Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பிரேரணை தீவிர ஆய்வில் டில்லி; அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil_News_large_669552.jpg

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித  உரிமைகள் சபையின் 25 ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள  கடுமையான பிரேரணை விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது  தீவிரமாக ஆலோசித்து வருகின்றது என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 
அதேவேளை, காங்கிரஸ் அரசு, இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவை மட்டத்திலும்   கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றது.இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் நேற்று மாலை இந்தத் தகவலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். 
 
 இதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. எனினும், "மதில் மேல் பூனை' என்ற நிலைப் பாட்டில் இருந்துவிட்டு இறுதி நேரத்தில் இந்தப் பிரேரணைகளை நீர்த்துப் போகச் செய்து விட்டு அவற்றுக்கு ஆதரவாக டில்லி வாக்களித்திருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
 
 
இம்முறை இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பிரேரணையைக் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்தியத்துணைத் தூதுவர் தேவயானி சோதனையிடப்பட்ட விவகாரம் மற்றும் இலங்கையுடனான  சம்பூர் உடன்படிக்கை உட்பட இந்தியாவின்  பொருளாதார திட்டங்களும் மேலும் சில விடயங்க ளும் இந்தப் பிரேரணை  தொடர்பில் டில்லியை சிந்திக்க வைத்துள்ளது. 
 
அதேவேளை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வரும்  தமிழகத்தின் செயற் பாடுகள், அண்மையில் இடம் பெற்ற மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வி மற்றும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர் தல் ஆகிய விடயங்கள் ஜெனிவாப் பிரேரணையை டில்லி அரசு ஆதரிக்கவேண்டும் என்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளன.
 
இவ்வாறான நிலையில், அடுத்த மாதம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள கடுமையான பிரேரணை விடயத்தில் எத்தகைய நிலைப் பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.
 
"மதில் மேல் பூனை' என்ற நிலைப்பாட்டில் இருந்துவிட்டு இறுதியில் இந்தப் பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சு நடத்தி அதனை நீர்த்துப்போகச் செய்துவிட்டே அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 
 
இதேவேளை, அண்மையில் டில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அங்கு  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்த்துடன் நடத்திய பேச்சின்போது ஜெனிவாவில் இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். எனினும், பீரிஸின் இந்தக் கோரிக்கைக்கு டில்லி அரசு சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
 

 

 

www.onlineuthayan.com/News_More.php?id=322542631608836069

அமெரிக்காவுடன் இரகசிய பேச்சு நடத்தும் அறைக்குள் தேவயாணி எனும் யானை இருப்பதை கவனிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்ந்தர்ப்பம்  தமிழருக்கு சார்பாக  உள்ளது

ஏதாவது ஏடாகூடமாக செய்தால்

தமிழகத்தில் பதிலடி  கிடைக்கும்

தேர்தலுக்கு  வாக்கு கேட்க  செல்லமுடியாதநிலையும்

கட்சியிலிருந்து பலரும் விலகும் நிலையும் வரும்

காங்கிரசிற்கு இது அழிவாக முடியும்....

 

யானைக்கொரு காலம் வந்தால்....

புலிக்கும் ஒரு காலம்  வரும்

வந்தாச்சு...

சர்ந்தர்ப்பம் தமிழருக்கு சார்பாக உள்ளது

ஏதாவது ஏடாகூடமாக செய்தால்

தமிழகத்தில் பதிலடி கிடைக்கும்

தேர்தலுக்கு வாக்கு கேட்க செல்லமுடியாதநிலையும்

கட்சியிலிருந்து பலரும் விலகும் நிலையும் வரும்

காங்கிரசிற்கு இது அழிவாக முடியும்....

யானைக்கொரு காலம் வந்தால்....

புலிக்கும் ஒரு காலம் வரும்

வந்தாச்சு...

42,000 மாவீரரும் பல இலட்சம் தமிழீழ மக்களும் இந்த காலத்திற்காக தம் உயிரை கொடுத்துள்ளார்கள்.

தமிழீழம் கிடைக்குமா என்பது கேள்வி அல்ல. எப்போது என்ற கேள்வியில் தான் நாம் ஒருங்கிணைய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன புதுசா அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது முதல்ல ஏன் இந்தமாதிரி ஒன்று செய்யவில்லை காங்கிரசின் நிலை கவலைக்கிடமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் சந்திரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இந்திய பத்திரிகைகளுக்கு சிரிப்பு வந்ததாம். இப்போ ஏன் வரவில்லை?? சிலவேளை அழுகை வந்து விட்டதோ??

அதென்ன புதுசா அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது முதல்ல ஏன் இந்தமாதிரி ஒன்று செய்யவில்லை காங்கிரசின் நிலை கவலைக்கிடமோ ?

இத்தாலிய அம்மாக்கு புற்றுநோய், மகன் தேப்பனை மாதிரி ஒரு வெருளி, மகள் மருமகனோடு சேர்ந்து சொத்து களவெடுப்பதில் பிசி.

ஆம் ஆத்மி நாடகமும் நினைத்தது போல் நடந்தேறவில்லை.

கொங்கிரஸ் நிலை படு மோசம்.;)

இத்தாலிய அம்மாக்கு புற்றுநோய், மகன் தேப்பனை மாதிரி ஒரு வெருளி, மகள் மருமகனோடு சேர்ந்து சொத்து களவெடுப்பதில் பிசி.

ஆம் ஆத்மி நாடகமும் நினைத்தது போல் நடந்தேறவில்லை.

கொங்கிரஸ் நிலை படு மோசம்.;)

 

தேர்தலில் பா.ஜ.கவை பார்த்துதான் இதை சொல்லலாம். காங்கிரஸ் கழுத்து வெட்டுவத்தில் ஒன்னாம் நம்பர் திருடர்கள். கெஜரிவால் சரி வராவிட்டால் இன்ன்ரொருவரை கொண்டுவந்து மேடையில் இருத்தி விட்டு பங்கு காசைக் கொடுத்துவிட்டு நாடகம் காட்டிவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தேவயாணி, சம்பூர் விவகாரங்களால் பிரேரணைக்கு இந்தியா எதிராக வாக்களித்தாலும் ஆச்சரியபடுவதக்கில்லை. சில வேளை ஸ்ரீ லங்கா பக்கம் நின்று பிரேரணை தோற்றால் கூட , எமக்கு அமெரிக்காவின் ஆதரவு கூடலாம். சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் குறைக்க ஏலாது, அமெரிக்கா நேரடியாக இறங்க கூடிய சந்தர்ப்பம்களும் அதிகம். இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு ஒரு செல்ல பிள்ளை தேவை? எமக்கு சாதகமான காலம்.

தேர்தலில் பா.ஜ.கவை பார்த்துதான் இதை சொல்லலாம். காங்கிரஸ் கழுத்து வெட்டுவத்தில் ஒன்னாம் நம்பர் திருடர்கள். கெஜரிவால் சரி வராவிட்டால் இன்ன்ரொருவரை கொண்டுவந்து மேடையில் இருத்தி விட்டு பங்கு காசைக் கொடுத்துவிட்டு நாடகம் காட்டிவிடுவார்கள்.

உண்மை. அவர்களிடமா ரப்பர் ஸ்டாம்புகளுக்கு பஞ்சம். இன்னொரு டம்மி சிங்கை குந்தவைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 இதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. எனினும், "மதில் மேல் பூனை' என்ற நிலைப் பாட்டில் இருந்துவிட்டு இறுதி நேரத்தில் இந்தப் பிரேரணைகளை நீர்த்துப் போகச் செய்து விட்டு அவற்றுக்கு ஆதரவாக டில்லி வாக்களித்திருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

இந்தியா பிரேரணையை நீத்து  போக செய்யும் என் அண்மையில் ஒரு அமைச்சர்  கூறியது நினைவிருக்கலாம். 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.