on Wed, 04/09/2014 - 21:55
(ஜே.ஜி. ஸ்டீபன் - ப. பன்னீர்ச்செல்வம்)

பங்களாதேசில் இடம்பெற்ற இருபது- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணியினர் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கௌரவமும் வழங்கப்பட்டன.
Sri-lanka-team-at-parliment_zpsb3e0523f.
உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியினரை பாராளுமன்றுக்கு அழைத்து வரவேற்பளித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழைப்பின் பேரில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியினால் வரவேற்கப்பட்டனர்.
IMG_0001_zps833c6772.jpg
பாராளுமன்றத்தில்
நேர ஒதுக்கீடு

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கும் முகமாக சபை அமர்வில் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் சபையில் உறுப்பினர்கள் இலங்கை அணி வீரர்களை புகழ்ந்து பேசி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மாலை 5 மணியளவில் சபாநாயகர் கலரிக்கு வருகை தந்த வீரர்கள் உறுப்பினர்களின் வாழ்த்துரைகளை ஏற்று அவ்வப்போது கைகளைத் தட்டினர்.  இதன் பின்னர் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்களே இங்கு வாழ்த்துரைகளை தெரிவித்தனர்.
எனினும் அமைச்சர்கள் சிலரும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் சபையில் சமூகமளித்திருக்கவில்லை.
IMG_0103_zpsf5e2fbc4.jpg

IMG_0131_zps919822d9.jpg

 

IMG_0111_zps42ee3e28.jpg

 

IMG_0136_zps3e3dc3e1.jpg

 

IMG_0098_zpscb5a855a.jpg

 

IMG_0119_zpsc8b15404.jpg

 

IMG_0053_0_zps0b8b4d92.jpg

 

IMG_0077_0_zps88187d23.jpg

 

IMG_0062_zpsebd9d77e.jpg

 

IMG_0095_zps8ce18ccb.jpg

 

IMG_0043_zpsf4374b6e.jpg

 

http://www.virakesari.lk/articles/2014/04/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_0043_zpsf4374b6e.jpg

 

அதுசரி உதிலை கொஞ்சப்பேர் என்னத்துக்கு காதிலை அதை கொழுவிவைச்சிருக்கினம்? பாசைப்பிரச்சனை? இல்லாட்டி தூரம் கூடிப்போச்சோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு போன்றவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராடத் தொடங்கி இப்ப விஜய்,லைக்கா மொபைல்,கிரிக்கட் வீரர்கள் என்று வந்து நிற்கினம்.இது பற்றி எழுத நினைத்தால் நிறைய எழுதலாம் ஆனால் என்ன திரி திசை மாறிப் போய் விடும்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இந்த திரியை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லைத் தான்!! 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132916

தயவு செய்து எப்பவும் நடு நிலமையாகக்  கதைத்துப் பழகுங்கள்!!!!!!! யார் எழுதினம் என்பதைப் பொறுத்துக் தயவு செய்து கதைக்காதீர்கள்!!! 

"உன்னை நீயே திருத்து சமூகம் தானாகத் திருந்தும்"

 

நான் முன்புபோல இப்பொழுது அடிக்கடி யாழுக்கு வருவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட இணைப்பினை முற்று முழுதாகப் பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் எழுதிய யாழ்கள உறுப்பினரும் இப்பகுதியில் சிங்கள தேசத்து துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். யார் எழுதினம் என்று நான் பார்த்து கருத்து எழுதுவதாக நீங்கள் இங்கு குறிப்பிட்ட கருத்து வழுவிலந்து விட்டது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட உறுப்பினருடன் அவுஸ்திரெலியாத்தேர்தலில் எப்படித்தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என்ற கருத்தில் முரண்பட்டு சில கருத்துக்களை உலகச்செய்திகளில் பதிந்திருக்கிறேன். உங்களையோ, வேறு யாழ்கள உறுப்பினர்களையோ மனம் நோகடிப்பது எனது எண்ணமல்ல. நான் முன்பு ஒருகாலத்தில் சிங்கள தேசத்தின் துடுப்பாட்டத்துக்கு ஆதரவு குடுத்ததினை எண்ணி வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். சிங்கள தேசம் துடுப்பாட்டத்தினை வைத்து தமிழனுக்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்துவருகிறது. சனத் ஜெயசூரியா, அர்ஜூனா இரணதுங்கா போன்றவர்கள் அரசியலில் குதித்து தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். சிங்கள இராணுவ வீரர் மெண்டிஸ் சிங்கள துடுப்பாட்ட அணியில் ஒரு சுழல் பந்து வீச்சாளார். முத்தையா முரளிதரன் அண்மையில், காணாமல் போனவர்களுக்காகக் குரல் கொடுத்த சகோதரிகளைப் பார்த்து சிங்கள அரசுக்கு சார்பாகக் கேள்வி கேட்டிருக்கிறார். 2009ல் நடைபெற்ற 20க்கு 20 உலகக்கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டியிற்கு தெரிவு செய்யப்பட்ட போது சிங்கள துடுப்பாட்ட அணித்தலைவர் இவ்வெற்றியை பாதுகாப்பு வீர்ர்களுக்கு சமர்ப்பிக்கப் போவதாகச் சொல்லியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்புபோல இப்பொழுது அடிக்கடி யாழுக்கு வருவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட இணைப்பினை முற்று முழுதாகப் பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் எழுதிய யாழ்கள உறுப்பினரும் இப்பகுதியில் சிங்கள தேசத்து துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். யார் எழுதினம் என்று நான் பார்த்து கருத்து எழுதுவதாக நீங்கள் இங்கு குறிப்பிட்ட கருத்து வழுவிலந்து விட்டது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட உறுப்பினருடன் அவுஸ்திரெலியாத்தேர்தலில் எப்படித்தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என்ற கருத்தில் முரண்பட்டு சில கருத்துக்களை உலகச்செய்திகளில் பதிந்திருக்கிறேன். உங்களையோ, வேறு யாழ்கள உறுப்பினர்களையோ மனம் நோகடிப்பது எனது எண்ணமல்ல. நான் முன்பு ஒருகாலத்தில் சிங்கள தேசத்தின் துடுப்பாட்டத்துக்கு ஆதரவு குடுத்ததினை எண்ணி வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். சிங்கள தேசம் துடுப்பாட்டத்தினை வைத்து தமிழனுக்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்துவருகிறது. சனத் ஜெயசூரியா, அர்ஜூனா இரணதுங்கா போன்றவர்கள் அரசியலில் குதித்து தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். சிங்கள இராணுவ வீரர் மெண்டிஸ் சிங்கள துடுப்பாட்ட அணியில் ஒரு சுழல் பந்து வீச்சாளார். முத்தையா முரளிதரன் அண்மையில், காணாமல் போனவர்களுக்காகக் குரல் கொடுத்த சகோதரிகளைப் பார்த்து சிங்கள அரசுக்கு சார்பாகக் கேள்வி கேட்டிருக்கிறார். 2009ல் நடைபெற்ற 20க்கு 20 உலகக்கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டியிற்கு தெரிவு செய்யப்பட்ட போது சிங்கள துடுப்பாட்ட அணித்தலைவர் இவ்வெற்றியை பாதுகாப்பு வீர்ர்களுக்கு சமர்ப்பிக்கப் போவதாகச் சொல்லியிருந்தார்.

 

வணக்கம் கந்தப்பு அண்ணா, யாழிலே இலங்கை துடுப்பாட்ட அணிக்கு நான், நவீனன் அண்ணா, ரதி அக்கா, அர்ஜுன் அண்ணா என்ற நால்வர் மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பவர்கள். எமக்கு விரும்பிய அணிக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. அதே போல இலங்கை அணியைப் புறக்கணிக்கவும் உங்களுக்கு விரும்பிய அணிக்கு ஆதரவு கொடுக்கவும் உங்களுக்கும் முழு உரிமையும் இருக்கிறது.

எனது இலங்கைப்பயணத் திரி ஒரு பயணக் குறிப்பேடு. அனேகமாக Real Time இல் பதிவு செய்யப்பட்டது. யாழிலே எவருமே இப்படி இதுவரை செய்ததில்லை. அங்கு கண்டவற்றை சுருக்கமாகப் பதிவு செய்வதே இதன் நோக்கம். எனது பயணக் குறிப்பேடு நான் விரும்பிய படிதான் இருக்க வேண்டுமே ஒழிய மற்றவர்களின் விருப்பங்களுக்காக என்னால் பதிவு செய்ய முடியாது. நிழல்களை விட்டு விட்டு நிஜத்தை காண விரும்புபவர்கள் போய்ப் பார்த்தால் ஒழிய, அவர்களுக்கு புரிய வைப்பது கடினம்.

அவுஸ் தேர்தலிலே தமிழர்கள் பசுமைக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள். இம்முறை லிபரல் கட்சியின் வெற்றி முன்பே ஓரளவு தெரிந்த நிலையில், பசுமைக் கட்சிக்கு வாக்களிப்பது எமக்கு நன்மை தராது என்றே கூறியிருந்தேன். அது ஓரளவுக்கு நிறைவேறி இருப்பது, கொமன்வெல்த் மகாநாட்டுக்கு டோனி பொய் வந்ததும், வகை தொகையின்றி அகதிகளை நாடுகடத்துவதில் இருந்தும் புரிந்திருக்கும். பத்திரிக்கைச் செய்திகளுக்கு DIBP தடை விதித்திருப்பதால் பல விடயங்கள் வெளியில் வருவதில்லை. இப்படி யாராவது ஒருவர் தீக்குளிக்கும் போது மட்டுமே அது வெளியில் வரும். அதுவும் தமிழ் ஊடகங்களில் மட்டுமே.

மறக்க முடியாத தோல்வி: யுவராஜ் கவலை
ஏப்ரல் 17, 2014.

 

பெங்களூரு: ‘‘இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை,’’ என, பெங்களூரு அணியின் யுவராஜ் சிங் கவலை தெரிவித்தார்.

 

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங் தான் தோல்விக்கு காரணம் என செய்திகள் வௌியாகின. ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு பெங்களூரு அணியில் யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது: ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் கண்ட தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பொதுவாக பைனல் போன்ற மிகப் பெரிய போட்டிகளை எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் ஒரு வீரர், கடந்த கால தோல்விகளை மறந்தால் தான், அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க முடியும். இத்தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் துரதிருஷ்டவசமாக பைனலில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஒரு வீரர் வெற்றி, தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இளம் வயதில் எனது பயிற்சியாளர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.

 

தற்போது 7வது ஐ.பி.எல்., தொடரில் கவனம் செலுத்தி வரும் எனக்கு, உலக கோப்பை பைனல் தோல்வியின் பிடியில் இருந்து மீளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெங்களூரு அணியினரோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டேன். கிறிஸ் கெய்ல், முத்தையா முரளிதரன், டிவிலியர்ஸ், டேனியல் வெட்டோரி, டொனால்டு போன்ற சர்வதேச வீரர்களுடன் ‘டிரஸிங் ரூமை’ பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யம் நிறைந்தது.

 

ஐ.பி.எல்., போட்டிகள் முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

http://sports.dinamalar.com/2014/04/1397754471/yuvrajcricketindia.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.